என் மலர்

  நீங்கள் தேடியது "Home"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கண்களுக்கு புலப்படுவது போன்ற விரிசல்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • வீட்டில் இருக்கும் அனைத்து கேபிள்களும் சரியாக காப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

  நம்மில் பெரும்பாலோருக்கு சொந்தமாக வீடு வாங்குவது என்பது மிகப்பெரிய கனவாகவே இருக்கும். அந்த கனவு நனவாகும் பொழுது எதையெல்லாம் சரிபார்க்க வேண்டும் என்பதைப்பற்றி சிறிதாக ஒரு அலசல். சொந்தமாக வீடு வாங்கும் பொழுது வீட்டின் அமைப்பு, வீட்டின் உட்புற அமைப்பு, பவுண்டேஷன் மற்றும் எலிவேஷன் ஆகியவை பற்றி பொதுவாக கேட்டு அறிந்து கொள்வோம்.. இது மட்டுமல்லாமல் வேறு எவற்றை எல்லாம் சரி பார்க்க வேண்டும் என்பதைப்பற்றி ஹோம் இன்ஸ்பெக்சன் செக்லிஸ்ட் தயார் செய்து அவற்றை வைத்துக்கொண்டு சரி பார்க்கலாம் வாங்க..

  *எதற்காக ஹோம் இன்ஸ்பெக்சன் செக்லிஸ்ட் தயார் செய்ய வேண்டும்? அதன் முக்கியத்துவம் என்ன?

  # வீட்டை வாங்கி குடியேறிய பிறகு ஏற்படக்கூடிய கசிவுகள், ஈரப்பதம், குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றை தவிர்க்கலாம்.

  # நம் கண்களுக்குத் தெரியாத மற்றும் வீட்டை விற்பவர்கள் நம்மிடம் மறைக்கக் கூடிய சிக்கல்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள இந்த செக்லிஸ்ட் உதவிகரமாக இருக்கும்.

  # கட்டமைப்பு அல்லது பொருள் குறைபாடுகளை அடையாளம் காணமுடியும்.

  # தொலைதூர பகுதியில் அமைந்துள்ள வீடு மற்றும் இடத்தை மதிப்பிடலாம்.

  # லூஸ் வயரிங், சட்டவிரோத கட்டுமானங்கள் அல்லது தவறான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் பின்னர் சிக்கல்களை உருவாக்குவதை தவிர்க்கலாம்.

  # வீடு குறித்த இந்த ஆய்வறிக்கை வீடு வாங்குவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளிலும் நன்மையை அளிப்பதாக இருக்கும்..

  * வீட்டு ஆய்வறிக்கை சரிபார்ப்பு பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள்:

  வீட்டு ஆய்வாளர்(ஹோம் இன்ஸ்பெக்டர்) வீட்டை வாங்குபவருக்கு வேலை செய்பவராக இருப்பார். வீட்டை வாங்குபவருக்கு ஒப்பந்தத்தின் மூலம் என்ன கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வது அவரது கடமையாகும். இதுமட்டுமல்லாமல் நாம் வாங்கக்கூடிய சொத்தின் தற்போதைய நிலை மற்றும் என்ன சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்பது குறித்தும் வீட்டு ஆய்வாளர் அறிந்திருக்க வேண்டும்.பொதுவாக ஹோம் இன்ஸ்பெக்சன் என்பது குறைந்தபட்சம் 2 மணி முதல் நான்கு மணி நேரங்கள் வரை நடைபெறும். இந்த நேரத்தில் வீட்டை வாங்குபவரும் ஆய்வாளருடன் செல்லலாம். வீட்டை ஆய்வு செய்த பிறகு முக்கியமான சிக்கல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் உட்பட விரிவான அறிக்கையை ஆய்வாளர் வழங்குவார். ஹோம் இன்ஸ்பெக்சன் செய்யும்பொழுது கவனிக்கவேண்டிய முக்கியமான குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.

  பவுண்டேஷன்:

  வீடு வாங்குவதற்கு முன் சரி பார்க்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் பவுண்டேஷன் எனப்படும் அடித்தளமாகும்.

  அடித்தளத்தை இணைக்கும் சுவர்களின் அடிப்பகுதியில் எந்த விரிசல்களும் இருக்கக்கூடாது.அடித்தளத்திற்கு அருகில் எந்தப் பகுதியும் ஈரமாகவோ அல்லது புதைந்திருப்பது போன்றோ தோன்றக்கூடாது.அடித்தளத்திற்கு அருகில் பெரிய மரங்கள் இருக்கக்கூடாது.

