search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central minister VK Singh"

    • நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக தங்களது வாகனங்களில் செல்லலாம் என்றார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மேலும் பாரத பிரதமரின் மன்கீபாத் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    அப்போது மத்திய அமைச்சர் வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக தங்களது வாகனங்களில் செல்லலாம் என்றார்.

    இதில் பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் தமிழ் செல்வன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செல்வக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளதாகவும் இதற்காக அரசு ரூ.2,012 கோடி செலவு செய்துள்ளதாகவும் மத்திய மந்திரி தெரிவித்தார். #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    மோடி சொந்த நாட்டில் இருப்பதை விட வெளி நாட்டில்தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற மேல்-சபையில் இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. பினோய் விஸ்வம் பேசும்போது, “பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதற்கான செலவு எவ்வளவு செய்யப்பட்டு இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:-


    பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று உள்ளார். இதற்காக அரசுக்கு ரூ.2,012 கோடி செலவாகி இருக்கிறது. மோடி பயணம் செய்த தனி ஏர்இந்தியா விமானத்துக்கு பராமரிப்புக்கு மட்டும் ரூ.1,583 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi
    உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் 48 மணி நேரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார். #Passport #PassPortSeva
    வாஷிங்டன்:

    மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங், அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ‘பாஸ்போர்ட் சேவா’ திட்டத்தை தொடங்கி வைத்தார். பிறகு அவர் பேசுகையில், “இந்திய தூதரகங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள், இந்தியாவில் உள்ள டேட்டா மையத்துடன் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு உள்ளன.

    இதனால், அங்கு பாஸ்போர்ட் வழங்கும் பணிகள் வேகமாக நடைபெறும். கடந்த வாரம், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், 48 மணிக்கும் குறைவான நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. விரைவில், உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இது நடக்கப்போகிறது. இன்னும் சில மாதங்களில், புதிய வடிவமைப்பிலான பாஸ்போர்ட்டுகளை இந்திய அரசு வழங்கும்” என்று கூறினார். #PassPort
    ×