search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐ.பி.எல். போட்டிகளின் போது 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை- ஸ்விகி நிறுவனம் தகவல்
    X

    ஐ.பி.எல். போட்டிகளின் போது 1 கோடியே 20 லட்சம் பிரியாணிகள் விற்பனை- ஸ்விகி நிறுவனம் தகவல்

    • ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
    • ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    2 மாத காலமாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக இருந்தது. போட்டிகளை வீட்டில் இருந்தே டி.வி., செல்போன்கள், இணையதளங்கள் மூலம் கண்டுகளித்த ரசிகர்கள், தங்களை உற்சாகப்படுத்தி கொள்ள பல்வேறு உணவு பொருட்களையும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர்.

    போட்டிகளை பிரியாணி விருந்துடனும், பல்வேறு சுவையான உணவு பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி சுவைத்தும், திருவிழா போல கொண்டாடியது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆன்லைன் உணவு டெலிவரி செயலியான ஸ்விகி டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

    அதில், ஐ.பி.எல். ஒட்டுமொத்த சீசனில் மட்டும் 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமான பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அதாவது நிமிடத்திற்கு 212 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு சைவ பிரியாணிக்கு சமமாக, 20 அசைவ பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்விகியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடம் பிடித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த சீசனில் கொல்கத்தாவில் ஒருவர் ஆர்டர் செய்த உணவை 77 வினாடிகளுக்குள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரங்களை பொறுத்தவரை பெங்களூருவில் தான் அதிகளவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணி மட்டுமல்லாமல் சமோசா, ஷாக்கர், தாகி, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களும் ஸ்விகியில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்விகி இன்ஸ்டா மார்ர்ட் மூலம் 2,423 காண்டங்களும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 3,641 யூனிட் தாகி மற்றும் 720 யூனிட் ஷக்கர் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு ரசிகர் மட்டும் 701 சமோசாக்களை ஆர்டர் செய்துள்ளார்.

    இது, இந்த சீசனில் தனி நபர் ஒருவர் அதிகம் ஆர்டர் செய்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஸ்விகியின் உணவு வினியோகிப்பாளர்கள் மொத்தம் 33 கோடி கிலோ மீட்டர்கள் இந்த சீசன் முழுவதும் பயணம் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×