search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "head teacher"

    • காரைக்குடி அருகே உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியர் போராட்டம் நடத்தினார்.
    • 2020-ல் முதல்வர் உத்தரவிட்டும் தன்னை பணி செய்ய விடவில்லை.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கபள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பநாதன். இவருக்கு வழங்கப்பட வேண்டிய முறையான சம்பள உயர்வை 2013-ம் ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லை என்றும், 2017 முதல் வழங்க வேண்டியய 7-வது ஊதியக்குழு ஊதியத்தை வழங்கவில்லை என்றும் கூறி பல வருடங்களாக போராடி வருகிறார்.

    2016 முதல் பள்ளி நிர்வாகம் அவரை பணி செய்ய விடவில்லை. 2018-ல் கலெக்டர் உத்தரவிட்டும், 2019ல் நீதிமன்றம் உத்தரவிட்டும், 2020ல் முதல்வர் உத்தரவிட்டும் தன்னை பணி செய்ய விடவில்லை.

    இது குறித்து தேவ கோட்டை மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

    இதை கண்டித்து காரைக்குடியில் உள்ள சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன் தலைமை ஆசிரியர் புஷ்பநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.காரைக்குடி போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ஆலங்குடி அருகே தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி அரசு பள்ளியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பனங்குளம் கிழக்கு அரசு தொடக்கப்பள்ளியில் 15 மாணவர்கள் பயில்கின்றனர். இந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிக்கும், பெற்றோர்களுக்கும் இணக்கமான சூழல் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆசிரியரை பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்குள் அனுமதிக்க வில்லை. 

    இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தலைமை ஆசிரியர் ஜோதியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள், பின்னர் மாணவர்களை அழைத்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியேறினர்.

    இது குறித்து பெற்றோர்கள் கூறியபோது, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி, வழைக்கொல்லை அரசு தொடக்கப்பள்ளியில்  பணியாற்றி வந்தார். இக்கல்வி ஆண்டின் தொடக்கத்தில் அப்பள்ளிக்கு ஒரு மாணவர் கூட வரவில்லை. அதனால் பனங்குளம் கிழக்கு தொடக்கப்பள்ளிக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இங்கும் அத்தகைய போக்கையே அவர் கையாளுவதால் இந்த பள்ளிக்கும் அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. எனவேதான் அவரை இடமாற்றம்  செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். என்றனர். 
    தகவல் அறிந்து வந்த திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலர் நடராஜன் மற்றும்கீரமங்கலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
    திருச்செங்கோட்டில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை விடுவித்து பணியில் அமர்த்த வலியுறுத்தி மாணவ- மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    எலச்சிபாளையம்:

    திருச்செங்கோட்டில் நாமக்கல் சாலையில் பச்சையம்மன் கோவில் அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் சந்திரசேகர் என்பவருக்கு, அவரது 7 மாத சம்பள நிலுவையை பெற்றுத்தருவதாக கூறி, இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் நேற்று முன்தினம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் லஞ்சம் வாங்கியதாக கைதான தங்கள் தலைமை ஆசிரியரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்த பள்ளியின் மாணவ-மாணவிகள் நேற்று காலை திடீரென திருச்செங்கோடு-நாமக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளை அப்புறப்படுத்தினர். சுமார் 10 நிமிடமே இந்த சாலை மறியல் நடைபெற்றது.

    இதனிடையே மாணவர்களை சாலை மறியல் செய்ய தூண்டியதாக கூறி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(வயது 27) என்பவரையும், செங்கோட்டையன் (45) என்பவரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவர்களின் திடீர் மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையோடு நிரப்பப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #ministersengottaiyan

    கோபி:

    தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி அடுத்த குள்ளம்பாளையத்தில் அவரது வீட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செலவம் தலைமையில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் 1,250 தலைமையாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அரசு அதில் தனிக்கவனம் செலுத்தி, வேகப்படுத்தி வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்து, தற்போது தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் வெளிப்படை தன்மையோடு நிரப்பப்பட்டு வருகிறது.

    தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடத்தில் அதிகமாக உள்ளது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 50 சதவீதம் வரை ஆங்கிலவழியில் மாணவர்கள் படிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

    இதன்மூலம் கிராமப்புற மாணவர்களும் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியும். ஏற்கனவே, அரசு அறிவித்த படி தேர்வு எழுதிய சிறப்பாசிரியர்களுக்கான காலிபணியிடங்கள் ஒளிமறைவின்றி முறைப்படி வெளிப்படைத் தன்மையோடு நிரப்பப்படும்.

    மேலும் கூடுதல் காலி பணியிடங்களுக்கு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

    அடுத்த கல்வியாண்டிலிருந்து 1 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும். சென்னையில் உள்ள அண்ணா நூலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சியளிக்கப்படும்.

    இதில் மாணவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உடனுக்குடன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வார்கள். இதன் மூலம் மத்தியஅரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் அளவிற்கு மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு ஒன்றை அளித்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட அவர் முதல்வரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். #ministersengottaiyan

    ×