என் மலர்

  நீங்கள் தேடியது "sandeep sharma"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இது போன்ற போட்டிகளால் தான் ஐபிஎல் தொடர் மிகவும் ஸ்பெஷலாக மாறுகிறது.
  • ஒவ்வொரு போட்டியும் புது புது அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும்.

  ஐபிஎல் தொடரின் 52-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

  இதையடுத்து கடின இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் 217 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்த நிலையில், தோல்விக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியிருப்பதாவது:-

  இது போன்ற போட்டிகளால் தான் ஐபிஎல் தொடர் மிகவும் ஸ்பெஷலாக மாறுகிறது. சந்தீப் சர்மா மீது அதிக நம்பிக்கையில் இருந்தேன். நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் என்று அறிவிக்கப்படும் வரையில் உங்களால் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று நினைக்கவே முடியாது. சென்னைக்கு எதிரான போட்டியில் சந்தீப் சர்மா தான் கடைசி நேரத்தில் வெற்றி தேடிக் கொடுத்தார். ஆனால், அவர் வீசிய நோபால் கடைசி நேரத்தில் எங்களது வெற்றியை பறித்து சென்றுவிட்டது. ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எளிதான காரியம் எல்லாம் கிடையாது.

  ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு போட்டியும் புது புது அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும். அடுத்து வரும் போட்டியிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்ற அந்த அணி கடைசியாக நடந்த 6 போட்டிகளில் வரிசையாக 5 போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இப்போட்டியில் சந்தீப் சர்மா 3 ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
  • 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

  சென்னை:

  ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

  முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 175 ரன்கள் எடுத்தது இதனைத் தொடந்து பேட்டிங் செய்த சென்னை அணியில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தாலும் டோனி - ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி கடைசிவரை போட்டியை எடுத்துச் சென்றது.

  கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா டோனிக்கு யாக்கர் வீசி வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.


  இப்போட்டியில் 3 ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் சந்தீப் சர்மா. இந்த நிலையில் தன் கனவு நிறைவேறியதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  சந்தீப் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

  உங்களுடைய 200 வது ஐபிஎல் போட்டிக்கு வாழ்த்துகள் டோனி பாஜி...உங்களுடன் இந்தக் களத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். எப்போது நன்றியுடன் இருப்பேன். என் கனவு நிறைவேறியது.

  என்று பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காயம் காரணமாக நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக பிரசித் கிருஷ்ணா அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணியில் பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். காயம் காரணமாக நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைடுத்து அவருக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மாவை ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்திருக்கிறது.

  முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக பிரசித் கிருஷ்ணா அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். அதிலிருந்து அவர் குணம் அடைய சில வாரங்கள் ஆகும் என்பதால் நடப்பு சீசனில் பிரசித் கிருஷ்ணா பங்கேற்க மாட்டார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

  அனுபவம் மிக்க வீரரான சந்தீப் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் அவர் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 10 சீசன்களில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நவ்தீப் சைனி மற்றும் ட்ரெண்ட் போல்ட் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் சந்தீப் சர்மா இணையவுள்ளார்.

  பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஜானி பேர்ஸ்டோ தவிர்க்க முடியாத காரணங்களால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மேத்யூ ஷார்ட்டை ஒப்பந்தம் செய்வதற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நான் எந்த அணிக்காக ஆடினாலும் சிறப்பாக செயல்படுவேன்.
  • சந்தீப் சர்மா ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளில் விளையாடி உள்ளார்.

  புதுடெல்லி:

  16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான மினி ஏலம் சமீபத்தில் நடந்தது.

  இதில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம்கரண் அதிகபட்சமாக ரூ.18½ கோடிக்கு ஏலம் போனார். பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை எடுத்தது.

  அவருக்கு அடுத்த படியாக கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) அதிகபடியான தொகைக்கு ஏலம் போனார்கள்.

  ஐ.பி.எல். ஏலத்தில் ஒரு காலக்கட்டத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன இந்திய சீனியர் வீரர் சந்தீப் சர்மாவை இந்த முறையாரும் கண்டு கொள்ளவில்லை. ஐ.பி.எல். ஏலத்தில் அவர் விலை போகவில்லை. எந்த அணியும் அவரை வாங்கவில்லை. இதனால் சந்தீப் சர்மா ஏமாற்றம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

  என்னை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. ஏமாற்றமும் அளிக்கிறது. நான் எந்த அணிக்காக ஆடினாலும் சிறப்பாக செயல்படுவேன். சில அணிகள் என்னை ஏலத்தில் எடுக்கும் என்று நினைத்தேன். இதை நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. உள்ளூர் போட்டியில் நான் சிறப்பாகவே பந்து வீசி வருகிறேன்.

  இவ்வாறு சந்தீப் சர்மா கூறியுள்ளார்.

  அவருக்கு நிர்ணக்கப்பட்ட அடிப்படை விலை ரூ.50 லட்சம் தான். அப்படி இருந்தும் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. சந்தீப் சர்மா ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளில் விளையாடி உள்ளார். 

  ×