search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "ஐபிஎல் 2023"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது.
  • இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 8 அணிகள் மட்டுமே விளையாடிய நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பல மாறுதல்கள் நடந்து தற்போது 10 அணிகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

  2022-ம் ஆண்டு முதன் முறையாக குஜராத அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 16-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதன் இறுதி போட்டியில் குஜராத் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

  இதன்மூலம் சிஎஸ்கே அணி 5-வது முறையாக கோப்பையை வென்றது. இதனை சிஎஸ்கே வீரர்கள் டோனிக்கு அர்பணிப்பதாக தெரிவித்தனர். இந்த போட்டி முடிந்த பிறகு டோனி குறித்து சில சுவாரஸ்மான வீடியோக்கள் அவ்வபோது வைரலாகி வந்தது.

  இந்நிலையில் 5-வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் வகையில், ராஞ்சியில் உள்ள JSCA ஜிம்மில், தனது நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். தொடரை வென்று விட்டோம்.
  • 2-வது போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

  டூப்ளின்:

  இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.

  ஜஸ்பிரீத் பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. முதல் போட்டியில் 2 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

  இன்றைய ஆட்டத்திலும் அயர்லாந்தை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றியுடன் தொடரை முழுமையாக வெல்லும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

  இந்த ஆட்டம் குறித்து இந்திய வீரர் ரிங்குசிங் கூறியதாவது:-

  அயர்லாந்துக்கு எதிரான தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். தொடரை வென்று விட்டோம். 3-வது போட்டியிலும் வென்று உயர்நிலையை அடைவதை இலக்காக கொண்டுள்ளோம்.

  முதல் ஆட்டத்தில் விளையாடுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தேன். ஆனால் மழையால் என்னால் பேட்டிங் செய்ய முடியாமல் போனது. 2-வது போட்டியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.

  ஐ.பி.எல். போட்டியில் 5 சிக்சர்கள் அடித்தது எனது வாழ்க்கையை மாற்றியது. அந்த தருணத்தை ரசிகர்கள் இன்னும் நினைவில் வைத்து உள்ளார்கள். ரசிகர்கள் என் மீது அன்பை பொழிவதால் நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  25 வயதான ரிங்குசிங் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

  இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு தேர்வானார். 2-வது 20 ஓவர் ஆட்டத்தில் ரிங்குசிங் 21 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 38 ரன் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த ஐ.பி.எல்.லில் வணிக மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்தது.
  • ஐ.பி.எல்.லின் ஒளிபரப்பு கட்டணம் உலகின் பிறகு தொழில் முறை லீக்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது.

  மும்பை:

  உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டாக ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திகழ்கிறது. 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த போட்டியில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. விளம்பரங்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் ஆகியவற்றால் வருவாய் குவிகிறது.

  16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

  இந்த நிலையில் ஐ.பி.எல்.லின் வணிக நிறுவன மதிப்பு தற்போது ரூ.1.3 லட்சம் கோடியாகும். இதனை உலகம் முழுவதும் உள்ள பல விளையாட்டு உரிமைகளை மதிப்பிடும் உலகளாவிய முதலீடு வங்கியான ஹெளலி ஹான் லோகி தெரிவித்துள்ளது. இது கடந்த ஐ.பி.எல். போட்டியை விட வணிக மதிப்பு 80 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஐ.பி.எல்.லில் வணிக மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்தது.

  ஐ.பி.எல். போட்டியின் பிராண்ட் மதிப்பு ரூ.26,600 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இதில் சென்னை சூப்பர் கிங்சின் பிராண்ட் மதிப்பு தான் அதிகமாக இருக்கிறது. அந்த அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.1760 கோடியாக உள்ளது. அதற்கு அடுத்தப் படியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ரூ.1605 கோடியாகவும், மும்பை இந்தியன்சுக்கு ரூ.1504 கோடியாகவும், கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு ரூ.1490 கோடியாகவும் பிராண்ட் மதிப்பு இருக்கிறது.

  ஐ.பி.எல்.லின் ஒளிபரப்பு கட்டணம் உலகின் பிறகு தொழில் முறை லீக்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது. என்.பி.ஏ., இங்கிலாந்து பிரீமியர் லீக், ஜெர்மனி கால்பந்து லீக் போன்றவற்றை விட ஐ.பி.எல். ஒளிபரப்பு கட்டணம் அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2023 முதல் 2027 வரை ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக வணிக மதிப்பு அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு கிரிக்கெட் வாரியம் செய்து கொண்ட ஒப்பந்தத்தைவிட இது 3 மடங்கு விலை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நான் களத்தில் அப்படி செய்திருக்கக் கூடாது என்பதை போட்டி முடிந்த பின்னர் தான் உணர்ந்தேன்.
  • இருந்தாலும் அதற்காக நான் வருந்துகிறேன்.

  நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

  15-வது லீக் போட்டியில் முதலில் ஆடிய ஆர்சிபி 212 ரன்கள் குவித்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ விரட்டியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது லக்னோ. கடைசிப் பந்தில் இந்த வெற்றியை அந்த அணி பதிவு செய்தது. ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் பை ரன் எடுத்து லக்னோ வெற்றி பெற்றது. அப்போது ஸ்ட்ரைக்கில் ஆவேஷ் கான் இருந்தார்.

  அந்தத் தருணத்தில் களத்தில் இருந்த ஆவேஷ் கான், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை தரையில் வீசி இருந்தார். இந்நிலையில் தற்போது அது குறித்து ஆவேஷ் கான் மனம் திருந்து பேசியுள்ளார்.

