என் மலர்
தோஷ பரிகாரங்கள்
பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்களைக் குணப்படுத்தும்தன்மை அதிகம். அந்த வகையில் செம்பு மோதிரத்தை அணிந்து கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஜோதிர சாஸ்திரப்படி செம்பு மோதிரம் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளையும் விரட்ட உதவும். பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்களைக் குணப்படுத்தும்தன்மை அதிகம். உலோகங்களில் மிகவும் பழமைவாய்ந்த தாமிரம் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, நோய் எதிர்ப்புசக்தியையும் அதிகரிக்கும்
தாமிரத்தால் ஆன பாத்திரத்தில் சாப்பிட்டாலும்கூட நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காப்பர் மோதிரம் கிருமிகளிடம் இருந்தும் நம்மைக் காக்கும் எனச் சொல்லப்படுகிறது. செம்பு மோதிரம் உடலில் நச்சுத்தன்மை அதிகரிப்பதைத் தடுப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்பெறச் செய்யும்.
செம்பு மோதிரம் அணிவது வீட்டின் வாஸ்துவை சிறப்பாக மாற்றும். வீட்டுக்குள் நேர்மறை சக்திகளையும் இது அதிகரிக்கும். செம்பு மோதிரம் அணியும்போது சூரிய திசை செய்யும் சில கெடுதல்களையும் அதுதடுக்கும். உடல் வெப்பநிலையை சீராக வைப்பதோடு, செம்பு மோதிரம் கோபத்தையும் கட்டுப்படுத்தும். செம்பு மோதிரம் உங்கள் அன்றாட வாழ்க்கை, வேலையில் இருக்கும் தடைகளையும் விலக்கும்.
வாழ்வை ஒரே இடத்தில் பிடித்துப்போடும் சூர்ய மகாதசாவின் பாதிப்புகளையும் இது குறைக்கும். உடல் வீக்கம், இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதிலும் செம்புமோதிரம் முக்கியப்பங்கு வகிக்கிறது.அடிக்கடி வரும் தலைவலிக்கும் செம்பு மோதிரம் வேட்டு வைக்கும்.

ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம் பிளாஞ்சேரி கைலாசநாதர் ஆலயமாகும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தி்ல் இருந்து வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிளாஞ்சேரி. இங்கு காமாட்சியம்மன் சமேதராக கோவில் கொண்டு இருக்கிறார் அருள்மிகு கைலாசநாதர். இந்தக் கோவிலில் தனித்தனி சன்னதிகளில் அஷ்ட பைரவர்களும் அருள்பாலிக்க, சரபசூலினியும் குடிகொண்டிருக்கிறாள்.
பல்வேறு சிறப்புகள் பெற்ற மிகவும் பழமையான சிவாலயம் பிளாஞ்சேரி கைலாசநாதர் திருக்கோவில். இங்கு நடைபெறும் ஜயமங்களா யாகத்தில் கலந்து கொண்டால் திருஷ்டி தோஷங்கள் அகலும், திருமணத்தடை நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும், வம்ச விருத்தி உண்டாகும், இழந்த பதவிகளை மீண்டும் பெறலாம், வழக்குகள் சாதகமாகும்.
அதேபோல், ஜாதகத்தில் அபமிருத்யு தோஷம்(உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கண்டம்) இருப்பவர்களுக்கும் சிறந்த பரிகாரத் தலம் இதுவாகும். அவர்கள், தேய்பிறை அஷ்டமியன்று மாலை ஆறு மணியளவில் அஷ்ட பைரவர்களுக்கு நடைபெறும் சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால், தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
அற்புதமான திருக்கதை, சாந்நித்தியம் மிகுந்த திருக்கோயில், அருள் வழங்கும் வழிபாடுகள்... இத்தகைய சிறப்புகள் மிகுந்த பிளாஞ்சேரி தலத்துக்கு நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி வளமான வாழ்வைப் பெறுவீர்கள்!
இந்த கோவிலில் பவுர்ணமிதோறும் மாலை 5 மணியளவில் ஜய மங்களா மகா யாகம் நடைபெறும். அப்போது பிராச முனிவரும் சூட்சும வடிவில் வந்து அம்பிகையை வழிபடுவதாக ஐதீகம். பக்தர்கள் தாங்கள் தொடங்கும் காரியங்கள் தொடர்பாக அம்பிகை சரப சூலினியின் உத்தரவு கேட்க வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் எலுமிச்சைப்பழம் அம்பிகையின் திருமுடியில் வைக்கப்படும். `காரியத்தைத் தொடங்கலாம்’ என்பது அன்னையின் சித்தமானால், அந்த எலுமிச்சை அம்பிகையின் திருமுடியில் இருந்து தானாகவே இறங்கி விழுவது, இத்தலத்துக்கே உரிய அற்புதமாகும்.

இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் வெள்ளீஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் அருகிலேயே, வெள்ளீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனுக்கும், காமாட்சி அம்மனுக்கும் உரித்தான ஆலயமாக இது கருதப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கீரச முனிவர் வழிபட்ட தலம் இது. மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது, மகாபலி நடத்திய யாகத்தில் யாசகம் கேட்டுச் சென்றார்.
அவர் ‘தன் பாதங்கள் அளப்பது வரையான மூன்று அடி மண் வேண்டும்’ என்று கேட்டார். அதைத் தருவதாக மகாபாலியும் ஒப்புக்கொண்டார். ஆனால் மகாபலியின் அசுர குருவான சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து மகாபலியை தடுத்தார். ஆனாலும் கமண்டல நீர் கொண்டு நிலத்தை தாரை வார்க்க முன்வந்தார், மகாபலி.
உடனே சுக்ராச்சாரியார், வண்டாக உருவெடுத்து, கமண்டல நீர் வரும் பாதையை தடுத்தார். இதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். அதில் தர்ப்பைப் புல் குத்தி, வண்டின் கண் பார்வை பறிபோனது. இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் இதுவாகும். சுக்ரனுக்கு ‘வெள்ளி’ என்ற பெயரும் உண்டு.
இதனால் இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

அரவக்குறிச்சி கோடந்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயம் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சினை தீரவும் அம்மனை பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ளது கோடந்தூர் கிராமம். இங்குள்ள நாய்க்கன்வலசு என்ற பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் ஒன்று இருக்கிறது. 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் மாரியம்மன், சுயம்புவாகத் தோன்றியவர். தன்னை தேடி வந்து வேண்டிக்கொள்பவர்களுக்கு, வேண்டிய வரத்தை அருளும் ஒப்பற்ற தேவியாக, இந்த அன்னை விளங்குகிறாள்.
பொருளாதாரத்தில் உயர்வு பெறவும், கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சினை தீரவும், சுகப் பிரசவம் நடைபெறவும், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறவும், நோய் நொடி நீங்கவும், மன அமைதி கிடைக்கவும் அம்மனை பிரார்த்தனை செய்தால், அந்த பிரார்த்தனை விரைவிலேயே நடந்தேறுவதை பார்க்கலாம்.
இந்த ஆலயம் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வரும் பக்தர்கள், தங்களின் மகள் அல்லது மகனின் ஜாதகத்தை, அம்மனின் திருவடியில் வைத்து வணங்கி வேண்டிச் செல்கிறார்கள். அவர்களின் வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறுகிறது. இதையடுத்து அவர்கள் மணமக்களை அழைத்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளக்கோவிலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது.

திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில் தாயாருக்குத் தேன் கொண்டு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால், விரைவிலேயே திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்!
சென்னை -வேலூர் சாலையில் சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாற்கடல். வேகவதி ஆற்றின் வேகத்தைத் தடுத்து நிறுத்த திருப்பாற்கடலில் இருப்பது போலவே ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால், ஊரின் பெயர் திருப்பாற்கடல் என்றே அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தீர்த்தமும் சரஸ்வதி தீர்த்தம் என்றே போற்றப்படுகிறது.
பெருமாள் - ஸ்ரீரங்கநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் -ஸ்ரீகடல்மகள் நாச்சியார். பங்குனி மாத ரேவதி நட்சத்திர நன்னாளில், உபய நாச்சியாரின் உத்ஸவத் திருமேனிக்கு பால் திருமஞ்சனம் செய்து, படியை நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டுப் பிரார்த்தித்தால், நம் வாழ்க்கையையே இனிக்கச் செய்யும் வகையில் குழந்தை பிறக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். தாயாருக்குத் தேன் கொண்டு திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால், விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும்; திருமண பாக்கியம் விரைவிலேயே கைகூடும் என்பது ஐதீகம்!
விஷ்ணுபதி புண்ய காலங்களான கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி ஆகிய மாதப் பிறப்புகளில், அந்த மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், இங்கு வந்து, செவ்வாழை அல்லது அத்திப்பழம் தானம் செய்து வழிபட்டால், சகல நோய்களும் நீங்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்!

திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோவில் வாஸ்து தோஷம், முன்னோர்களின் சாபம், வீடு பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தலமாக உள்ளது.
திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 74ஆவது சிவத்தலமாகும். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை.
இந்த கோவில் மூலவர் “வீரட்டானேஸ்வரர்.” அம்மன் “பரிமளநாயகி.” பிருந்தை என்னும் சொல்லுக்கு “துளசி” என்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம். இது ஒரு வாஸ்து தோஷ நிவர்த்தி தலம்.
வீடு கட்டும் முன் ஏதும் பிரச்சனை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.
முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.

