search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buses run"

    • திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது
    • வருகிற 5-ந் தேதி மாலை புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 6-ந் தேதி காலை செல்லும்.

    நெல்லை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு தேவைகேற்ப சிறப்பு பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் மற்றும் தூத்துக்குடி மண்டலங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் வருகிற 5-ந் தேதி மாலை புறப்பட்டு திருவண்ணாமலைக்கு 6-ந் தேதி காலை செல்லும். பின்னர் 6-ந் தேதி மாலை கார்த்திகை தீபம் ஏற்றிய பின்பு அங்கிருந்து பக்தர்கள் திரும்பி வரும் வகையிலும் இயக்கப்படுகிறது. இத்தகவலை நெல்லை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின.
    ஈரோடு:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்றும் (8-ந் தேதி), நாளையும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

    மேலும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் ஆகியோரும் இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பவானியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஐ.ஓ.பி. வங்கி போன்ற வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

    இந்த வங்கிகளில் பணிபுரியும் 650 ஊழியர்களும் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் ஊழியர்கள் இல்லாமல் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பணபரிவர்த்தனை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

    வேலை நிறுத்தம் பற்றி தெரியாத பலர் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வேலை நிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இன்று மட்டும் ரூ. 300 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

    நாளையும் போராட்டம் நடப்பதால் மேலும் ரூ. 300 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் 600 தபால் ஊழியர்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் தபால் பட்டு வாடா சேவைகள் முடங்கின. ரூ. 100 கோடிக்கு பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது.

    ஈரோட்டில் காந்திஜி ரோட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான தொலை தொடர்பு அலுவலகம், தலைமை தபால் அலுவலகம், பிரப் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவையும் இன்று செயல்படவில்லை.

    இந்த அலுவலகங்கள் முன்பு அகில இந்திய வேலை நிறுத்தம் என்று மிகப்பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.

    அனைத்து தொழிற்சங்கத்தினரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால் போக்குவரத்து முடங்கும் அபாயம் இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் வழக்கம்போல் ஓடின.

    தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடின. ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, அந்தியூர் மற்றும் தாளவாடி ஆகிய ஊர்களின் பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இதேபோல ஈரோடு மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்திருந்தன.
    நாளை நடைபெறும் வேலை நிறுத்தத்தின் போது போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் ஓடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. #BusStrike

    சென்னை:

    மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற கோரியும், பொதுத்துறைகளின் பங்கு விற்பனைகளை கைவிட வலியுறுத்தியும் மற்றும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நாளை (8-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (9-ந்தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

    இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்குமாறு ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., டி.யு.சி.சி., எஸ்.இ.டபிள்யூ., எல்.பி.எப். உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    இந்த அழைப்பை ஏற்று நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் என பல்வேறு சங்கங்களில் உள்ளவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றனர்.

     


    இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம், போக்குவரத்து, மின்வாரிய சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளது.

    தமிழ்நாட்டில் மட்டும் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களுடன் சுமார் 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் வங்கி ஊழியர்களும் இன்சூரன்ஸ் ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பதால் வங்கிகளில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான காசோலை பரிவர்த்தனை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தை தவிர்த்து அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொள்வதால் தமிழகத்தில் பஸ் சேவை முடங்கும் என தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

    இதனால் பஸ்களை நாளை பாதுகாப்புடன் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் உள்ள 33 பஸ் டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டம் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தமிழக அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.

    எனவே வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 8, 9 தேதிகளில் வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது.

    தற்காலிக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

    ஆனாலும் பா.ஜனதா தொழிற்சங்கம் தவிர மற்ற தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கும். வங்கி சேவை முடங்கும். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கும் என்றே தெரிகிறது. #BusStrike

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. பஸ் நிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    தருமபுரி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தருமபுரி மாவட்டத்தில் பஸ் நிலையம், சின்னசாமி நாயுடு தெரு, ஆறுமுக ஆசாரி தெரு, முகமது அலி கிளப் ரோடு, நேதாஜி பைபாஸ் சாலை, சேலம் மெயின்ரோடு, கிருஷ்ணகிரி மெயின்ரோடு, ஆகிய பகுதிகளில் வழக்கம்போல் ஓட்டல்கள், டீக்கடைகள், துணிக்கடைகள், பழக்கடைகள் உள்பட கடைகள் அடைக்கப்பட்டன.

    ஆனால் தருமபுரி ரூட் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் உள்ளே மட்டுமே மருந்து கடைகள், பூக்கடைகள், டீக்கடைகள் உள்பட ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

    மேலும் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் தருமபுரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு வழக்கம் போல் டவுன் பஸ்களும் இயங்கின. இதேபோன்று தருமபுரியில் இருந்து சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு வழக்கம் போல் இயங்கின. ஆட்டோக்களும் இயங்கின.

    பஸ் நிலையத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பென்னாகரம், பொம்மிடி, காரிமங்கலம் உள்பட பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்திருந்தன. ஆட்டோகளும், பஸ்களும் வழக்கம்போல் இயங்கின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. பஸ் நிலையங்களில் வழக்கம்போல் பஸ்கள் ஓடின. ஆட்டோக்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் பூக்கடை, ஓட்டல்கள், மருந்து கடை, டீக்கடை உள்பட கடைகள் திறந்திருந்தன. மேலும் பஸ் நிலையத்தில் எந்த அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

    இதுபோன்று ராயக்கோட்டை, ஓசூர், வேப்பன அள்ளி, தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, தளி பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறந்து இருந்தன. ஒரு சில கடைகள் மட்டும் மூடியிருந்தன.

    ×