என் மலர்
வழிபாடு
- தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும்.
- மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு.
* தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும். மாசி மாதத்தில் பவுர்ணமியை ஒட்டிவரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோவில்களில் இந்நாளில் தெப்பத் திருவிழா நடக்கும்.
* மாசி மாதத்தில் சிறுவர்களுக்கு உபநயனம் செய்வது, மந்திர உபதேசம் செய்வது சிறப்பு.
* சிவபெருமான், குழந்தை வடிவில் வந்து தமது திருவிளையாடல்கள் மூலம் அருள்புரிந்தது மாசி மாதத்தில் தான் என்பதும் புராணக்கூற்று. பிரகலாதனைக் கொல்வதற்காக நயவஞ்சகமாக வந்த அரக்கி, தீயில் வெந்து சாம்பலான நிகழ்ச்சி மாசி மாதத்தில் தான் நடந்தது.
* மாசி மாத சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. அன்று விரதம் கடைப்பிடித்து விநாயகரை வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் விலகும் என்பர்.
* மாசி மகத்தன்று தான் மகா விஷ்ணு, வராக அவதாரம் எடுத்து, அசுரனை வதம் செய்து பூமியை மீட்டுக் கொண்டு வந்தார்.
* மாசி மாதத்திற்கு அதிதேவதை மகாவிஷ்ணு. அதனால் மகாவிஷ்ணுவை இம்மாதம் முழுவதும் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்தில் சுபகரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
* மாசி மகத்தன்று திருவண்ணாமலையார், `பள்ளி கொண்டாப்பட்டு' என்னும் ஊருக்கு எழுந்தருளி, வல்லாள மகாராஜனுக்கு மகனாகக்காட்சி கொடுத்து, நீத்தார் கடனுக்குரிய வழிபாட்டினை நடத்தினார். வல்லாள மகாராஜனுக்கு வாரிசு இல்லாததால் சிவபக்தனான மகாராஜனுக்கு சிவன், நீத்தார் கடன் அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன.
* மாசி வளர்பிறை சதுர்த்தி திதியில் நடைபெறும் முழுக்கு, தேவர்கள் செய்யும் பூஜை என்பது ஐதீகம்.
* மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்டதும் மாசி பவுர்ணமியில்தான்.
* மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
* குலசேகர ஆழ்வார், மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார்.
* அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.
* மாசி மாத பூச நட்சத்திர தினத்தன்று தான் முருகப்பெருமான், சுவாமி மலையில் தன் தந்தை சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசம் செய்தார்.
* பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி, பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில்தான்.
* உயர் படிப்பு விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
* அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசி மாதத்தில்தான்.
* காரடையான் நோன்பும், சாவித்ரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள்.
* மாசி மகம் அன்றுதான் காம தகன விழா நடைபெறுகிறது.
* மாசி மாதத்தில் வீடு குடிபோனால் வாடகை வீடாக இருந்தாலும் அவ்வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள். எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகப்பிரவேசம் நடத்தலாம்.
* மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜகத்தை ஆள்வர் என்பதும், மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி. இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்ய சரடு கட்டிக்கொள்வது சிறப்பானது.
* மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்ப விழா நடத்துவர். இதற்கு `அப்பர் தெப்பம்' எனப் பெயர்.
* மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தபின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
* மாசி மக நாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு, இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
* மாசி மாத சுக்ல பட்ச பஞ்சமியில் சரஸ்வதி தேவியை மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.
- நாளை திருச்செந்தூரில் மாசி உற்சவம் ஆரம்பம்.
- 16-ந்தேதி கார்த்திகை விரதம்.
13-ந்தேதி (செவ்வாய்)
* சதுர்த்தி விரதம்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் பூச்சாற்று விழா.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* மேல்நோக்கு நாள்.
14-ந்தேதி (புதன்)
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி உற்சவம் ஆரம்பம்.
* திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம். இரவு புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு.
* மதுரை கூடலழகர் உற்சவம் ஆரம்பம். அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை.