  லீக்கேஜ் அல்லது சீப்பேஜ்:

  சிங்கை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதாவது நீர்க்கசிவு இருக்கின்றதா என்பதை சரிபார்க்க வேண்டும்.வீட்டின் அடித்தளம், மேற்கூரை போன்ற அனைத்துப் பகுதிகளிலும்- நீர் எளிதில் ஊடுருவக்கூடிய இடங்களில் கசிவு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்..

  மேற்கூரை

  கப்பிங், கர்லிங், விரிசல் அல்லது சேதம் இல்லாமல் ரூஃப் ஷிங்கிள்ஸ் அப்படியே இருக்க வேண்டும். கூரைகளில் கூடுதல் சிமெண்ட் திட்டுகள் தெரியக்கூடாது.சோஃபிட்கள் சிதைவு அல்லது துரு பிடிப்பது போன்ற எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தக் கூடாது.மேற்கூரையில் இருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் சரியாக செல்வதற்கான பாதை இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.புகை போக்கிகள் இருந்தால் அவை நேராகவும் அவற்றின் உறை நல்ல நிலையிலும் இருக்க வேண்டும்.

  வெளிப்புறங்கள்:

  கண்களுக்கு புலப்படுவது போன்ற விரிசல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். சுவர்களில் எவ்வித தொய்வும் இருக்கக் கூடாது. செங்கல் வெளிப்படையாக தெரியும் இடங்களில் எவ்வித விரிசல் அல்லது சேதம் இருக்கக் கூடாது. அலுமினியம் அல்லது வினைல் பேனல்கள் பொருத்தப்பட்டிருந்தால் அவை தளர்வாக இருக்கிறதா என்பதை சோதித்து இறுக்கமாக பொருத்த வேண்டும்.சுவர்களில் அடிக்கப்பட்டிருக்கும் வண்ணங்கள் செதில்களாக உதிர்வது அல்லது புடைத்துக் கொண்டு இருப்பது போன்றவை தென்படுகிறதா என்பதை சரிபார்க்கவும்.அதேபோல் சுவர்களில் வேறு எந்தவிதமான கறைகளும் தென்படக்கூடாது.

  கதவுகள் மற்றும் ஜன்னல்கள்

  கதவு மற்றும் ஜன்னல்களில் தாழ்ப்பாள் மற்றும் அவற்றை பொருத்தக்கூடிய துவாரங்களை சரி பார்க்கவும். கதவுகள் அல்லது ஜன்னல்களின் சட்டத்தை சுற்றி ஈரப்பதம் மற்றும் ஈரக்கசிவினால் ஏற்பட்ட கறைகள் காணப்படக்கூடாது.ஜன்னல் பிரேம்களைச் சுற்றியுள்ள இணைப்புகள் சரியாக பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்..

  பிளம்பிங்

  குழாய் சரியாக பொருத்தப்பட்டு இருக்கிறதா என்பதையும் குழாய்களில் கசிவு இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.உலோக குழாய்களாக இருந்தால் அவற்றில் ஏதேனும் அரிப்பு இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும்.அதேபோல் குழாய்களில் நீர் அழுத்தம் எதிர்பார்த்த வரம்பிற்குள் இருக்க வேண்டும்.

  வீட்டில் உள்ள மின் அமைப்புகள்

  வீட்டில் இருக்கும் அனைத்து கேபிள்களும் சரியாக காப்பிடப்பட்டிருக்க வேண்டும்.அனைத்து லைட் மற்றும் ஃபேன்கள் வேலை செய்யும் நிலையில் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். சர்வீஸ் பேனல் போதுமான திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.எந்த மின் இணைப்புகளும் திறந்த நிலையில் இருக்கக்கூடாது..

  உட்புறங்கள்

  வீட்டை ஆய்வு செய்யும் பொழுது வீட்டின் உட்புறம் மிகவும் முக்கியமானது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.வீட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் வித்தியாசமான வாசனை வருகிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்.வீட்டின் தரை, சீலிங் மற்றும் சுவர்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.தேவையான இடங்களில் எலக்ட்ரிக்கல் பாயிண்டுகள் பொருத்தப்பட்டிருக்கிறதா அப்படி இல்லாத பட்சத்தில் தேவையானவற்றை பொருத்தி தரச்சொல்லி வீட்டை விற்பவரிடம் தெரிவிக்கலாம்.

  சமையலறை

  சமையல் மேடை சரியான உயரத்தில் இருக்க வேண்டும். எக்ஸாஸ்ட் ஃபேன் அல்லது சிம்னி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். சிங்கில் நீர்க்கசிவு இல்லாமல் இருக்கவேண்டும். சமையலறை கதவுகளும் கிச்சன் கேபினட் கதவுகளும் சரியாக இயங்க வேண்டும்.

