என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    காரைக்குடி அருகிலுள்ள இலுப்பைக் குடிதான் தோன்றீஸ்வரர் கோவிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார். அட்சய திருதியை தினத்தன்று இவரை வழிபட்டால் கூடுதல் செல்வம் தருவார் என்பது ஐதீகம்.
    பொதுவாக பைரவரின் கையில் கபிலம் இருக்கும். ஆனால் காரைக்குடி அருகிலுள்ள இலுப்பைக் குடிதான் தோன்றீஸ்வரர் கோவிலில், பைரவர் அட்சய பாத்திரத்துடன் காட்சி தருகிறார். இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது சிறப்பு. சித்தர்களில் ஒருவரான கொங்கனார், மூலிகைகளைப் பயன்படுத்தி இரும்புத் தங்கமாக மாற்றினார். அவர் மாத்தூர் என்னும் தலத்தில் தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்தார்.

    மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு, சிவபெருமானை வழிபட்டார். சிவன் அவருக்கு காட்சி தந்து, இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கனார் பைரவரை வழிபட்டு ஆயிரம் மாற்றும் தங்கம் தயாரித்தார்.

    அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்ற பொது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்த சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்குள் ‘சுயம்பிராசேஸ்வரர்’ என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டன. இத்தலத்தின் பைரவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. சுவர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலயத்தை அட்சயபாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

    இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும். என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. பைரவர் சன்னதி எதிரிலுள்ள ஒரு தூணில் நாய் படம் வரையப்பட்ட நாய்க்கடி பலகை இருக்கிறது. நாய்க்கடி பட்டவர்கள் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,. தூணை சுற்றி வந்து விஷத்தன்மை முறிய பைரவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அட்சய திருதியை தினத்தன்று இவரை வழிபட்டால் கூடுதல் செல்வம் தருவார் என்பது ஐதீகம்.
    மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும் மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு அல்லது சுப காரியங்கள் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    மீனாட்சி அம்மன் தாய் உள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை கேட்டு வணங்கினாலும் அதை அருளுவதோடு சகல ஐஸ்வர்யங்களையும் வழங்க கூடியவர். திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பவர். மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும் மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு அல்லது சுப காரியங்கள் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த கோவிலுக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மனநிம்மதி கிடைக்கும். சுவாமி பிரகாரத்தில் ஓம் என்னும் நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு கேட்கும் அளவுக்கு மிக அமைதியாக இருக்கும். மன அமைதி, நிம்மதி வேண்டுவோர்கள் கோவில் பிரகாரத்தில் அமைதியான இடத்தில் தியானம் செய்வது மிகவும் சிறந்தது.

    சுவாமிக்கு பால், எண்ணெய், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற அபிஷேகங்கள் செய்யலாம். தவம் செய்தல், விரதம் இருத்தல், தியானத்தில் ஈடுபடுதல், வேள்வி புரிதல்,தானதர்மங்கள் அளித்தல் போன்ற பல்வேறு நிலையில் சுவாமிக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அம்பாளை பொருத்தவரை பட்டு புடவை சாத்தி அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் வேண்டுதல்களை பக்தர்கள் பூர்த்தி செய்கின்றனர். சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்தும் யாகம் செய்தும் வழிபடலாம். கோவிலுக்குவரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.
    மீனாட்சி அம்மன் கோவில் குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    தீராத வியாதி உள்ளவர்கள், நோய்வாய் பட்டவர்கள் அதில் இருந்து பூரண குணம் பெற மீனாட்சி அம்மன் கோவிலில் குங்கும அர்ச்சனை செய்யலாம். இந்த குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மதுரை மற்றும் சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்தார், நெருங்கிய சொந்தங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு பிரசாத குங்குமத்தை நோயாளிகளுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இதன் மூலம் நோய்கள் குணமாகி வருவதாக பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

    வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள சுக்ரனுக்கு, அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் கணவன்- மனைவி கருத்துவேறுபாடு மறையும்.
    மனிதப் பிறப்பில் இனிமை மட்டுமே நிரம்பியவர் எவரும் இல்லை. வாழ்வில் ஒருமுறையேனும் துன்பத்தை அனுபவிக்காதவர், மனிதப் பிறவி எடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. கர்ம வினைப் பயனை அனுபவிக்க வேண்டியது இருந்தால்தான், மனிதப் பிறவியும் ஏற்படுகிறது. எனவே மனிதனும், அவனுக்கான துன்பமும் பிரிக்க முடியாதவை. ஆனால் அந்த துன்பங்களை குறைத்துக் கொள்வதற்கான எளிய பரிகாரங்களை மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகத்தில் உள்ள சுக்ரனுக்கு, அகல் விளக்கில் கற்கண்டு போட்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் கணவன்- மனைவி கருத்துவேறுபாடு மறையும்.

