என் மலர்
நீங்கள் தேடியது "நோக்கியா 4.2"
- ஜாவா 42 பைக் நான்கு ஆண்டுகள் வாரண்டியுடன் வருகிறது.
- இந்த பைக்கில் 294.7cc, லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
ஜாவா 42 வண்ண விருப்பங்களில் தற்போது புதிய "ஐவரி" ஷேடும் இணைந்துள்ளது. ஐவரி நிறத்தில் கிடைக்கும் ஜாவா 42 பைக்கின் விலை ரூ. 1.85 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த மாடலில் மிகவும் விலையுயர்ந்த ஆப்ஷனாக அமைகிறது. டூயல் சேனல் ஏ.பி.எஸ்., அலாய் வீல் வேரியண்டின் மேல் இந்த வேரியண்ட் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
பேஸ்டல் ஐவரி ஷேட் பைக்கின் முன் ஃபெண்டர், ஹெட்லேம்ப் நாசெல், ஃபியூவல் டேன்க், பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பின்புற ஃபெண்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக, டேங்கின் குறுக்கே இயங்கும் தடிமனான 'நாற்பத்தி இரண்டு' எழுத்துகள் மற்றும் பக்கவாட்டு பேனல்களில் '42' எண் உள்ளது, இவை இரண்டும் மற்ற வண்ண ஆப்ஷன்களில் இருந்து அதை வேறுபடுத்துகின்றன.

பைக்கின் என்ஜின் மற்றும் சுழற்சி பாகங்கள் கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜாவா 42 ஐவரியின் மெக்கானிக்கல் அம்சங்கள் மற்ற வேரியண்ட்களை போன்றே உள்ளன. இதில் 27bhp பவர், 26.84Nm டார்க் உருவாக்கும் 294.7cc, லிக்விட்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
டூயல் ஃபிரேம் கொண்டிருக்கும் ஜாவா 42, டெலிஸ்கோபிக் ஃபோர்க், டூயல் ஷாக் அப்சார்பர்களை கொண்டுள்ளது. ஜாவா யெஸ்டியின் உரிமை உத்தரவாதத் திட்டத்தின் கீழ், ஜாவா 42 நான்கு ஆண்டுகள்/50,000 கிலோமீட்டர்கள் வாரண்டியை பெறுகிறது. இது கூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம் ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.


The moment of truth is here for #JawaMotorcycles. We were audacious and planned a 100 showrooms nationwide before starting delivery - that's being done in record time by March 3rd week. Fourth week onwards, we will start delivery across the country as per the booking queue!
— Anupam Thareja (@reach_anupam) March 12, 2019










இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன. நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 33 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 1 மணி 8 நிமிடத்தில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் இன்று இரவு 10 மணி 8 நிமிடங்களுக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. #ISRO #PSLVC42
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று இரவு 10 மணி 7 நிமிடங்களில் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.
இதற்காக 3 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது.
இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 33 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று (சனிக்கிழமை) பகல் 1 மணி 8 நிமிடத்தில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி 7 நிமிடங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதால், சென்னைவாசிகள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தபடியே ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப் பாய்வதை காணலாம்.
வானம் மேக மூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்தால், பொதுமக்கள் அனைவரும் இதனை கண்டுகளிக்க முடியும். இது வானில் ஒரு வர்ண ஜாலம் போல் காட்சி அளிக்கும்.
மேற்கண்ட தகவலை இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர். #ISRO #PSLVC42