  குளியலறை

  குளியலறையில் தண்ணீர் சரியாக வருகிறதா, எக்ஸாஸ்ட் ஃபேன் பொருத்தப்பட்டுள்ளதா, டாய்லட் ஃபிளஸ் சரியாக வேலை செய்கிறதா,குழாய்களில் எந்த ஒரு இடத்திலும் நீர்க்கசிவு ஏற்படுகிறதா, குளிக்கும் நீர் தரையில் தேங்காமல் சரியாக செல்கிறதா போன்ற அனைத்தையும் சரிபார்க்க வேண்டும்.

  மேலே கூறிய இவை மட்டுமல்லாமல் வீட்டின் டிரைனேஜ் சிஸ்டம் மற்றும் வீட்டில் செய்யப்பட்டிருக்கும் மரவேலைப்பாடுகள் ஆகிய அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரி பார்க்க வேண்டும். இதில் ஏதாவது சிக்கல்கள் இருந்தால் வீட்டை விற்பவரிடம் தெரிவித்து அவற்றை சரி செய்து தரச் சொல்லலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நம் வீட்டை, நம் அறையை எவ்வாறு அழகுபடுத்தலாம் என திட்டம் வைத்திருப்பீர்கள்.
  • குறைந்த நேரத்தில் உருவாக்கக்கூடிய சுவர் அலங்காரம் சிலவற்றைப் பார்க்கலாம்.

  வீட்டைக் கலை நயத்துடன் பராமரிப்பது என்பதும் ஒரு தனித்திறமை என்றே கூறலாம். அதுவும் நம் கலைவண்ணத்திலேயே உருவானது என்றால், அதற்கு தனி பெருமை. நம் வீட்டை, நம் அறையை எவ்வாறு அழகுபடுத்தலாம் என திட்டம் வைத்திருப்பீர்கள். ஆனால் அதை நிறைவேற்ற நினைப்பவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அந்த வகையில் குறைந்த நேரத்தில் உருவாக்கக்கூடிய சுவர் அலங்காரம் சிலவற்றைப் பார்க்கலாம்.

  டாட்ஸ் அலங்காரம்

  எளிமையான ஒரு சுவர் அலங்காரம் தான் டாட்ஸ். தேவையில்லாத கலர் பேப்பர்கள், கிப்ட் பேப்பர்களை வைத்திருந்தால் போதும் இதனை உருவாக்கிவிடலாம். பேப்பர்களை வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். இதை எளிதில் தயார் செய்வதற்கு பஞ்சிங் இயந்திரம் தேவை. ஒரே அளவிலும் வெவ்வேறு அளவிலுமான வட்டங்கள் வரைந்து அதை வெட்டி வைத்து கொள்ளுங்கள். பின்பு, கேன்வாஸ் ஒன்றில் வரிசையாக கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும். பின்பு கேன்வாஸை ப்ரேம் செய்து மாட்டினால் வேலை முடிந்தது. பேப்பர்களை ஒட்டும்போது நேர் கோட்டில் ஒட்ட வேண்டும். இங்கு உங்களுடைய கலை நயத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமாக ஒட்டி, புதுப்புது உருவங்களை உருவாக்கலாம்.

  ரிப்பன் அலங்காரம்

  ரிப்பன் உபயோகிப்பது இந்தக் காலத்தில் குறைந்து வந்தாலும், அலங்காரம் என்று வந்துவிட்டால் ஏதோ ஒரு இடத்தில் ரிப்பன் தேவைப்படத்தான் செய்கிறது. சாட்டின் ரிப்பன், பிரிண்டட் ரிப்பன் என்று பல வகை இதில் வந்துவிட்டது. பரிசு பொருட்களின் மீது பூ போன்ற பல வடிவங்களில் ரிப்பன் இருப்பதைக் காணலாம். அதை உபயோகித்து எளிய முறையில் வீட்டில் சுவர் அலங்காரம் உருவாக்கலாம்.

  தேவையான பொருட்கள்: சார்ட் பேப்பர், ரிப்பன், பசை

  ஆணி அலங்காரம்

  பொதுவாக வீட்டில் ஆணி அடிக்க வேண்டும் என்றாலே அனைவர் மனதிலும் தயக்கம்தான் ஏற்படும். ஆனால், ஆணி அடிப்பதிலும் ஒரு கலை இருக்கிறது என்றால் அதைத் தவிர்க்க வேண்டிய தேவையே இல்லை. அந்த வகையில், ஆணியின் மூலம் உருவாக்கக் கூடிய சுவர் அலங்காரம் இதோ...