  அவர் கூறியதாவது:-

  நான் களத்தில் அப்படி செய்திருக்கக் கூடாது என்பதை போட்டி முடிந்த பின்னர் தான் உணர்ந்தேன். அது அந்த தருணத்தில் நடந்தது. அவ்வளவு தான். இருந்தாலும் அதற்காக நான் வருந்துகிறேன்.

  அண்மையில் முடிந்த சீசன் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. இருந்தாலும் 10 ரன்களுக்கு குறைவான எக்கானமி ரேட், 4 அல்லது 5-வது ஓவரை பவர்பிளே ஓவர்களின் போது வீசியதும், டெத் ஓவர்களும் வீசி இருந்தேன்.

  என ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனிப்பட்ட விருதுகளை வெல்வது அல்லது இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை.
  • ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு கண்டேன்.

  16-வது ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

  இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது என சென்னை அணியின் தொடக்க ஆட்டகாரர் கான்வே கூறியுள்ளார்.

  இது குறித்து அவர் கூறியதாவது:-

  குஜராத் அணி வீரர் சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சென்னை வீரர் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்படி இருக்க இறுதிப்போட்டியில் எனக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கியது வியப்பாக இருந்தது.

  தனிப்பட்ட விருதுகளை வெல்வது அல்லது இழப்பது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் ஒரு அணியாக கோப்பையை வெல்ல வேண்டும் என கனவு கண்டேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
  • 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

  16-வது ஐபிஎல் தொடரின் தொடரின் இறுதி போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இறுதி போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டனஸ் அணிகள் மோதின.

  இதில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இதனை சென்னை வீரர்கள் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடினர்.


  இந்நிலையில் சிஎஸ்கே கோப்பையை வென்றதை சென்னை அணி வீரர்கள் பஸ் மற்றும் ஓய்வு அறையில் கொண்டாடிய வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
  • என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன்.

  குஜராத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியையும் அதன் கேப்டன் டோனியையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

  ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு அடுத்த சீசனிலும் விளையாடுவது குறித்து டோனி கூறியதாவது, மிகவும் உணர்வுப்பூவமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.

  இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதம் இருக்கிறது. என்று கூறியிருந்தார்.

  இந்த நிலையில் டோனியின் முடிவு குறித்து டுவிட் செய்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன். ஆடுகளத்தில் எவ்வளவு தீவிரமாக செயலாற்றுகிறாரோ, அதே அளவுக்கு அவரிடம் அறிவார்ந்த சிந்தனையும் உள்ளது என உணர்ந்தேன். புதுமையான விஷங்களை செய்வதில் அவர் ஆர்வமாக இருந்தார். நிச்சயம் டோனி வருங்காலத்தில் ஒரு தலைவராக திகழ்வார்.

  டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் சில படங்களில் கதாநாயகனாக கூட நடித்துள்ளார்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறையாக கோப்பையை கைப்பற்றியது.

  ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

  இந்நிலையில், ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு தன்னுடைய பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

  இந்த பேட்டை வாங்கிய நடிகர் யோகிபாபு அந்த பேட்டிற்கு முத்தம் கொடுத்து கேப்டன் டோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

  இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'நன்றி டோனி சார்' என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

  தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு சில படங்களில் கதாநாயகனாக கூட நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தேன்.
  • வலை பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன்.

  ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறையாக கோப்பை வென்று சாதித்தது.

  இந்த வெற்றியை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடினர். இது குறித்து வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் நேற்று வரை வைரலானது.

  இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த போட்டியில் கடைசி ஓவரை வீசிய மோகித் சர்மா மிகுந்த வேதனையடைந்ததாக கூறினார்.

  இது குறித்து மோகித் சர்மா கூறியதாவது:-

  நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தேன். வலை பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். எனவே நான் அனைத்து பந்துகளையும் யார்க்கர்களாக வீச வேண்டும் நினைத்தேன். எனது உள்ளுணர்வின்படியே நான் நடந்தேன்.

  என்னுடைய செயல் திட்டம் என்னவாக இருக்கும் என்பதை பாண்ட்யா அறிந்து கொள்ள விரும்பினார். மீண்டும் யார்க்கர் வீச முயற்சிப்பேன் என்று கூறினேன். மக்கள் இப்படியும் சொல்லுவாங்க அப்படியும் சொல்லுவாங்க. ஆனால் அதில் எந்த அர்த்தமுமில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

  கடைசி ஓவரில் நான் மீண்டும் யார்க்கர் வீச முயற்சித்தேன். நான் மிகவும் கவனமாக செயல்பட விரும்பினேன். ஐபிஎல் தொடர் முழுக்க நான் இதைத்தான் செய்தேன். ஆனால் பந்து சென்று விழக் கூடாத இடத்தில் விழுந்தது. என்னால் முடிந்தவரை நான் சிறப்பாகவே செயல்பட்டேன்.

  என்னால் தூங்க முடியவில்லை. நான் பந்தை இப்படியோ அல்லது அப்படியோ வீசியிருந்தால் என்னவாகியிருக்கும்? போட்டியில் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு இனிமையான உணர்வாக இல்லை. எங்கோ ஏதோவொன்று இல்லாததைப் போல உணர்கிறேன். எனினும் இதனை கடந்து போக முயற்சிக்கிறேன்.

  இவ்வாறு மோகித் சர்மா கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo