என் மலர்
கோவில்கள்
சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி. ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது கொடுமுடி.
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறப்பானதாகும்.
மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது. இங்கு எழுந்தருளி உள்ள சிவபெருமானை மகுடேசுவரர் என்று அழைக்கிறார்கள். மகுடேசுவரரின் திருமணத்தை காண திருமாலும், பிரம்மனும் இங்கு வந்தார்கள் என்பது ஐதீகம். கோவிலின் முன்பு காவிரி ஆறு செல்கிறது.
கொடுமுடியில் இருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்பி பாய்ந்து செல்கிறது. இந்த ஆற்றில் பக்தர்கள் புனித நீராடியபின் கோவிலுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. தோஷங்கள் நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது. இங்குள்ள வன்னிமரம் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
கல்கோவில், அழகான சிற்பங்கள், அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் என்று இயற்கை சூழலில் அமைந்து இருக்கும் கொடுமுடி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்து உள்ளது.
கோவிலின் அருகிலேயே ரெயில் நிலையமும் அமைந்து உள்ளதால், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் வந்து சாமியை தரிசித்து செல்கிறார்கள். பழனி கோவில் திருவிழா என்றாலும், கொடுமுடியின் சுற்றுவட்டார கோவில்கள் திருவிழா என்றாலும் கொடுமுடி காவிரி கூடுதுறையில் இருந்துதான் தீர்த்தம் எடுத்துச்செல்லப்படும். இதனால் எப்போதும் கொடுமுடி திருவிழா கோலம் பூண்டு இருக்கும்.

உய்யகொண்டேஸ்வரர் ஆலயம் அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கான சிறப்பு ஆலயமாக இருந்தாலும், அனைவரும் இத்தலம் வந்து இங்குள்ள இறைவன் இறைவியை ஆராதித்து உரிய பலன் பெறுவது கண் கூடான உண்மை.
அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான வழிபாட்டு ஆலயம் ஒன்று உண்டு. அதுவே உஞ்சினியில் உள்ள உய்யகொண்டேஸ்வரர் ஆலயம். இறைவன் பெயர் ‘உய்யகொண்டேஸ்வரர்.’ இறைவியின் திருநாமம் ‘உமையவள் பார்வதி.’
தமிழ் ஆண்டுகளில் 25-வது ஆண்டாக இருக்கும், ‘கர’ ஆண்டிற்கான வழிபாட்டுத் தலம் இது. அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான நீண்ட ஆயுளை வழங்கும் சக்தி வழிபாட்டுத் தலமும் இதுவே. ஒவ்வொரு ராகத்திற்கும் உரித்தான நட்சத்திரம் ஒன்று உண்டு. அந்த வகையில் அஸ்த நட்சத்திர மண்டலத்தைச் சேர்ந்தது ‘பவுனி ராகம்.’ அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த ராகத்தில் வரும் பாடல்களில் ஏதேனும் ஒன்றினை பாடியோ, கேட்டோ வருதல் அவர்களுக்கு நன்மை பயக்கும்.
இந்த ஆலயம் அமைந்துள்ள உஞ்சினி, ஒரு எழில் கொஞ்சும் கிராமம். ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் பிரகாரமும் அடுத்து நந்தி மண்டபமும் உள்ளன. அடுத்து மகாமண்டபமும் வலதுபுறம் அன்னை உமையவள் பார்வதியின் சன்னிதியும் உள்ளன. அன்னைக்கு நான்கு கரங்கள். தென் திசை நோக்கி நின்ற திருக் கோலத்தில் புன்னகை தவழும் இன்முகத்துடன் அருள்பாலிக்கிறாள் அன்னை.
எதிரே கருவறையில் இறைவன் உய்யகொண்டேஸ்வரர், லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். சுற்றிலும் நீண்டு உயர்ந்த திருமதில் சுவற்றினை உடைய இந்த ஆலய திருச்சுற்றில், கணபதி, சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, மகாலட்சுமி, சண்டீஸ்வரர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். தேவக்கோட்ட தென் திசையில் தட்சிணாமூர்த்தி வீற்றிருந்து அருள்புரிகிறார்.
ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் ஆலய தலவிருட்சமான வெள்ளெருக்கு உள்ளது. இந்தச் செடியின் கிளையில் இருந்து எடுக்கப்படும் நாரினை திரித்து, பிறந்த குழந்தைக்கு அரைஞாண் கயிறாக 10 நாட்கள் இடுப்பில் கட்டுவது இந்தப் பகுதி மக்களின் வழக்கமாக இருக்கிறது. இதனால் அந்த குழந்தைகளை விஷப் பூச்சிகள் அண்டாது, நோய் நொடிகள் தாக்காது என்பது நம்பிக்கையாக நிலவு கிறது.
இந்த ஆலயத்தில் 1962, 1979, 2004 ஆகிய காலங்களில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. இது ஒரு வைப்பு தலம். சம்பந்தராலும், அப்பர் அடிகளாலும் பாடல் பெற்ற தலம் இது. ஆலயத்தின் பின்புறம் ஆலய தீர்த்தமான திருக்குளம் உள்ளது. தேவர்கள் இரவில் இக்குளத்தில் நீராடுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சீதா தேவி தனது பிள்ளைகளான லவ, குச சகோதரர்களோடு, இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டுள்ளார். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது.
கார்த்திகை தீபத்தன்று 1008 அகல் விளக்கு ஏற்றுவதுடன் 108 சங்காபிஷேகம் இறைவனுக்கு நடைபெறுகிறது. அன்று அன்னதானம் நடைபெறும். சிவராத்திரி, நவராத்திரி, வருடப்பிறப்பு, சோம வாரங்கள், விஜயதசமி போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுண்டு.
இங்கே அருள்பாலிக்கும் இறைவி உமையவள் பார்வதிக்கு, அஸ்த நட்சத்திரத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து வணங்கினால் கடன் பிரச்சினை, குடும்ப பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் என பக்தர்கள் கூறுகின்றனர்.
இது அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கான சிறப்பு ஆலயமாக இருந்தாலும், அனைவரும் இத்தலம் வந்து இங்குள்ள இறைவன் இறைவியை ஆராதித்து உரிய பலன் பெறுவது கண் கூடான உண்மை.
இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் இருந்து அகரம்பேட்டை வழியாக கல்லணை செல்லும் பேருந்தில் ஏறி, இளங்காட்டு பாதை என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உஞ்சினி திருத்தலம் உள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் இருந்து நகரப் பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

ராமேஸ்வரத்தில் உள்ளது நம்பு நாயகி திருக்கோவில். ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோவில் புனித தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ராமபிரான் வழிபட்ட தலம் என்பதால் இந்தச் சிறப்பு. இதே ராமேஸ்வரத்தில் மற்றொரு ஆலயமும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அது ராமேஸ்வரம் நம்பு நாயகி திருக்கோவில். இவள் ராமநாத சுவாமி ஆலயத்தில் பரம்பரை அர்ச்சகர்களாக இருக்கும் மராட்டிய அந்தணர்களுக்கு குலதெய்வமாக விளங்குபவள். அதுமட்டுமின்றி ராமேஸ்வரத்தில் பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.
தலவரலாறு :
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் தீவில் உள்ள இந்தப் பகுதி, தாழை மரங்கள் நிறைந்த வனமாக விளங்கியது. ஒரு சமயம், விறகு வெட்டுபவர் இங்குள்ள தாழை மரங்களை வெட்டும் போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டு வந்தது. உடனே அவர் பயந்து போய் ஊர்மக்களை அழைத்து வந்தார்.
அப்போது ஒருவருக்கு அருள் வந்தது. அவர் “இந்தப் பகுதியில் நான் தாழைவன அம்மனாக பூமியில் மறைந்துள்ளேன். என்னை வெளியில் எடுத்து கோவில் அமைத்து வழிபடுங்கள். நான் உங்களைக் காத்தருள்வேன். என்னை நம்புங்கள்” என்றார்.
அதன்படியே அப்பகுதி மக்கள், அன்னையைப் பூமியில் இருந்து தோண்டி எடுத்தனர். ரத்தம் பீறிட்ட இடத்தில் விரலிமஞ்சளை வைத்து பூசினர். ரத்தம் நின்றது. இதன்பின் அன்னைக்குச் சிறுகூரையில் கோவில் அமைத்து வழிபாடு செய்தனர். அது முதல் அப்பகுதி மக்கள் எவ்வித குறையுமின்றி வாழ்ந்து வந்தனர்.
ஆலய அமைப்பு:
கிழக்கு நோக்கிய ஆலயம், சுற்றிலும் மணல் திட்டுகள், மரங்கள் என இயற்கை எழிலாக அமைந்துள்ளது. ஆலயத்தின் கிழக்கே விநாயகர், நாக நாதர் மற்றும் பனைமரத்து காளியம்மன் பீடம், சங்கிலிக் கருப்பன் பீடம், ரெட்டைத்தாழை முனீஸ்வரர் பீடம், தலமரமான வேப்பமரம் அமைந்துள்ளன. வடக்கே தலத் தீர்த்தம், கருப்பண்ணசுவாமி, ஐயனார், ராக்காயியம்மன், பேச்சியம்மன், கருப்பாயியம்மன், இருளாயியம்மன், ஆலமரத்தின் கீழ் தர்ம முனீஸ்வரர் அருள்புரிகிறார்கள். தெற்கே இருளப்ப சுவாமி பீடம், மாடசுவாமி பீடம் ஆகியன அமைந்துள்ளன.

ஆலயத்திற்குள் நுழைந்ததும், முன்மண்டபம் அதன் உள்ளே கருவறை முன்மண்டபம், விநாயகர் மற்றும் செண்பகப் பெருமாள் சன்னிதிகளும், கருவறைக் காவலர்களாக ஆண் பூதமும் மற்றும் பெண் பூதமும் காவல்புரிகின்றன.
கருவறைக்குள் இரண்டு அம்மன்கள் காட்சி தருகின்றனர். பழமையான தாழைவன ஈஸ்வரியும், நடுநாயகமாகச் சுதைவடிவில் அலங்கார அம்மனும் இருக்கின்றனர். இதன் அடியில், பழைய சுதையம்மன் மறைந்துள்ளது.
இத்தல அம்மன், ‘தாழைவன ஈஸ்வரி’ என்று அழைக்கப்பட்டாலும், ‘நம்பு நாயகி’ என்றே அனைவராலும் போற்றப்படுகின்றாள். தன்னை நாடி வருவோருக்கும் குழந்தைப்பேறு வழங்குவதில் கண்கண்ட தெய்வமாக இவள் விளங்குகின்றாள்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், தஞ்சையை ஆண்ட மன்னனின் மகனுக்கு உடல் முழுவதும் கொப்பளங்கள் தோன்றி வாட்டியது. மன்னன் தஞ்சை பிரகதீஸ்வரரிடம் மனமுருகி வேண்டினார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “ராமேஸ்வரம் தீவில் உள்ள தட்சிண காளியிடம் சென்று வந்தால் குணம் பெறலாம்” என்றது.
அதன்படி இங்கு வந்து, அம்மன் முன்பு மகனைக் கிடத்தி, மனமுருகி வேண்டி நின்றான் மன்னன். கருணை தெய்வமான தட்சிணகாளி அங்கு தோன்றினாள். தன் சூலாயுதத்தை பூமியில் வீச அங்கு ஒரு தடாகம் தோன்றியது. அதில் குளித்த மன்னனின் மகன் நலம்பெற்றான்.
இக்கோவிலை ராமநாதபுரம் வெள்ளாளர் மரபினர், ஏழாவது தலைமுறையாகப் பூஜை செய்து வருகின்றனர். கி.பி. 1830-ல் இந்தக் கோவிலின் நிர்வாகத்தை ராமநாதபுரம் சமஸ்தானத்திடம் ஒப்ப டைத்து விட்டு, பூஜைகளை மட்டும் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் தற்போது இந்து சமய அற நிலையத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக திறந்திருக்கும்.
அமைவிடம் :
ராமேஸ்வரம் தீவில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில், தனுஷ்கோடி செல்லும் சாலையில், புதுரோடு பகுதி யில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.

குஜராத் மாநிலம் உள்ள சிவன் கோயில் ஒன்று தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது! குஜராத் மாநிலம் கோலியாக், என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.
குஜராத் மாநிலம் உள்ள சிவன் கோயில் ஒன்று தினமும் ஆறு மணி நேரம் மட்டுமே கண்களுக்குத் தெரிகிறது! குஜராத் மாநிலம் கோலியாக், என்னும் இடத்தில் அமைந்துள்ளது இந்த நிஸ்களங்கேஸ்வரர் கோயில் எனும் சிவன் கோயில். இந்தக் கோயில் கடலுக்குள் கட்டப்பட்டிருக்கிறது. பல சமயங்களில் கடலில் முங்கியே காணப்படும். கடற்கரையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு கீழே உள்ளது.
இரவு 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த கோயில் கடலுக்குள் மறைந்திருக்கும். பின்னர், கடல் உள்வாங்கி கோயிலுக்குச் செல்ல பாதை உருவாகும்! ஆனால், கோயிலுக்குச் செல்பவர்கள் அனைவரும் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணிக்குள் கோயிலுக்கு சென்று திரும்புகிறார்கள். இந்நேரத்திற்குப் பிறகு கோயிலை கடல்நீர் சூழ்ந்துகொள்கிறது.
இந்தக் கோயிலை மகாபாரதத்தில் வரும் பாண்டவர்கள் கட்டியதாக நம்பப்படுகிறது. மகாபாரதப் போரில், தங்கள் சகோதரர்களான கௌரவர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க பாண்டவர்கள் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது. கடலுக்குள் ஐந்து சிவலிங்கங்களை அமைத்து அவற்றைச் சுற்றி கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
கடல் சீற்றங்கள் மூலம் கோயில் படிப்படியாக சிதிலமடைந்து வருவதாகவும் கொடிமரம் மட்டும் அப்படியே புதிதாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். கடலுக்குள் 1 கி.மீ தொலைவுக்கு அப்பால் இருக்கும் கோயிலுக்கு செல்வது என்பது சாதாரணமான விசயம் இல்லை என்றாலும் இதை கண்டு மக்கள் பயம் கொள்வதில்லை. இவ்வளவு அபாயம் இருந்தும் இன்றுவரை எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று.

ஈசன் அருள்பாலிக்கும் அற்புதமான கோவில்களில் ஒன்றுதான், திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகில் உள்ள சொக்கம்பட்டி சுயம்பூற்று நாதர் ஆலயம்.
மேற்கு தொடர்ச்சி மலை என்றாலே, தென்றலின் ராஜாங்கமும், மூலிகையின் வாசமும், சிவபெருமானின் அருளாட்சியும் சிறப்பாக விளங்கும் இயற்கை பெட்டகமாகும். சதுரகிரி மலை, குற்றால மலை, அத்ரி மலை, பொதிகை மலை, மகேந்திரகிரி மலை, பாபநாச மலை என இறைவனின் அரசாட்சி, மேற்கு தொடர்ச்சி மலை முழு வதும் பரவியிருக்கிறது. நாடி வரும் பக்தர்களை பல ரூபத்தில் காட்சி தந்து அரவணைத்து, அவர்களுக்கு வாழ்வில் நலமும் தந்தருளும் சித்தர்களும் இந்த மலையில் அதிகம்.
அப்படி ஈசன் அருள்பாலிக்கும் அற்புதமான கோவில்களில் ஒன்றுதான், திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகில் உள்ள சொக்கம்பட்டி சுயம்பூற்று நாதர் ஆலயம்.
கால்நடையாய் நடந்து, மலை ஏற்றத்தில் வியர்வை சிந்த ஏறியபடி, இறைவனை நாடிச்செல்லும் சுகமே தனிதான். அங்கு அவனை கண்டு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, ‘உன்னைப் பார்த்ததே ஆனந்தம்’ என்று பரவசமடையும் நிலை வாழ்வில் உன்னதமானது. அப்படி ஒரு ஆன்மிக பரவசத்தைத் தரும் இடமாக சுயம்பூற்று நாதர் ஆலயம் இருக்கிறது. இந்த இடம் யோகிகளும், சித்தர் பெருமக்களும், சாதுக்களும் தங்கியிருந்து, இந்த தேசம் வளம்பெற தவம் இயற்றிய இடம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த மலை ‘சித்தர் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள சொக்கம்பட்டி மலைப் பகுதியில், ஒரு மேய்ப்பன் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தான். செல்வச்செழிப்பாக இருந்த அந்த காட்டில் அந்த சமயத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மலைகளில் தழைகள் எல்லாம் காய்ந்து கருகிபோய் விட்டன. மழை இன்றி, மலைகளில் இயற்கையாகவே சுரக்கும் சுனைகளும் கூட வற்றி விட்டது. கால் நடைகளை காக்க வேண்டுமே. எனவே மலையில் ஒவ்வொரு இடமாக சென்று கால்நடைகளை மேய்த்துக்கொண்டே இவ்விடத்துக்கு வந்து சேர்ந்தான், மேய்ப்பன்.
அவனுக்கும் தாகம், சமையல் செய்யவேண்டும் என்றாலும் தண்ணீர் இல்லை. இதனால் கால்நடைகளில் கோமியத்தை பிடித்து தாகத்தை போக்கியும், சமையல் செய்தும் வாழ்ந்து வந்தான். இயற்கை அன்னை, கொடுத்த அருட்பிரசாதமாய், கால்நடைகள் கூட ஒரு சில மூலிகைச் செடியை மேய்ந்து, அதிலிருந்து கிடைத்த நீரில் தங்களது தாகத்தை தணித்துக் கொண்டன. அந்த மூலிகை, மாடு மேய்ப்பவனுக்கும் தெரியும். ஆனால் அதை வைத்து தாகத்தைதான் தணிக்க முடியும். சமையல் செய்ய முடியாதே.. எத்தனை நாள்தான் கோமியத்தை வைத்து சமையல் செய்வது. எனவே அந்த மேய்ப்பன், தன்னுடைய மனத்துயரை துடைக்கும்படி சிவ பெருமானை வேண்டினான்.
பின்னர் திடீரென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதன்படி தான் மேய்த்து வந்த கால்நடைகளை, சற்று பள்ளமான இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு, மீண்டும் அதே இடத்திற்கு வந்தவன், “இறைவா! மழை பெய்து இங்குள்ள வறட்சி நீங்க வேண்டும். தண்ணீர் பஞ்சமின்றி கிடைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நான் இங்கேயே என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்று சொல்லி இறைவனிடம் மன்றாடினான்.

என்ன ஆச்சரியம். திடீரென்று இடி இடித்து, மின்னல் வெட்டி, மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது. அதுமட்டுமின்றி, அந்த இடத்தில் தானாகவே ஒரு ஊற்று தோன்றியது. அதில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்தது. மேய்ப்பன், தண்ணீரை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டான். அதை தாகம் தீரும் வரை குடித்தான். இறைவனின் கருணையை எண்ணி ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தான். தன் வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு, ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
மலையின் மீது தானாக தோன்றிய ஊற்றுக்கு, ‘சுயம்பு ஊற்று’ என்றும், பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு ‘சுயம்பூற்று நாதர்’ என்றும் பெயரிட்டான்.
சொக்கம்பட்டியில் சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த அன்னையை தாய் தெய்வம் என்று அழைக்கிறார்கள். இந்த சந்தன மாரியம்மனை வழிபட்டு விட்டு, அங்கிருந்து மலை அடிவாரத்திற்குச் செல்ல வேண்டும். மலை அடிவாரத்தில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். இவர் சுயம்பூற்று விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரும் வேண்டும் வரம் தருவதில் வல்லவர். தேர்வு நேரத்தில் மாணவர்கள் பலரும் இங்கு வந்து வழிபடுவதைப் பார்க்க முடியும். அரசு வேலை கிடைக்கவும் இந்த விநாயகரை வழிபடுகிறார்கள். விநாயகர் கோவில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி ஆங்காங்கே அமர்ந்து தியானம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால் இரவு நேரத்தில் இங்கு தங்குவதை தவிர்ப்பது நல்லது.
விநாயகரை தரிசனம் செய்து விட்டு, மலை ஏற வேண்டும். சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சுயம்பூற்று நாதரை வணங்கச் செல்லும் வழி நெடுகிலும் பல அனுபவங்கள் கிடைக்கலாம். பாவு ஊற்று ஓடை, வண்ணாத்தி பாறை, ஆலமரம், மலை முருகடு என கரடு முரடான சாலைகளைக் கடந்து செல்ல வேண்டும். பின்னர் மலையின் மறு பகுதியில் அகலமான பள்ளத்தில் இறங்கி நடக்க வேண்டும். ஒரு பக்கம் பாறை, மறு பக்கம் அதல பாதாளம். கொஞ்சம் கவனமாக செல்ல வேண்டிய திருத்தலம் இது.
ஓரிடத்தில் பாதையின் கீழே மிகப்பெரிய பாறை இருக்கிறது. அந்தப் பாறை இடுக்கில் ஒரு பள்ளம் காணப்படும். அந்தப் பள்ளத்தில் இறங்கி உள்ளே சென்றால் விசேஷமான குகை காணப்படுகிறது. அந்த குகையின் மேல்மட்டத்தில் பாறை ஒன்று தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும். அதையும் தாண்டி உள்ளே சென்றால், விசாலமான அறை. இரண்டு குகை. அதற்குள் செல்லும் போது கவனமாக இறங்க வேண்டும். அங்கு சென்றதுமே நம் உடலில் ஒருவித அதிர்வு ஏற்படுவதை உணரமுடியும். இங்கு இன்றும் சித்தர்களும், சாதுக்களும் தங்கி பூஜை, தியானம் செய்து செல்வதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த இடத்திற்கு அடுத்ததாக வரும் பள்ளத்தாக்கில் தான், இந்த ஆலயத்து இறைவன் வீற்றிருக் கிறார். பழைய லிங்கம் தனியே இருக்க, புதியதாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இறைவன் சுயம்பூற்று நாதருக்கு அருகில் பிள்ளையார் மற்றும் அம்மன் இருந்து அருள் பாலிக்கிறார்கள். அங்கிருந்து கொஞ்சம் மலை ஏறிச் சென்றால், அபூர்வ ஊற்றை காணலாம்.

ஊற்றுப் பகுதியில் இருந்து சற்று மேலே சென்றால், அகத்தியர் உள்ளிட்ட பல சித்தர்கள் தவம் செய்த பாறை ஒன்று உள்ளது. இந்த இடத்துக்கு வந்தாலே, பிறவிக்கடன் நீங்கும் என்கிறார்கள். இந்தப் பகுதிக்கு வந்து சென்றாலேயே இயற்கையானச் சூழலும், மூலிகை காற்றின் வாசமும் இதயம் மற்றும் சிறுநீரக நோய்களை அகற்றுவதாக நம்பிக்கை நிலவுகிறது.
இந்த ஆலயத்திற்கு யார், எப்போது வந்து பூஜை செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் தினமும் நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றனவாம்.
அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது சொக்கம்பட்டி. இங்குதான் சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. அந்த அம்மனை வழிபட்டு விட்டு, மலை அடிவாரத்திற்குச் சென்று சுமார் 6 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். பஸ் வசதி கிடையாது என்பதால் சொந்த வாகனத்திலோ, அல்லது நடந்தோ தான் செல்ல வேண்டும். அதன்பிறகு மலை அடிவாரத்தில் உள்ள விநாயகரை வணங்கிவிட்டு மலை ஏறி, இறைவனை தரிசிக்க வேண்டும். இந்த மலைக்கு செல்வதற்கு வனத்துறையின் அனுமதியைப் பெற வேண்டியது அவசியம்.
அதிசயம் நிறைந்த நீரூற்று
இத்தலத்தில் இருக்கும் ஊற்றானது, அபூர்வ ஊற்றாக திகழ்கிறது. அதாவது இந்த பகுதிக்கு எத்தனை பேர் வந்து தங்குகிறார்களோ, அவர்களுக்கு தேவையான நீர் மட்டுமே இந்த ஊற்றில் இருந்து கிடைக்குமாம். தேவையை தாண்டி ஊற்று ஊறாது என்பது இந்த கலியுகத்திலும் நடக்கும் அதிசயம் என்று இந்தப் பகுதி மக்கள் கூறுகிறார்கள். அதே போல் கெட்ட எண்ணத்துடன் இந்தப் பகுதிக்கு வரும் நபர்கள் இந்த ஊற்றின் பக்கம் சென்றால், மறு நிமிடமே ஊற்று வற்றிவிடும் என்பது அதிசயிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த ஊற்றில் சூடத்தை ஏற்றி இறைவனை வணங்கினால், அந்தச் சூடம் ‘ஓம்’ வடிவத்தில் தண்ணீரில் சுற்றிவருவதைக் கண்டு, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
முத்தாலங்குறிச்சி காமராசு

தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் திருத்தலமாகவும் விளங்குவதால் கொளஞ்சியப்பர் தலம் பிரசித்து பெற்ற பிரார்த்தனை திருத்தலமாக திகழ்கிறது.
சுவாமி : கொளஞ்சியப்பர்
தீர்த்தம் : மணிமுத்தாறு
தலவிருட்சம் : கொளஞ்சிமரம்
தலச்சிறப்பு : சங்க காலத்தில் நடுநாடு என போற்றப்பட்ட கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் மலர் தலை உலகின் கண் உள்ள எல்லா உயிர்களுக்கும் உய்யும் பொருட்டு கருணையே திருவுருவாக உடைய சிவபெருமான் திருக்கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள நடுநாட்டுத் திருத்தலங்கள் பலவற்றுள் சிறப்புற்று ஓங்கிய “திருமுதுகுன்றம்” எனும் விருத்தாசலத்திற்கு மேற்பால் ஒரு கல் தொலைவில் காவும் பூவும் நிறைந்த புள்ளினங்களும். வண்டினங்களும் இசைபாடும் இறைமணம் நிறைந்த மணவாளநல்லூர் என்னும் சிற்றூர் உள்ளது.”குரங்குலாவும் குன்றுரை மணவாள” என்று அருணாகிரிநாதர் அருளியவாறு மணவாளரான கந்த பெருமான் எழுந்தருளிய காரணத்தால் இவ்வூர் மணவாளநல்லூர் என்றாகியது.
தல வரலாறு : கொளஞ்சியப்பர் கடந்த சில நூற்றாண்டுகட்கு முன்பு தோன்றியது. திருக்கோவில் அமைந்துள்ள இடம் முன்னொரு காலத்தில் அடர்ந்த காடாக சூழ்ந்துள்ளது. பசு மாடு ஒன்று அடர்ந்த காட்டில் நிறைந்திருந்த கொளஞ்சிச் செடிகளின் நடுவே தன் கால்களால் சீய்ந்து பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொறிவதை மக்களால் காணப்பட்டு இது ஒரு புனித தெய்வம் எனக் கருதி வழிபாடு செய்துவரப்பட்டது.
சுவாமி உருவமின்றி உள்ளதால் என்ன தெய்வம் என்பது குறித்து ஆராய்ந்த போது, விருத்தாசலம் திருத்தல வரலாற்றில் “தம்பிரான்தோழன்” என்று சொல்லகூடிய சுந்தரமூர்த்தி நாயனார் தில்லையில் இருந்து பதிகம்பாடி விருத்தாசலம் அடைந்த ஊர்.
சுவாமி பெயர்களைக் கேள்வியுற்று முதுமைதன்மை வாய்ந்த இவர்களால் பொன், பொருள் எனக் கருதி பாடாதொழிந்து சென்றபோது திருமுதுகுன்றத்து ஈசனாகிய பரம் பொருள் பக்தனோடு விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் ”சுந்தரன் மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச் செய்” என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளாநல்லூர் எல்லைஎன்பது தெரியவந்தது.
அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கு திசையில் “முருகன் தான் பலிபீடஉருவில்” அமைந்துள்ளார்என உறுதி செய்யப்பட்டது கொளஞ்சி செடிகளின் ஊடேயும். பசுவின் கொளம்பின் மூலமாகவும் வெளிப்பட்ட அவருக்கு அருள்மிகு கொளஞ்சியப்பர் எனும் திருநாமத்தை சூட்டி வழிபட்டு வந்துள்ளார்கள். தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் திருத்தலமாகவும் விளங்குவதால் இத்தலம் பிரசித்து பெற்ற பிரார்த்தனை திருத்தலமாக திகழ்கிறது.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவில்,
மணவாளநல்லூர்-606001,
விருதாச்சலம்,
கடலூர் மாவட்டம்.
தொலைப்பேசிஎண்: 04143-230 232

கோயில் முகவரி :
மணவாளநல்லூர்-606001,
விருதாச்சலம்,
கடலூர் மாவட்டம்.
தொலைப்பேசிஎண்: 04143-230 232
அருள்மிகு தில்லைகாளியை வணங்கினால் விரோதிகளை அழித்து, கல்வி, செல்வம், வீரம் போன்றவை கிடைக்க அருள்புரிவாள். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சுவாமி : அருள்மிகு தில்லைகாளியம்மன்.
மூர்த்தி : பிரம்ம சாமுண்டீஸ்வரி, விநாயகர், வீணை வித்யாம்பிகை, கடம்பவன தக்ஷண ரூபிணி.
தலச்சிறப்பு : ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமி நாளன்று காலை 6.00 மணிக்கு சந்திரனும் பௌர்ணமியின் இரண்டு நாட்களுக்கு பிறகு மாலை 6.00 மணி முதல் 6.15 க்குள் சூரியனும் அம்பிகையை வழிபட்டு தன் பொன்னொளி நிகழச்செய்யும் அற்புதம் காணவேண்டிய காட்சி ஆகும்.
தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள். தில்லைகாளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் உகந்தது. குங்குமத்தால் காப்பிட்டு உடல் முழுவதும் மறைக்கப்படுகிறது. தம்மை வழிப்படுவோர்க்கு சாந்தமே கொண்டிருப்பதாக வெள்ளை வஸ்திரம் சூடி குறிப்பில் உணர்த்துகின்றாள். பெண்களுக்கு விதவைக் கோலம் ஏற்படாதிருக்க தாமே விதவையாக வெள்ளை வஸ்திரம் தரித்து சுமங்கலிகளுக்கு அருள் செய்கிறாள் என்றும் கூறுவர். தில்லைகாளியம்மன் மகம் நட்சத்திரகாரர்களுக்கு அதிதேவதை ஆவாள், எனவே மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட்டால் மிகவும் சிறப்பு.
பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு "தில்லையம்மன்” என்ற பெயரும் உண்டு. இவள் பிரம்மனை போல் நான்குமுகத்துடன் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை” என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷண ரூபிணி” என்ற பெயரிலும் அருளுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லைக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசிப் திருவிழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் வைகாசிப் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கும். விழாவையொட்டி, அம்மனுக்கு தினந்தோறும் காலை, மாலை நல்லெண்ணை, சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு தில்லைகாளியம்மன் தினந்தோறும் இரவு அலங்கரிங்கப்பட்ட சூரியபிரபை, சந்திரபிரபை, பூதகி வாகனத்தில் வீதியுலா, தெருவடைச்சான் உற்சவம், காமதேனு வாகனம், கைலாய, ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும்.
விழாவில் முக்கியமானதாக 9-வது திருநாளான தேரோட்ட திருவிழா நடைபெறும். தில்லைக்காளியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். திருத்தேரில் எழுந்தரித்த தில்லைக்காளியம்மனுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டு திரளான பக்தர்கள் அம்மன் திருத்தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். தேர் 4 ரத வீதிகள் வழியாக வரும்பொழுது திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்கின்றனர். பிறகு தில்லையம்மனுக்கு மண்டகப்படி தீபாராதனை நடைபெற்று கோவில் சன்னதியை தில்லைக்காளியம்மன் சென்றடைவாள்.
இதையடுத்து, சிவப்பிரியை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், காப்பு களைதல், மஞ்சள் நீராட்டு விழா, முத்துப்பல்லாக்கு உற்சவமும், தெப்ப உற்சவம் மற்றும் திருஊஞ்சல் நிகழ்ச்சியுடன் வைகாசிப் திருவிழா நிறைவடைகிறது.
தலவரலாறு : சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பலமுறை எடுத்துக்கூறியும் சக்தியான அம்பிகை சமாதானம் அடையவில்லை. சக்தி நான் தான் சக்திமிக்கவள் என சிவனுடன் விவாதம் செய்தாள். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த சினம் கொண்ட சிவன், "நீ எம்மை பிரிந்து காளியாக மாறுவாய்" என்று சபித்து விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வதி, தன் தவறுக்கு மனம் வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். “கோபத்தில் தந்த சாபமாக இருந்தாலும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அசுரர்களால் ஆபத்து வர இருக்கிறது. எனவே அவர்களை காப்பாற்ற வேண்டிய நேரம் வரும். அதுவரை நீ உக்கிரத்தின் உச்சக்கட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்று சிவன் கூறினார்.
ஈசன் கூறியது போல் அசுரர்களால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பல இன்னல்கள் எற்பட ஆரம்பித்தது. எனவே காளிதேவியிடம் தங்களை காப்பாற்ற வேண்டினார்கள். காளிதேவி அசுரர்களை வதம் செய்து முனிவர்களையும், தேவர்களையும் காத்தாள்.
மீண்டும் சிவனிடம் சேர வேண்டும் என்ற விருப்பத்தால் காளிதேவி, சிவனை நினைத்து தில்லையில் தவம் இருந்தாள். பல வருடங்களாக தில்லையில் தவம் இருந்தும் சிவன் காட்சி தராததால், அமைதியாகவும் பொறுமையாகவும் தவம் செய்த காளி, மீண்டும் கடும் கோபம் கொண்டாள். இதனால் தில்லைவாழ் மக்கள் அனைவரும் பாதிப்பு அடைந்தார்கள். அத்துடன் சிவனை நடனம் ஆட போட்டிக்கும் அழைத்தாள்.
ஆடல்நாயகனுடன் போட்டியா? என்று தேவர்களும் முனிவர்களும் மனம் பதறினார்கள். போட்டியில் பந்தயமும் வைத்தாள் காளி. “நான் தோற்றால் தில்லையின் எல்லைக்கே சென்று விடுகிறேன்” என்று கூறினாள். சிவபெருமானுக்கும் காளிக்கும் நடன போட்டி உச்சகட்டத்தை அடைந்தது. இவர்களுடன் பூமியும் சேர்ந்து ஆட அரம்பித்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று நிர்ணயிக்க முடியாதபடி இரண்டு பேரும் சரி சமமாக ஆடினார்கள்.
சிவன் தன் காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, ஊர்த்வ தாண்டவம் ஆடி அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார். ஈசன் செய்தது போல் பெண்ணான காளி தேவி பல ஆயிரகணக்கான முனிவர்களும் தேவர்களும் சுற்றி இருக்கும் போது எப்படி ஊர்த்வ தாண்டவம் ஆட முடியும்? என்ற வெட்கத்தால் தோல்வியடைந்ததாக ஒப்புக் கொண்டாள்.
தந்திரமாக சிவன் வெற்றி பெற்றதை காளியால் தாங்க முடியவில்லை. “தந்திரமாக ஜெயித்ததை எல்லாம் வெற்றி என்று ஏற்க முடியாது“ என்று கூறி முன்பை விட அதிகம் சினம் கொண்டாள். அவள் கோப சக்தியாக, தில்லை எல்லையில் "தில்லைக்காளி" என்ற பெயரில் அமர்ந்தாள். இவளை "எல்லைக்காளி" என்றும் சொல்வர். “நானும் இதே தில்லையில் உன் அருகிலேயே இருக்கிறேன். என்னை வணங்குபவர்கள் உன்னையும் வணங்குவார்கள். இதனால் இன்னும் நீ பெருமையடைவாய்" என்று எவ்வளவோ சிவன் சமாதானம் செய்தும் காளி தேவியின் கோபம் தணியவில்லை. சிவன் கூறியது போல் இன்றும் சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத் தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் தில்லைக்காளியையும் வணங்குகிறார்கள்.
பிரம்மா தில்லைக்காளியின் கோபத்தை போக்க “தில்லைக்காளியை வேதநாயகி” எனப் புகழ்ந்துபாடி, நான்கு வேதங்களாகிய ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி, "பிரம்ம சாமுண்டீஸ்வரி” என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி தந்து தில்லையிலேயே அமர்ந்தாள் காளி. அன்னை மகாகாளியை தில்லையம்மன் என்றே மக்கள் அழைக்கிறார்கள். பலருக்கு குல தெய்வமாகவும் தில்லைகாளி திகழ்கிறாள். தில்லைகாளியை வணங்கினால் விரோதிகளை அழித்து, கல்வி, செல்வம், வீரம் போன்றவை கிடைக்க அருள்புரிவாள்.

திருச்சி மாவட்டம் வெள்ளூர் என்ற ஊரில் உள்ளது, திருகாமேஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ‘திருகாமேஸ்வரர்’ என்றும், இறைவி ‘சிவகாமசுந்தரி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மன்மதன் பற்றிய புராணக் கதை ஒன்று இத்தலத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது.
சிவபெருமானின் சொல்லையும் மீறி, தட்சனின் யாகத்திற்குச் சென்றாள் தாட்சாயிணி. அங்கு அவளுக்கு அவமானமே மிஞ்சியது. தன் சொல் கேட்காத அன்னைக்கு, ஈசன் சாபம் அளித்தார். அதன்படி பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து, உரிய நேரம் வரும்போது கயிலை வந்து சேரும்படி அருளினார். இதையடுத்து பார்வதி என்ற பெயருடன், பர்வதராஜனிடம் வளர்ந்து வந்த தேவியானவள், கயிலாயமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை நோக்கி தவம் புரியத் தொடங்கினாள்.
பார்வதியைப் பிரிந்த சிவபெருமான் கயிலையில் அசைவற்ற நிலையில் இருந்தார். இதனால் பிரபஞ்சத்திலும் ஓர் அணுவும் அசையவில்லை. இதே நிலை தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடும் என்று அஞ்சிய பிரம்மாவும், விஷ்ணுவும் தேவர்கள் சூழ, சிவபெருமானையும் பார்வதியையும் ஒன்றிணைக்க முயன்றனர். மன்மதனை அழைத்து சிவபெருமான் மீது, காமபாணத்தை ஏவுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆனால் ஈசனின் மீது பாணம் தொடுக்க மன்மதன் தயங்கினான். உடனே தேவர்கள், “நீ ஈசன் மேல் காம பாணம் தொடுக்காவிட்டால், உனக்கு நாங்கள் சாபம் அளிப்போம்” என்று மிரட்டினர். இதனால் பயந்து போன மன்மதன், ஒரு புன்னை மர நிழலில் ஒளிந்து கொண்டு ஈசனின் மீது அம்பு விட்டான்.
அவன் விட்ட அம்பு, வில்லில் இருந்து வெளியேறும் முன்பாகவே, அவனை தன்னுடைய நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்தார் சிவபெருமான். அதோடு மன்மதன் விட்ட பாணமும் திசைமாறி, பார்வதியின் மீது பட்டது. அதில் அவர் பருவம் செய்தி, சிவபெருமானை வந்தடைந்தாள். அன்னைக்கு சிவகாம சுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. இந்த பெயர் கொண்டவரே இத்தல இறைவியாக திகழ்கிறார். இறைவனின் திருநாமமும் அதனாலேயே ‘காமேஸ்வரர்’ என்றானது.
இந்த நிலையில் கணவனை இழந்த ரதிதேவி, தன் கணவரான மன்மதனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். அவளுக்கு மனம் இரங்கிய இறைவன், மன்மதனுக்கு உயிர் கொடுத்து, அவன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்று அருள் புரிந்தார். ரதியும், மன்மதனும் இத்தலமான வெள்ளூர் வந்து மன்மதனுக்கு பழைய உடலைத் தர வேண்டுமென சிவபெருமானை வழிபட, ஈசனும் மனம் இரங்கி மன்மதனுக்கு உடலைத் தந்தார் என்று தல புராணம் சொல்கிறது.
இந்த திருத்தலத்தில் உள்ள இறைவனானவர், மகாலட்சுமியால் வழிபடப்பட்டவர் என்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அந்த அமிர்தம் தேவர் களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமென எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி வடிவம் எடுத்து வந்தார். மோகினியின் அழகில் மயங்கிய சிவபெருமான், அவளை மோகிக்க அவர்களுக்கு ஐயப்பன் பிறந்தார்.

இதை அறிந்த மகாலட்சுமி, தன் கணவரான மகாவிஷ்ணுவின் மீது கோபம் கொண்டாள். பின்னர் வைகுண்டத்தை விட்டு வெளியேறி பூலோகம் வந்தாள். இங்கு வில்வாரண்ய சேத்திரம் எனும் வெள்ளூரில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தாள். பல யுகங்களாக தவம் செய்தும் அவளுக்கு, சிவபெருமான் காட்சி தரவில்லை. உடனே, மகாலட்சுமி தன்னை வில்வமரமாக மாற்றிக் கொண்டு சிவலிங்கத் திருமேனியில் வில்வ இலையை மழையாக பொழிந்து பூஜித்தாள்.
இதனால் மனம் மகிழ்ந்த ஈசன், மகாலட்சுமியின் முன்பாகத் தோன்றி, ஐயப்பனின் அவதார நோக்கத்தை விளக்கி, அவளை சாந்தப்படுத்தினார். பின்னர் அவளை, ஸ்ரீவத்ஸ முத்திரையுடன் கூடிய சாளக்கிராமமாக செய்து, மகாவிஷ்ணுவின் இதயத்தில் இருக்கும்படிச் செய்தார். மேலும் மகாலட்சுமியை ஐஸ்வரியத்தின் அதிபதியாகவும் இருக்கும்படி அருள்புரிந்தார்.
இதன் காரணமாக இந்த ஆலயத்தில் இருக்கும் மகாலட்சுமி, ‘ஐஸ்வரிய மகாலட்சுமி’ என்ற திரு நாமத்துடனேயே பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ராவணனுக்கு, இத்தல இறைவன் மீண்டும் உடல் வலிமை கொடுத்து, ஈஸ்வர பட்டம் சூட்டியதாக தல புராணம் சொல்கிறது. இத்தலத்தில்தான் சுக்ரன் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியானார். குபேரன் இத்தல இறைவனை வழிபட்டு தனாதிபதியாக மாறினார். வெள்ளிக்கிழமையில் வரும் சுக்ர ஓரையில் (காலை 6-7 மணி), ஐஸ்வரிய மகாலட்சுமிக்கு 16 வகையான அபிஷேகம் செய்து, 16 நெய் தீபங்கள் ஏற்றி, 16 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால், 16 வகை பேறு களையும் பெறலாம் என்பது நம்பிக்கை.
சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம். கி.பி. 6-ம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றிருப்பதாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. தற்போது இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.
சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வளமாக வாழ, நாமும் ஒரு முறை ஐஸ்வரிய மகாலட்சுமியை தரிசித்து வரலாமே!
திருச்சியில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளூர் திருத்தலம் உள்ளது. முசிறியில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ வசதிகள் இருக்கின்றன.

வராக மூர்த்தியானவர், பூவராகப் பெருமாளாக தன் பரிவாரங்களுடன் தங்கிய திவ்ய தேசமே ஸ்ரீமுஷ்ணம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது, வராக அவதாரம். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை கடலுக்குள் ஒளித்துவைக்க, மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து, அசுரனை வதம் செய்து பூமியை மீட்டார். வராக அவதாரம் பற்றி பல்வேறு புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு சமயம், மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்ய நான்கு மகரிஷிகள் வந்தனர். அவர்களை வாயில் காப்பாளர்களான ஜெயன், விஜயன் இருவரும் தடுத்து நிறுத்தினர். இதனால் கோபமடைந்த ரிஷிகள், “நீங்கள் பூலோகத்தில் அசுரர்களாக பிறப்பீர்கள்” என்று சாபமிட்டனர்.
அதன்படி அவர்கள் இருவரும், காசியப முனிவருக்கு பிள்ளைகளாக பூலோகத்தில் பிறந்தனர். இரண்யகசிபு, இரண்யாட்சன் என்ற பெயர் களைக் கொண்ட அவர்கள், பல யாகங்களையும், தவங்களையும் செய்து பிரம்மனிடம் இருந்து பல வரங்களைப் பெற்றார்கள். அந்த வரங்களைக் கொண்டு, பூலோக மக்களையும், தேவர்களையும், முனிவர்களையும் கொடுமைப் படுத்தத் தொடங்கினர். அவர்கள் கொடுமை எல்லை தாண்டியது. கொடிய அசுரர்களான அவர்கள் இருவருக்கும் பயந்து, தேவர்கள் மறைந்து வாழத் தொடங்கினர்.
இரண்யகசிபு, பிரம்மாவை நோக்கி கடும் தவம் இயற்றி, மூன்று உலகங்களையும் ஆளும் வரத்தைப் பெற்றான். இதனால் அவனது சகோதரன் இரண்யாட்சனுக்கு ஆணவம் அதிகரித்தது. அவன் வருண பகவானை பிடித்து துன்புறுத்த நினைத்தான். அப்போது வருணன், “நீ என்னிடம் மோதுவதை விட, வராக அவதாரம் எடுக்கப் போகும் திருமாலிடம் மோதுவதுதான் சிறப்பானது. அவரை வெற்றி கொண்டால், நீ அனைத்தையும் வெற்றி கொண்ட வனாவாய்” என்றார்.
அதன்பிறகு வராக மூர்த்தியைத் தேடுவதே, இரண்யாட்சனின் முழுநேர வேலையாகிப் போனது. ஆனால் எங்கு தேடியும் வராகரைக் காணவில்லை. எனவே பூமியைக் கவர்ந்து சென்று, கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். இதனால் உலக உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. பிரம்மதேவர், பூமியை காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணுவை நினைத்து ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்தில் இருந்து கட்டை விரல் அளவு கொண்ட வராகம் தோன்றியது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பிரமாண்டமாக வளர்ந்து நின்றது. மகாவிஷ்ணுவே, வராகமூர்த்தியாக அவதரித்திருந்தார்.
மகாவிஷ்ணு வராகமூர்த்தியாய் வந்துள்ள செய்தியை, நாரதர் மூலம் அறிந்த இரண்யாட்சன் விரைந்து வந்தான். அதற்குள் வராகர், பூமி மறைத்து வைக்கப்பட்டிருந்த கடலுக்குள் நுழைந்து விட்டார். அங்கு வந்த இரண்யாட்சன், வராகரை தடுத்து போரிட்டான். முடிவில் அவனை அழித்த வராகர், தனது இரண்டு கோரை பற்களுக்கு இடையே பூமியை வைத்து கொண்டு கடலுக்குள் இருந்து மேலே வந்தார். அப்படி கடலுக்குள் இருந்து மேல்மட்டத்திற்கு வரும் வழியில், பூமாதேவி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம், வராகர் பதிலளித்துக் கொண்டே வந்தார். பின்னர் பூமியை அதன் இடத்தில் நிலை நிறுத்தினார்.
அப்போது அவர் உடலில் இருந்து பெருகிய வியர்வைத் துளிகளால் நித்யபுஷ்கரணி தீர்த்தம் உருவானது. அந்த தீர்த்தத்தின் அருகில் வராகர் ஓய்வெடுத்தார். பின்னர் கண்விழித்து பார்த்தார். அப்போது ஒரு விழிப் பார்வையில் இருந்து அரச மரமும், மறு விழிப் பார்வையில் இருந்து துளசிச் செடியும் உருவானது. தேவர்கள் அனைவரும் வராக மூர்த்தியாக இருந்த மகாவிஷ்ணுவை வழிபட்டனர். பின்னர் மகாவிஷ்ணு அங்கிருந்து வைகுண்டம் புறப்படத் தயாரானார். ஆனால் அவரிடம் பூமாதேவி, வராக திருக்கோலத்திலேயே தன்னுடன் சில காலம் தங்கியிருந்து அருள் பாலிக்கும்படி வேண்டியதன் பேரில், பூவராகப் பெருமாளாக அங்கேயே அருள்பாலிக்கத் தொடங்கினார்.
அப்பொழுது, அவருடைய பரிவாரங்களும் பூமியிலேயே தங்கின. திருமால் தன் கைகளில் இருக்கும் சங்குக்கு சங்கு தீர்த்தத்திலும், சக்கரத்திற்கு சக்கர தீர்த்தத்திலும், பிரம்மாவுக்கு பிரம்ம தீர்த்தத்திலும், கருடனுக்கு பார்க்கவ தீர்த்தத்திலும், வாயுவுக்கு கோபுரத்திலும், ஆதிசேஷனுக்கு பலிபீடத்திலும், விஷ்வக்சேனருக்கு வாசலிலும் இடமளித்து அருளினார். அதோடு இங்கு வந்து தன்னை வழிபடுபவர்களை எமதூதர்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்ளும் பணியை ஆதிசேஷனுக்கும், வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை பிரம்மாவுக்கும் வழங்கினார்.
இப்படி வராக மூர்த்தியானவர், பூவராகப் பெருமாளாக தன் பரிவாரங்களுடன் தங்கிய திவ்ய தேசமே ஸ்ரீமுஷ்ணம். வராகப் பெருமாள் அவதரித்து, பூமியை மீட்ட தினம் சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியாகும். அன்றைய தினம் வராக ஜெயந்தி கடைப்பிடிக்கப்படுகிறது.
மூலவர் ஸ்ரீ பூவராகப் பெருமாள் என்றும், தாயார் அம்புஜவல்லி என்னும் பெயர் பெற்றுள்ளனர். உற்சவரின் திருநாமம் ஸ்ரீதேவி- பூதேவி சமேத யக்ஞவராகர் என்பதாகும். தல விருட்சம் அரச மரம். தல தீர்த்தம் நித்ய புஷ்கரணி. இந்தத் திருத்தலத்தை பன்னிரு ஆழ்வார்களில் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆண்டாள் ஆகியோர் பாடல்கள் மூலம் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த திருத்தலத்தில், பிரம்மா பூஜைகள் செய்ய, சரஸ்வதி பூஜைக்கான கானம் இசைப்பார் என்பது ஐதீகமாக இருக்கிறது.
மேற்கு நோக்கிய இந்த ஆலயம், ஏழுநிலைக் கோபுரத்துடன் ஒன்பது கலசங்களைத் தாங்கியபடி நிற்கிறது. ஆலயத்திற்குள் நுழைந்ததும் கலை நயமிக்க தூண்களைக் கொண்ட புருஷசூக்த மண்டபம் உள்ளது. அதில் கருடாழ்வாரும், கருவறையின் முன்பாக காவல்புரியும் ஜெய, விஜயர்களும் துவாரபாலகர்களாக இருக்கிறார்கள்.
கருவறையில் பூவராகப் பெருமாள் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இரு கரங்களுடன் இடுப்பில் கைவைத்த கோலத்தில், இரண்டு தேவியரோடு காட்சியருள்கிறார். இவரது தோற்றம் மேற்கு நோக்கியதாக இருந்தாலும், முகம் தெற்கு நோக்கி இருக்கிறது. இவரது திருமேனி சாளகிராமத்தால் ஆனது. விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில், சிற்ப வேலைப்பாடு நிறைந்த கோவிலாகும்.
ஆலய பிரகாரத்தில் ஆண்டாள் சன்னிதி, பரமபத வாசல் கோபுரம், சப்தமாதர்கள் சன்னிதி, உடையவர் சன்னிதி, சேனை முதலியர் சன்னிதி, வேதாந்த தேசிகர் சன்னிதிகள் இடம் பெற்றுள்ளன. சப்தமாதர்களை வேண்டிக் கொண்டு அங்குள்ள வேப்பமரத்தடியில் குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழி படுகின்றனர். தெற்குப் பக்கம் தனி சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார் கிழக்கு நோக்கி அமர்ந்தவாறு அருள்பாலிக்கிறாள். வளையமாதேவி என்ற ஊரில் கார்த்தியாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தல பெருமாளைத் திருமணம் செய்துக் கொண்டவர் அம்புஜவல்லித் தாயார்.
ஆலயத்தின் பின்புறத்தில் தல தீர்த்தமான நித்யபுஷ்கரணி தீர்த்தமும், தலவிருட்சமான அரசமரமும் இருக்கின்றன. நித்யபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி அரசமரத்தைச் சுற்றிவந்து பெருமாளையும் தாயாரையும் உள்ளம் உருக வழிபட்டால், குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. வராகப் பெருமாளை வணங்குவோர் நீண்ட புகழ், நிலைத்த செல்வம், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் பெறுவர் என்பது புராணங்கள் சொல்லும் தகவல்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம். சென்னை, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், திருச்சி, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களில் இருந்து இவ்வாலயத்திற்கு நேரடி பேருந்து வசதி உள்ளன.

கலியுகவரதராஜப் பெருமாள் கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது.
சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள்.
அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி.
தலவிருட்சம் : மகாலிங்கமரம்.
தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. மாறாக சிலைகள் எதுவும் இல்லை. இங்கு இக்கோவிலை கட்டியவர்களின் சிலைகளும் உள்ளது.
தல வரலாறு : 250 ஆண்டுகளுக்கு முன் அரியலூர் அருகே, வன்னியகுலத்தில் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் மங்கான், மாட்டு மந்தை ஒன்றை நடத்தி வந்தார். மந்தையில் கருவுற்ற நிலையிலிருந்த அழகிய பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில் "கவலைப்படாதே பக்தா!, காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது. காலையில் அங்கே கன்றுடன் பசுவைக்காண்பாய்!' என இறைவன் கூறி மறைந்தார்.
காலையில் மங்கான் பணியாட்களுடன் சென்று பார்த்த போது, கன்றுடன் பசு நின்றிருந்தது, அதே இடத்தில் சாய்ந்து கிடந்த கம்பத்தையும் கண்டார். அதன் மீது பால் சொரிந்திருந்தது. பசு, அம்மாவெனக் கதறி அவரிடம் வந்தது. அக்கம்பத்தை மங்கானும், அவரது பணியாட்களும் தொட்டு வணங்கினர். பசு கிடைத்த ஏழாம் நாள் இரவு, மீண்டும் மங்கான், கனவில் "எண்ணாயிரம் ஆண்டு யோகம் செய்வோர் கூட காணக்கிடைக்காத பெரும் பொருளைக் கண்டு வணங்கி வந்த நீ! பொய்ப்பொருளான, உன் பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளான என்னைக் கைவிட்டாய், என்னே உன் அறியாமை! உன் முன்னோர்க்கும் எனக்கும் உள்ள உரிமைத் தொடர்பை நீ அறியமாட்டாய், சீதளவாடியில் வாழ்ந்து திருமாலை வணங்கிய உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, கற்கம்பம் கொண்டு வரும் போது வண்டி அச்சு முறிந்ததால் உச்சிமுனை உடைந்து கம்பமாய் என்னை அங்கேயே விட்டுவந்தார்கள்.
அதே கம்பம் தான் நீ பார்த்தாய், தொடர்ந்து கவலை கொள்ளாதே, கம்பத்தை நிலைநாட்டும் உரிமை உன்னுடையது. கம்பத்தை நிலை நிறுத்தி நாளும் வணங்கு. என்னை நீ உணரவே உன் பசுவை மறைத்து வைத்தேன். உன்னையும் உன் வழித்தோன்றல்களையும் காக்க வந்தவன் நான் என்பதை அறிந்துகொள். கலியுகத்தார் கவலையை நீக்கவே தோன்றினேன். என் பெயர் "கலியுக பெருமாள்” எனக் கூறி இறைவன் மறைந்தார். மங்கான், அந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாட்டை துவக்கினார். இந்த கோயில் தான் தற்போது கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் கோயிலாக உள்ளது.
நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் முகவரி : அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்,
கல்லங்குறிச்சி - 621 705, அரியலூர் மாவட்டம்.

தஞ்சாவூரில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் 600 ஆண்டு பழமையானது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சுவாமி : பிரசன்ன வெங்கடேச பெருமாள்.
அம்பாள் : ஸ்ரீ அலமேலுமங்கை.
மூர்த்தி : பத்மாவதித் தாயார். பஞ்சமுக ஆஞ்சநேயர்.
தலச்சிறப்பு : பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் 600 ஆண்டு பழமையானது. இங்கு மூலவராக வெங்கடாஜலபதி அருள்கிறார். தனிச் சந்நதியில் பத்மாவதித் தாயார். பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணுவின் தசாவதாரப் பெருமாள்களின் சந்நதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.
இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா விமர்சையாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழாவின் போது அன்று காலை திருமஞ்சன சேவையும், இரவு திருவாரதனை, நாச்சியார் கோலத்துடன் பெருமாள் புறப்பாடு, பெருமாள் யதாஸ் தானம் சேர்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
அடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படும். ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதரராய் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு : தஞ்சாவூர் மானோம்புச்சாவடியில் உள்ள தேவி பூமிதேவி அலமேலுமங்கா சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் குடமுழுக்கு 2011 ம் ஆண்டு மார்ச் 23 புதன்கிழமை நடைபெற்றது. குடமுழுக்கு நிகழ்ச்சியையொட்டி, 2011 ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி நவநீத கிருஷ்ணர் சன்னதியில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டது. அதைத்தொடர்ந்து, பூஜைகள், மகாசாந்தி ஹோம பூஜைகள் நடைபெற்றன.
புதன்கிழமை காலை கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. பிறகு, தீபாராதனையுடன் சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றன. தொடர்ந்து, சுவாமி வீதியுலா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை .
கோயில் முகவரி : அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில்,
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இந்த அம்மனுக்குக் கருப்பு சாந்து அபிஷேகம் செய்து வழிபட்டால், மனப் போராட்டங்கள், மன நோய்கள் அகன்று மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு நோயற்ற வாழ்வு, கல்வியில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு கிடைத்தல் போன்ற சிறப்புப் பலன்களும், இந்த அன்னையின் கடைக்கண் பார்வையால் நமக்கு கிடைக்கும்.
தல வரலாறு :
பூமியில் வாழ்ந்த வந்த மக்களையும் முனிவர்களையும் நீலன் என்னும் அசுரன் துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமையான செயல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட முனிவர்கள், சிவபெருமானை சந்தித்தனர். அவரிடம், தங்களை அசுரனிடம் இருந்து காப்பாற்றி அருளும்படி வேண்டினர்.
தட்சனின் வேள்வியை நிறுத்துவதற்காக, சிவபெருமானின் சடைமுடியில் இருந்து தோன்றியவள் பத்ரகாளி. அவளை மீண்டும் அழைத்த சிவபெருமான், நீலன் அசுரனை அழித்து, முனிவர்களையும், பூலோக மக்களையும் காத்தருளும்படி கூறினார். சிவபெருமானின் கட்டளையை ஏற்றுக்கொண்ட பத்ரகாளி, அங்கிருந்து பூலோகம் சென்று நீலனையும், அவனுக்கு துணையாக இருந்த அசுரப் படைகளையும் அழித்தாள்.
பின்னர் மன அமைதியை விரும்பிய பத்ரகாளி, ஓரிடத்தில் அழகிய வயல்வெளி களாக இருந்த ஊரின் நடுவில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினாள். ஆனால் அறுவடைக் காலங்களில், அந்த இடத்தில் அரிசி குத்தும் சத்தம் அதிகமாக கேட்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் அவளுடைய தவத்திற்கு இடையூறாக இருந்த காரணத்தால், பத்ரகாளி அங்கிருந்து கிழக்குப் பக்கமாக சென்று, ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தாள்.
அன்னை அங்கு குடியிருப்பதை அறிந்து கொண்ட பக்தர்கள், அவளுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி ஒரு நம்பூதிரியை அழைத்து, அம்மனுக்கு கோவில் கட்ட சரியான இடத்தை தேர்வு செய்து தரும்படி வேண்டினர். அந்த நம்பூதிரியும், பிரசன்னம் என்னும் ஜோதிட ரீதியான வழிமுறையை பின்பற்றி, அம்மனுக்கு கோவில் அமைப்பதற்கு சரியான இடம் எது என்று தேடினார். அந்த தேடுதலின் முடிவில், ஆலமரத்தின் அடியிலேயே அம்மனுக்கு கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதுவே அம்மனுக்கு சிறந்த இடம் என்று நம்பூதிரி கூறினார். அதன்படி அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது என்று இந்த ஆலயத்தின் வரலாறு சொல்லப்படுகிறது.
இந்தப் பகுதியில் வசித்து வந்த வேதியர்கள் பலர், சோகனாசினி (பாரதப்புழா) ஆற்றின் கரையில் அதிக அளவில் யாகங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்தப் பகுதிக்கு ‘யாகக் கரை’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதுவே நாளடைவில் மருவி, தற்போது ‘யாக்கரை’ என்று மாற்றம் அடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இங்கு வசித்த வேதியர்கள், ஆற்றின் கிழக்கு பகுதியில் உள்ள கரையை, மந்திரங்கள் சொல்லும் இடமாகவும், சமையல் செய்யக்கூடிய மடப்பள்ளியாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதனால் ‘மடப்பள்ளி’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதி, தற்போது பேச்சு வழக்கில் ‘மணப்புள்ளி’ என்று மாறிவிட்டதாக ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
அம்மன் முதலில் இருந்த இடம் ‘படிஞ்சாரை யாக்கரை’ என்றும், பின்னர் கோவில் கொண்ட இடம் ‘கிழக்கு யாக்கரை’ என்றும் அழைக்கப்படுகிறது. மணப்புள்ளி பகவதி கோவில், மாட்டப்பிள்ளி பத்ரகாளி மணா என்னும் கேரள அந்தணக் குடும்பத்தினருக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. பின்னர் இக்கோவிலின் நிர்வாகம் மலபார் கோவில்கள் வாரியத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.
ஆலய அமைப்பு :
இக்கோவிலின் கருவறையில் உள்ள பகவதியம்மன், கருப்பு நிறத் தோற்றத்தில் காணப்படுகிறாள். மூன்று கண்கள், நான்கு கோரைப்பற்கள் கொண்டு அருளும் இந்த அன்னை, தன்னுடைய நான்கு கரங்களில், சூலம், கபாலம், வாள், கேடயம் போன்றவற்றைத் தாங்கி, வடக்கு திசையை பார்த்தபடி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்தக் கோவில் வளாகத்தில் கணபதி, கால பைரவர் மற்றும் சாஸ்தா ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆலயத்தின் தெற்குப் பகுதியில் அழகிய குளம் ஒன்று இருக்கிறது. இந்தக் குளத்தில் அசுரர்களை அழிப்பதற்காக, பகவதியம்மன் பயன்படுத்திய வாள் ஒன்று இருப்பதாக ஐதீகம் உள்ளது. இந்தக் குளத்தில் நீராடி அம்மனை வழிபட்டால் எதிரிகள் பயம் விலகும் என்கிறார்கள்.
இந்தத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு, சிறப்பு நாட்களில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. சித்திரை மாதம் முதல் நாளில் நடைபெறும் விசுத் திருநாள், ஆவணி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் நடைபெறும் ஓணம் திருநாள் போன்ற சிறப்பு நாட்களில், இந்த அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெறுகின்றன.
இங்கிருக்கும் அம்மனுக்குச் சிவபெரு மானைப் போல் மூன்றாவது கண் இருப்பதால், துன்பங்களால் துவண்டு போய் இருப்பவர்களும், பிறரால் துன்பங்களை சந்திப்பவர்களும் இங்கு வந்து வழிபட்டால், அந்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். நன்மைகள் பலவும் நடைபெறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
குருவாயூரில் கிருஷ்ணருக்கு செய்யப்படும் சந்தன அபிஷேகம், சபரிமலையில் ஐயப்பனுக்கு செய்யப்படும் நெய் அபிஷேகம் போன்றவை சிறப்புக்குரியவை. அதே போல மணப்புள்ளி பகவதியம்மனுக்கு கருப்பு சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இது இங்கு மிகவும் விசேஷமான அபிஷேகமாகும். கருப்பு சாந்து அபிஷேகம் செய்து வழிபட்டால், மனப்போராட்டங்கள், மன நோய்கள் போன்றவை நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அபிஷேகத்தைச் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத் திருவிழா:
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும், மாசி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமையில், ‘கன்யர்’ என்னும் கொடியேற்றத்துடன், ஆண்டுத் திருவிழா தொடங்குகிறது. விழாவின் 14-வது நாளில் நடைபெறும் ‘வேலைத் திருவிழா’ என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த வேலைத் திருவிழாவின் போது, அம்மன் பக்தர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அவர் ஆலயத்தின் பின்புறம் உள்ள குளத்தில் இறங்கி, அசுரனை அம்மன் அழிக்க பயன்படுத்திய வாளை எடுத்து வந்து, கோவிலில் வைத்து வழிபாடு செய்வார். இந்த வாள் எடுத்து வரும் நிகழ்வை ‘வெளிச்சப்பாடு திருவிழா’ என்கிறார்கள்.
வேலைத் திருவிழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்வை “வேல ஊட்டு” என்கின்றனர். விழாவில் 15 யானைகள் அணி வகுத்து நிற்கின்றன. பாண்டி, பஞ்சாரி மேளம், பஞ்சவாத்தியம் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன.
அசுரனை அழித்து விட்டு, கோபத் தோற்றத்தில் இருக்கும் அம்மனை, அமைதிப்படுத்தும் விதமாக, அம்மனுக்கு முழுமையாகக் கருப்பு சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இப்படிச் செய்வதால் அம்மன் மனம் குளிர்ந்து, பக்தர்களுக்குப் பல்வேறு நற்பலன்களை வழங்குவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவ் வேளையில், அம்மனுக்கு “கடும் மதுரா பாயாசம்” படைக்கப் பெற்று பக்தர் களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆலயமானது காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது யாக்கரை. பாலக்காடு நகரில் இருந்து யாக்கரை செல்வதற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.