  தேவையான பொருட்கள்: ஆணி, கலர் நூல்கண்டு

  ஆணிகளை உங்களுக்குத் தேவையான உருவத்தில் அடித்துக்கொள்ள வேண்டும். அதாவது, எழுத்துக்கள் வேண்டுமென்றால் அதன் வடிவத்தில் அடிக்க வேண்டும். முதலில் பென்சிலில் வரைந்துகொண்டு ஆணி அடிப்பது நல்லது. பிறகு அனைத்து ஆணிகளையும் நூலால் கோர்த்தால், நீங்கள் விருப்பப்பட்ட வடிவம் கிடைக்கும். அதன்பிறகு, இரண்டு ஆணிகளாக, குறுக்கே நூலை கட்ட வேண்டும். ஆணிகளை வைத்து நூல் பின்னல் போட்டது போன்ற அழகான தோற்றம் இதில் கிடைக்கும். இதை வீட்டின் படிக்கும் அறையில் செய்தால் அழகாக இருக்கும்.

  குச்சி அலங்காரம்

  பெரு நகரங்களில் வாழ்ந்தாலும் நம் கிராமங்களில் வாழ்வது போல இருக்க வேண்டும் என்று நினைத்தால் நாமே அதை உருவாக்க முடியும். மரம், பழுப்பு நிறம் போன்றவற்றை உபயோகித்தால் ஒரு பழமையான சூழல் கிடைக்கும். அந்த வகையில் நமக்கு எளிதில் கிடைக்கும் பொருள் குச்சிகள். அவற்றின் மூலம் சுவரில் நமக்குப் பிடித்த வடிவங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

  தேவையான பொருட்கள்: குச்சிகள், கம்.

  வெவ்வேறு அளவுகளில் குச்சிகளைச் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். சிறிய அளவில் இருந்து பெரிய குச்சி வரை ஒவ்வொன்றையும் ஒட்டிக்கொள்ள வேண்டும். பிறகு பெரிய அளவில் இருந்து சிறிய குச்சிகள் வரை வரிசையாக ஒட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் இணைத்தால் படத்தில் உள்ள வடிவத்தை உருவாக்க முடியும். சுவரில் ஒட்டுவதற்கு முன்பு நாம் உருவாக்கிய வடிவத்தின் பின்புறத்தில் ஒரு குச்சியைக் கிடைமட்டமாக ஒட்ட வேண்டும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இது குறித்து முருகானந்தம் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார்.
  • இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

  வேதாரண்யம்:

  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

  இந்நிலையில் தனது மனைவி சூரியா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கொடைக்கானல் சுற்றுலா சென்று இருந்தார். இன்று காலை திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, 3000 அமெரிக்கா டாலர், ஈராக் நாட்டு ரியால் 3000 ரொக்கம் 400 ஆயிரம்,பாஸ்போர்ட் உள்ளிட்டவை திருட்டு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  அப்போது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

  இது குறித்து முருகானந்தம் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இதனால் அன்பழகன் மன வேதனையில் இருந்து வந்தார்.
  • அப்போது அன்பழகன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

  திருவாரூர்:

  வலங்கைமான் அருகே நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் வரதராஜன். இவருடைய மகன் அன்பழகன் (வயது35). தொழிலாளி.

  குடும்ப தகராறு காரணமாக இவருடைய மனைவி கோபித்துக்கொண்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அன்பழகன் மன வேதனையில் இருந்து வந்தார்.

  இந்த நிலையில் நேற்று இரவு அவருடைய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் வலங்கைமான் போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அன்பழகன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

  அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அன்பழகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக் கூடாது.
  • சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு சமைக்கக் கூடாது.

  வீட்டில் பெண்கள் அதிகமாக நேரத்தை செலவிடும் இடம் சமையலறை. பரபரப்பாக சமையல் செய்வது, மற்ற வேலைகளை முடித்த களைப்போடு சமையல் வேலைகளில் ஈடுபடுவது என அவர்கள் மேற்கொள்ளும் வேலைக்கு ஏற்றவாறு, அந்த அறையின் அமைப்பு மற்றும் வசதிகள் இருக்க வேண்டும். தண்ணீர், மின்சாரம், நெருப்பு இவை மூன்றையும் ஒன்றாக பயன்படுத்தும் இடம் என்பதால், சமையல் அறையில் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது. அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

  தரை:

