சேலம் சுகவனேஸ்வரர் கோவில் கருணை இல்லத்தில் திருட்டு

சுகவனேசுவரர்‌ சுவாமி கோவில் ‌ வளாகத்தில்‌ அமைந்துள்ள கருணை இல்லத்தில்‌ இருந்த சுமார்‌ ரூ.5 லட்சம்‌ உலோகப் பொருட்கள் திருட்டு.கருணை இல்லத்திற்குள் கல்லூரி மாணவர்‌ ஒருவரும்‌ , லுங்கி மற்றும்‌ சிகப்பு சட்டை அணிந்த மற்றொரு நபரும்‌ அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் கருணை இல்லத்தில் திருட்டு
Published on

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சுகவனேசுவரர் சுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் இருந்த சுமார் ரூ.5 லட்சம் மதிப்புடைய நெய் டின்கள், அரிசி மூட்டைகள் , உலோகப்பொருட்கள் மற்றும் ஆகியவைகள் கணக்கில் கொண்டு வரப்படாமல் இருந்தது. இதுபற்றி தகவல் அளித்ததற்கு உடனடியாக அவைகளை கைப்பற்றி ரசீது போடுவதற்கு சக பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கருணை இல்லத்திற்குள் கல்லூரி மாணவர் ஒருவரும் , லுங்கி மற்றும் சிகப்பு சட்டை அணிந்த மற்றொரு நபரும் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து உடனடியாக காவல் துறையில் விரிவான புகாரினை அளித்து, துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். கோவிலில் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com