என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரன்வீர்சிங்"

    • பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங் சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார்.
    • இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது.

    மும்பை:

    பாலிவுட் நடிகரான ரன்வீர்சிங், சமீபத்தில் துரந்தர் படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றிருந்தது. அத்துடன் வசூலையும் வாரிக் குவித்தது.

    இந்நிலையில், ரன்வீர் சிங்கின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதில் கோடிக்கணக்கில் பணம் தரவேண்டும் என கோரியுள்ளார். இதுதொடர்பாக, மும்பை போலீசிடம் ரன்வீர் சிங் புகார் அளித்தார்.

    இதையடுத்து, ரன்வீர்சிங் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தனியார் பாதுகாவலர்களும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    மிரட்டல் விடுத்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்ற கோணத்தில் போலீசாரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

    பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங்கிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மும்பை விமான நிலையத்திற்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர் சிங்குடன் காரில் ஜோடியாக வந்தார்
    • 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பளபளப்பான உடல் தோற்றத்தில் தீபிகா ஜொலித்தும் காணப்பட்டார்

    பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோன்- ரன்வீர்சிங்2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் தீபிகா படுகோன்- ரன்வீர் சிங் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் தங்கள் கர்ப்பத்தை அறிவித்தனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும்,செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க போவதாகவும் அதில் தெரிவித்தனர். 

    தீபிகா படுகோனே கர்ப்பமாக உள்ள தகவல் அறிந்ததும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்த்தினார்கள் .கடந்த சில நாட்களுக்கு முன் முகேஷ் அம்பானி வீட்டு திருமண முன் வைபவ நிகழ்ச்சியில் தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் ஜோடியாக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில் இன்று மதியம் மும்பை விமான நிலையத்திற்கு தீபிகா படுகோன் கணவர் ரன்வீர்சிங்குடன் காரில் ஜோடியாக வந்தார்.அதன் பின் தீபிகா மட்டும் காரில் இருந்து இறங்கி விமான நிலையத்திற்குள் சென்றார்.அவரை ரன்வீர் சிங் வழியனுப்பி வைத்தார்.

    ரன்வீர்சிங்- தீபிகா படுகோன் மும்பை விமான நிலையத்திற்கு வந்த தகவல் அறிந்ததும் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்தனர். அவரும் புன்முறுவலுடன் தாராளமாக 'போஸ்' கொடுத்தார்.

    அதன்பின் விமான நிலைய பாதுகாப்பு சோதனை பகுதியை நோக்கி சென்றார்.தீபிகா நீலநிற டெனிம் பேண்ட், பிரவுன் நிற ஸ்வெட்டர், பிரவுன் 'பூட்ஸ்' அணிந்து இருந்தார். மேலும் கருப்பு நிற 'கூலிங் கிளாஸ்' கண்ணாடியும் அணிந்தும் 'ஸ்டைல்' ஆக இருந்தார். 3 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் பளபளப்பான உடல் தோற்றத்தில் தீபிகா ஜொலித்தும் காணப்பட்டார்.

    • ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.
    • இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

    ரஜினி படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த வாரம் வெளியானது



    .மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார்.இதனை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவியது.

    மேலும் தலைவர் -171 படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த டைட்டில் பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.




    ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டு அந்த படம் வெளியானது.

    மேலும் தலைவர் -171 படம் தங்கக் கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி மாபியா டானாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் தலைவர்- 171 படத்தில் ரஜினியுடன் இந்தி நடிகர் ஷாருக்கானை இணைந்து நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டதாகவும் அதனை ஷாருக்கான நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.



    \

    இந்நிலையில் தலைவர் 171- படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குடன் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இப்படத்தில் நடிக்க ரன்வீர் சம்மதித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×