  பெரும்பாலான வீடுகளில் 'டைல்ஸ்' பதிக்கப்பட்ட தரை உள்ளது. இதில், எந்த வகையான திரவங்கள் சிந்தினாலும் எளிதாகக் கண்டுபிடிக்க முடியாது. எதிர்பாராமல், அதில் கால் வைக்க நேர்ந்தால் வழுக்கி விழும் அபாயம் உள்ளது. எனவே, கீழே சிந்தும் திரவங்களை அவ்வப்போது துடைத்து, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டில்கள் ஏதேனும் உடைந்தால், அதைத் துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

  தீ அணைக்கும் கருவி:

  சமையல் அறையில், சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், பர்னர்கள் அல்லது பிளம்பீட் டெசர்ட் ஆகியவற்றில் இருந்து தீப்பிழம்புகள் வந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சமைக்கும் பாத்திரத்தில் திடீரென தீப்பற்ற நேர்ந்தால், அதில் தண்ணீர் ஊற்றக் கூடாது. இது தீயை மேலும் அதிகரிக்கக்கூடும். பாத்திரத்தை ஒரு தட்டை போட்டு மூடி, அதன் மீது சிறிது பேக்கிங் சோடாவைப் போடலாம். இதனால், தீ உடனடியாக கட்டுக்குள் வரும். சமையல் அறையில், தீயணைக்கும் கருவியை வைத்திருப்பதும், அதைக் கையாளத் தெரிந்திருப்பதும் அவசியம்.

  சமையல் உபகரணங்கள்:

  கத்தி, அரிவாள், அரிவாள்மனை போன்ற கூர்மையான பொருட்களை சமையல் அறையின் பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். பாத்திரங்களில் திருகுகள் உள்ள கைப்பிடிகள் தளர்வாக இருப்பதைக் கவனித்து உடனே அவற்றை சரி செய்வதன் மூலம், விபத்துகளைத் தவிர்க்கலாம்.

  தினசரி கவனம்:

  தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்றாக சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியில் உள்ள சேப்டி வால்வையும் சரிபார்ப்பது அவசியம். அடுப்பை அணைப்பதோடு, எரிவாயு சிலிண்டரையும் மூடிய பின்னரே சுத்தம் செய்ய வேண்டும். குழம்பு தாளிக்கும் போது, குமிழ் வைத்த மூடியால் மூடியபடி தாளித்தால், கடுகு போன்ற பொருட்கள் தெறித்து விழுந்து சூடுபடாமல் இருக்கும். சமைக்கும்போது, நைலக்ஸ் புடவை கட்டிக்கொண்டு சமைக்கக் கூடாது. இது எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்டது.

  மேலும், குழந்தைகள் அடுப்பிற்கு அருகில் சென்று கேஸ் குழாய்களை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை அடுப்பின் அருகில் வைத்திருக்கக் கூடாது. இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு ரெகுலேட்டரும், அடுப்பின் வால்வும் மூடி உள்ளதா என்பதை சரி பார்ப்பது அவசியம். பாத்திர அலமாரிகளோ, மற்ற பொருட்களோ அடுப்பிற்கு மேல் பகுதியில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை எடுக்க முயலும் போது, ஆடையில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது. ஆடையில் நெருப்பு பற்றினால், உடனே உடலைச் சுற்றி கம்பளியை போர்த்தி, நெருப்பை அணைக்கலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சமையல் அறையில் இருந்து வெளிப்படும் புகையும் மாசுவை அதிகப்படுத்திவிடும்.
  • சமைக்கும்போது காற்றோட்டமான சூழலை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  ஒரு நாளின் பெரும்பகுதியை வீட்டில்தான் செலவிடுகிறோம். கொரோனா பரவலுக்கு பிறகு வீட்டிற்குள் செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. நோய்த்தொற்றுகளின் தாக்கத்தால் வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு முன்பை விட அதிக அக்கறை செலுத்துகிறார்கள். அழுக்குகள், தூசுகள், ஆவியாகும் கரிம சேர்மங்கள், மாசு விளைவிக்கும் வாயுக்கள், நுண் துகள்கள், ஒவ்வாமை போன்றவை மூலம் காற்று மாசுபாடு ஏற்படக்கூடும். குளியல் அறை, சமையல் அறைகளில் இருந்து வெளிப்படும் வாசமும் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும். பெரும்பாலும் இத்தகைய மாசுக்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் காற்று மாசுக்களை கட்டுப்படுத்தி வீட்டுக்குள் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்.

