என் மலர்
தோஷ பரிகாரங்கள்
உடல் நலக்குறைவு உள்ளவர்கள், அதனை வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் தடவி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நாகர்கோவிலில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கை, கால், தலை போன்ற உடல் உறுப்புகளை மரத்திலும், வெள்ளியிலும் செய்து விற்பனை செய்கிறார்கள்.
உடல் நலக்குறைவு உள்ளவர்கள், அதனை வாங்கி பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் தடவி கோவில் மண்டபத்தின் மேல் போட்டால் உடல்நிலை சரியாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பச்சரிசி மாவு, வெல்லம் கொண்டு மண்டையப்பம் செய்து அம்மனுக்கு நைவேத்தியம் படைத்தால் தலைவலி குணமாகும்.
பகவதி அம்மன் கோவிலின் தல விருட்சம் வேம்பு ஆகும். 41 நாட்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுபவர்களுக்கு தீராத நோய்களும் தீர்ந்து விடும். சித்தபிரமை பிடித்தவர்களும் குணமடையும் அதிசயம் இங்கு நடைபெறுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், தோண்டியும் கயிறும் கோவில் தீர்த்த கிணற்றிற்கு நேர்த்திக்கடனாக செலுத்தி குணமடைகிறார்கள்.
மேலும் அம்மனுக்கு 27 நெய் தீபம் ஏற்றி வெள்ளியில் கை, கால் உருவங்களை நேர்த்திக்கடனாக செலுத்தி, செவ்வரளி உதிரிப்பூக்கள், 9 உதிரி எலுமிச்சைப் பழங்கள் அம்மனுக்கு செலுத்தி, 9 முறை கருவறையை வலம் வந்தால் சகல உடல் உபாதைகள் மற்றும் நோய்களில் இருந்தும் விடுபடலாம். இந்த நேர்த்திக்கடனை தொடர்ந்து மூன்று செவ்வாய்க்கிழமைகள் செய்ய வேண்டும்.

சிலருக்கு திருமண தோஷம் இருக்கும் பட்சத்தில் திருமணம் நடக்க கால தாமதம் ஆகிறது. இந்த திருமண தோஷத்திற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் “கடகம், சிம்மம், கன்னி” போன்ற சுக்கிரன் “பகை மற்றும் நீச்சம்” பெறும் ராசிகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு சுக்கிரனால் “திருமண தோஷம்” ஏற்படுகிறது. இன்னும் சிலருக்கு பித்ரு சாபங்களினாலும் திருமண தோஷம் ஏற்படுகிறது. இந்த திருமணம் தோஷம் நீங்கி சிறந்த வரன் மற்றும் வது உடன் திருமணம் நடக்க கீழ்கண்ட பரிகாரங்களை செய்யலாம்.
திருமண தோஷம் கொண்ட பெண்கள் தங்கள் ரத்த வழி உறவுகளில், பூப்படையாத 10 -12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையை உங்கள் வீட்டிற்கு ஒரு வியாழக்கிழமை அன்று வரவழைத்து சைவ உணவு விருந்து அளிக்க வேண்டும். விருந்து உண்டு முடித்ததும் சந்தனம், குங்குமம், மஞ்சள் நிற ஜாக்கெட் துணி, ஐந்து மஞ்சள் கிழங்கு, மூன்று முழம் மல்லி பூ, கண்ணாடி வளையல்கள், அதனுடன் நீங்கள் விரும்பும் தொகையை காணிக்கையாக ஒரு புது தட்டில் வைத்து, அப்பெண் குழந்தையை கிழக்கு திசை பார்த்தவாறு நிற்கச் சொல்லி கொடுக்க வேண்டும்(தட்டை திருப்பி வாங்கி கொள்ள கூடாது). இவ்வாறு செய்த மூன்று மாத காலத்திற்குள் திருமண தோஷம் விலகி திருமண முயற்சிகள் வெற்றி பெரும்.
திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் அல்லது சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி, வழிபட்டு வர வேண்டும். இது போன்று 27 வெள்ளிக்கிழமைகள் செய்து வர திருமண தோஷம் நீங்கி விரைவிலேயே நல்ல வரன் மற்றும் வது அமையும்.

