என் மலர்
நீங்கள் தேடியது "Constituency realignment plan"
- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார்.
- அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.
2026 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்புள்ளது.
இதனால் இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.
அதன்படி, நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையம் வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பினராயி விஜயன் தங்கியுள்ளார்.
தொடர்ந்து, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சென்னை வந்தடைந்தார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என் சோமு ஆகியோர் அவுரைவரவேற்றனர்.
பின்னர், தொகுதி மறுவரை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சென்னை வந்துள்ளார்.
அவரை, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்
தொடரந்து, நாளை நடைபெறும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.
- ஆந்திராவில் பாஜக கூட்டணியில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் உள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நாளை சென்னையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி சார்பில் ஜனசேன கட்சியின் மக்களவை உறுப்பினர் உதய் சீனிவாஸ் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
ஆந்திராவில் பாஜக கூட்டணியில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தொகுதி மறுவரையறை செய்தால் பாதிக்கப்படும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது. அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்பதாக தலைவர்கள் உறுதி அளித்து இருந்தனர்.
- எதிர்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
- உத்தரபிரதேசம், பிகாா் மாநிலங்கள் 11 தொகுதிகளை கூடுதலாக பெறும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடா்பாக தமிழக அரசு சாா்பில் சமீபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் எந்தெந்த மாநிலங்களுக்கு பாதிப்பு, எவையெல்லாம் பலன் பெறும் என்பதை காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் விளக்கியுள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் ஒன்று முதல் 8 பாராளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். அதே நேரம், உத்தரபிரதேசம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்கள் 10 முதல் 11 பாராளுமன்ற தொகுதிகளைக் கூடுதலாகப் பெற வாய்ப்புள்ளது.
மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மாநிலங்களே, தொகுதி மறுசீரமைப்பால் பாராளுமன்ற தொகுதிகளை இழக்கும் நிலையை சந்திக்கும்.
அந்த வகையில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்கான தண்டனையாக இது அமையும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தலா 8 தொகுதிகளையும், மேற்கு வங்காளம் 4, ஒடிசா 3, கா்நாடகா 2, இமாசல பிரதேசம் 1, பஞ்சாப் 1, உத்தரகாண்ட் 1 தொகுதியை இழக்க நேரிடும்.
உத்தரபிரதேசத்தில் 11, பீகாரில் 10, ராஜஸ்தானில் 6, மத்திய பிரதேசத்தில் 4 தொகுதிகள் அதிகரிக்கும். ஜாா்க்கண்ட், அரியானா, குஜராத், டெல்லி, சத்தீஸ்கரில் தலா ஒரு தொகுதி அதிகரிக்கும்.
அசாம், ஜம்மு-காஷ்மீா், மகாராஷ்டிரா மாநிலஙகளுக்கு தொகுதிகள் எண்ணிக்கையில் இழப்போ அல்லது பலனோ இருக்காது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.






