போதைப் பொருள் கடத்தல் வழக்கு- ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக கூறப்பட்டது.ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டம்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கு- ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
Published on

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

டில்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அமலாக்கத்துறை இனி விசாரிக்க தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com