நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் இருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு கட்டணம் ரத்து - மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தகவல்

நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக தங்களது வாகனங்களில் செல்லலாம் என்றார்.
செயற்குழு கூட்டம் நடந்த போது எடுத்த படம்
செயற்குழு கூட்டம் நடந்த போது எடுத்த படம்
Published on

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மேலும் பாரத பிரதமரின் மன்கீபாத் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது மத்திய அமைச்சர் வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக தங்களது வாகனங்களில் செல்லலாம் என்றார்.

இதில் பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் தமிழ் செல்வன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செல்வக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com