வேலூர் மாவட்டம் வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளது வள்ளிமலை. இங்கு மலை மீது சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருமணமாகாதவர்கள் வள்ளியுடன் கூடிய முருகனை பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக சுவாமிக்கு தேன், தினைமாவு படைத்து, வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்கிறார்கள்.
மலையின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை ‘சூரியன் காணாத சுனை’ என்று அழைக்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு, ‘தனக்கு நல்ல கணவன் வர வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோவில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோவிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று சுனை, திருமால் கிரீஸ்வரர் கோவில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோவிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.
சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி, ஆற்காடு செல்லும் பேருந்துகள் வள்ளிமலையில் நின்று செல்லும்.

அவளிவநல்லூர் சாட்சிநாதரை வழிபாடு மேற்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வர்.
அவளிவநல்லூர் கும்பகோணத்திலிருந்து 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து அம்மாபேட்டை செல்லும் பேருந்துகளும், தஞ்சாவூரிலிருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் பேருந்துகளும் அவளிவநல்லூர் வழியாகச் செல்கின்றன.
இத்தல இறைவன் சாட்சிநாதர் என்றும் அம்மை சௌந்தர்யவல்லி என்று அழைப்படுகின்றனர். இத்தலம் காலை (காலை 8.30 முதல் 9.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இத்தலம் பாதிரி வனம் ஆகும். இத்தலத்தின் அர்ச்சகரின் மூத்த மகளான சுசீலை அம்மைநோயால் பாதிக்கப்பட்டு கண்பார்வை இழந்திருந்தாள். தலயாத்திரிரை சென்று திரும்பிய சுசீலையின் கணவன் அர்ச்சகரின் இளைய மகளை தன் மனைவி என்றான்.
அர்ச்சகரின் வேண்டுதலை நிறைவேற்ற இறைவன் அம்மையுடன் ரிசப வாகனத்தில் தோன்றி சுசீலையை அவள்தான் இவள் என்று சுசீலையை அவளது கணவனுக்கு அடையாளம் காட்டினார். எனவே இவ்வூர் அவளிவநல்லூர் என்றும், இறைவன் சாட்சிநாதர் என்றும் அழைக்கப்படுகின்றனர். சுசீலையும் இறைவனின் ஆணைப்படி திருக்குளத்தில் நீராடி கண்பார்வையும், அழகும் திரும்பப் பெற்றாள்.
இத்தல இறைவனை வராக மூர்த்தியும், காசியப்ப முனிவரும் வழிபட்டு பேறு பெற்றனர். இத்தலத்தில் வழிபாடு மேற்கொள்ள குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன் மனைவி கருத்தொருமித்து வாழ்வர். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 100-வது தலமாகும்.
தினந்தோறும் நாம் சண்முக கவசம் பாராயணம் செய்வதால் கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அனைத்தும் பனிபோல் விலகும். அதுமட்டுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும்.
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தை தினமும் 3 முறை பாராயணம் செய்யும் பக்தர்களுக்கு முருகப் பெருமான் பல்வேறு நன்மைகளை அளிப்பார். இந்த உலகத்தில் பல்வேறு மாயைகளில் நாம் சிக்கி துன்பப்பட்டு வருகிறோம்.
வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றில் இருந்து வெளியேற நமக்கு உறுதுணையாக இருப்பது பக்தி என்னும் அமுத சுரபி. அதிலும் முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு வினைகள் எல்லாம் விலகி போகும்.
அந்த வகையில் முருகனை தினந்தோறும் நாம் பூஜிக்க கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதில் சண்முக கவசத்தை படிப்பதால் நமது மனம் சுகம் பெறும்.
இவற்றை தினமும் பாராயணம் செய்வதால் கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அனைத்தும் பனிபோல் விலகும். அதுமட்டுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும்.

கும்பகோணம் மகாமக குளத்தில் 20 தீர்த்தங்கள் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த தீர்த்தங்களையும், அதன் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.
கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடுவது மிகவும் புண்ணியம் சேர்க்கும். ஏனெனில் மாசி மகம் அன்று, இங்கு புண்ணிய நதிகளும் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக புராணங்கள் சொல்கின்றன. கும்பகோணம் மகாமக குளத்தில் 20 தீர்த்தங்கள் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த தீர்த்தங்களையும், அதன் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.
* வாயு தீர்த்தம் - நோய்கள் அகலும்.
* கங்கை தீர்த்தம் - கயிலைப் பதவி அளிக்கும்.
* பிரம்ம தீர்த்தம் - இறந்த முன்னோர்களை சாந்தப்படுத்தும்.
* யமுனை தீர்த்தம் - பொருள் சேர்க்கை உண்டாகும்.
* குபேர தீர்த்தம் - சகல செல்வங்களும் உண்டாகும்.
* கோதாவரி தீர்த்தம் - எண்ணியது நடக்கும்.
* ஈசான்ய தீர்த்தம் - சிவனடி சேர்க்கும்.
* நர்மதை தீர்த்தம் - உடல் வலிமை உண்டாகும்.
* இந்திர தீர்த்தம் - மோட்சம் அளிக்கும்.
* சரஸ்வதி தீர்த்தம் - ஞானம் உண்டாகும்.
* அக்னி தீர்த்தம் - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
* காவிரி தீர்த்தம் - புத்தியை மேம்படுத்தும்.
* எம தீர்த்தம் - மரண பயம் நீங்கும்.
* குமரி தீர்த்தம் - வளர்ப்புப் பிராணிகளுக்கு பலன்களைக் கொடுக்கும்.
* நிருதி தீர்த்தம் - பேய், பூதம் போன்ற தேவையற்ற பயம் நீங்கும்.
* பயோஷினி தீர்த்தம் - கோலாகலம் அளிக்கும்.(பாலாறு)
* அறுபத்தாறு - துன்பம் நீங்கி இன்பம் கூடும்.கோடி தீர்த்தம்
* வருண தீர்த்தம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.
* சரயு தீர்த்தம் - மனக்கவலை தீர்க்கும்.
* தேவ தீர்த்தம் - சகல பாவங்களையும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.

திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் அம்மன்குடி கிராமத்தில் பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது அவனுடைய ரத்தத்தால் பூசப்பட்ட தன்னுடைய திரிசூலத்தை துர்க்கா பரமேஸ்வரி அம்மன் இங்குள்ள புஷ்கரணியில் சுத்தம் செய்ததால் புஷ்கரணி பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமையில் இந்த தீர்த்தத்தில் நீராடி துர்க்கா தேவியை தரிசனம் செய்பவர்கள், தங்கள் மனதால் ஆசைப்பட்ட எல்லா நலன்களையும் அடைவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது.
இங்கு வருபவர்களுக்கு தேவியின் தரிசனத்தால் பாப விமோசனமும், இஷ்ட சித்திகளும் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். பாவம் நீங்கவும், சிவ அபராத தோஷம் நீங்கவுமான பாப விமோசன தீர்த்தம் இவ்வாலயத்திற்கு வடதுபுறம் உள்ளது.
அம்மன்குடி துர்க்கா பரமேஸ்வரியை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் சிவப்பு புஷ்பத்தால் திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நினைத்த காரியமும், சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என்பது உறுதி.
திருமணமாகாத பெண்கள் இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் விரைவில் திருமண பாக்கியம் கிட்டும். சகல தோஷங்களும் நீங்கி மக்கட்பேறு உண்டாகும். சுவாச(காச) நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம். அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, வழிபட்டால், என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்,
அனுமனை கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும் என்கிறது ராமாயணத்தில் ஒரு பகுதியான சுந்தரகாண்டம். ராமநாமத்தின் உயிர் உருவமான ஆஞ்சநேயர் எந்தவிதமான பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும் பக்தியுடனும் ராமனுக்கு பணிவிடை செய்தார். அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வீரம், ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் அனுமன். அன்புக்கும், தொண்டுக்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஆஞ்சநேயர், சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்.
அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். ஸ்ரீராமபெருமானுக்கும் ராவணனுக்கும் நடந்த யுத்தத்தில் ராவணன் இறந்த பிறகு, இரண்டு அசுரர்கள் எப்படியாவது ஸ்ரீராமனை அழிக்க நினைத்தார்கள்.
ராம பக்தனான அனுமனை அனுப்பி அந்த அரக்கர்களை அழித்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார் ஸ்ரீராமபிரான். அப்போது, தேவர்களும், தெய்வ ரூபங்களும் அனுமனிடம் பல ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பினர். ஆனால், ஸ்ரீகிருஷ்ணர் மட்டும் அனுமன் கையில் வெண்ணெயைக் கொடுத்தார். அந்த வெண்ணெய் உருகுவதற்குள் அரக்கர்களை அழித்துவிட்டுத் திரும்பவேண்டும் என்பது குறிப்பு.
அதன்படியே செய்தார் அனுமன். அதனால், வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராமநாம ஜெயத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமன் தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.
வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை. நினைத்த காரியங்களில் வெற்றி கிடைத்திட, உடல் ஆரோக்கியத்துடன் திகழ, ஸ்ரீ ராம பக்தன் அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, ஜெயபஞ்சகத் துதியைச் சொல்லி வழிபட்டால், வெற்றி மாலைகள் தேடி வரும்.