வருடம் ஒரு முறை என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கி விட்டு தகப்பன் வழி அத்தனை ரத்த சம்பந்தங்களும் ஒன்று சேர்ந்து குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். கஷ்டங்களும் கவலைகளும் பறந்து போகும்.
ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வ புண்ய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குல தெய்வம் நிற்கும்.
உங்களுக்கு 365 நாட்கள் என்பது உங்களின் குல தேவதைகளுக்கு ஒரு நாள். அவர்கள் உங்களிடம் கேட்பது லட்ச லட்சமாய் பணமில்லை. உங்கள் கையால் ஒரு சாதாரண அபிஷேகம். ஒரு வஸ்த்ரம். ஒரு கவளம் அரிசி வெல்லம் கலந்த உணவு.
வருடம் ஒரு முறை என்ன வேலை இருந்தாலும் ஒதுக்கி விட்டு தகப்பன் வழி அத்துனை ரத்த சம்பந்தங்களும் ஒன்று சேர்ந்து வழிபாடு செய்யுங்கள். கஷ்டங்களும் கவலைகளும் பறந்து போகும்.
கோள்களால் ஏற்படும் தோஷங்களெல்லாம் குலதெய்வத்தால் குறைவில்லாமல் தீர்ந்து போகும். கோள் செய்யாததை குலதெய்வம் செய்ய வைக்கும்.

குடும்பத்தில் - தாயோ, தந்தையோ இறந்து விட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைந்து அந்த குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யங்களும் தங்கு தடையின்றி கிடைக்க வழி ஏற்படுகிறது.
கோ தானம் செய்வது சிறப்பான பலனைத்தரும். ஆச்சார, அனுஷ்டானங்களில் ஈடுபாடுள்ள, சற்று வசதியுள்ள குடும்பத்தில் இது நடைமுறையில் உள்ளது. அவர்கள் குடும்பத்தில் - தாயோ, தந்தையோ இறந்து விட்டால் அவர்கள் ஞாபகார்த்தமாக ஆரோக்கியமான பசு ஒன்றை வாங்கி ஒரு கோசாலைக்கு தானம் அளிக்கிறார்கள்.
இறந்துபோன அவர்கள் ஆத்மா சாந்தி அடைய, அந்த பசு கறக்கும் பாலில் - அதிகாலையில் - அந்த கோசாலை அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கோ, பெருமாள் ஆலயத்திற்க்கோ அந்த பாலில் இருந்து அபிசேகம் செய்கிறார்கள். அந்த பசுவினை நல்ல முறையில் பராமரித்து, போஷிப்பது அந்த கோசாலை உரிமையாளரின் கடமை ஆகும்.
அந்த பசுவினால் வரும் இதர வருமானம் முழுவதும் அவருக்கே. பால் மட்டும் நாம் வாங்கி அபிஷேகத்திற்கு உபயோகிக்கலாம். சுமார் ஒரு வருடம், முதல் திதி கொடுக்கும் வரை மேற்படி முறையில் நாள் தவறாது இறைவனுக்கு பாலாபிசேகம் செய்வது சிறப்பு.
இதனால் இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைந்து அந்த குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யங்களும் தங்கு தடையின்றி கிடைக்க வழி ஏற்படுகிறது. நீங்களும் இதைக் கடைபிடிக்க நினைத்தால், நீங்களும் செய்யலாமே கோசாலைக்கு கொடுக்க முடியவில்லையானாலும், தாமே பசுவை வளர்த்து, யார் மூலமாவது பாலபிசேகம் செய்யலாம்.
இல்லை என்றால் பசு ஒன்றை இல்லாதவர்களுக்கு வாங்கி கொடுத்து பாலை மட்டும் வாங்கி அபிஷேகம் செய்யலாம்.

எந்த விதமான கிரக பாதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் கஷ்டங்களின் தாக்கம் படிப்படியாக குறையும்.

1) காகத்திற்கு உணவிடுதல்.
2) பறவைகளுக்கு தாகம் தீர்க்க மாடியில் நீர் வைத்தல்.
3) பசுவிற்கு அகத்திகீரை, பச்சரிசி வெல்லம் தருதல்.
4) எறும்பு உண்ண பச்சரிசி மாவில் கோலமிடுதல்.
5) சனிக்கிழமை கருப்பு நிற நாய்களுக்கு சப்பாத்தி தருதல்.
6) மீன்களுக்கு பொரி அளித்தல்.
7) மலை மேல் உள்ள கோவில்களில் உள்ள குரங்குகளுக்கு வாழைப்பழம் தருதல்.
8) கோயில் விளக்கிற்கு எண்ணை அளித்தல்.
9) ஊனமுற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குதல்.
10) அரசமரத்திற்கு நீர் ஊற்றுதல்.
11) அன்னதானம், நீர்ப்பந்தல் போன்றவற்றிற்கு உதவுதல்

