என் மலர்
முக்கிய விரதங்கள்
சம்பத் கவுரி அன்னையை பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும்.
மனித வாழ்வுக்கு அவசியமானது உணவு, உடை, உறைவிடம். பழங்காலத்தில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் உயர்ந்த செல்வங்களாக போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்பவள் ‘சம்பத் கவுரி’. இந்த அன்னை பசுவுடன் காட்சி அளிப்பாள்.
இந்த அன்னையே பசுவாக உருவெடுத்து வந்து, சிவபூஜை செய்த தலங்களும் உண்டு. இதனால் அவளுக்கு கோமதி, ஆவுடை நாயகி ஆகிய திருப்பெயர்கள் வழங்கப்படுகின்றன. திருச்சிக்கு அருகிலுள்ள துறையூரில் சம்பத் கவுரி உடனாய நந்தீஸ்வரர் கோவில் உள்ளது.
காசி அன்னபூரணியையும் சம்பத் கவுரி என்பார்கள். இந்த அன்னையை பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும்.

ஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். இந்த விரதத்தை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
ஸ்ரீராகவேந்திரருக்கு உகந்த இந்த விரதத்தை ஆரம்பிக்க வியாழக்கிழமை உகந்தநாள் ஆகும். அன்று பூச நட்சத்திரமாக இருந்தால் மிகவும் சிறப்பு. வேறு நட்சத்திரமாக இருந்தாலும் வழிபடலாம். குரு ஹோரை சிறப்பு. ஆறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து நம்பிக்கையுடன் பூஜை செய்ய வேண்டும்.
ஏழாவது வியாழக்கிழமை பூஜையின் விரத முடிவு நாளாகும். அன்று ஒரு அடி உயரத்திற்கு மேல் உள்ள ஐந்து முக குத்து விளக்கு, பூஜைக்கு வேண்டிய வெற்றிலைப் பாக்கு, பழம், மணமிக்க மலர்கள், தூப தீபங்கள் ஆகியவைகள் தேவை. பூஜை செய்யுமிடத்தில் சுத்தம் செய்து கோலமிட்டு பூஜைக்கு என்று வைத்திருக்கும் மணைப் பலகையில் ஸ்ரீராகவேந்திரர் படத்தை வைக்க வேண்டும்.
படத்திற்கு சந்தனம், குங்குமம், துளசி மாலை சாத்தவேண்டும். அதேபோல குத்து விளக்கிற்கும் சந்தனம், குங்குமம் இடவேண்டும். பூஜையின்போது ஸ்ரீராகவேந்திரர் படத்தை நடுவில் வைத்து பூஜிக்க வேண்டும். பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் முதலில் குல தெய்வத்தை வழிபட்டு பின் மஞ்சள் தூளினால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு சந்தனம், குங்குமம், மலர் சூட வேண்டும்.
நிவேத்தியமாக வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் முதலியவைகளை படத்தின் முன்வைத்த பின் பூஜையைத் தொடரலாம். மகான் படத்திற்கு தீப, தூபம் காட்டி தேங்காய் உடைத்தபின் கற்பூர ஆரத்தி எடுத்தும் கையில் துளசி தளங்களை வைத்துக்கொண்டு எழுந்து நின்று
"பூஜ்யாய ஸ்ரீராகவேந்த்ராய சத்ய தர்ம
ரதாயச பஜதாம் கல்பவ்ருக்ஷாய
நமதாம் ஸ்ரீ காம தேநுவே"
என்று சொல்லிக்கொண்டே படத்தையும் விளக்கையும் பதினோரு தடவைகள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு முறையும் சுலோகத்தைச் சொல்ல வேண்டும். கையில் வைத்திருக்கும் துளசி தளத்தை படத்திற்கு அர்ப்பணித்தலும் முழு நம்பிக்கையுடன் கனவில் வந்து தரிசனம் கொடுக்கும்படி பிரார்த்தனை செய்தபின் கீழே சாஸ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
இதுபோல் ஆறு வியாழக்கிழமை வழிபட்ட பின் ஏழாவது வியாழக்கிழமை பழங்களுடன் சர்க்கரைப் பொங்கல் நிவேதனம்செய்யவேண்டும்.இவ்வாறு நாம் பிரார்த்தனைசெய் யும்போது நமது கோரிக்கைகள் அனை த்தும் நிறைவேறும் .குருவின் அருளும் கிட்டும்.