* சமநோக்கு நாள்.
15-ந்தேதி (வியாழன்)
* சஷ்டி விரதம்.
* மதுரை இம்மையில் நன்மை தருவார் மாசி உற்சவம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரத்தில் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
16-ந்தேதி (வெள்ளி)
* ரத சப்தமி.
* கார்த்திகை விரதம்.
* காங்கேயம் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் மரத்தோளுக்கினியானில் புறப்பாடு.
* மதுரை கூடலழகர் காலை ஆண்டாள் திருக்கோலம், மாலை அனுமன் வாகனத்தில் ராமாவதார காட்சி.
* கீழ்நோக்கு நாள்.
17-ந்தேதி (சனி)
* பீஷ்மாஷ்டமி.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.
* கும்பகோணம் சாரங்கபாணி சந்திர பிரபையில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
18-ந்தேதி (ஞாயிறு)
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.
* மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேஷ வாகனத்தில் வீதி உலா.
* திருத்தணி முருகப்பெருமான் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி நாக வாகனத்திலும் பவனி.
* மேல்நோக்கு நாள்.
19-ந்தேதி (திங்கள்)
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
* மதுரை கூடலழகர் வெண்ணெய் தாழி சேவை. இரவு யானை வாகனத்தில் ராஜாங்க சேவை.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் கோ ரதத்தில் பவனி, இரவு சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் வீதி உலா.
* சமநோக்கு நாள்
- விஷ்ணு வழிபாட்டுக்கு உரிய முக்கியமான தினம்.
- பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை.
12 ராசிகளில் சூரியன் எந்த ராசியில் நுழைகிறதோ, அந்த ராசிதான் அந்த மாதத்தின் பெயராக வழங்கப்படுகிறது. உத்திராயணத்தின் முதல் ராசியானமகர ராசியில், சூரியன் நுழையும் காலம், விஷ்ணுபதி புண்ணிய காலம். அதாவது, விஷ்ணு வழிபாட்டுக்கு உரிய மிக முக்கியமான தினம் ஆகும்.
வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணியகாலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெருமாள் வழிபாட்டுக்கு உகந்தவை. விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். குறிப்பாக, சங்கு சக்ரதாரியாகப் பெருமாள் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று பெருமாளை வழிபட வேண்டும்.
பெருமாள் சந்நதியை 27 முறை பிரதட்சிணம் வருவது விசேஷம். ஆலயங்களில் இந்த நாளில் நடக்கும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு வழிபாடு செய்ய, மனம் அமைதி பெறும். இந்தநாளில் மகாலட்சுமி பூஜை, கோபூஜை ஆகியன செய்வது மிகவும் பலன் தரும்.
- வடபழனி முருகன் கோவிலில் நாளை சிறப்பு அபிஷேகம்.
- மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மாசி 1 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி இரவு 8.34 மணி வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 6.04 மணி வரை. பிறகு ரேவதி.
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: மாலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், கோவை கோணியம்மன் பூச்சாற்று விழா திருமயம் ஸ்ரீஆண்டாள் முத்துக்குறி கண்டருளல். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மேன்மை
ரிஷபம்-உறுதி
மிதுனம்-பயணம்
கடகம்-இன்சொல்
சிம்மம்-பக்தி
கன்னி-பணிவு
துலாம்- ஓய்வு
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- கண்ணியம்
மகரம்-தனம்
கும்பம்-பயணம்
மீனம்-இன்பம்
- எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம்.
- மன திருப்தியோடு நல்ல அணுகுமுறையோடு செய்ய வேண்டும்.
ஒருவரிடத்தில் எதைக் கொடுத்தாலும் 'போதும்' என்று சொல்ல மாட்டார்கள். பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் மற்றும் பணம் கொடுத்தால் 'இன்னும் கொஞ்சம் தரலாமே' என்பார்கள். ஆனால் சாப்பாடு போடுகிற பொழுது அளவிற்கு அதிகமான உணவை நாம் இலையில் அள்ளி வைத்து விட்டால் 'போதும்' என்று சொல்வார்கள். இந்த 'போதும்'' என்ற சொல்லே. அன்னதானம் செய்பவர்களுக்கு போதுமான செல்வத்தைக் கொடுக்குமாம். எனவேதான், எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானம் என்கிறோம்.
அத்தகைய அன்னதானத்தை, மன திருப்தியோடு நல்ல அணுகுமுறையோடு செய்ய வேண்டும். அன்னதானம் செய்பவர்கள், தாங்கள் சாப்பிடாமல் இருந்து மற்றவர்களுக்கு தங்கள் குடும்பத்துடன் பரிமாற வேண்டும். தங்கள் கரங்களால் பரிமாறுவதே சிறப்பு. பெரிய அளவிற்கு அன்னதானம் செய்ய முடியாதவர்கள், சிறிய அளவில் தங்களால் முடிந்ததைச் செய்யலாம். ஆனால் அதை தங்கள் மேற்பார்வையில் முறையாகச் செய்ய வேண்டும்.
அன்னதானத்திற்கு பெயர் பெற்ற ஊர், வடலூர். அணையா அடுப்பு இங்கே உள்ளது. அருட்பிரகாச வள்ளலார் என்று அன்போடு அழைக்கப்படும் ராமலிங்கம் பிள்ளையால் தோற்றுவிக்கப்பட்ட சத்ய ஞான சபை அருகில் உள்ள மண்டபத்தில் மூன்று வேளையும் பசிப்பிணி போக்கும் அன்னதானம் இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே 1867-ல் ஏற்றப் பட்ட அடுப்பு, இன்று வரை அணையாமல் அன்னத்தை சமைத்துக் கொண்டே இருக்கிறது.
வாரம் ஒருவருக்கு அல்லது மாதம் ஒருவருக்கு உணவு வழங்கலாம். வருடம் ஒரு முறை விழாக்களை முன்னிட்டு அன்னம் வழங்கலாம். தமது பிறந்த நாள், கல்யாண நாள், பிள்ளைகளின் பிறந்தநாள், முன்னோர்களின் நினைவு நாள் ஆகிய நாட்களிலும், இறைவனுக்கு உகந்த நாட்களிலும் அன்னதானம் செய்யலாம்.
'பசி' என்று வரும் இயலாதவர்களுக்கு, முகமலர்ச்சியோடு உணவளித்தாலே அது அன்னதானம் தான். பசித்தவருக்கு இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். இருப்பவற்றை கொடுத்து இளைப்பாறச் செய்யுங்கள். இறைவன் உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் அமர்ந்து எந்நாளும் உதவி செய்வான்.
இன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் உணவை வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். கொடுப்பதற்கு ஆளின்றி இருக்கும் இவ்வுலகில், உணவை கெடுப்பதற்கு ஒருபோதும் இடம்கொடுக்காதீர்கள்.
- அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடு திருச்செந்தூர்.
- மாசித்திருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 4.30 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நாளான 5-ம் திருநாள் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.
7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாளான 23-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாளான 24-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
- கடந்த 3-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த அதன் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் நாள்தோறும் அம்மன் காலை, மாலை நேரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து கோவில் சேர்தல் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழாவான இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் அஜித், மேலாளர் ராஜ்மோகன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், மணியம் செந்தில்குமார், பணியாளர்கள் ஆவுடையப்பன், செல்வகுத்தாலம், மாரிமுத்து, கார்த்திகேயன், கிட்டுமணி, சரவணபவன், நெல்லையப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
- தை பிரம்மோற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.
- இன்று தீர்த்தவாரி.
சென்னையில் இருந்து 47 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில். இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசை பிரான், வேதாந்ததேசிகரும் இத்தலம் மீது பாடல்கள் புனைந்துள்ளனர். தை பிரம்மோற்சவம் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தீர்த்தவாரி.
இத்தலத்தில் உள்ள குளம் (தீர்த்தம்) கங்கையைவிட புனிதமானது என்று கூறப்படுகிறது. இந்த ஹிருத் தாபநாசினி தீர்த்தத்தில் நீராடினால், மனதால் நினைத்த பாவங்கள் அனைத்தும் விலகும், என்பது நம்பிக்கை. நோய் தீர்க்கும் திருக்குளமாக இக்குளம் அழைக்கப்படுகிறது. அவ்வண்ணமே இத்தல பெருமாளும், வைத்திய வீரராகவப் பெருமாளாக அழைக்கப்படுகிறார்.
- திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் தீர்த்தவாரி.
- திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, தை 29 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை இரவு 10.49 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: பூரட்டாதி இரவு 7.37 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். வேதாரண்யம் சிவபெருமான் திருவீதி உலா. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் தீர்த்தவாரி. திருமயம் ஸ்ரீ ஆண்டாள் உச்சிக்கொண்டை கூடாரவல்லி உற்சவம். திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுர சுந்தரியம்மாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நட்பு
ரிஷபம்-ஆதரவு
மிதுனம்-அன்பு
கடகம்-செலவு
சிம்மம்-கடமை
கன்னி-வரவு
துலாம்- இன்பம்
விருச்சிகம்-ஓய்வு
தனுசு- போட்டி
மகரம்-கவனம்
கும்பம்-லாபம்
மீனம்-உயர்வு
- பிரசித்தி பெற்ற கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
- 130-வது கருட சேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் மற்றும் அதனை சுற்றி 11 திவ்யதேச பெருமாள் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இந்த 11 கோவில்களில் இருந்து பெருமாள், நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி பிரசித்தி பெற்ற கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இதன் ஆண்டு 130-வது கருட சேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நாங்கூர் மணிமாடக்கோவில் எனப்படும் நாராயண பெருமாள், அரிமேய வின்னகரம் குடமாடுகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிக்கொண்ட பெருமாள், வண்புரு டோத்தம பெருமாள், வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருமேணிக்கூடம் வரதராஜ பெருமாள், கீழச்சாலை மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 பெருமாள்களும் ஒருசேர எழுந்தருளினர்.
அப்போது திருமங்கை ஆழ்வார் அவரது சிஷ்யர் மணவாள மாமுனிகள் ஆகியோர் அனைத்து பெருமாள்களையும் வரவேற்றார். பின்னர், 11 பெருமாள்களும் கோவில் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது.
தொடர்ந்து, இரவு 12 மணிக்கு மணிமாடக்கோவில் ராஜகோபுரவாயிலில் மணவாள மாமுனிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுத வள்ளி தாயாருடன், திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர்.தொடர்ந்து, அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினர்.
அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று, கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு, தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடினர்.
அதனைத்தொடர்ந்து, இரவு 2.30 மணிக்கு 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி விடிய, விடிய வீதிஉலா காட்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- வெளிப்புற வாஸ்து தோஷங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை.
- விரிசல்கள் ஏற்பட வாய்ப்பில்லாத கட்டுமானமாக அமைப்பது அவசியம்.
கட்டுமான பணிகள் முடிவடைந்த பிறகு காம்பவுண்டு சுவரை செங்கல் அல்லது ஹாலோபிளாக் மூலம் தேவையான உயரத்திற்கு அமைத்துக்கொண்டால் வெளிப்புற வாஸ்து தோஷங்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இரு வீடுகளுக்கும் பொதுவான காம்பவுண்டு சுவர் அமைக்கவேண்டிய நிலையில் குறிப்பிட்ட வீட்டிற்கு தெற்கு அல்லது மேற்கு பகுதியில் இருக்கலாம். வீட்டிற்கு வடக்கு திசையான குபேர திக்கு மற்றும் கிழக்கு திசையான இந்திர திக்கு ஆகிய பகுதிகளில் உள்ள பொது காம்பவுண்டு சுவர் அமைப்பு வாஸ்து ரீதியாக நல்ல பலன்களை அளிப்பதில்லை.
வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்புகளுக்கும் காம்பவுண்டு சுவர் அமைப்பதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள வாஸ்து குறைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இயலும். அதாவது வீடு-மனைகளுக்கு பக்கத்தில் உள்ள கிணறுகள், தெருக்குத்து அமைப்புகள், தவிர்க்க இயலாத பள்ளமான பூமி அமைப்பு ஆகிய காரணங்களால் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளுக்கு பாதுகாப்பாக அவை செயல்படுகின்றன.
பாதுகாப்பு வேலியாக அமையும் காம்பவுண்டு சுவர்கள் நாற்புறமும் தனிப்பட்ட அமைப்பாக இருப்பதே பாதுகாப்பானது. இரு வீடுகளுக்கும் பொதுவான சுவர் அமைப்பாக இருப்பதை தவிர்க்கும்படி வாஸ்து குறிப்பிடுகிறது. ஆனால், இன்றைய நகர்ப்புற வாழ்வில் உள்ள இட நெருக்கடிகளுக்கு மத்தியில் சில விதிவிலக்குகளை நடைமுறைப்படுத்த வேண்டியதை உணர்ந்த வாஸ்து வல்லுனர்கள் அதற்காக சில வழிமுறைகளை பரிந்துரை செய்துள்ளனர்.
* பூமி பூஜைக்கு பிறகு வீட்டின் கட்டுமான பணிகளில் அஸ்திவாரம் அல்லது பில்லர் ஆகியவற்றை அமைத்து, பேஸ் மட்ட அளவில் நிறுத்த வேண்டும். அதன் பின்னர், நான்கு மூலைகளிலும் காம்பவுண்டு சுவருக்கான அஸ்திவார சுவரை கட்டிட பேஸ்மட்டம் வரை கருங்கற்களால் அமைக்கவேண்டும். பிறகு காம்பவுண்டு சுவருக்கும் பேஸ் மட்டத்திற்கும் உள்ள இடைவெளியை தக்க விதத்தில் மண்ணால் நிரப்பவேண்டும். அதன் மூலம் சுற்றுப்புற பூமி தோஷங்களில் இருந்து கட்டமைப்புகள் பாதுகாக்கப்படுகின்றன.
* நான்கு திசைகளிலும் ஒரே உயரம் கொண்டதாக சுற்றுச்சுவர் இருக்கலாம். கிழக்கு மற்றும் வடக்கு சுவர்களை விடவும் தெற்கு மற்றும் மேற்கு சுவர்கள் சற்றே கனமாகவும், உயரமாகவும் அமைக்கப்படுவது நற்பலன்களை ஏற்படுத்தும்.
* நான்கு பக்கங்களிலும் காம்பவுண்டு சுவர் அமைப்பது முறை என்ற நிலையில் ஒரு சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் மட்டும் சுவர் எழுப்ப வேண்டிய நிலை இருக்கலாம். அது போன்ற சூழலில் நான்கு பக்கமும் சுற்று சுவருக்கான அஸ்திவாரம் அமைத்து பேஸ்மட்டம் வரை எழுப்பி நிறுத்திக்கொள்ளலாம். பின்னர் தேவையான பகுதிகளில் சுவரை எழுப்பிக்கொள்வதும் ஒரு முறையாகும்.
* காம்பவுண்டு வால் என்ற சுற்றுச்சுவரில் விரிசல்கள் ஏற்பட வாய்ப்பில்லாத கட்டுமானமாக அமைப்பது அவசியம். எதிர்பாராமல் விரிசல்கள் ஏற்பட்டால் தக்க தொழில்நுட்ப முறைகளை கையாண்டு அவற்றை சரி செய்து கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் எதிர்மறை சக்திகளால் பாதிப்பு ஏற்படலாம்.
ஒரு சில வீடுகளில் வாஸ்து ரீதியாக அனைத்து அமைப்புகளும் கடைப்பிடித்து நல்ல பலன்கள் ஏற்பட்டிருக்கும். சில காலம் கழிந்து பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதற்கு மேற்குறிப்பிட்ட காம்பவுண்டு சுவர் பாதிப்புகளும் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம் என்று வாஸ்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- செவ்வாய் கிழமையாக இருப்பது அவசியம்.