வேண்டாத சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொண்டு சிலர் இரவும் பகலும் பயத்தில் மூழ்கிக் கிடப்பர். ஆனால், பயத்திற்கு நியாயமான காரணம் ஏதும் இருக்காது.
வேண்டாத சிந்தனைகளை மனதில் வளர்த்துக் கொண்டு சிலர் இரவும் பகலும் பயத்தில் மூழ்கிக் கிடப்பர். ஆனால், பயத்திற்கு நியாயமான காரணம் ஏதும் இருக்காது. தேவையற்ற பயத்தில் இருந்து தப்பிக்க வழிபடவேண்டிய தெய்வம் காளி. காளியை வழிபட்டால் பயம் பஞ்சாய் பறந்து விடும். தேவையற்ற பயமுள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் காளிகோயிலுக்குச் சென்று வழிபடலாம்.
காளி கோயில் அருகில் இல்லையென்றால் துர்க்கையை வழிபடலாம். எலுமிச்சம்பழம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஓம் காளி என்ற மந்திரத்தை 108 அல்லது 1008 முறை காளி அல்லது துர்க்கை முன் அமர்ந்து ஜெபியுங்கள். அந்த பழத்தைப் பிழிந்து வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து பிரசாதமாக அருந்துங்கள். நிச்சயம் பயம் உங்களை விட்டு ஓடிவிடும்.

நாகதோஷம் உள்ளவர்கள் நாகாபரண விநாயகரை, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.
நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் ஒன்றாகும். மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், காசி விசாலாட்சி அம்மன் ஆலயங்களைப் போல, இந்தக் கோவிலும் அம்மனை முன்னிலைப் படுத்தும் திருக்கோவிலாக அமைந்திருக்கிறது.
இங்கு சிறப்பு மூர்த்தியாக நாகாபரணப் பிள்ளையார் என்பவர், இந்தக் கோவிலில் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் முகப்பில் வீற்றிருக்கும் இந்த விநாயகர், உடலில் நாகத்தை ஆபரணமாக சூடி, தலைக்கு மேலே மற்றொரு நாகம் குடை பிடித்தபடி இருக்க அதன் கீழே காட்சி தருகிறார். இதன் காரணமாகவே இந்த விநாயகருக்கு, ‘நாகாபரண விநாயகர்’ என்று பெயர் வந்தது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு, ராகு காலத்தில் பாலபிஷேகம் செய்வித்து வேண்டிக்கொண்டால், அந்த தோஷங்கள் விலகும் என்கிறார்கள். ராகு- கேது பெயர்ச்சியின்போது இவருக்கு விசேஷ பூஜைகளும் நடக்கிறது.
பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் நாய் வாகனத்துடன் காட்சி தரும் பைரவர், இங்கு சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். புண்டரீக தீர்த்தக்கரையில் இவரது சன்னிதி இருக்கிறது. புண்டரீகர், சிவனை வழிபட்டபோது, காசியின் கங்கை தீர்த்தம் இத்தலத்தின் பாதாளத்தில் இருந்து பொங்கியது. அப்போது, கங்கைக்கரையில் உள்ள பைரவரும் இங்கு எழுந்தருளினார். இவரே இங்கு, ‘காலசம்ஹார பைரவராக’ அருள்கிறார். இவருக்கு பின்புறம் சிம்ம வாகனம் இருக்கிறது. காலனை (எமன்) சம்ஹாரம் செய்த சிவனே, இங்கு பைரவர் வடிவில் அருள்வதாக ஐதீகம். இவர் எமனுக்குரிய தென்திசையை நோக்கி வீற்றிருப்பதால், ஆயுள் பலம் கிடைக்க இவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.