  1. துப்புரவு பொருட்கள்: சமையலறை, குளியலறை, ஜன்னல்கள், தரைத்தளங்கள் போன்றவற்றில் காணப்படும் மாசுக்களை சுத்தப்படுத்துவதற்கு பயன்படுத்தும் துப்புரவு பொருட்களில் கலந்திருக்கும் ரசாயனங்கள் மூலம் கூட மீண்டும் மாசுக்கள் உருவாகக்கூடும். எனவே இயற்கையான துப்புரவு பொருட்களை பயன்படுத்துவது, மாசுபாட்டுக்கு வழிவகுக்காத பொருட்களை உபயோகிப்பது என மாற்று வழிமுறையை பின்பற்றுவது வீட்டின் உட்புற மாசுபாட்டை குறைக்க உதவும்.

  2. வெற்றிடம்: வைரஸ்கள், பாக்டீரியாக்கள், கரப்பான் பூச்சி மற்றும் நாய் மூலம் உருவாகும் அலர்ஜி போன்றவை நாம் உட்காரும், விளையாடும், தூங்கும் இடங்களில் அதிகமாக காணப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தரை விரிப்புகள், தரை தளங்களில் செல்லப்பிராணிகளின் முடிகள் உதிர்ந்து கிடப்பது, அவற்றின் அழுக்குகள் படிந்திருப்பது மூலமாகவும் மாசுக்கள் அதிகரிக்கலாம். ஷோபாவை தூசு தட்டும்போதோ, குஷனில் அமர்ந்து விளையாடும்போதோ காற்றில் தூசு பறப்பதை காண முடியும். அவற்றில் தங்கி இருந்த தூசுவை நாம் சுவாசிக்க நேரிடும்போது நோய்த்தொற்று ஏற்படக்கூடும். எந்தவொரு பொருளையும் சில நாட்கள் உபயோகிக்காமல் இருந்தால் அவற்றில் தூசுக்கள் படிந்திருப்பதை காணலாம். வீட்டுக்குள் தூசுக்களை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, வெற்றிடமாக வைத்திருப்பதுதான். அதாவது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அதிக வெற்றிடங்களை உருவாக்க வேண்டும்.

  3. வாசனை திரவியங்கள்: நிறைய பேர் அறைக்குள் நிலவும் கெட்ட வாசத்தை போக்குவதற்கு 'ரூம் பிரஷ்னர்களை' உபயோகிப்பார்கள். அவை நல்ல வாசத்தை கொடுக்கும் என்றாலும் அதனை நுகர்வதை தவிர்க்க வேண்டும். அறை முழுவதும் வாசனை திரவியத்தை ஸ்பிரே செய்துவிட்டு உடனே அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும். அதன் வாசம் நீங்கிய பிறகு அறைக்குள் நுழையலாம். ஏனெனில் அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் காற்றிலும், மாசுக்களிலும் கலப்பதை நாம் சுவாசிக்கும்போது ஒவ்வாமை பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

  4. சமையல்: சமைக்கும்போது கையாளும் சில வழிமுறைகள் கூட மாசுபாட்டை உருவாக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எண்ணெய்யில் பொரிக்கும்போது அவற்றில் இருந்து வெளிப்படும் துகள்கள் மாசுபாட்டை உருவாக்கும். சமையல் அறையில் இருந்து வெளிப்படும் புகையும் மாசுவை அதிகப்படுத்திவிடும். ஆதலால் சமைக்கும்போது காற்றோட்டமான சூழலை உறுதி செய்துகொள்ள வேண்டும். வெளிப்புற காற்று மாசுபாடு பிரச்சினை இல்லாவிட்டால் ஜன்னலை திறந்துவைத்துக்கொள்ளலாம். சுத்திகரிப்பானையும் நிறுவலாம். சமையல் அறை மட்டுமின்றி மற்ற அறைகளிலும் காற்று சுத்திகரிப்பானை நிறுவுவது மாசு பிரச்சினையை கட்டுப்படுத்தும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பழங்காநத்தம் பகுதியில் 3 வீடுகளில் புகுந்து பணம் திருடப்பட்டது.
  • இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

  மதுரை

  மதுரை பழங்காநத்தம், மாடக்குளம் மெயின் ரோடு, மருதுபாண்டியர் நகர், 3-து தெருவை சேர்ந்தவர் ராஜ பிரபு (31).

  அதிகாலை இவருடைய வீட்டில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ. 5 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து ராஜ பிரபு எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார்.

  அதே பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (34). இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ரூ.8,700-ஐ திருடிச்சென்று விட்டார்.

  இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவுசெய்து மேற்கண்ட 2 வீடுகளிலும் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

  பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மனைவி ராமலட்சுமி (39). இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ரூ.40 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டார்.

  இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டில், நம் பயன்பாடு அதிகமாக இருக்கும் பகுதி குளியல் அறை.
  • கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக வந்துள்ளதுதான் 'டாய்லெட் கிளீனிங் ரோபோ'.

  ஷவரில் குளிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும், மழை நீர் போன்று, நீரை விழச் செய்து குளித்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஷவர் போன்ற 'வாட்டர் ஹாக்' ஸ்மார்ட் தொழில்நுட்பம் தண்ணீர் அதிகம் வீணாகாமல் தடுக்கும். இதில் உள்ள 'மின்சார டிஸ்பிளே' குளிக்கும் நீரின் வெப்பநிலையைக் காண்பிக்கும். வீட்டில், நம் பயன்பாடு அதிகமாக இருக்கும் பகுதி குளியல் அறை. இதைச் சுத்தமாக வைத்திருப்பது பலருக்கும் பெரிய சவாலாகவே இருக்கும். இந்த வேலையை எளிதாக்குவதற்கு தற்போதைய நவீன தொழில்நுட்பம் கைக்கொடுக்கிறது. இதன் மூலம் நமது நேரம் மிச்சமாகும். சுகாதாரம் மேம்படும். அத்தகைய தொழில்நுட்பங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

  சென்சார் சோப் டிஸ்பென்சர்: கைகளை சுத்தப்படுத்துவதற்கு உபயோகிக்கும் சோப்புக் கட்டிகளை, அனைவரும் தொட்டு பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக, திரவ சோப்புகளை பாட்டிலில் அடைத்து பயன்படுத்தினோம். அந்த பாட்டிலை கைகளால் அழுத்தி சோப் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டதே 'சென்சார் சோப் டிஸ்பென்சர்'. நம் கையை இந்த டிஸ்பென்சர் முன் நெருக்கமாக நீட்டும் போது, 0.25 விநாடிகளில் கைகளில் சோப்பு விழும். இதற்காக கொடுக்கப்படும் திரவ சோப்பை டிஸ்பென்சரில் நிரப்பி இயக்க வேண்டும். இது 4 பேட்டரிகளின் உதவியுடன் செயல்படும். தொடர்ந்து 9 மாதங்கள், 400 முறை இதை பயன்படுத்த முடியும்.

  வாட்டர் ஹாக்: ஷவரில் குளிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும், மழை நீர் போன்று, நீரை விழச் செய்து குளித்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஷவர் போன்ற 'வாட்டர் ஹாக்' ஸ்மார்ட் தொழில்நுட்பம் தண்ணீர் அதிகம் வீணாகாமல் தடுக்கும். இதில் உள்ள 'மின்சார டிஸ்பிளே' குளிக்கும் நீரின் வெப்பநிலையைக் காண்பிக்கும். இந்தக் கருவியில் குளிக்கும் நேரத்தையும் நாம் பதிவிட முடியும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஷவரின் வழியாக தண்ணீர் வருவது நின்றுவிடும். இதனால், தண்ணீர் அதிகமாக செலவு செய்வதை தவிர்க்க முடியும். மேலும், இதில் விரும்பிய நிறத்தில் விளக்குகளையும் ஒளிர விடலாம்.

  டாய்லெட் கிளீனிங் ரோபோ: கழிப்பறையை சுத்தம் செய்வதற்காக வந்துள்ளதுதான் 'டாய்லெட் கிளீனிங் ரோபோ'. இதனுடன், சார்ஜ் செய்யும் ஓர் உபகரணமும் வழங்கப்படும். அதைக் கொண்டு, சார்ஜ் செய்து பயன்படுத்தலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால், 3 முறை பயன்படுத்த முடியும். இதில், கொடுத்துள்ள இணைப்பை டாய்லெட்டில் பொருத்தி, இந்த ரோபோவை கழிவறைக்குள் இறக்கி விட வேண்டும். இதில், கொடுக்கப்பட்டிருக்கும் பெரிய பிரஷ், சுத்தம் செய்ய முடியாத பகுதிகளில் கூட எளிமையாக சுத்தம் செய்யும். இதில், 3 பிரஷ்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை கழிப்பறையின் அளவிற்கேற்ப பொருத்திக் கொள்ளலாம்.

