என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் அருகே சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து- 4 பேர் பலி
- கோவில்பட்டியில் இருந்து வந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் செம்மடை நாவல் நகர் அருகே ஆம்னி பேருந்து, சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில் அதில் பயணித்த சிறுவன், சிறுமி, ஓட்டுநர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற பேருந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி சாலை தடுப்புச்சுவரை தாண்டி எதிர்திசையில் கோவில்பட்டியில் இருந்து வந்த சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