இவரை தஞ்சமடைவதால் மட்டும் தெரிந்தும், தெரியாமலும் செய்த எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம். இவரை வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.
நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிவ தரிசனத்திற்கும் நிச்சயம் அளவற்ற பலன் உண்டு. எங்கோ எப்போதோ யாருக்கோ செய்த பாவங்கள் கூட சிவபெருமானை தரிசிக்கும்போது பஞ்சாய் பறந்து போகும். பாவங்களை கழுவிக் களைவதில் சிவபெருமானுக்கு நிகர் சிவபெருமானே. ஆகையால் தான் புராணங்கள் முதல் இதிகாசங்கள் வரை அனைவரும் பாவங்களை தீர்க்க சிவபெருமானை பூஜிக்கிறார்கள்.
பொதுவாக ஒருவருக்கு நாம் தீங்கி ழைத்துவிட்டாலோ, பாவமிழைத்து விட்டாலோ சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்கள் மன்னித்தால் தான் நாம் பாவத்தை போக்கிக்கொள்ளமுடியும். அவர்களுக்கு தீங்கிழைத்துவிட்டு வேறு ஒருவரிடம் போய் மன்னிப்பு கேட்டால் அது செல்லுபடியாகாது. அதாவது பாவம் ஒரு இடம் பரிகாரம் ஒரு இடம் என்று செய்யமுடியாது.
ஆனால், சிவபெருமானை தஞ்சமடைவதால் மட்டும் எப்பேற்பட்ட பாவத்தையும் போக்கிக்கொள்ளலாம். பிரசித்தி பெற்ற ஆலயங்களின் அனைத்து தல வரலாறுகளிலும் இந்த பேருண்மையை நீங்கள் உணரலாம்.
சிவனை நினை!
சிவன் புகழ் பாடு!
சிவ யோகம் பெறு!
திருச்சிசிற்றம்பலம்.

திருமண தடை, குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு எந்த தலத்தில் இருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.
1. திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும்.
2. திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. விடயாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.
3. திரு ஆவினன்குடி (பழனி): ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனிì ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும்.
4. சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.
5. திருத்தணிகை (குன்று தோராடல்): குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும்.
6. பழமுதிர்ச்சோலை : இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு.

பல்வேறு பிரச்சனைகள் தீர வாழை மரத்தில் பரிகாரங்கள் செய்யலாம். வாழை மரத்தில் எந்த முறையில் செய்யும் பரிகாரம் என்ன பிரச்சனையை தீர்க்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
1. தரித்திர பிணிகள் விலக: அமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.
2. திருமணம் தடை விலக: திருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று செய்துவர, விரைவில் திருமணம் நடைபெறும், அதைப்போல் ஆண்கள், குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.
3. சர்வ தரித்திரங்கள் விலக : ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகுர்த்த வேலையில் வாழை மரத்தின் வேர் பகுதியில் இருந்து (1/2 ) அறை அடிக்கு மேலே ஒரு மூங்கில் குச்சியில் குத்தினால் வாழை நீர் ( கங்கை நீர்) வழியும் அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல் நீருடன் கலந்து வீடுகளில், தொழில்கூடங்களில், நம்மீதும் தெளித்துக் கொண்டு வந்தால் சர்வ தரித்திரங்களும் விலகும். ( வாழை மரத்தை வெட்டினலோ அல்லது குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை நதி நீருக்கு சமமானது, கைலாய கங்கை நீரில் மிதந்து கொண்டு தான் விஸ்வகர்மாவை நோக்கி தவம் புரிந்ததே இதற்கு காரணம்.)
4. குழந்தை பாக்கியம் பெற : குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து, வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதயை நகம் படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
5. பித்ரு தோஷம் விலக : 100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை திதியில் கடலில் விட்டால் பித்ரு தோஷம் விலகும்.6. செல்லவம் மேலும் பெருக சம்பள பணத்தையோ அல்லது சுப காரியய்த்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது.அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் செல்லவம் மேலும் பெருகும்.
7. அன்ன தரித்திரம் விலக: அட்சய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு மற்றொரு மகத்தான பெருமையும் உண்டு. அட்சயதிதி அன்று புதிய தங்கம் வாங்க செய்து, மஞ்சள் கலர் துணியில் முடிந்து, கிழக்கு முகமாக நின்று, ஆபரண மூட்டையை வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி, சாம்பிராணி புகையிட்டு, பூஜை முடிந்த பின்பு எடுத்து அணிந்து கொண்டால் ஆபரணங்கள் பெருகும். அதைப்போல் நெல்மணிக்களை கட்டி பூஜித்து அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன தரித்திரம் விலகும்.
8. வியாபார விருத்தி பெருக : இதைப்போல் பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பெருகும்.
9. வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெற : வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகுர்த்த நாளில் சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம் புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகுர்த்த நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும், குடும்பம் சுபிக்ஷ்ம் பெருகும், பணம் வீன் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், குள விருத்தி அடையும்.

