search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தூர் அருகே பஸ்சில் 9 கிலோ தங்கம் கொள்ளை - 7 பேர் கைது
    X

    சித்தூர் அருகே பஸ்சில் 9 கிலோ தங்கம் கொள்ளை - 7 பேர் கைது

    சித்தூர் அருகே பேருந்தில் 9 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தது குறித்து 7 பேரை கைது செய்த போலீசார் 4 கிலோ நகையை பறிமுதல் செய்தனர்.
    திருப்பதி:

    மும்பையைச் சேர்ந்தவர் தங்க நகை மொத்த வியாபாரி பாவேஷ், தனது ஊழியர்கள் 2 பேரிடம் 15 கிலோ தங்க நகைகளை விற்பனைக்காக கடந்த 8ம் தேதி கொடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் அவற்றை விசாகப்பட்டினத்தில் பெங்களூருக்கு பஸ்சில் கொண்டு சென்றார்.

    ஆந்திர மாநிலம். சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் அருகே சென்றதும், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பயணிகள் உணவு சாப்பிடுவதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது, பஸ்சில் நகைப்பைகளில் 9 கிலோ எடை கொண்ட பை ஒன்று மாயமாகியுள்ளது.

    இதானல் அதிர்ச்சியடைந்த அவர்கள், பங்காருபாளையம் போலீஸ் ஸ்டே‌ஷனில் இதுபற்றி புகார் அளித்தனர். அதன் பேரில், 10 பேர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இதன் ஒருபகுதியாக பெங்களுர், மும்பை, கடப்பா, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் சென்ற போலீசார், நகை கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில், தனிப்படை போலீசாரில் ஒரு குழுவினர் சம்பவம் நடந்த இடத்ததை பார்வையிட்டு, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கோமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நகைபையை கும்பல் ஒன்று கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது.

    அதை முக்கிய ஆதாரமாக கொண்டு போலீசார் தொடர் விசாரணை மோற்கொண்டதில், அந்த கும்பல் பலமனேர் பகுதியில் அறை எடுத்து பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், அந்த கும்பலின் தலைவான சிந்துகூடம் பாசுகாலே உள்பட மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 பேரை அதிராடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 4 கிலோ 372 கிராம் எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அந்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை விரைவில் கைது செய்து மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    Next Story
    ×