    கணவன்- மனைவி ஒற்றுமையாக வாழ, இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30- 12), மஞ்சள், குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு நெய் தீபமும் ஏற்றுங்கள்.

    குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால், அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது மகரிஷிகளால் சொல்லப்பட்ட எளிமையான பரிகாரங்களில் ஒன்று.

    பெரும் துன்பத்தைத் தரக்கூடிய கடன் தொல்லையில் இருந்து விடுபட, யோக நரசிம்மரையும், சிறிய கடன் தொல்லைகளுக்கு லட்சுமிநரசிம்மரையும் வணங்குங்கள். நரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி, திருமண தடை விலகும்.

    கோவிலில் இருக்கும் திரிசூலத்திற்கு குங்கும பொட்டு வைத்து, எலுமிச்சைப் பழத்தை திரிசூலத்தில் குத்தி வைத்து வழிபட்டால், திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

    வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில், கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால், ஏவல், பில்லி, சூனியம் இருந்தால் நின்று விடும்.

    சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள், 12 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தொழில் வளர்ச்சி பெறலாம், வழக்குகள் சாதகமாகும். 21 செவ்வாய்க்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

    பைரவர் சன்னிதியில் தொடர்ச்சியாக 8 செவ்வாய்க் கிழமைகள் நெய் தீபம் ஏற்றி, சகஸ்ர நாம அர்ச்சனை செய்தாலும், கொடுத்த கடன் வசூலாகும்.

    உங்கள் வாழ்க்கையில் சனி பகவானின் பாதிப்பு குறைவதற்கு, ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவாலயங்களுக்குச் சென்று ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க வேண்டும். சனிக்கிழமைகளில், சனி பகவானுக்கு தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றினாலும் பலன் கிடைக்கும்.

    சிவன்‬ கோவிலில் உள்ள வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற, நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங் களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன.

    பிரதோஷகாலத்தில், பார்வதியுடன் ரிஷபாரூட மூர்த்தியாய் காட்சி தரும் ஈசனை வழிபடுபவர்களுக்கு, ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாராதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

    மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் அன்று, தொடர்ச்சியாக 11 மாதங்கள் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்தால், திருமணம் விரைவில் நடந்தேறும்.
    இது போன்று பல பரிகார முறைகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைப்பது உறுதி..
    அலுவலகத்தில் தொடர்ந்து தொல்லைகள், பதவி உயர்வு மறுப்பு, மதிப்பின்மை அல்லது பல நாட்கள் தேடியும் வேலையே கிடைக்காத தன்மை போன்றவை விலக கீழ்க்கண்ட பரிகாரம் மிகுந்த பலன் தரும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வரலாம். இது போன்று பல பரிகார முறைகள் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

    சனிக்கிழமையாக தேர்ந்தெடுத்து 1 கிலோ கருப்பு உளுந்து மற்றும் 1 கிலோ நிலக்கரி இரண்டையும் 1 மீட்டர் நீளம் மற்றும் அகலம் கொண்ட கருப்பு துணியில் நன்றாக முடிந்து வைத்து, அதை சாதகர் தலை மற்றும் உடலை 21 முறை வலது புறமாக சுற்றி (வேறு நபர் சுற்றலாம்) பின்பு அதை ஓடும் நீரில் (ஆறு, ஏரி, கடல், நீர் நிலைகள்) விட்டு விட வேண்டும்.

