தலைமை ஆசிரியர் போராட்டம்

காரைக்குடி அருகே உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியர் போராட்டம் நடத்தினார். 2020-ல் முதல்வர் உத்தரவிட்டும் தன்னை பணி செய்ய விடவில்லை.
தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் புஷ்பநாதன்.
தர்ணாவில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் புஷ்பநாதன்.
Published on

காரைக்குடி

காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கபள்ளியின் தலைமை ஆசிரியர் புஷ்பநாதன். இவருக்கு வழங்கப்பட வேண்டிய முறையான சம்பள உயர்வை 2013-ம் ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லை என்றும், 2017 முதல் வழங்க வேண்டியய 7-வது ஊதியக்குழு ஊதியத்தை வழங்கவில்லை என்றும் கூறி பல வருடங்களாக போராடி வருகிறார்.

2016 முதல் பள்ளி நிர்வாகம் அவரை பணி செய்ய விடவில்லை. 2018-ல் கலெக்டர் உத்தரவிட்டும், 2019ல் நீதிமன்றம் உத்தரவிட்டும், 2020ல் முதல்வர் உத்தரவிட்டும் தன்னை பணி செய்ய விடவில்லை.

இது குறித்து தேவ கோட்டை மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர்களிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

இதை கண்டித்து காரைக்குடியில் உள்ள சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலகம் முன் தலைமை ஆசிரியர் புஷ்பநாதன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.காரைக்குடி போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com