ஒவ்வொரு அமாவாசை அன்றும் விரதம் இருந்து தர்ப்பணமும், தான தர்மமும் செய்து வந்தால் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து நம் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.
மறைந்த முன்னோர்களின் ஆசி நமக்கு என்றென்றும் தேவை என்பது ஐதீகம். அதனால் தான் முன்னோர்களை திருப்தி செய்ய ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்ப்பணமும் அவர்களின் இறந்த தினத்தன்று திதி கொடுப்பதும் செய்து வரப்படுகிறது.
எந்த நிலை வந்தாலும், எந்தச் சூழல் ஏற்பட்டாலும் தர்ப்பண காரியங்களை சிரத்தையுடன் செய்யச் செய்ய... அவை பன்மடங்கு பலனாக நம் பிள்ளைகளுக்குப் போய்ச்சேரும். மாதந்தோறும் அமாவாசை நாளிலும் விரதமிருந்து தர்ப்பணம் செய்து, பித்ருக்களை ஆராதிக்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.
மாத அமாவாசை அன்று முடிந்தால், இயலாதோருக்கு உடையோ உணவோ வழங்கி உதவுங்கள். நீங்கள் செய்யும் காரியத்தால் குளிர்ந்து போய், பித்ருக்கள் பூரணமாக உங்களையும் உங்கள் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!
அமாவாசை அன்று விரதம் இருந்து மறைந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்து இயன்ற வரை மற்றவர்களுக்கு உதவிகளை செய்து வந்தால் நம் முன்னோர்கள் மனம் மகிழ்ந்து நமக்கு வேண்டியதை தருவார்கள்.
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் மாதம்தோறும் வரும் அமாவாசை அன்று விரதம் இருந்து காகத்திற்கு சாதம் வைத்து முன்னோர்களை வழிபாடு செய்யலாம்.

ஸ்ரீ விளம்பி ஆண்டில் ( 2018 - 2019) வரும் கால பைரவருக்கு உகந்த தேய்பிறை அஷ்டமி விரத நாட்கள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அஷ்டமி நாள் - அஷ்டமியின் பெயர் - பூஜை பலன்கள் :
வைகாசி 24 (7-6-2018) வியாழக்கிழமை பகல் : ஆனி 22 (6-7-2018) வெள்ளிக்கிழமை : பகவதாஷ்டமி = கடன் சுமை தீரும். அடியார்களுக்குச் செய்த தீமைகள் நீங்கும்.
ஆடி 19 (4-8-2018) சனிக்கிழமை இரவு : நீலகண்டாஷ்டமி = கல்வியில் மேன்மை ஏற்படும்.
ஆடி 20 (5-8-2018) ஞாயிற்றுக்கிழமை பகல் : சகல துறைகளிலும் வெற்றி ஏற்படும்.
ஆவணி18 (3-9-2018) திங்கட்கிழமை : ஸ்தானு அஷ்டமி = லட்சுமி கடாட்சம் ஏற்படும். விஷ பயம் விலகும்.
புரட்டாசி 16 (2-10-2018) செவ்வாய்க்கிழமை : சம்புகாஷ்டமி = ஆயுள் விருத்தி ஏற்படும். தாய், தந்தையர்க்கு செய்த இன்னலால் ஏற்பட்ட தோஷம் விலகும்.
ஐப்பசி 14 (31-10-2018) புதன்கிழமை : ஈஸ்வராஷ்டமி = சகோதர பகை நீங்கும். கைலாச பதவி கிடைக்கும்.
கார்த்திகை 14 (30-11-2018) வெள்ளிக்கிழமை : ருத்ராஷ்டமி = தனவரவு உண்டாகும்.
காலபைரவாஷ்டமி : கோபத்தால் செய்த பாபங்கள் விலகும்.
மார்கழி 14 (29-12-2018) சனிக்கிழமை : சங்கராஷ்டமி = தொழில் விருத்தி ஏற்படும். தொழில் முறையில் செய்த பாபங்கள் விலகும்.
தை 13 (27-1-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு : தேவதேவாஷ்டமி = மன பயம் விலகும்.
தை 14 (28-1-2019) திங்கட்கிழமை பகல் = உயர் பதவி கிடைக்கும்.
மாசி 14 (26-2-2019) செவ்வாய்க்கிழமை : மகேஷ்வராஷ்டமி = போட்டிகளில் வெற்றி, தொழில் துறையில் புது யுக்தி, முன்னேற்றம் ஏற்படும்.
பங்குனி 14 (28-3-2019) வியாழக்கிழமை : திரியம்பகாஷ்டமி = திருமணத்தடை விலகும். யமபயம் நீங்கி ஆயுள் விருத்தி ஏற்படும்.