    பின்பு அங்கேயே நின்று ராம பக்த ஆஞ்சநேயரை மனதார வேண்டி கொண்டு வீடு திரும்ப, விரைவில் நல்ல செய்தி வரும். இதை சனிக்கிழமை காலை 6-7 அல்லது 1-2 செய்ய மிகுந்த பலன் தரும். முடியாதவர்கள் வேறு நேரங்களில் செய்யலாம். மாலை 6 மணிக்கு முன்பு செய்து விட வேண்டும். மற்றபடி இதற்கு மந்திரம், திசை போன்றவை ஏதும் இல்லை. வீட்டிலேயே சுற்றி விட்டு பின்பு எடுத்து சென்று நீரில் விடலாம்.
    போளூர் மண்டகொளத்தூர் சுவாமியும், அம்பாளும் தன் பக்தர்களின் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அனைத்துவித பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியை அருள்கின்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றங்கரையில் வடகரையில் சப்த கரைகண்ட தலமும், தென் கரையில் சப்த கைலாய தலமும் உள்ளது. இதில் சப்த கைலாய தலங்களில் ஒன்றான மண்டகொளத்தூர் கோவில் போளூர் அருகே உள்ளது. பார்வதிதேவி திருவண்ணாமலை நோக்கி சென்ற பயணத்தில் முக்கிய தலங்கள் உருவாக காரணமாக முனுகப்பட்டு எனும் தலம் அமைந்தது.

    இங்கு வாழைப்பந்தலில் பச்சையம்மனாக அம்மன் அமர்ந்து அபிஷேக தீர்த்தம் கொண்டு வர முருகனை பணித்தாள். முருகப்பெருமான் தன்னுடைய வேலை எய்தார். வேல் குன்றுகளை துளைத்து சென்று குன்றை சுற்றி தவமிருந்த ரிஷிகளான போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன் மற்றும் வாமன் ஆகியோர் சிரசை கொய்தது. ஞானவேல் கொண்டு வந்த தீர்த்தத்தோடு அவர்களின் உடம்பிலிருந்து வெளியேறிய குருதியும் கலந்தது. அதுவே தனி ஆறாக பெருக்கெடுத்தது.

    தற்போது மண்டகொளத்தூர் கோவிலை சுற்றிலும் வில்வ மரங்கள் அடர்ந்த கானமாக திகழ்கிறது. இறைவனின் திருப்பெயர் தர்மநாதேஸ்வரர், இறைவி தர்மசம்வர்த்தினி. கிழக்கு நோக்கிய மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தோடு ஆலயம் திகழ்கிறது. இக்கோபுரம் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் ராஜகோபுர வடிவத்தை ஒத்துள்ளது. பிரகார சுற்றிலேயே அம்பாள் தனி சன்னதியில், தம் நாற்கரங்களில் வரத, அபய, அங்குச, பாசம் ஆகியன தாங்கி கிழக்கு நோக்கி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். சுவாமியும், அம்பாளும் தன் பக்தர்களின் பிரம்மஹத்தி தோஷம் உள்பட அனைத்துவித பாபங்களையும் நீக்கி அவர்கள் வாழ்வில் நிம்மதியை அருள்கின்றனர்.

    போளூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போளூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில்.
    ராகு-கேது தோஷம் என்பது, சர்ப்ப தோஷம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களாக ஆன்மிக சான்றோர்கள் சொல்லி வைத்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
    கிரகப்பெயர்ச்சிகளில் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சிகளுக்குப் பிறகு, அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது ராகு-கேது பெயர்ச்சி. இந்த இரண்டு கிரகங்களும் ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் தங்கியிருந்து, அந்த பலாபலன்களுக்கு ஏற்ப நன்மை, தீமைகளை வழங்கும். ராகு-கேது இரண்டும் ‘நிழல் கிரகங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களைப் போல முன்னோக்கிச் செல்லாமல், பின்னோக்கிச் செல்லும் வழக்கம் கொண்டவை. இந்த ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி 21-3-2022 தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ராகு-கேது தோஷம் என்பது, சர்ப்ப தோஷம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணங்களாக ஆன்மிக சான்றோர்கள் சொல்லி வைத்த சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    * வயதான பெண்களை சரியாக கவனிக்காமல் கொடுமைப்படுத்தினால், அவர்களின் அடுத்த தலைமுறைக்கு ராகு-கேது தோஷம் ஏற்படும். இது குறிப்பிட்ட காலத்தில் திருமணம் நடைபெறுவதை தடுக்கும்.

