என் மலர்
நீங்கள் தேடியது "govt town bus"
- முருகன் வீட்டுக்கு செல்வதற்காகவிழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
- பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன்(வயது 35). இவர் நேற்று மாலை வீட்டுக்கு செல்வதற்காகவிழுப்புரம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது பஸ் நிலையத்துக்குள் வந்த அரசு டவுன் பஸ் முருகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
- இலசவ பஸ்களில் தங்கள் ஊர்களுக்கு செல்லும் பயணிகள் மணிக்கணக்கில் இருந்தாலும் பஸ் புறப்படாததால் ஏமாற்றம் அடைகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இருந்து சின்னாளபட்டி, செம்பட்டி, நிலக்கோட்ைட, வடமதுரை, அய்யலூர், தாடிக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு டவுன்பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் பெரும்பாலான நேரங்களில் பஸ்நிலையத்தில் நீண்டநேரம் கண்டக்டர், டிரைவர் இன்றி நிறுத்தப்படுகிறது.
இதில் தங்கள் ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அமர்ந்து காத்திருக்கின்றனர். மணிக்கணக்கில் இருந்தாலும் பஸ் புறப்படாததால் இடையில் வரும் தனியார் பஸ்களில் ஏறி தங்கள் ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். குறிப்பாக டவுன்பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால் இந்த பஸ்களில் பெண்கள் அமர்ந்து பின்னர் ஏமாற்றத்துடன் இறங்கி வேறு பஸ்சில் ஊர்களுக்கு செல்கின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஊழியர்கள் தெரிவிக்கையில், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பதிலாக புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதுதவிர தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் பணிக்கு வருவதே இல்லை. இதனால் அனைத்து பஸ்களுக்கும் டிரைவர், கண்டக்டர் பணியமர்த்த இயலாத சூழல் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் பஸ்நிலையத்தில் நீண்டநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.