தோஷங்களில் அன்ன தோஷம் என்பது ஒரு வகையான தோஷமாகும். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த விரதம் இருந்தால் பலன் கிடைக்கும் என்ற பார்க்கலாம்.
தோஷங்களில் அன்ன தோஷம் என்பது ஒரு வகையான தோஷமாகும். பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் விரட்டியவர்களை, இந்த தோஷம் பாதிக்கும்.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், பசி என்று கேட்கும் பொழுது அவர்களுக்கு உணவளிக்காமல் இருப்பவர்கள், உணவு உட்கொள்ள அமர்ந்தவர்களை சாப்பிடவிடாமல் விரட்டியடித்துக் கோபித்துக்கொண்டவர்கள், கைவசம் உணவு இருந்தும் அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்கள், ஒழுங்காகப் பிண்டம் கொடுக்காதவர்கள், சிறு குழந்தைகளை எதிரில் பார்க்க வைத்துக் கொண்டு தான் மட்டும் சாப்பிடுபவர்கள் ஆகியோரை இந்த அன்ன தோஷம் பாதிக்கும் என்பார்கள்.
அப்படிப்பட்டவர்கள் வீட்டில் எவ்வளவு உழைத்தாலும் செல்வம் நிலைக்காது. அவர்கள் வெள்ளி தோறும் விரதம் இருந்து அன்னபூரணியை வழிபட்டு வருவதோடு, இயன்றவரை அன்னதானங்களும் செய்தால் இல்லத்தில் செல்வ வளம் பெருகும்.

சிவபெருமானை பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அத்தகைய பிரதோஷத்தின் வகைகளை தெரிந்து கொள்வோம்.
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அத்தகைய பிரதோஷத்தின் வகைகளை தெரிந்து கொள்வோம்.
நித்திய பிரதோஷ விரதம் - தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர், நட்சத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள நேரம் நித்திய பிரதோஷமாகும்.
திவ்ய பிரதோஷ விரதம் - பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும்.
தீப பிரதோஷ விரதம் (மகா பிரதோஷம்) - தேய்பிறை சனிக்கிழமைகளில் வரும் மாத பிரதோஷம் மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனப்படும். இது மிகவும் சிறப்பானது.
சப்தரிஷி பிரதோஷ விரதம் - பிரதோஷ காலத்தில் பூஜைகளை முடித்து வானத்தில் சப்த ரிஷி மண்டலம் என்னும் நட்சத்திர கூட்டத்தை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.
ஏகாட்ச்சர பிரதோஷ விரதம் - வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும்.
அர்த்தநாரி பிரதோஷ விரதம் - வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.
திரிகரண பிரதோஷ விரதம் - வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள்.
பிரம்ம பிரதோஷ விரதம் - இந்த பிரதோஷத்தை கடைபிடித்தால் முன்னோர் சாபம், முன் வினை பாவம் விலகிவிடும்.
ஆட்சரப பிரதோஷ விரதம் - வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது ஆட்சரப பிரதோஷம்.
கந்த பிரதோஷ விரதம் - சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.
சட்ஜ பிரபா பிரதோஷ விரதம் - வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைப்பிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.
அஷ்டதிக் பிரதோஷ விரதம் - வருடத்தில் எட்டு மகா பிரதோஷத்தை கடைப்பிடித்தால் அஷ்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.
நவகிரக பிரதோஷ விரதம் - வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷமாகும்.
துத்த பிரதோஷ விரதம் - வருடத்தில் வரும் பத்து மகா பிரதோஷத்தையும் கடைபிடிப்பது துத்த பிரதோஷம் எனப்படும்.

சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதம். இந்த விரதத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது ரத சப்தமி விரதம். சூரிய ஜெயந்தி என்பது இந்த விழாவின் மற்றுமொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை, பவுர்ணமி கழிந்த 7-ம் நாளை ‘சப்தமி திதி’ என்று அழைக்கிறோம்.
உத்திராயண புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான, தை மாத வளர்பிறையை தொடர்ந்து வரும் சப்தமி திதியே ‘ரத சப்தமி’ ஆகும். ரத சப்தமியன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி உண்டாயிற்று என புராணங்கள் கூறுகின்றன. அந்த தினத்தில், சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன.
விரதம் இருக்கும் முறை
இந்த சிறப்பு மிக்க தினத்தில், சூரிய உதயத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்று நீராடலாம். நீராடும் போது, ஏழு எருக்கம் இலை, மஞ்சள் பொடி கலந்த அட்சதையை தலைக்கு மேலே வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.
ஏழு எருக்கம் இலைகளை கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள் பட்டைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீர் ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள், ஏழு எருக்கம் இலைகளுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராட வேண்டும்.
கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது. ரத சப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் செய்ய வேண்டும். ரத சப்தமியன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய, சந்திரரை வரைந்து பவனி வருவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உள்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய துதிகளை சொல்லி வழிபட வேண்டும்.
சர்க்கரைப்பொங்கல், உளுந்து வடை நிவேதனம் செய்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்ற வற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது நல்ல பலனை தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.
ரதசப்தமியன்று தொடங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த நாளில் செய்யப்படும் தர்மம், தானத்திற்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். சூரியன், நாம் வழங்கும் தானத்தை நம் முன்னோர்களிடம் வழங்குகிறார். எவ்வளவு கொடிய பாவங்களும் அதனால் அகன்று விடும்.

அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.
அஜா ஏகாதசியை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார். முன்னொரு காலத்தில், பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் சத்தியம் தவறாது மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத்தோடு விளங்கியது.
விதிவசத்தால், அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகி மயானத்தைக் காக்கும் பணியில் அமர வைத்தது விதி. ஆனால் அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை இழக்காமல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.
பல காலங்கள் கடந்தன. ஒரு நாள் அவர், நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்தனை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலிருந்து மீள வழியே இல்லையா? என்று மிகவும் வருந்தினார். அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார்.
அரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரா !! உனது நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது.
இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், உபவாசத்தை மட்டுமாவது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து கொண்டிரு ... இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் எனக் கூறினார்.
அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.
அஜ ஏகாதசி நாளில் யாரெல்லாம் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.

ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல பூஜை அறையையும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறை தரையை துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மணம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம்.
செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உள்பட சுபாகரியம் நிறைவேறும்.

எந்த கிழமைகளில் எந்த கடவுளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்னவென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபடலாம். பலன்கள்: ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய்கள் அகலும்.
திங்கட்கிழமை
திங்கட்கிழமை ஈசனுக்கு சோமவார விரதம் இருப்பது நல்லது. கார்த்திகை மாதத்ட்தில் வரும் திங்கட் கிழமைகளில் சோமவாரத்தில் விரதம் இருந்தால் மிகுந்த நற்பலன்களை பெறலாம். பலன்கள்: திங்கட்கிழமை விரதம் இருந்தால் கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
செவ்வாய்க்கிழமை
மௌன அங்காரக விரதம் இருக்க அருமையான நாள். செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கும். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று கந்தக் கடவுளை வழிபடுவது நல்லது. பலன்கள்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் கடன் பிரச்சனை தீரும். மேலும் தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்கும்.
புதன்கிழமை
புதன்கிழமை விரதம் இருந்தால் கல்வி, புகழ், செல்வம் கிடைக்கும். இந்த நாளில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். புதன்கிழமை நரசிம்மர் கோவிலுக்கு சென்று பானகப் பிரசாதம் வழங்கி வழிபடுவது சிறப்பு. பலன்கள்: புதன்கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.
வியாழக்கிழமை
வியாழக்கிழமை நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்குவது சிறப்பு. பலன்கள்: குருவின் அருளால் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் கிட்டும். சகல காரியங்களும் கைகூடும்.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். சிவாலயத்தில் உள்ள உமாதேவிக்கு பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் செய்து வழிபடலாம். பலன்கள்: வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.
சனிக்கிழமை
சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுவது சிறப்பாகும். மேலும் திருமாலுக்கு உகந்த நாள். சனிக்கிழமையில் காக்கைக்கு அன்னமிடுவது நல்லது. பலன்கள்: சனிக்கிழமையில் விரதம் இருந்தால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம்.

செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.
கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.
முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. வார விரதம்; நட்சத்திர விரதம்; திதி விரதம், வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளில் அனுஷ்டிப்பது, நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது, திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பது. நவக்கிரகங்களில் செவ்வாயோடு நேரடி சம்பந்தம் உடையவன் முருகன்.
எனவே செவ்வாய்க்கிழமை விரதம் முருகனுக்கு மிகவும் உகந்ததாகிறது. செவ்வாய்க் கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ளவேண்டும்.
கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமைகள் விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும் என்பது உறுதி. இதுதவிர ஆடி செவ்வாயில் மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது. இந்த நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.

விரதங்கள் இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை இறைவழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
விரதங்கள் இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து விதமான விரதங்களும் பலன் தரக்கூடியவையே. விரதங்கள் இருப்பதால் மனமும், உடலும் சுத்தம் அடைகிறது. ஆனாலும் சில முக்கிய விரதங்கள் அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
அவை இறை வழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை நவராத்திரி விரதம், வரலட்சுமி விரதம், கேதாரகவுரி விரதம், பாவை நோன்பு, விநாயகர் சதுர்த்தி விரதம், கந்தசஷ்டி விரதம், வைகுண்ட ஏகாதசி விரதம், சிவராத்திரி விரதம், காரடையான் நோன்பு ஆகியன ஆகும்.
விரதங்கள் இருப்பதற்கு பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. விரதம் இருக்கும் நாள் முழுவதும் உபவாசம் இருத்தல், ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு உபவாசம் இருத்தல், நீர் ஆகாரம் மட்டும் குடித்து உபவாசம் இருத்தல் போன்ற அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடவுளிடம் வைக்கப்படும் நியாயமாக கோரிக்கைகளுக்காக இருக்கும் அனைத்து விதமான விரதங்களுக்கும் பலன் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.