search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 people arrest"

    • கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
    • இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அனுமதியன்றி மது விற்ற 7 பேரை கைது செய்தனர்.

    கரூர் :

    கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசார், குளித்தலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக மலர், ரவி, தங்கராசு, மாரியம்மாள், மணி, சண்முகம், ராமச்சந்திரன் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், அவர்களிடமிருந்து 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.

    சித்தூர் அருகே பேருந்தில் 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தது குறித்து 7 பேரை கைது செய்த போலீசார் 4 கிலோ நகையை பறிமுதல் செய்தனர்.
    திருப்பதி:

    மும்பையைச் சேர்ந்தவர் தங்க நகை மொத்த வியாபாரி பாவேஷ், தனது ஊழியர்கள் 2 பேரிடம் 15 கிலோ தங்க நகைகளை விற்பனைக்காக கடந்த 8ம் தேதி கொடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் அவற்றை விசாகப்பட்டினத்தில் பெங்களூருக்கு பஸ்சில் கொண்டு சென்றார்.

    ஆந்திர மாநிலம். சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் அருகே சென்றதும், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பயணிகள் உணவு சாப்பிடுவதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது, பஸ்சில் நகைப்பைகளில் 9 கிலோ எடை கொண்ட பை ஒன்று மாயமாகியுள்ளது.

    இதானல் அதிர்ச்சியடைந்த அவர்கள், பங்காருபாளையம் போலீஸ் ஸ்டே‌ஷனில் இதுபற்றி புகார் அளித்தனர். அதன் பேரில், 10 பேர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதன் ஒருபகுதியாக பெங்களுர், மும்பை, கடப்பா, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் சென்ற போலீசார், நகை கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், தனிப்படை போலீசாரில் ஒரு குழுவினர் சம்பவம் நடந்த இடத்ததை பார்வையிட்டு, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கோமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நகைபையை கும்பல் ஒன்று கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது.

    அதை முக்கிய ஆதாரமாக கொண்டு போலீசார் தொடர் விசாரணை மோற்கொண்டதில், அந்த கும்பல் பலமனேர் பகுதியில் அறை எடுத்து பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், அந்த கும்பலின் தலைவான சிந்துகூடம் பாசுகாலே உள்பட மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 பேரை அதிராடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 4 கிலோ 372 கிராம் எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அந்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை விரைவில் கைது செய்து மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். #Diwali
    நாகர்கோவில்:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு முதல் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்திருந்தது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்டத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்த 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    நாகர்கோவில் வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த குமாரசாமி (வயது 24), இடலாக்குடியைச் சேர்ந்த முபாரக் (26), ஆரல்வாய்மொழி அனந்தபத்மநாபபுரத்தைச் சேர்ந்த முருகன் (42), ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த தினகரன் (40), சுசீந்திரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (55), பிச்சைமணி (50), ராஜாக் கமங்கலத்தைச் சேர்ந்த லிங்கராஜ் (61) ஆகியோர் கைதானார்கள்.

    நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக அரவிந்த் (21), கன்னியாகுமரியில் பாலபிரசாத் (35), வடசேரியில் சிவா (28), செல்வம் (48), ரமேஷ் (27), சுகிஷ் (24), முகிலன் குடியிருப்பில் ஏசுமணி (63) என்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தக்கலை கேரளபுரத்தில் தங்கராஜ் (62), பிரசாத் (28), சிவசதா (37), அஞ்சுகிராமத்தில் செல்வம் (45), பிரபு (35), ஆனந்த் (24), மணிகண்டன் (25), ஈத்தாமொழியில் விஜய் (22), மார்த்தாண்டம் திக்குறிச்சியில் அனிஷ் (23), சந்திரசேகர் (36), ராஜாக்கமங் கலத்தில் நாகலிங்ம் (23) உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் கோழிப் போர்விளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜகுமார் (45) என்பவரை கைது செய்தனர். இதேபோல் இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெகன் தலைமையிலான போலீசார் மயிலோடு பகுதியில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த ராஜு என்பவரை கைது செய்தனர். #tamilnews
    தாம்பரத்தில் ரூ.2 லட்சம் கேட்டு கார் டிரைவர் கடத்திய 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரம் சேலையூரை சேர்ந்தவர் முகமதுசபீர் (வயது 32). கார் டிரைவர்.

    இவர் திருமுல்லைவாயிலை சேர்ந்த சாமுவேல் எபினேசர் என்பவரின் காரை லீசுக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.

    லீசுக்கான பணத்தை அவர் கொடுக்கவில்லை. மேலும் மாத தவணையும் செலுத்தாமல் ஏமாற்றி வந்தார். சாமுவெல் எபினேசர் பலமுறை கேட்டும் முகமதுசபீர் பணம் கொடுக்கவில்லை.

    இதையடுத்து அவரை கடத்திச் சென்று பணம் பறிக்க முடிவு செய்தார். நேற்று இரவு சாமுவேல் எபினேசர், அவரது நண்பர்கள் வண்ணாரப்பேட்டை கணேசமூர்த்தி, திருமுல்லைவாயல் சரவணன், வேங்கைவாசல் அப்துல், சந்தோ‌ஷபுரம் முகமதுஅலி, ஜெயபிரகாஷ், கிழக்கு தாம்பரம் முகமது சகால் ஆகியோர் காரில் முகமதுசபீர் வீட்டுக்கு சென்றனர்.

    வீட்டில் இருந்த அவரை 7 பேரும் காரில் கடத்திச் சென்றனர். அத்துடன் லீசுக்கு விட்ட காரையும் எடுத்துச் சென்றனர்.

    பின்னர் கடத்தல் கும்பல் முகமது சபீரின் தாயாருக்கு போன் செய்து ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவோம் என்று மிரட்டினார்கள். இதுகுறித்து அவர் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக புறநகர் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் காரையும், 7 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். முகமது சபீரை மீட்டனர். 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×