என் மலர்
நீங்கள் தேடியது "drug trafficking case"
- என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவல் தொடர்பாக நடிகை வரலட்சுமி விளக்கம்.
- கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.
ஆனால், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
கேரளாவின் விழிஞ்சத்தில் போதைப்பொருள், ஆயுதம் கடத்தல் வழக்கில் கைதான ஆதிலிங்கம், 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு எங்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. என்.ஐ.ஏ சம்மன் அனுப்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக கூறப்பட்டது.
- ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டம்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
டில்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அமலாக்கத்துறை இனி விசாரிக்க தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் சிரோஹி முன்னிலையில் வழக்கு விசாரணை.
- நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய வழக்கில் கடந்த 9ம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் இருந்து உணவுப் பொருட்களை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவது போல ஜாபர் சாதிக் போதைப்பொருட்களை கடத்தி இருப்பது அம்பலமானதை அடுத்து அவர் மீதான பிடி இறுகி உள்ளது.
டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுதீர் குமார் சிரோஹி முன்னிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- வாக்குமூலம் பெறும் போது வக்கீலுடன் இருப்பதற்கு அனுமதி.
- ஜாபர் சாதிக் பயன்படுத்திய 2 செல்போன்களை கடலில் வீசி எறிந்துள்ளார்.
சென்னை:
டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் தி.மு.க. அயலக அணியின் முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.
டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கிடம் வாக்கு மூலம் வாங்குவதற்காக டெல்லியில் உள்ள பாட்டி யாலா கோர்ட்டில் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து ஜாபர் சாதிக் உள்பட 5 பேரிடமும் 8, 9, 10 ஆகிய 3 நாட்களும் அமலாக்கத் துறையினர் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இதன்படி நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் ஜெயிலுக்கு சென்று வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.
இன்று 2-வது நாளாக ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் வாங்கினார்கள். நாளையும் வாக்குமூலம் பெறப்படுகிறது.
ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலம் பெறும் போது அவரது வக்கீல் உடன் இருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜாபர் சாதிக்கின் வக்கீல் பிரபாகரன் டெல்லியில் உள்ளார்.
இதற்கிடையே ஜாபர் சாதிக்குக்கு எதிராக பாட்டியாலா கோட்டில் 153 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 42 பேரின் சாட்சியங்கள் இடம் பெற்றுள்ளன.
போதை பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 97 ஆவணங்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.
ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த இயக்குனர் அமீர் அளித்த வாக்குமூலமும் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியதும் ஜாபர் சாதிக் தான் பயன்படுத்திய 2 செல்போன்களையும் உடைத்து நேப்பியர் பாலம் அருகே கடலில் வீசி எறிந்துள்ளார்.
போதை பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த வெளிநாட்டு கரன்சிகளை கடற்கரை ரெயில் நிலையம் அருகே உள்ள நிறுவனத்தில் இந்திய பணமாக மாற்றி உள்ளார். இதுபற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.