அமாவாசை நாட்களில் கடலில் நீராடி, சுயம்புலிங்க சுவாமி சன்னிதியில் நண்பகலில் நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் யாவும் அகலும் என்கிறார்கள்.
தமிழகத்தின் தென்கோடியில் உவரி என்ற திருத்தலத்தில் சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் முன்காலத்தில் ‘பெரியசுவாமி கோவில்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து சிவலிங்கங்களும் ஆவுடையுடன் கூடியே இருக்கும். அதுவே ‘அம்மை அப்பன்’ தத்துவம். ஆனால் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் மூலவருக்கு ஆவுடையார் பாகம் இல்லை.
ஆலயத்தின் வெளியில் தென்மேற்கில் கன்னி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் முதலில் கடலிலும், பின்னர் ஆலய எதிரில் உள்ள தெப்ப குளத்திலும் நீராடி, கன்னி விநாயகரை வழிபட வேண்டும். அதன்பிறகே மூலவரான சுயம்புலிங்க சுவாமியின் கருவறைக்குள் நுழைய வேண்டும்.
இங்கு ஈசனின் சன்னிதியில் சந்தனமே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதுவும் சுயம்புலிங்க சுவாமியின் சிரசில் சாற்றிய சந்தனமே பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது. இந்த சந்தன பிரசாதத்தை தொடர்ந்து இங்கு ஆலயத்தில் தங்கி இருந்து 48 நாட்கள் கடலில் நீராடி, முறைப்படி ஈசனை வழிபட்டு, கருவறை தீபத்தில் நெய் சேர்த்து, அங்கு பிரசாதமாக தரப்படும் சந்தனத்தை வாங்கி உண்டு வந்தால் தீராத நாட்பட்ட நோய்களும் குணமாவதாக கூறுகிறார்கள்.
அமாவாசை நாட்களில் கடலில் நீராடி, சுயம்புலிங்க சுவாமி சன்னிதியில் நண்பகலில் நல்எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பித்ரு தோஷங்கள், குலதெய்வ சாபங்கள் யாவும் அகலும் என்கிறார்கள். பலருக்கு இக்காலத்தில் தங்கள் குலதெய்வம் யாரென்று தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் சுயம்புலிங்க சுவாமிக்கு மாவிளக்கு ஏற்றி சுயம்புலிங்க சுவாமியை தங்கள் குலதெய்வமாக ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள். அதுமுதல் அக்குடும்பத்திற்கு குலதெய்வமாக சுயம்புலிங்க சுவாமி அருள்பாலிப்பதுடன் குடும்பத்தினரின் நல்வாழ்விற்கு துணை நிற்பார் என்கிறார்கள்.
உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் திருச்செந்தூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

திருமணத் தடையால் பெண்களும், ஆண்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். திருமண தடை நீங்க இந்த ஹோமம் செய்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
திருமணத் தடையால் பெண்களும், ஆண்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். பல குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பையனுக்கு மணமகள் தேடித் தேடிச் சலித்துப் போய் விடுகிறார்கள். இதேபோல் பெண் வீட்டினரும் மணமகன் சரியாக அமையாமல் தவிக்கின்றனர்.
ஒன்று இருந்தால், இன்னொன்று அமையாமல் தொடர்ந்து திருமணத்தில் தடையாகிறது. ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும்.
ருது தோஷம் என்பது ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் திருமணம் செய்ய தாமதம் ஆகும். திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு.
இந்த திருமணத் தடைகள் நீங்க சித்தர்களின் மலை என்று அழைக்கப்படும் சுருளி மலையில் ஹோமங்கள் நடத்தியவர்தான் வாசியோகி ஓம் பரமானந்த பாபா. இதில் பெண்களின் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமமும், ஆண்களின் திருமணத் தடை நீங்க ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமமும் நடத்தி அதன் பலன்கள் கிடைக்க செய்துள்ளார்.
சுருளிமலையில் செய்த யாகங்கள் அனைத்தையும் கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திலும் நடத்தி உள்ளார். இதனால் இங்கு வந்தாலே தடைகள் நீங்கி பலன் கிடைக்கிறது. திருமணத் தடைகள் விலகி திருமணம் நல்லபடியாக நடக்கிறது என்று பயன் அடைந்தவர்கள் பாராட்டுகின்றனர்.
திருமணத் தடை மட்டுமின்றி வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை, குழந்தையின்மை பிரச்னை, குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது. இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது.
சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.