  ஸ்பின் ஸ்கிரப்பர்: குளியல் அறையில், சுவர் மற்றும் தரையில் உள்ள டைல்ஸ், வாஷ்பேஷின் ஆகியவற்றில் எளிதில் கறை படியும். இதைக் கையால் தேய்த்து சுத்தம் செய்வது கடினமாக இருக்கும். அந்த வேலையை எளிமையாக்க வந்திருப்பது தான் எலக்ட்ரிக் ஸ்பின் ஸ்கிரப்பர். 360 டிகிரியில் சுழலும் வகையில், 3 விதமான பிரஷ் கொடுக்கப்பட்டிருக்கும். ஒரு முறை சார்ஜ் செய்தால், 4 முறை எளிதாகப் பயன்படுத்தலாம். இதை அரைமணி நேரம் மட்டும் சார்ஜ் செய்தால் போதும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீரோவை கன்னி மூலையில் வைப்பது சாலச்சிறந்தது. இது செல்வ செழிப்புக்கு உதவும்.

  * ஈசான மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் தலைவாசல் வைக்கலாம். அவ்வாறு வைக்கும் போது வெளியில் போர் வெல்லையும் அமைக்கலாம். இந்த அமைப்பானது குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும் படிப்பிற்கும் சிறப்பைக் கூட்டும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும்.

  * தென் மேற்கில் படுக்கை அறை அமைக்கலாம். கட்டிலை தெற்குப் பகுதியில் உள்ள சுவரை ஒட்டி போடலாம். அவ்வாறு வைக்கும் பொழுது பணம் புழங்கும். பீரோவை கன்னி மூலையில் வைப்பது சாலச்சிறந்தது. இது செல்வ செழிப்புக்கு உதவும்.

  * உறவுகள் பலமாக அமைய வேண்டுமென்றால் உறவினர்கள் வந்து தங்கக் கூடிய இடம் வடமேற்கில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். வீட்டில் உள்ள முதியவர்கள் வடமேற்கில் உள்ள படுக்கை அறையில் தங்குவது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

  * நாம் உண்ணும் உணவே நம் உடல் ஆரோக்கியத்திற்கும், அமைதியான மனதிற்கும் காரணமாக அமைகிறது. அப்படிப்பட்ட உணவை சமைக்கும் இடம் அக்னி மூலை எனப்படும் தென்கிழக்குப் பகுதியில் இருக்க வேண்டும். சமையலறை சிறப்பாக அமைந்தால் மட்டுமே பெண்கள் அங்கு உணவை சுவைபட சமைக்க முடியும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் தம்பதியின் குடிசை வீடு இடிந்து விழுந்தது.
  • இன்று ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டின் சாவியை முதிய தம்பதியினரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்மநேரி வி.கே. நகரைச சேர்ந்தவர்கள் வேலு -இசக்கியம்மாள் தம்பதியர். முதியவர்களான இவர்கள், மண் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் இவர்களது குடிசை வீடு இடிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட அந்த தம்பதியினரை நேரில் சந்தித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரஸ் பொருளாளருமான ரூபி மனோகரன் ஆறுதல் கூறினார்.

  தொடர்ந்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதோடு, இடிந்து விழுந்த வீட்டை தனது சொந்த செலவில் புதுப்பித்து தருவதாக உறுதியளித்தார்.

  அதன்பேரில் தம்பதியினருக்கு சொந்தமான இடத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வீட்டை புதுப்பிக்கும் பணியை ஆரம்பித்தார்.

  தற்போது அந்த வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இன்று அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யின் பிறந்தநாளை முன்னிட்டு, புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டின் சாவியை முதிய தம்பதியினரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

  இன்று அங்கு நடைபெற்ற கிரக பிரவேச நிகழ்ச்சியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுடன் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர். கன மழையில் வீட்டை இழந்த முதிய தம்பதியினருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. செய்துள்ள இந்த மனிதாபிமான உதவியை நாங்குநேரி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மொடக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த பிளஸ்-1 மாணவி மாயமானார்.
  • இதையடுத்து காணாமல் போன மகளை கண்டு பிடித்து தருமாறு தந்தை மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபாய் காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (49). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கவுசிகா (16), ஹர்சிதா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

  இவரது மகள் கவுசிகா மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

  சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனது 2 மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு உறவினர்கள் திருமணத்துக்காக நாமக்கல் சென்று விட்டார்.

  இந்நிலையில் ஹர்சிதா தனது அக்காள் கவுசிகா வீட்டில் இல்லாததால் தேடி பார்த்து உள்ளார். இதையடுத்து இரவு 7 மணிக்கு ஹர்சிதா தனது பெற்றோருக்கு போன் செய்து கவுசிகாவை காணவில்லை என்று கூறி உள்ளார்.

  இதையடுத்து பாலகிருஷ்ணன் அக்கம்பக்கம் கவுசிகாவை தேடி பார்த்தும் விசாரித்தும் கிடைக்காததால் தனது மகளை கண்டு பிடித்து தருமாறு மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவி கவுசிகாவை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo