என் மலர்
முக்கிய விரதங்கள்
பெண்கள் கடைபிடிக்க வேண்டிய மிக சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும். ஆடி மாதம் சுக்கில பட்சம் பவுர்ணமிக்குச் சமீபமான வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
பெண்கள் கடைபிடிக்க வேண்டிய மிக சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும். ஆடி மாதம் சுக்கில பட்சம் பவுர்ணமிக்குச் சமீபமான வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
இந்த தினத்தில்தான் மாலை வேளையில் லட்சுமி பாற்கடலில் தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு அடைந்தார்.மகாலட்சுமி சகல பாக்கியங்களையும் கொடுக்கக்கூடியவள். ஐஸ்வரியத்திற்கு இவளே அதிபதியாகவும், அஷ்டலட்சுமியாகவும் விளங்குகிறாள்.
எட்டுவிதச் செல்வங்களை நல்கு வதுடன் தாலி பாக்கியத்தையும் வழங்குகின்றாள். அதனால்தான் திருமணமான பெண்கள் இத்தினத்தில் லட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்கின்றனர்.
காலையில் உபவாசத்துடன் பூஜை அறையை இயன்ற அளவு அலங்கரித்து கோலமிட்டு லட்சுமி கடாட்சமாகச் செய்ய வேண்டும். கலசத்தில் லட்சுமியை ஆவாகணம் செய்து எலுமிச்சம்பழம், புஷ்பங்கள் சாத்தி இனிப்பு பண்டங்களைப் படைக்க வேண்டும்.
மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும், வீட்டின் நலனையும் தருவது நெய் விளக்காகும். எனவே அதை ஏற்றி வழிபட வேண்டும்.
மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களைப் பாடித் தியானிக்கலாம். மங்களகரமான மஞ்சள் கயிற்றை ஒன்பது முடிச்சுக்களுடன் பூஜையில் வைத்து வழிபாடு செய்து முடிந்தபின் அதனை எடுத்து வலது மணிக்கட்டில் விரதம் மேற்கொள்ளுபவர் கட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குடும்பத்தினரும், நெருங்கிய உறவினரும் கூடி மகிழ்வுடன் இனிப்புகளையும், பிரசாதங்களையும் பயன்படுத்தலாம். விரத தினம் முழுவதும் வீண் பேச்சுக்களில் ஈடுபடாமலும், லட்சுமி துதி, தோத்திரம் ஆகியவற்றுடன் கூடிய சிந்தனையுடனுமே இருத்தல் வேண்டும்.
வரலட்சுமியின் நோன்பை அனுஷ்டித்த வர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது. கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இவ்விரதம் மிகவும் உகந்தது. அதோடு இது மனதிற்கு நிம்மதி தரும் விரதமாகும்..
சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும்.
சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.
ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.
கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னமிட்டு அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் பாவங்கள் அகலும், நோய் அண்டாது என்பது ஐதீகம்.
வீட்டில் துளசி மாடம் வைத்து துளசியை பூஜிப்பது விசேஷம். செவ்வாய், வெள்ளி விரதமிருந்து துளசியை விசேஷமாக பூஜிக்கலாம்.
கோகுலத்தில் ஒருநாள் கிருஷ்ண பகவான் ராதையுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த கோபிகா அதைக் கண்டு பொறாமை கொண்டாள். அதனால் கோபம் கொண்ட ராதை, `சாதாரண மானிடப்பெண்போல் நீ பொறாமை அடைந்ததால் இந்த உயர்ந்த நிலையிலிருந்து பூலோகம் சென்று மானிடப் பெண்ணாக பிறப்பாய்' என்று சபித்தாள்.
அதன் காரணமாக பூலோகத்தில் தர்மத்வஜன் என்ற ராஜாவுக்கும், அவரது பட்டத்தரசியான மாதவிக்கும் துளசி என்ற பெயரில் கோபிகா பெண்ணாய்ப் பிறந்தாள். சிறுவயதிலேயே பத்ரிகாவனம் சென்று, கிருஷ்ணனை மனைவியாக அடைய வேண்டும் என்று தவம் செய்தாள். அவள் வேண்டியபடி பிரம்மதேவனும் வரம் கொடுத்தார்.
ஆனால் சிறுவயதில் தான் பெற்ற வரத்தை மறந்தே போனாள் துளசி. அதே நேரத்தில் ராதையால் சபிக்கப்பட்ட சுதாமன் என்பவனும், சங்க சூடன் என்ற பெயரில் சிவ அம்சமாக பூமியில் பிறந்தான். இவன் நான்கு கைகளுடன் பெரும் வீரனாக விளங்கினான்.
அசுரர்களுடன் சேர்ந்து கொண்டு சங்கசூடன் தேவர்களை ஜெயித்து யாராலும் வெல்ல முடியாதவனாகத் திகழ்ந்தான். சங்கசூடன் கவச குண்டலத்துடன் பிறந்தவன். தன்னை அண்டியவர்களுக்கு இல்லை என்று சொல்லாத உயர்ந்த குணமுடையவனாகத் திகழ்ந்தான்.
தான் பெற்ற வரத்தை மறந்துபோன துளசி, இந்த சங்கசூடனையே திருமணம் செய்து கொண்டாள். வழக்கம்போல தேவர்கள், சங்கசூடனை வீழ்த்த பகவானை சரணடைந்தார்கள். சங்கசூடனுக்கும் பகவானுக்கும் யுத்தம் நடந்து கொண்டே இருந்தது.
அது ஒரு முடிவுக்கு வரவில்லை. சங்க சூடனின் மனைவியாகிய துளசி மிகுந்த கற்புக்கரசியாக விளங்கியதால் தான் அவனை அழிக்க முடியவில்லை என்பதை கிருஷ்ணன் புரிந்து கொண்டார். சங்கசூடனைப் போல் உருவெடுத்தாலும் சங்கசூடனது கவசம் இல்லாமல் துளசியை, தான் சங்கசூடன் என்று நம்ப வைக்க முடியாது என்பதால் சங்கசூடனிடம் மாறுவேடத்தில் போய் அவனது கவசத்தைத் தானமாகப் பெற்றார்.
பிறகு சங்கசூடனைப் போல் உருமாறி வெற்றிமாலை அணிந்து துளசி இருக்கும் இடத்திற்கு வந்தார். அவளும் கிருஷ்ணனை தன் கணவர் என்று நினைத்து அவருக்கு பாத பூஜை செய்ய, துளசியின் விரதத்திற்கு பங்கம் ஏற்பட்டது. அதன்பின் சங்கசூடன் யுத்தத்தில் கொல்லப்பட்டான்.
நடந்ததை அறிந்த துளசி, ``பகவானாக இருந்துகொண்டு நீ சாதாரண மனிதரைப் போல் நடந்து கொண்டதால் உன் உள்ளம் கல்லாய்ப் போனதுபோல் நீரும் கல்லாகப் போவீர்!'' என்று சபித்தாள். உடனே ராதை, ``பகவானையே நீ சபித்ததால், நீயும் இந்த மனித ஜன்மாவை விட்டு ஒரு புல்லாய், செடியாய் போகக்கடவாய்'' என்று சபித்தாள்.
அப்போது அங்கு வந்த நாரதர் ராதையை சமாதானம் செய்து, பகவான் பத்தினி சாபத்தால் கண்டகி நதியில் கல்லாய் இருப்பார். வஜ்ர கிரீடம் என்ற பூச்சி அந்தக் கல்லைத் துளைத்து பலவிதமான வடிவங்களை உண்டாக்கும். அந்தக் கல் வடிவங்கள் சாளக்கிராமம் என்று அழைக்கப்படும்.

மேலும் அவை இரண்ய கர்ப்பம், வாமனம், சீதாராமம், சுதர்சனம், நரசிம்மம், வராகம் என்று பல விதங்களாகவும் அழைக்கப்படும். இப்பிறவியில் தன் வரத்தை மறந்துபோன துளசி, அவளுடைய மறுஜென்மத்தில் கிருஷ்ணனை சேருவாள்'' என்றார்.
செடியாய்ப் பிறந்த துளசியை யார் சாளக்கிராமத்தோடு (கிருஷ்ணனோடு) சேர்த்து பூஜிக்கிறார்களோ அவர்களுக்கு முக்தி நிச்சயம். துளசியை வழிபடுபவர்கள் தீர்க்க சுமங்கலி யாக நீண்ட காலம் வாழ்வார்கள். பகவானே இன்னுமொரு சமயத்தில் துளசியின் பெருமையை மற்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று நாடக மாடினார்.
ஒருசமயம் சத்தியபாமா, ``கிருஷ்ணன் தன்னைவிட்டுப் பிரியாமல் இருக்க என்ன செய்யலாம்?'' என்று நாரதரிடம் கேட்டார். அதற்கு நாரதர் ``நீ யாருக்காவது கிருஷ்ணனை தானமாகக் கொடுத்துவிடு. அதன்பின் நீ திரும்பி அவர்களுக்கு பொருள் கொடுத்து வாங்கிக்கொள்'' என்றார்.
சத்தியபாமாவும், ``உத்தமரான உமக்கே கிருஷ்ணரை தானமாகத்தந்தோம்'' என்று கூறி நாரதருக்கே கிருஷ்ணரை தானமாகக் கொடுத்தாள். அதன்பின் நாரதர் கிருஷ்ணருக்குப் பதிலாக அவரது எடைக்கு எடை நவரத்தினங்களையும் தங்கத்தையும் தனக்குக் கொடுக்கும்படி கேட்டார்.
தராசில் எவ்வளவு செல்வங்களை வைத்தபோதும் கிருஷ்ணன் இருந்த தட்டுதான் இறங்கி இருந்தது. அங்கு வந்த ருக்மிணி தேவி, `இதற்கு என்ன செய்வது?' என்று நாரதரிடம் வருத்தத்துடன் கேட்டாள். விலைமதிப்பில்லாத பொருளை இரண்டாவது தட்டில் வைத்தால் கிருஷ்ணர் இருக்கும் தட்டு சமநிலைக்கு வரும்'' என்றார்.
ருக்மிணிதேவியும் கிருஷ்ணார்ப்பணம் என்று துளசி தளத்தைக் கொண்டு வந்து இரண்டாவது தட்டில் வைத்தாள். தராசின் இரண்டு தட்டுக்களும் நேராயின. துளசியின் மகிமை அனைவருக்கும் புரிந்தது. வீட்டில் துளசி மாடம் வைத்து துளசியை பூஜிப்பது விசேஷம்.
செவ்வாய், வெள்ளி விரதமிருந்து விசேஷமாக பூஜிக்கலாம். துளசி இலையை நகங்களால் கிள்ளக்கூடாது. அமாவாசை, பவுர்ணமி, துவாதசி, ஞாயிற்றுக்கிழமை, கிரகண காலங்கள், மதியம் மற்றும் மாலைப்பொழுது, இரவு போன்ற காலங்களில் துளசி இலையைப் பறிப்பது கூடாது.
சுமங்கலிப் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் துளசி பறிப்பதைத் தவிர்க்க வேண்டும். துளசிச் செடி துஷ்ட சக்திகளை வீட்டினுள் அனுமதிக்காது. துளசியைப் பூஜிப்பவர் வீட்டில் மகாலட்சுமி நித்யவாசம் செய்வாள்.
சூரிய தோஷம் உடையவர்கள், அதற்குரிய பரிகாரம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சூரிய தோஷம் உடையவர்கள், அதற்குரிய பரிகாரம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்பு பூவும் நீரும் கைகளில் ஏந்தி, சூரிய பகவானே எனது சூரிய தோஷத்தை போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும்.
16,36, 108 தடவைகள் இதனை செய்யலாம். கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரை பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமை தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு, சிவப்பு பூ மாலை அணியலாம். சிவப்பு பூவால் அர்ச்சனை செய்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத் தரும். வீட்டியே சர்க்கரைப்பொங்கல் வைத்து அதனை சூரியனுக்கு அர்ப்பணித்து வணங்கும் முறையும் நல்லது.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் விரதமிருந்து அனுமன் கோவிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45-க்குள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள்.
பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள்.
ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.
வசதி இருப்பவர்கள், மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது, மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.
வருடத்திற்கு ஒரு முறை அனுமன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து விட்டு கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள்.
ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் விரதத்தை தொடங்கி ஒரு வருடம் கடைபிடித்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.
1. வைகாசி வளர்பிறை:
முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.
2. செவ்வாய் விரதம்:
ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.
3. சதுர்த்தி விரதம்:
பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும்.
4. குமாரசஷ்டி விரதம்:
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இழைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு.
5. தூர்வா கணபதி விரதம்:
கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும்.
6. சித்தி விநாயக விரதம்:
புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர்.
7. தூர்வாஷ்டமி விரதம்:
புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும்.
8. விநாயக நவராத்திரி:
ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி.
9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்:
ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது.
10. செவ்வாய் பிள்ளையார் விரதம்:
ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொது இடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர்.
11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை:
பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன.
பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. இந்த விரதம் உடன் பிறந்தவர்களுக்காக கடைபிடிக்கப்படுகிறது.
பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கும் உகந்த விரதம் ஒன்று உண்டு. இந்த விரதம் குழந்தைகளுக்காகவும், உடன் பிறந்தவர்களுக்கானவும் கடைபிடிக்கப்படுகிறது.
ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர்.
கருட பஞ்சமியன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப்படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவையும் அஷ்ட நாகங்களே. கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.
இப்போதும் கருட பஞ்சமி அன்று பெண்கள் தங்கள் உடன் பிறந்தவர்கள் முதுகில் அட்சதை இட்டு குத்தி, அவர்கள் தரும் சீரைப் பெற்றுக்கொள்கிறார்கள். கருட பஞ்சமி தன் உடன் பிறந்தவர்கள் சிறப்புடன் வாழ பெண்கள் கொள்ளும் நோன்பு.
நாக சதுர்த்தி தன் குழந்தைகள் நன்றாக இருக்க அக்குழந்தைகளின் தாய் நோன்பு செய்து வேண்டிக்கொள்ளும் நாள். இந்த நாளில் தாய்மார்கள் உபவாசம் இருக்கவேண்டுமென்பது ஐதீகம். நாகசதுர்த்தி அன்று செய்யப்படும் நாகபூஜை குழந்தைகளின் நல்வாழ்விற்கானது.
தை அமாவாசையில் விரதமிருந்து முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.
பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்வது விசேஷம். அனைத்து அமாவாசை தினங்களும் சிறப்பானவை என்றாலும், ஆடி மற்றும் தை அமாவாசை தினங்கள் நீத்தார் கடன் தீர்க்கும் முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. தங்களின் முன்னோர் இறந்த திதி தெரியாதவர்கள், இதற்கு முன்பு முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்திருக்காதவர்கள் என அனைவரும் மேற்கண்ட இரண்டு நாட்களில் ஏதாவது ஒன்றில் பித்ருக்களுக்கான கடன்களை செய்து கொள்ளலாம்.
நீர் நிலை உள்ள பகுதிகளில் தான் மூதாதை யர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடன்களைச் செய்வார்கள் என்பதால், திருப்புல்லாணி, ராமேஸ்வரம், கோடியக்கரை, பூம்புகார், திருவெண்காடு, திருச்சி அம்மா மண்டபம், திருச்செந்தூர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பவானி கூடுதுறை போன்ற தலங்களில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். தை அமாவாசை நாட்களில் தங்கள் சந்ததியினர் செய்யும் பித்ரு கடன்களை ஏற்றுக்கொள்வதற்காக, முன்னோர்கள் அனைவரும் பூவுலகிற்கு வருவதாக ஐதீகம்.
வடநாட்டில் காசி, பத்ரிநாத், கயா, கங்கைக்கரை போன்ற பகுதிகளில் பித்ரு பூஜை செய்யப்படுவது வழக்கம். முன்னோர்களுக்கு திதி கொடுப்பது என்பது, ஒவ்வொருவரின் கடமையாகும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும். இல்லத்தில் தடைபட்ட சுபகாரியங்கள் நடைபெறும். நீண்டநாளாக வருத்தி வந்த நோய் அகலும். மனக்கலக்கம் விலகும், மனதில் மகிழ்ச்சி பொங்கும்.
தை அமாவாசையில் அதிகாலை எழுந்து நீராடி விட்டு, சிவாலய தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம், அன்னதானம் செய்தால் மிகவும் நன்மை அளிக்கும். அமாவாசை நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் அவருடைய அருளையும் பெறலாம்.
பித்ரு கடன் செய்வதில், தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இங்குள்ள ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனை அமாவாசை அன்று அக்னி தீர்த்தத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். அங்கு தங்களின் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யும் மக்கள், இந்த இறைவனையும், இறைவியையும் வழிபட்டு அவர்களின் அருளாசியையும் பெறலாம்.
இதே போல் வேதாரண்யத்தில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடுவதும் சிறப்பானதாகும். தை அமாவாசை தினங்களில், மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடுவது கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடுவதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. இங்கு நீராடுபவர்கள், தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, அவர்களின் முன்னோரது பாவங்களையும் நீக்கிக்கொள்ள இயலும் என்கிறார்கள். மேலும் பல வருடம் யோகம், தானம், தவம் செய்த பலன் கிடைக்கும்.
வேதாரண்யம் ஆலயத்திற்கு எதிரே உள்ள கடல் ‘ஆதிசேஷ தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒரு முறை நீராடுவது ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நூறு தடவை நீராடுவதற்குச் சமம் என்கிறார்கள். தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் இங்கு வந்து நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.
தூய மனதுடன் சூல விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு எதிரிகள் பயம் விலகும். கொடிய நோய் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல மங்கலங்களும் உண்டாகும்.
16-1-2018 சூல விரதம்
சிவபெருமான் தன்னுடைய கையில் ஏந்தியிருக்கும் திரிசூலம், மூன்று முனைகள் கொண்டது. அவை மூன்றும் சத்வ, ரஜஸ், தாமச குணங்களை குறிக்கின்றன. சிவபெருமான் இந்த மூன்று குணங்களையும் கடந்த, நிர்குண பிரம்மம் என்பதையே இந்த மூவிதழ் சூலம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. பக்தர்களின் துன்பங்களை போக்குவதற்காக அம்மன் கரத்தில் இருப்பதும் திரிசூலம் தான். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று தீய செயல்களையும் ஒழிக்க ஈசன் கரத்திலும், அம்மன் கரத்திலும் தவழ்கிறது இந்த சூலக்குழந்தை.
இத்தகைய சிறப்பு பெற்ற சூலத்திற்கு, தை மாதம் அமாவாசை அன்று ‘சூல விரதம்’ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலையில் எழுந்து நீராடி பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி திருநீறு அணிய வேண்டும். பின்னர் மனத் தூய்மையுடன் திரிசூலத்தை ஏந்தியிருக்கும் ஈஸ்வரனை நினைத்தபடி பார்வதியுடன் இருக்கும் ஈசனின் மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்து, நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். பின்னர் சிவாலயத்திற்குச் சென்று சிவலிங்கத்தை தரிசிப்பதுடன், ஈசனின் அடியவர்களுக்கு தட்சணை அளித்து, அவர்களுடன் இணைந்து ஒரு வேளை உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும்.
செல்வம் சேரும். இம்மையில் மட்டுமல்லாது, மறுமையிலும் சுகமான இறைவனின் திருப்பாதங்களை அடையும் வாய்ப்பு கிடைக்கும்.
மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு இந்த விரதத்தைக் கடைப்பிடித்து தான், காலநேமி என்ற கொடிய அரக்கனை அழித்தார் என்கிறது புராணங்கள். ஒரு முறை மகா விஷ்ணுவுக்கு ஏற்பட்ட தலைவலியும் கூட, இந்த விரதத்தை அனுஷ்டித்த காரணத்தால் விலகியது. பிரம்மதேவரும் இந்த விரதத்தை மேற்கொண்டு, தனக்கு ஏற்பட்ட வயிற்றுவலியை தீர்த்துக் கொண்டார். பரசுராமர், இந்த விரதத்தை மேற்கொண்டுதான், ஆயிரம் கரங்களைக் கொண்ட கார்த்தவீரியார்ஜூனனை வெற்றி கொண்டார்.
திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் சூல விரதம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தை அமாவாசை தினமும் இணைந்து வருவதால், கொண்டாட்டத்தின் அளவு கூடுதலாகவே இருக்கும். அன்றைய தினம் நெல்லையப்பர் ஆலயத்தில் லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. காணும் இடமெல்லாம் ஒளிச்சுடர்களாகவே கண்களுக்குத் தெரியும் வகையில் கோவிலில் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும்.
தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலத்தில் இருக்கிறது அலங்கார வல்லி உடனுறை கிருத்திவாசேஸ்வரர் கோவில். இங்கு தை அமாவாசை அன்று சூல விரத வழிபாடு விமரிசையாக நடைபெறும். இந்த ஆலயம் தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றும் பெற்ற சிறப்பு மிக்க ஆலயமாகும்.
அஸ்திரதேவர் (சூல தேவர்), திருவிழா காலங்களிலும், தீர்த்த வாரியிலும், தான் முதன்மையாக விளங்க வேண்டும் என்ற வரத்தை இறைவனிடம் பெற்ற தலம் இதுவாகும். சப்த மங்கையரில் சூலமங்கை வழிபட்ட ஆலயம் இது. ஆலயத்தின் வெளிவாசலில் சூலம் தலை மீது ஏந்தியவாறு சூல தேவர் உள்ளார். அஸ்திர தேவரால் வழிபாடு செய்யப்பட்ட சிறப்பு மிக்க இத்தலத்தில் தை அமாவாசையன்று, அதாவது சூல விரதத்தன்று விரதம் அனுஷ்டித்தல், வழிபாடு செய்தல், திருக்கோவிலை சுத்தம் செய்து கோலமிடுதல், உழவார திருப்பணிகள் செய்தல், திருமுறைகள் பாடுதல், அன்னதானம் வழங்குதல், தான தர்மங்கள் செய்தல், திருக்கோவில் நித்திய பூஜைகள் தடைபடாமல் இருக்க உதவுதல், திருக்கோவில் பணியாளர்கள், சிவாச்சாரியார்களுக்கு தங்களால் இயன்ற உதவி போன்றவற்றை செய்து வந்தால், உலகத்தில் யாரும் செய்திராத தவப்பயனும், ஒப்பற்றயாகங்கள் செய்த பலனும் இந்த பிறவியிலே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
கும்பகோணம் - தஞ்சாவூர் வழித்தடத்தில் அய்யம்பேட்டை மாற்றுப் பாதையில் வந்து ரெயில்வே நிலைய சாலையில் திரும்பி சென்றால், மிக அருகில் உள்ளது சூலமங்கலம் என்ற திருத்தலம். சூலமங்கை என்னும் இக்கோவிலின் திருப்பெயரே, இவ்வூரின் பெயராகவும் வழங்கலாயிற்று.
பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழா என்றே கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு, வழிபாடு செய்வார்கள்.
பொங்கல் திருநாளான தை மாதத்தின் முதல் நாளில்தான், சூரியன் மகர ராசிக்குள் பிரவேசிப்பார். இதனால்தான் பொங்கல் திருநாளை, ‘மகரசங்கராந்தி’ என்றும் அழைப்பதுண்டு. மார்கழி மாதம் வரை தெற்கு திசையில் பயணித்து வந்த சூரியன், தை மாதம் முதல் வடக்கு திசையை நோக்கி நகர்வார். இந்த காலத்தை ‘உத்திராயண புண்ணிய காலம்’ என்பார்கள். சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலமாக உத்திராயண காலம் உள்ளது. இது தேவர்களின் பகல் பொழுதாகும்.
பொங்கலிடுவதிலும் சில விரத விதிமுறைகள், வரைமுறைகள் இருக்கின்றன. பொங்கல் பண்டிகையின் போது பெண்கள் சூரியன் உதிப்பதற்கு 5 நாழிகைக்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு, வீட்டு முற்றத்தில் நீர் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டின் முற்றத்தில் ஒரு பகுதியை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு, காவி பூச வேண்டும்.
அரக்கு நிறம் துர்க்கா தேவிக்குரியது. துன்பங்கள் விலகி மங்கல வாழ்வும், இன்பமும் நிலைக்க காவி பூசப்படுகிறது. அந்த பகுதியை மாவிலை, வாழை, கரும்பு மற்றும் மலர்களால் அலங்கரித்து, பிள்ளையாரை பிடித்து வைக்க வேண்டும். பின்னர் குத்து விளக்கேற்றி, பூரண கும்பம் வைத்து வெற்றிலை, பாக்கு, தேங்காய் முதலிய மங்கல பொருட்களையும் படைக்க வேண்டும்.

விநாயகரை முதலில் மனதில் நினைத்து, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு புதுப்பானையை எடுத்து அதன் வாய்ப்புறத்தில் மஞ்சள் இலை, மாவிலை கட்ட வேண்டும். பானையின் மேல்புறத்தில் திருநீறை குழைத்து, 3 இடங்களில் பூசி, சந்தனம், குங்குமத்தால் திலகமிடவேண்டும்.
பானைக்குள் பசும்பாலும், நீரும் விட்டு நிரப்பி தூபதீபம் காட்டி, கற்பூரதீபத்தினால் அடுப்பில் நெருப்பை உண்டாக்கி பற்ற வைக்க வேண்டும். பின்னர் கணவரும், மனைவியும் சூரியனை வணங்கி, இஷ்டதெய்வங்களை பிரார்த்தனை செய்து பானையை பக்குவமாக, தம் கைகளால் பற்றி பிடித்து தூக்கி அடுப்பில் வைக்க வேண்டும். பானையில் பால் பொங்கி வரும் போது பொங்கலோ, பொங்கல் என்று உரத்தக் குரல் எழுப்பிக்கொண்டே பச்சரிசியை இருகைகளாலும் அள்ளி சூரியபகவானை வணங்கியபடி பானையின் வாய்விளம்பினை 3 முறை சுற்றி பானையில் இடவேண்டும்.
பொங்கிய பொங்கலை 3 தலைவாழை இலையில் இட்டு படைத்து பழங்கள், கரும்பு, முதலியவற்றை கொண்டு அர்ச்சித்து, தூபதீபம் காட்டி சூரியபகவானை வணங்கி வழிபாடு செய்ய வேண்டும். தீபாராதனை காட்டும் போது குலதெய்வத்தையும், மூதாதையர்களையும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
பின்னர் அனைவருக்கும் பொங்கலை அளித்த வேண்டும். மாலையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இறைவனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
இந்து தெய்வங்களுக்கு உகந்த கிழமைகளும் அந்த கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த தினமாகும். எனவே அன்றைய தினம் ஈசனை நினைத்து விரதமிருந்து வழிபடுவது நல்லது.
செவ்வாய்க்கிழமையில் அனுமனை விரதமிருந்து வழிபாடு செய்யலாம். துர்க்கையை வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வந்தால் வாழ்க்கை வளம் பெரும்.
புதன்கிழமை விநாயகப் பெருமானை வழிபட உகந்த நாளாகும். எந்தக் காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் விநாயகரை வணங்கி விட்டுத் தொடங்க வேண்டும்.
வியாழக்கிழமையில் மகாவிஷ்ணுவை விரதமிருந்து வழிபாடு செய்வது சிறப்பானது. விஷ்ணுவையும் லட்சுமிதேவியையும் விரதமிருந்து வணங்க வேண்டும். மேலும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை வழிபடுவதும் நலம் சேர்க்கும்.
வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனையும், அவரது அவதாரங்களையும் விரதமிருந்து வழிபடுவது நன்மை பயக்கும்.
சனி பகவானை, சனிக்கிழமை தோறும் வழிபடுவது நன்மை தரும். மேலும் அன்றைய தினம் பெருமாள், காளி, ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமையில் வழிபடுவதற்கு ஏற்ற தெய்வம் சூரிய பகவான். நவக்கிரங்களில் முதன்மையான சூரியனை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுங்கள்.
இந்து மத பண்டிகை நாட்களில், அடிக்கடி விரதம் இருக்கும் போது, நம்மையும் அறியாமல் நாம் நம் உடம்பை மேம்படுத்திக் கொள்கிறோம்.
இறை வழிபாட்டில் எத்தனையோ ரகசியங்களும், நுணுக்கங்களும் உள்ளன. இறைவ னோடு இரண்டற கலக்க வேண்டும் என்பதையே எல்லா வழிபாடுகளும் நமக்கு உணர்த்துகின்றன. என்றாலும் இம்மையில் எல்லா வித சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இறைவனிடம் வேண்ட தவறுவதில்லை.
இறைவனிடம் எல்லாவற்றையும் உரிமையோடு கேட்ட ஆதிகாலத்து மக்களின் பழக்கம், நாளடைவில் பல்வேறு வடிவங்களாக மாறியது. அதில் ஒன்றுதான் எதுவும் சாப்பிடாமல், பட்டினி இருந்து, உண்ணாவிரதம் மேற்கொள்வது.
ஆரோக்கிய வாழ்க்கைக்கு விரதம் அவசியமானது என்ற அறிவியல் உண்மை உறுதிபடுத்தப்பட்ட பிறகு அது ஆன்மீகத்தில் ஒரு அங்கமாக ஐக்கியமாகி விட்டது. இன்று உண்ணா நோன்பு இருப்பது என்பது உலகில் எல்லா மதத்திலும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.
குறிப்பாக இந்து மதத்தில் விரதம் இருப்பது அதிகமாக உள்ளது. நாள் விரதம், வார விரதம், மாத விரதம் என்று இந்து மதத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் விரதம் உள்ளது.
இந்த விரதங்கள் ஒவ்வொன்றுக்கும் எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பது வரையறுத்து கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக உண்ணாவிரதம் இருந்து இறைவழிபாடு செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.
குறிப்பாக ஆண்களை விட பெண்களே அதிக அளவில் விரதம் இருப்பதை தவறாமல் கடைபிடிக்கிறார்கள். விரதம் இருந்து இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் போது நிச்சயமாக தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்புகிறார்கள்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு வகை விரத வழிபாடு உள்ளது. பெரும்பாலான விரதங்கள் நாள், திதி மற்றும் பண்டிகைகளை பின்பற்றியே வருகின்றன. அந்த நாட்களில் விரதம் இருந்து சாமியை கும்பிடுவதால் பக்தர்களுக்கு திருப்தி உண்டாகிறது.
சரி.... நாம் இருக்கும் விரதம் சரியான விரதம்தானா? இந்த கேள்விக்கு விடை காண முயன்றால் விரதம் பற்றிய சரியான புரிதல் நமக்கு ஏற்படும். யாரெல்லாம் விரதம் இருக்க வேண்டும் என்பது தெளிவாகும்.
எந்தெந்த பண்டிகை நாட்களில் நாம் விரதம் இருக்க வேண்டும் என்பது தெரியவரும். இதன் தொடர்ச்சியாக விரதம் இருக்கும் போது கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் எவை-எவை என்பதும் தெரியும்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் வாரம் ஒரு தடவை உண்ணாவிரதம் இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள். இந்து மத பண்டிகை நாட்களில், அடிக்கடி விரதம் இருக்கும் போது, நம்மையும் அறியாமல் நாம் நம் உடம்பை மேம்படுத்திக் கொள்கிறோம்.
எனவே மிகவும் திட்டமிட்டு உண்ணாவிரதம் இருப்பவர்கள் ஆன்மிக பலம் பெறுவதோடு ஆரோக்கிய பலத்தையும் பெறுகிறார்கள்.
விரதம் இருங்கள்... வினைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
தைமாதம் வரும் அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும்.
தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில், நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம். வீட்டில் தடைபட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். அந்த நாள் 16.1.2018-ல் (செவ்வாய்க்கிழமை) வருகின்றது. தை அமாவாசை வழிபாடு தடைகளைத் தகர்த்தெரியும். அன்றுதான் அபிராமிப்பட்டர் நிலவு வரவழைத்த திருநாள். நடக்காததை நடத்திக் காட்டிய நாள் அது.
மேலும் தைமாதம் வரும் வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும். அம்பிகை ஆலயங்களில் சந்தனக் காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றிபெறும். இறைவனை அலங்கரித்துப் பார்த்தால் இனிய வாழ்க்கை மலரும். உடலை குளிர்ச்சியாக்கும் சந்தனத்தை அம்பிகைக்கு சாற்று வதன் மூலம் உள்ளம் குளிர்ச்சியாகி நமக்கு வேண்டும் வரம் தருவாள் அம்பிகை.






