என் மலர்
நீங்கள் தேடியது "crater"
திருவொற்றியூர்:
வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் பள்ளங்கள் தோண்டி ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலையின் நடுவில் ராட்சத தூண்கள் அமைய கூடிய இடத்தில் இருந்த ராட்சத குடிநீர் குழாய்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சாலையோரம் மாற்றப்பட்டன.
இந்நிலையில் திருவொற்றியூர் மார்க்கெட் அருகே சாலையோரம் மாற்றப்பட்ட ராட்சத குடிநீர் குழாய் இருந்த இடத்தில் அதிகாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டு குழாய்கள் சுமார் 5 அடி ஆழத்திற்கு கீழே இறங்கின.
இதனால் அப்பகுதியில் 15 நீளத்திற்கு பள்ளம் விழுந்தது அப்போது ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து ஏதும் ஏற்பட வில்லை
இதையடுத்து மெட்ரோ ரெயில் பணி ஊழியர்கள் ஜே.சி.பி. மூலம் அந்தக் குடிநீர் குழாய்களை சரி செய்து பள்ளங்களை மூடி வருகின்றனர்.
இதனால் அதிகாலை 2 மணி முதல் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு எண்ணூர் கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்கிறது. பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி காந்திநகர்-இ.பி.காலனி சாலையில் புதிதாக பாலம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பணிகள் நடை பெறுவது குறித்து எந்த எச்சரிக்கை பலகையும் இல்லை.
மேலும் அப்பகுதியில் மின்விளக்குகளும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தபோதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நந்தவனப்பட்டி வேலப்பர் கொட்டத்தை சேர்ந்தவர் சங்கர். எலக்ட்ரீசனாக வேலை பார்த்து வந்தார். பைக்கில் இ.பி.காலனி அருகே உள்ள பாலப்பகுதியில் 8 அடி ஆழ பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறு பைக்குடன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இன்று காலை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அறிவிப்பு பலகை இல்லாததால் இவ்விபத்து நடந்துள்ளது. எனவே ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என சங்கரின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
உடுமலை:
உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே ராமச்சந்திராபுரத்தில் இருந்து உடுமலைக்கு அரசு டவுன்பஸ் ஒன்று 20 பயணிகளுடன் புறப்பட்டது. பஸ் ராமச்சந்திராபுரம்- உடுமலை சாலையில் பண்ணை கிணறு அருகே சென்றபோது எதிரே ஒரு கார் வந்தது. காருக்கு வழி விடுவதற்காக சாலையின் ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர்.
மேலும் பஸ்சின் படிக்கட்டுபகுதி தரையில் அழுத்தியதால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் காப்பாற்றுமாறு கூக்குரலிட்டனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பஸ்சுக்குள் இருந்தவர்களை ஜன்னல் வழியாக வெளியே மீட்டனர்.
காயம் அடைந்தவர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறும்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தார்ரோடு போடப்பட்டது. ஆனால் ரோட்டின் ஓரங்களில் முறையாக மண்போட்டு நிரப்பவில்லை. அருகில் உள்ள மண்ணை எடுத்து நிரப்பி உள்ளனர். இதனால் வாகனங்கள் சாலையை விட்டு லேசான இறங்கினாலும் பள்ளத்தில் கவிழ்ந்து விடும். இதுபோல் பல விபத்துகள் நடந்துள்ளது. எனவே சாலையோரங்களை சீரமைக்க வேண்டும் என்றனர்.