- கிரக வசிய பூஜையை செய்யலாம்.
வீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். முதலாவது வழி பூமி வசிய முறை என்றும், இரண்டாவது வழி கிரக வசிய முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. நம்பிக்கை சார்ந்த அப்படிப்பட்ட விஷயங்களின் குறிப்புகளை இங்கே காணலாம்...
முதல் வழிமுறை
வீடு அல்லது மனை வாங்க தேவையான வசதிகள் அமைந்த பலருக்கும் எதிர்பாராத தடைகளால் தாமதமாகி இருக்கக்கூடும். அந்த சூழலில் பின்பற்றவேண்டிய வாஸ்து கிரக வசிய முறை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.
ஒரு ஆண்டுக்கு 8 முறை வாஸ்து கண் விழிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் கிரக வசிய பூஜை முறையை கடைப்பிடித்து பயன்பெறலாம்.
வாஸ்து விழித்தெழும் நாட்கள்
* சித்திரை - 10-ம் நாள் காலை 8-55 முதல் 9-30 மணி வரை.
* வைகாசி - 21-ம் நாள் காலை 10-06 முதல் 10-42 மணி வரை.
* ஆடி - 11-ம் நாள் காலை 7-38 முதல் 8-14 மணி வரை.
* ஆவணி - 6-ம் நாள் பகல் 3-18 முதல் 3-54 மணி வரை.
* ஐப்பசி - 11-ம் நாள் காலை 7-42 முதல் 8-18 மணி வரை.
* கார்த்திகை - 8-ம் நாள் காலை 11-09 முதல் 11-45 மணி வரை.
* தை - 12-ம் நாள் காலை 10-50 முதல் 11-26 மணி வரை.
* மாசி - 22-ம் நாள் காலை 10-12 முதல் 10-48 மணி வரை.
மேற்கண்ட எட்டு நாள்களில் எந்த நாளிலும் கிரக வசிய பூஜையை செய்யலாம். பூஜைகள் வழக்கமான முறைப்படி மங்களன் என்ற செவ்வாய் மற்றும் வாஸ்து புருஷன் ஆகியவர்களுக்கு செய்வது முறை. அதன் மூலம் மனை வாங்குவதில் உள்ள தடைகள், மனை வாங்கிய பிறகு வீடு கட்டுவதில் உள்ள தடைகள் ஆகியவை அகலும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இரண்டாம் வழிமுறை
ஜோதிட கிரக சிந்தாமணி என்ற பெரிய வருசாதி நூலில் சொல்லப்படுவதாவது:-
* அஸ்தம், பரணி, திருவோணம் மற்றும் விசாகம் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் அமைந்த நாளில், நட்சத்திரத்தின் நான்காம் பாதம் உள்ள நேரத்தை கணக்கிட்டு கொள்ளவேண்டும்.
* அன்று செவ்வாய் கிழமையாக இருப்பது அவசியம்.
* மேற்கண்ட இரண்டு நிலைகளும் உள்ள நாளில் வரக்கூடிய கடக லக்னம் அமைந்த நேரத்தில் சுத்தமான மண்ணை சிறிய அளவில் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அதன் மூலம் பூமி, மனை மற்றும் வீடு ஆகிய பாக்கியம் கிடைக்கும் என்று பாடல் வடிவத்தில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட முறையில் மண்ணை எடுக்க சுத்தமான ஒரு இடத்தில் மேல் பரப்பில் உள்ள மண்ணை ஒதுக்கி விட்டு சுமார் மூன்றடி ஆழத்தில் இருக்கும் சுத்தமான மண்ணை எடுத்து வைத்து கொள்வது அவசியம்.
மேற்கண்ட நேரத்தில் இஷ்ட தெய்வம், வாஸ்து மற்றும் செவ்வாய் பூஜைகள் செய்து பழங்களில் வைக்கப்பட்ட சிறிதளவு மண்ணை பிரசாதமாக உண்பதால் சொந்த வீடு அல்லது மனை வாங்கக்கூடிய யோகம் சித்திக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.






