search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "csk vs GT"

    • பிளே ஆப் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஓய்வு குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் டோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
    • "இங்கே மீண்டும் சேப்பாக்கத்தில் வந்து விளையாடுவீர்களா?" என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

    ஐபிஎல் தொடரில் 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையையும் சிஎஸ்கே படைத்துள்ளது.

    சென்னை அணியுடனான நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த குஜராத் அணி எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் வரும் 26ம் தேதி நடைபெறும் குவாலிஃபயர் 2ல் விளையாடும்.

    இந்நிலையில், பிளே ஆப் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஓய்வு குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் டோனியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    "இங்கே மீண்டும் சேப்பாக்கத்தில் வந்து விளையாடுவீர்களா?" என்று தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தோனி நேரடியாக பதில் அளிக்கவில்லை என்றாலும், ஐபிஎல் முடிந்தவுடன் தனது விளையாட்டு குறித்து உடனடியாக முடிவு செய்யமாட்டேன் என்று தெளிவாக பதிலளித்துள்ளார்.

    இதுகுறித்து டோனி மேலும் கூறியதாவது:-

    ஓய்வு குறித்து எனக்கு தெரியாது. அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்திற்கு இன்னும் 8, 9 மாதங்கள் இருக்கிறது. எனவே இப்போது ஏன் அது பற்றி யோசிக்க வேண்டும். அது எதுவாக இருந்தாலும் சரி. விளையாட்டிலோ அல்லது வெளியே எங்கேயாவது உட்கார்ந்தோ நான் எப்போதும் சென்னை அணிக்காக இருப்பேன்.

    வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. நான் இப்போது நான்கு மாதங்களாக ஃபார்மில் இல்லை. ஜனவரி 31ம் தேதி நான் எனது வேலையை முடித்துவிட்டு மார்ச் 2-3ம் தேதிகளில் பயிற்சி செய்யத் தொடங்கினேன். ஓய்வு குறித்து முடிவெடுக்க நிறைய நேரம் எடுக்கும். எனக்கு போதுமான நேரம் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுப்மன் கில் அதிகபட்மாக 42 ரன்களை எடுத்தார்.
    • ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து குஜராத் அணி தோல்வியடைந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 36 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு ரன்னில் வெளியேறினார். ரகானே 17 ரன்களில் அவுட் ஆனார்.

    மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தேவன் கான்வே, 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தது.

    ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் டோனி 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அதன்பின் ஜடேஜா 22 ரன்கள், மொயீன் அலி 9 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.

    குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தர்ஷன், ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது.

    இதில், சுப்மன் கில் அதிகபட்மாக 42 ரன்களை எடுத்தார். தொடர்ந்து, ஷனக்கா 17 ரன்களும், சாஹா 12 ரன்களும், விஜய் சங்கர் 14 ரன்களும், ஹர்திக் பாண்டியா 8 ரன்களும், டேவிட் மில்லர் 4 ரன்களும், ராகுல் திவாடியா 3 ரன்களும் எடுத்தனர்.

    19வது ஓவரில் 9 விக்கெட்டுகளுடன் குஜராத் அணி 146 ரன்களை எடுத்திருந்தது. இன்னும் 6 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. அப்போது, கடைசி பந்தில் ராஷித் கான் 30 ரன்களுடன் ஆட்டமிழந்தார். நூர் அகமது 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து குஜராத் அணி தோல்வியடைந்தது. 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி  வெற்றிப்பெற்றது.

    இதன் மூலம், முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×