search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalanithi Veerasamy"

    • இந்தி மொழி நம் நாட்டில் அலுவல் மொழியாக இருப்பதைப் போல, தமிழ் மொழியையும் அலுவல் மொழியாக அறிவிப்பு வெளியிடலாமே.
    • உலகில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு, தாங்கள் ஒதுக்கி செய்யும் நிதி அளவிற்குத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உடனடியாக நிதியை அதிகரித்து அறிவிக்க வேண்டும்.

    ராயபுரம்:

    வடசென்னை தொகுதி எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- மொழிகளைப் பற்றி விவாதம் நடக்கும் போதெல்லாம், நீங்கள் உலகிலேயே மிகவும் மூத்த மொழி தமிழ் என்றும் அது எங்கள் நாட்டைச் சேர்ந்தது என்றும் பெருமையுடன் கூறுவதைக் கேட்டு, தமிழர்களாகிய நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்.

    இந்தி மொழி நம் நாட்டில் அலுவல் மொழியாக இருப்பதைப் போல, தமிழ் மொழியையும் அலுவல் மொழியாக அறிவிப்பு வெளியிடலாமே. அவ்வாறு தங்களைச் செய்ய விடாமல் ஏதேனும் ஒரு சக்தி தடுக்கின்றதா என்று எனக்கு தெரியவில்லை.

    தமிழ் மொழியைப் பற்றி தாங்கள் கூறும் கருத்துக்கள் உங்களது இதயத்தில் இருந்து வருமானால், இந்த உலகில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு, தாங்கள் ஒதுக்கி செய்யும் நிதி அளவிற்குத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உடனடியாக நிதியை அதிகரித்து அறிவிக்க வேண்டும்.

    மேலும், அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்கும் வகையில், அதாவது தாய்மொழி, இந்தி அல்லது ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியைக் கற்பிக்கக் கூடிய வகையில் உடனடியாக ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அரசு ஆணையாவது வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×