search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hanuman vratham"

    உடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை விரதம் இருந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம்.
    அனுமனை மனத்தில் நினைப்பவர்கள் இம்மையில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கிய பலத்துடன் வாழ்வதுடன் மறுமையில் ராமன் அருளால் முக்தியும் அடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    உடல் வலிமைக்கு உருவமாக அனுமன் கருதப்படுகிறார். உடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை விரதம் இருந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். மக்கட்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றவற்றை பெறலாம்.

    நாமக்கல் ஆஞ்சநேயரை விரதம் இருந்து வழிபட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடையும். குடும்ப கஷ்டங்கள் தீரும். நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் மேன்மை ஏற்படும். நாமக்கல், கரூர், ஈரோடு, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அமாவாசை நாட்களில் ஆஞ்சநேயருக்கு பால், தயிர் அபிசேகம் செய்கிறார்கள்.

    இதனால் தங்களது கால்நடைகளுக்கு நோய் வராமல் ஆஞ்சநேயர் காப்பதாக விவசாயிகளிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. முக்கிய வேண்டுதல் வைத்து நிறைவேறியவர்கள் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடுகிறார்கள். நீண்ட காலமாக திருமணம் தடைபட்டவர்கள் திருமணம் நடைபெறவும், இளம்பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் நடந்தால் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாற்றி வழிபடுகிறார்கள்.

    ஆஞ்சநேயருக்கு கோவில் கட்டிய பிறகுதான் நாமக்கல் மாவட்டம் வளர்ச்சி பெற தொடங்கியதாக கல்வி நிறுவன அதிபர் ஒருவர் தெரிவித்தார். பிளஸ்2 - பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மாணவ-மாணவிகள் சாதனை படைக்கவும், முட்டை, கோழி, லாரி தொழில், ரிக் வண்டி தொழில், லாரி பாடி கட்டும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாமக்கல் சாதனை படைக்க ஆஞ்சநேயரும் உறுதுணையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
    அனுமன் அவதரித்தது மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் என்பதால், அன்றைய தினம் விரதம் இருந்து அனுமனுக்கு விருப்பமான ராம நாமத்தை ஜெபித்து வழிபடுவது சிறப்பு தரும்.
    இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடுகள் இருப்பினும் சிவன், விஷ்ணு, அம்பாள் வரிசையில் பல ஆலயங்களைக் கொண்டவராக ஆஞ்சநேயர் திகழ்கிறார். மற்ற எந்த தெய்வங்களுக்கும் இல்லாத சிறப்பு அனுமனுக்கு உண்டு. இறைவனின் பக்தனான ஒருவரையும், அதிகமான மக்கள் பக்தியுடன் வழிபடுகிறார்கள், ஆலயங்கள் அமைத்திருக்கிறார்கள், அதுவும் ராமரின் அருளைப் பெற இவரையே வணங்க வேண்டும் என்பது போன்றவையே இவரை தனிச் சிறப்புடன் காட்டுகிறது.

    அனுமனின் அவதாரம், மும்மூர்த்திகளில் முதன்மையானவரான சிவபெருமானுடனும், பல அவதாரங்கள் எடுத்த விஷ்ணுவுடனும் சம்பந்தப்பட்டுள்ளது.

    அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானின் விஸ்வரூப தரிசனம் நிகழ்ந்த அதே வேளையில், மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரமும் நிகழ்ந்தது. பூமிக்கடியில் அசுரர்களால் மறைத்து வைக்கப்பட்ட நான்கு வேதங்களையும் மீட்கும் பொருட்டு நிகழ்ந்த இந்த கூர்ம அவதாரத்தில் பூமியைத் தோண்டியபடி வேகமாக செல்ல, திடீரென்று தட்டுப்பட்ட சிவபெருமானின் பாதங்களைத் தொட்டு மீண்டது விஷ்ணுவின் கரங்கள்.

    உடனே சிவபெருமான் தன் விஸ்வரூபத்தைச் சுருக்கி, “நாம் இருவருமே தெய்வ நிலையில் இருக்கிறோம். அப்படியிருக்க உன் கரங்கள் என் பாதங்களை ஸ்பரிசம் செய்வதா? அறியாமல் செய்தது என்றாலும், முறையாதனல்ல. இதற்கு நானும் ஏதேனும் உனக்கு உபகாரமாக இருக்க வழி செய்ய வேண்டும்” என்றார்.

    சிவபெருமானின் கோரிக்கையை தட்ட முடியாத நாராயணன், “என் அவதாரங்களுள் மிக பெருமை வாய்ந்த ராம அவதாரத்தின் போது, எதிரிகளை வெல்ல அசகாய பலம் படைத்த வீரனாய், எனக்கு தாங்கள் உதவ வேண்டும் ஈஸ்வரனே” என்றார்.

    அந்த ஒப்பந்தத்தின் படிதான், சிவனை நினைத்து காற்றை மட்டும் சுவாசித்து கடுந்தவம் புரிந்த அஞ்சனைக்கு, வாயுவின் அருளால் சிவசக்தி அம்சம் கொண்ட கனி கிடைத்தது. அதை உண்ட அஞ்சனை சிவனின் சக்தியைக் கொண்ட பராக்ரமசாலியான ஆஞ்சநேயர் பிறந்தார் என்கிறது புராணம்.

    அனுமன் அவதரித்தது மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் என்பதால், அந்த நாள் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து அனுமனுக்கு விருப்பமான ராம நாமத்தை ஜெபித்து விட்டு, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது சிறப்பு தரும்.

    ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
    வாயு புத்ராய தீமஹி
    தந்தோ ஹனுமன் பிரசோதயாத்’

    இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து அனுமனை வழிபடுபவர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுவார்கள்.
    ஆஞ்சநேயருக்கு தொடர்ந்து செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
    ஆஞ்சநேயரை வீட்டில் பூஜை செய்யும் பக்தர்கள் தனியாக ஒரு பூஜை அறையை அமைத்துக் கொள்ள வேண்டும். அங்கே ஆஞ்சநேயரின் படத்தையோ, சிலையையோ வைக்க வேண்டும். பூஜை காலத்தில் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

    பூஜை அறையினுள் துளசி இலைகள் போட்டு தீர்த்தம் வைத்திருக்க வேண்டும். சுவாமிக்கு பிடித்தமான நிவேதப் பொருட்களையும் வைத்திருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் உடல் மட்டுமின்றி உள்ளமும் சுத்தமாக இருக்க வேண்டும். அதுபோல பூஜை அறையையும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறை தரையை துணியால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

    பூஜை அறையில் எப்போதும் ஆராதனை புகை மணம் வீச வேண்டும். இவையெல்லாம் நாம் ஆஞ்சநேயருடன் மனம் ஒன்ற உதவும். வீட்டில் ஆஞ்சநேயர் படத்தின் முன் அமர்ந்து அனுமன் சாலீசா துதியைப் பாராயணம் செய்யலாம்.

    செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் தொடர்ந்து பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும். தொடர்ந்து ஒரு மண்டலம் பாராயணம் செய்தால் தடைப்பட்ட திருமணம் உள்பட சுபாகரியம் நிறைவேறும்.
    ×