    * ஆலயத்திற்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து வாழ்பவர்களின் சந்ததியினருக்கும் இந்த தோஷம் ஏற்படலாம்.

    * நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதிகளுக்குள், ஏதாவது ஒரு பகையின் காரணமாக பிரிவினையை ஏற்படுத்தினால், அந்த நபரின் மூன்றாம் தலைமுறையினருக்கு ராகு-கேது தோஷம் உண்டாகும்.

    * சிறுவர்- சிறுமிகளை, துன்புறுத்தினாலோ, கொடுமைப்படுத்தினாலோ, அந்தப் பிள்ளைகளின் கண்ணீர், துன்புறுத்திய நபரின் அடுத்தடுத்த தலைமுறைகளில் ராகு-கேது தோஷமாக உருவெடுக்கும்.

    * ஒற்றுமையாக இருக்கும் குடும்பங்களைப் பிரித்து, குடும்பத்தில் உள்ள வயதானவர்களின் சாபத்தை வாங்கினால், அந்த நபரின் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் குடும்ப ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டமத்தில் கேதுவும் இருந்து, இல்வாழ்க்கையை நிம்மதி அற்றதாக மாற்றிவிடுவார்கள்.

    * சகோதரர்களை மதிக்காமல், அவர்களின் உண்மை பாசத்தை உதறித் தள்ளுவதோடு, அவர்களை ஏமாற்றினால், அந்த நபரின் தலைமுறை பிள்ளைகளின் ஜாதகத்தில் சகோதர வீடான 3-ம் இடத்தில் ராகுவும், தர்ம கர்மா ஸ்தானமான 9-ம் இடத்தில் கேதுவும் இருந்து தொல்லை தருவார்கள்.

    * நண்பர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து அவர்களின் சொத்தை அபகரித்தல் போன்ற விஷயங்களை முன் ஜென்மத்தில் செய்திருந்தால், அவர்களுக்கு ஆறாம் வீட்டில் ராகு அல்லது கேது, பன்னிரண்டாம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்து தண்டனை வழங்குவார்கள்.

    * வேலை செய்தவர்களுக்கு அதற்கான சரியான கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றினாலோ, அல்லது மற்றவர்களுக்கான வேலையை பறித்துக் கொண்டாலோ, அந்த பாவம் சம்பந்தப்பட்ட நபரின் தலைமுறை பிள்ளைகளின் ஜீவன ஸ்தானத்தில் ராகு-கேதுவாக அமர்ந்து, தொழிலில் முன்னேற்றம் ஏற்படவிடாமல் தடுக்கும்.

    இதுபோன்று இன்னும் பல வழிகளில் ஒருவருக்கு ராகு-கேது தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷத்தால் அவதிப்படுபவர்கள், ராகு காலத்தில் துர்க்கை தேவி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தினமும் ராகுவுக்குரிய சுலோகத்தை பாராயணம் செய்து வருவது நன்மையளிக்கும்.

    நாகத் துவாஜாய வித்மஹே

    பத்ம ஹஸ்தாய தீமஹே

    தந்நோ ராகு ப்ரசோதயாத்

    அச்வ த்வஜாய வித்மஹே

    சூல ஹஸ்தாய தீமஹி

    தந்நோ கேது ப்ரசோதயாத்

    இந்த மந்திரத்தைத் தினமும் 9 முறை கூறி வந்தால் ராகு-கேதுவால் ஏற்படும் துன்பங்கள் வெகுவாக குறையும்.
    ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்க பெறுவதாக அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர்.
    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தலைஞாயிறு என்ற ஊர். இங்கு ‘குற்றம் பொறுத்த நாதர்’ திருக்கோவில் அமைந்துள்ளது. இந்திரன், தான் செய்த குற்றம் ஒன்றை பொறுத்தருள வேண்டும் என்று, இத்தல இறைவனை வழிபட்டு பலன் பெற்றான். இதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘குற்றம் பொறுத்த நாதர்’ என்ற பெயர் வந்தது.

    சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படுபவர், வசிஷ்டர். அவர் ஒரு முறை ஞானம் பெறுவதற்காக, பல திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரை சந்தித்த பிரம்மன், “தர்மம் ஒன்று செய்தால், அதன் பலன் பத்து மடங்காக கிடைக்கும் ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு சென்று சிவபூஜை செய்தால், ஞானம் பெறலாம்” என்று, இத்தல பெருமையைக் கூறி அனுப்பினார். வசிஷ்டரும் இந்த திருத்தலம் உள்ள பகுதிக்கு வந்து சிவலிங்கம் ஒன்றை நிறுவி வழிபட்டதன் மூலம் ஞானம் பெற்றார்.

    இத்தலத்திற்கு வந்து வழிபடும் எவருக்கும் அடுத்த பிறவி இருக்காது என்று கூறப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷம் உள்ளவர்கள், ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்கள் விரும்பிய பலன்கள் கிடைக்க பெறுவதாக அனுபவம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இத்தல தட்சிணாமூர்த்திக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
    பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
    * லிங்கோத்பவர் - முக்தி கிடைக்கும்

    * திரிமூர்த்தி - குழந்தைப்பேறு அமையும்

    * கல்யாண சுந்தரர் - திருமண பாக்கியம் வந்துசேரும்

    * சுகாசனர் - நியாயமான ஆசைகள் நிறைவேறும்

    * கங்காதரர் - பாவங்கள் விலகும்

    * நடேசர் - மகப்பேறு கிட்டும்

    * சண்டேச அனுக்ரகர் - கெட்ட எண்ணம் நீங்கும்

    * ரிஷபாரூடர் - நல்ல முயற்சிகளில் வெற்றி வந்துசேரும்

    * நீலகண்டர் - விஷ பூச்சிகளின் ஆபத்து நீங்கும்.

    * ஹரிஹர மூர்த்தி - வழக்குகள் வெற்றியாகும்.

    * ஏகபாத மூர்த்தி - தம்பதியினரிடையே ஒற்றுமை நிலவும்

    * உமாசகாயர் - துணையின் உடல்நலம் சீராகும்

    * அர்த்தநாரீஸ்வரர் - தம்பதியர் கருத்து வேறுபாடு மறையும்

    * தட்சிணாமூர்த்தி - கலை ஞானம், கல்வி ஞானம் வளரும்

    * சோமாதி நாயகர் - சகல சவுபாக்கியமும் கிடைக்கும்

    * சோமாஸ்கந்தர் - பிள்ளைகள் ஆரோக்கியமாக இருப்பர்

    * சந்திர மவுலீஸ்வரர் - தனமும் தானியமும் சேரும்

    * வீரபத்திரர் - எதிரி பயம் விலகும்

    * காலசம்ஹாரர் - மரண பயமும், அகால மரணமும் நேராது

    * காமாந்தகர் - தடைகள் நீங்கும், ஞானம் சித்திக்கும்

    * கஜசம்ஹாரர் - பிறர் செய்த தீவினையின் பாதிப்பு அகலும்

    * திரிபுர சம்ஹாரர் - பிறவிப் பிணி தீரும், எம பயம் வராது

    * பிட்சாடனர் - மோக மாயை விலகும்

    * ஜலந்தர சம்ஹாரர் - விரோதிகள் விலகுவர்

    * சரப மூர்த்தி - மாயை, கன்மம் விலகும்

    * பைரவர் - இறையருள் எப்போதும் காக்கும்.

    27 நட்சத்திரங்களில் முதலாவதாக வரும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
    அஸ்வினி நட்சத்திரம் நவகிரகங்களில் கேது பகவானுக்குரிய நட்சத்திரமாக இருக்கிறது. அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்த குழந்தைகளால் அவர்களின் தந்தைக்கு தோஷம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் வரை பொருள் ரீதியான கஷ்டங்களை உருவாக்கும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தவர்களுக்கு சிறிய அளவில் தோஷங்கள் உண்டு.

    இந்த தோஷங்கள் அனைத்தும் நீங்க உங்கள் சக்திக்கேற்ப வருடமொரு முறை வசதி குறைந்தவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய வேண்டும். அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் குதிரைகளுக்கு கொள்ளு தானியங்களை உணவாக தர வேண்டும். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதியாக கேது பகவான் இருப்பதால் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கேது பகவானை வழிபட்டு வரவேண்டும். மருந்துகள் வாங்க வசதியற்ற ஏழைகளுக்கு மருந்துகளை வாங்கி தருவது சிறந்த பரிகாரமாகும்.

    அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர தினத்தன்று எட்டி மரம் தலவிருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அந்த எட்டி மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவது, அந்த எட்டி மரத்திற்கு அடியில் அமர்ந்து தியானம் செய்வதாலும் அவர்களின் தோஷங்கள் நீங்கப் பெறும். தினந்தோறும் சரஸ்வதி தேவி மந்திரத்தை கூறி வழிபடுவது அவர்களுக்கு பல நன்மைகளை தரும். விநாயகரை வழிபடுவது அவர்களுக்கு அனைத்து காரியங்களும் தடையின்றி முடிய உதவி புரியும்.
    இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள்.
    மதுரையம்பதியின் பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலம் என்றும், மதுரையில் சம்பந்தர் பெருமான் பாடிய 2-வது தலம் என்றும், பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட 4-வது கோவில் என்றும் போற்றப்படுகிறது திருவாப்புடையார் கோவில். மலைகளில் மேரு, பசுக்களில் காமதேனு, கொடையில் மேகம் என இருப்பதைவிட அளவிற் பெரிய திருவுளம் கொண்டவர் திருவாப்புடையார் என்பர். இவரைத் தரிசித்தால், மற்ற புண்ணிய தலங்களின் மூர்த்திகளைத் தரிசித்த பலன் உண்டு என்கிறது ஸ்தல புராணம். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை. ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீநடராஜர் ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர். ஸ்தல தீர்த்தம் இடப தீர்த்தம். ஸ்தல விருட்சம்- கொன்றைஎன்கிறது ஸ்தல புராணம்.

    வழிபாட்டுப் பலன்கள் :

    • இத்தலத்து இறைவனுக்கு ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் அது ஆயிரம் பசுக்களைத் தானம் செய்ததால் கிடைக்கும் பலனுக்கு இணையானதாகும்.

    • இத்தலத்து இறைவனை இளநீர் கொண்டு நீராட்டி வழிபட்டால், அது நூறு அசுவமேத வேள்வி செய்வதால் கிடைக்கும் பலனைத் தரக்கூடியது.

    • தாங்கள் செய்த தவறுகளால் அனைத்தையும் இழந்து வறுமைக்குள்ளானவர்கள், தங்களது தவறுகளை உணர்ந்து, இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள்.

    • இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமானை செவ்வாய் தோஷமுடையவர்கள் வழிபட்டால், அவர்களுடைய தோஷம் நீங்கிச் சிறந்த பலன் கிடைக்கப் பெறுவார்கள்.

    • இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் திருவாப்புடையார் கோவிலில் சிறப்பு பூஜைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறும். கார்த்திகை சோம வாரத்தில் (திங்கட்கிழமை) சிவனாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். கார்த்திகையில் திருவாப்புடையாரை வணங்கினால், சகல செல்வங்களும் வந்துசேரும். வீட்டின் தரித்திரம் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும்.
    கண் திருஷ்டி ஹோமம், பிரம்மஹத்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் என்று பலப்பல ஹோமங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பெறலாம்.
    * கணபதி ஹோமம் - தடைகள் நீங்கும்.

    * சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் விலகும்.

    * சுதர்சன ஹோமம் - ஏவல், பில்லி, சூன்யம் நீங்கும், வெற்றி தரும்.

    * நவக்கிரக ஹோமம் - நவக்கிரக கேடு நீங்கி மகிழ்ச்சி தரும்.

    * ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.

    * மிருத்யுஞ்ச ஹோமம் - பிரேத சாபம் நீங்கும்.

    * புத்திர காமோஷ்டி ஹோமம் - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    * சுயம்வர கலா ஹோமம் - பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

    * கந்தர்வ ராஜம் ஹோமம் - ஆண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

    * குபேர ஹோமம் - செல்வ வளம் தரும்.

    * தில ஹோமம் - இறந்தவர்களின் சாபம் நீங்கும்.

    * பிரத்யங்கரா ஹோமம் - எதிரிகள் தொல்லை நீங்கும்.

    இவைத் தவிர கண் திருஷ்டி ஹோமம், பிரம்மஹத்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் என்று பலப்பல ஹோமங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பெறலாம்.
    ×