search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akbaruddin Owaisi"

    • தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
    • புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    அமராவதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    தெலுங்கானா முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டியை ஒருமனதாக தேர்வு செய்தனர். இதையடுத்து கவர்னரைச் சந்தித்து ரேவந்த் ரெட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை கூட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில், அக்பருதின் ஒவைசி எம்.எல்.ஏவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நியமித்தார். இதையடுத்து, அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    • நுபுர் சர்மாவை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
    • ஓவைசி மன்னிப்பு கேட்கும்படி யாரும் கேட்கவில்லை.

    மும்பை:

    தொலைக்காட்சி விவாத மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. பாஜகவில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுவெளியில் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் நுபுர் ஷர்மாவிற்கு ஆதரவாக தற்போது மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே களம் இறங்கி உள்ளார். மும்பையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது

    (முகமது நபிகள்) குறித்து நுபுர் சர்மா பேசியபோது, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அக்பரூதீன் ஓவைசி (இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் கட்சி தலைவர்) அவரது சகோதரர் ஜாகிர் நாயக். ஜாகிர் நாயக்கின் பேட்டியை யாரும் பார்க்கலாம், அவரும் அதையே சொன்னார். ஆனால் யாரும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை.

    இந்து கடவுள்களைப் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக அவர்கள் மீது இந்திய அளவில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? . அந்த இரண்டு ஓவைசி சகோதரர்கள் நமது (இந்து) கடவுள்களைப் பற்றி இழிவாக பேசுகிறார்கள், மேலும் நமது கடவுள்களுக்கு மோசமான பெயர்களை வைத்திருக்கிறார்கள். நமது கடவுள்கள் கேவலமானவர்களா? இதற்கு மன்னிப்பு கேட்கும்படி யாரும் அவரிடம் யாரும் கேட்கப் போவதில்லை. இவ்வாறு ராஜ் தாக்கரே பேசியுள்ளார்.

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் அக்பருதீன் ஒவைசி பா.ஜ.க. வேட்பாளரை சுமார் 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். #AkbaruddinOwaisi #Telangnaelection2018
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர்கள் 4 இடங்களில் வெற்றிபெற்று 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். இதனால், அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் மீண்டும் இங்கு ஆட்சி அமைக்கும் சூழல் கனிந்துள்ளது.



    இந்நிலையில், இம்மாநிலத்துக்குட்பட்ட சந்திராயன்குட்டா தொகுதியில் போட்டியிட்ட அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் அக்பருதீன் ஒவைசி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. பெண் வேட்பாளர் சையத் ஷெஹ்ஜாதியை சுமார் 80 ஆயிரம் வாக்குகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். #AkbaruddinOwaisi #Chandrayanguttaconstituency #Telangnaelection2018
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரயான்குட்டா தொகுதியில் போட்டியிடும் அக்பருதீன் ஒவைசியை எதிர்த்து சையத் ஷாஹேஜாடி என்ற முஸ்லிம் பெண்ணை வேட்பாளராக பா.ஜ.க. களமிறக்கியது. #BJPfields #SyedShahezadi #AkbaruddinOwaisi
    ஐதராபாத்:

    அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவரான அசாதுதீன் ஒவைசி
    ஐதரபாத் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

    இதே கட்சியை சேர்ந்த அசாதுதீனின் சகோதரர் அக்பருதீன் ஒவைசி, தெலுங்கானா மாநில சட்டசபையில் ஐதராபாத் நகருக்குட்பட்ட சந்திரயான்குட்டா தொகுதி எம்.எல்.ஏ.வாக கடந்த 1999, 2004, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்.

    இந்த பகுதியில் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளதால் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் அக்பருதீன் ஒவைசி இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், அக்பருதீன் ஒவைசியை எதிர்த்து சையத் ஷாஹேஜாடி என்ற முஸ்லிம் பெண்ணை வேட்பாளராக பா.ஜ.க. களமிறக்கி உள்ளது.



    ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பயின்ற பட்டதாரியான சையத் ஷாஹேஜாடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யா பரிஷத் அமைப்பின் தலைவராக தனது கல்லூரி காலத்தில் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJPfields #SyedShahezadi #AkbaruddinOwaisi
    ×