search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "91 மக்களவை தொகுதிகள்"

    17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக இன்று நடந்து முடிந்தது. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 



    அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிதடி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019
    பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். #Advani #LKAdvaniBirthday #ModiWishes
    புதுடெல்லி:

    பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு இன்று 91-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘இந்தியாவின் வளர்ச்சிக்கு அத்வானியின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரது அறிவாற்றல் அரசியல் அரங்கில் போற்றப்படுகிறது. இந்திய அரசியலில் அவரது தாக்கம் மகத்தானது. தன்னலம் கருதாமல் விடா முயற்சியுடன் கட்சியை கட்டமைத்து தொண்டர்களை சிறப்பாக வழிநடத்தியவர்’ என அத்வானியை பாராட்டியுள்ளார்.


    இதேபோல் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, மம்தா பானர்ஜி, சித்தராமையா, அசோக் கெலாட், ராஜ்யவர்தன் ரத்தோர், சுரேஷ் பிரபு, ராஜீவ் பிரதாப் ரூடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Advani #LKAdvaniBirthday #ModiWishes 
    மேகாலயா மாநிலத்தின் அம்பாதி தொகுதியில் நடந்த சட்டசபை இடைத்தேர்தலில் 91 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #AmbatiBypoll #Electioncommision
    புதுடெல்லி:

    உ.பி.யின் கைரானா உள்பட நான்கு மக்களவை தொகுதிகளுக்கும், மேகாலயா மாநிலத்தின் அம்பாதி உள்பட 10 சட்டசபை தொகுதிகளுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

    உத்தரப்பிரதேச மாநிலம் நூர்புர், மராட்டிய மாநிலம் பாலஸ் கடேகோன், பஞ்சாப் மாநிலம் ஷாகோட், பீகார் மாநிலம் ஜோகிகட், ஜார்கண்ட் மாநிலம் கோமியா, சில்லி, கேரள மாநிலம் செங்கானூர், மேகாலயா மாநிலம் அம்பாதி, உத்தரகாண்ட் மாநிலம் தாராளி, மேற்குவங்காள மாநிலம் மகேஷ்தலா ஆகிய 10 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது, இந்த 10 தொகுதிகளில் மேகாலயா மாநிலத்தின் அம்பாதி தொகுதியில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் மட்டும் 90.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளது.

    நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை மறுதினம் நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #AmbatiBypoll #Electioncommision
    திருப்பூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் 91 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    தமிழகத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்கக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று காலை போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    காவிரி நதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கைவிட வேண்டும். ஆற்று மணல், தாது மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாத்து தமிழகம் பாலைவனம் ஆகாமல் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ரவி, தலைவர் மூர்த்தி, பொருளாளர் விஜய், மண்டல செயலாளர்கள் முத்துபாண்டி, சதாம்உசேன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அதற்குள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பூர் தெற்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 91 பேரை போலீசார் கைது செய்து பல்லடம் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 
    ×