என் மலர்
தோஷ பரிகாரங்கள்
நாம் சக்கரத்தாழ்வாரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நம்முடைய வளமான வாழ்க்கையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் வெற்றிப் படிகளாகும்.
சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து, சிவப்பு மலர்களால் மாலை சூட்டி, மனமுருகி "ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம " என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும். மேலும் சனி கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை அணிவித்து, அர்ச்சனை செய்து, அவரை 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் மனதில் எண்ணிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் தடையில்லாமல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு எனப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னதி எழுப்புவர்.
சக்கரத்தாழ்வாரை வணங்கிட நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை. சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நினைத்த காரியம் ஈடேறி, வெற்றி கிட்டும். மன அமைதியின்மை, செய்யும் தொழிலில் நிலையற்ற தன்மை, கெட்ட கனவு, எதிர்மறை எண்ணங்கள், பகைவர்களால் ஏவப்பட்ட பில்லி, சூனியம், ஏவல், உடல் நலம் சரியில்லாமல் சித்தபிரமை, புத்தி சுவாதீனம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மதுரையில் உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயிலில் வீற்றிருக்கும் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் பிரச்சனைகளையும், துன்பங்களையும் தீர்த்து வைப்பார்.
‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். அப்படியென்றால் அவரிடம் அபயம் என்று போய் நின்றால், அடுத்த கணமே நம்மை நம் இடர்களில் இருந்து காத்தருள்வார். திருமாலின் பக்தர்களுக்குத் துன்பம் ஏற்பட்டால், அது அந்த பெருமாளுக்கே ஏற்பட்ட இடையூறாக கருதி விரைந்து காப்பவர் சக்கரத்தாழ்வார்.
நாம் அவரை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும், நம்முடைய வளமான வாழ்க்கையை நோக்கி நாம் எடுத்து வைக்கும் வெற்றிப் படிகளாகும்.

எப்போதும் தடங்கல், எந்த காரியங்களும் நடக்காமல் போதல், தோல்வி பற்றியே எப்போதும் சிந்தனை போன்ற எதிர்மறை சக்திகளை எளிய பரிகாரம் மூலம் நம் உடலில் இருந்து விரட்டி அடிக்கலாம்.
எப்போதும் தடங்கல், எந்த காரியங்களும் முடிவு வரை வந்து பின்பு நடக்காமல் போதல், எப்போதும் மனக்கவலை, தோல்வி பற்றியே எப்போதும் சிந்தனை போன்ற எதிர் மறை சக்திகளை கீழ்க்கண்ட பரிகாரம் மூலம் நம் உடலில் இருந்து விரட்டி அடிக்கலாம். இதை முதல் முதல் ஆரம்பிக்கும் நாள் அமாவாசை நாளாக இருத்தல் நலம். பின்பு தேவைப்படும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.
இந்த பரிகாரம் செய்ய 2 கோழி முட்டை தேவை.
உடைகளை முழுதும் கலைந்து குளியல் அறையில் கிழக்கு நோக்கி நின்று கொள்ளவும். பின்பு 1 முட்டையை எடுத்து அதை ராக் சால்ட் அல்லது கல் உப்பு நீரால் கழுவி கொள்ளவும்.பின்பு சிறிது எலுமிச்சை நீரால் கழுவவும்.
பின்பு கண்களை மூடி கொண்டு பிரபஞ்சத்தை உங்கள் எதிர் மறை சக்திகள் அனைத்தும் விலக வேண்டி கொள்ளவும். பின்பு உச்சந்தலையில் ஆரம்பித்து உடல் முழுதும் மெதுவாக ஒரு இடம் விடாமல் முட்டையால் தடவ ஆரம்பிக்கவும். உடலில் உள்ள எதிர் மறை சக்திகள் அனைத்தும் முட்டை சுவீகரித்து கொள்ளும். உடலில் ஒரு இடம் விடாமல் தடவி கொள்ளவும்.
ஏதேனும் இடத்தில் வலி இருந்தால் அந்த இடத்தை பிரத்யேகமாக கவனித்து தடவி கொள்ளவும். உள்ளங்கால் வரை தடவ வேண்டும். முக்கியமாக கழுத்தின் பின் புறம், கை கால்களின் முட்டிகளின் பின்புறங்களில் நன்கு தேய்க்கவும். இந்த இடங்களில் தான் எதிர் மறை சக்திகள் அதிகம் தங்கும். நன்கு தேய்த்து முடித்ததும் ஒரு பாத்திரத்தில் அதை உடைத்து விட்டு பார்க்கவும்.
முட்டையில் கொப்பளம் அல்லது குமிழ்கள் வரின் எதிர் மறை சக்திகள் எடுக்கப்பட்டு விட்டது என அறிந்து கொள்ளவும். சாரங்களாக வந்தால் மேலும் எடுக்கப்பட வேண்டும் என அர்த்தம். ரத்தம் அல்லது கருப்பு புள்ளிகள் இருப்பின் ஏதோ பெரிய எதிர் மறை சக்தி இருந்தது களைந்து விட்டது என அர்த்தம். பின்பு இதை கழிவறையில் கொட்டி அதில் எலுமிச்சை நீர் சிறிது மற்றும் கல் உப்பு போட்டு நீர் விட்டு கழுவி விட்டு, குளிக்கும் தண்ணீரில் ராக் சால்ட் கலந்து குளியல் செய்யவும்.
மற்றொரு முட்டையை மூன்று நாட்கள் இரவு தூங்கும் சமயம் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் முட்டையை போட்டு, தலை மாட்டில் வைத்து உறங்கவும். பின்பு காலையில் அந்த நீரை கழிவறையில் கொட்டி விடவும். மூன்று நாட்களும் புதிய நீரை எடுத்து கொள்ளவும். நான்காம் நாள் முட்டையை கழிவறை அல்லது தெரு சாக்கடையில் எறிந்து விடலாம்.
மேலை நாடுகளில் பரவலாக கடைபிடிக்கும் பரிகாரம் இது. மிகுந்த சக்தி வாய்ந்தது. செய்து பயன் அடையுங்கள்.

ராகு - கேது தோஷத்திற்கு எளிய பயனுள்ள பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களை செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
1. காளாஸ்திரி சென்று ராகு காலத்தில் பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்து வந்தால் சர்ப்ப தோஷம் விலகும்.
2. கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும் தோஷ நிவர்த்தி பெறலாம்.
3. ராகு காலங்களில் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.
4. அம்மன், துர்க்கை, சரபேஸ்வரர் இவர்களுக்கு ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால் தோஷம் விலகும்.
5. ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வந்தால் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
6. காஞ்சீபுரத்தில் உள்ள சித்திரகுப்தன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வந்தால் கேது தோஷம் விலகும்.
7. தினசரி விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் தோஷம் விலகும். சங்கடஹர சதுர்த்தி அன்று அருகம்புல் மாலை விநாயகருக்கு சாத்தி வழிபட்டு வந்தால் தோஷம் அகலும்.
8. ராகு தோஷம் உடையவர்கள் தூங்கும்போது தலையணைக்கடியில் அருகம்புல் வைத்தும், கேது தோஷம் உடையவர்கள் தர்ப்பைப் புல்லையும் தலையணைக்கடியில் வைத்துப் படுத்து உறங்கினால் தோஷங்கள் அகலும். 9 வாரம் செய்யவும். அதன்பிறகு அந்த புல்லை கடலில் விட்டு விடவும்.
9. வீட்டில் விளக்கேற்றி ராகு, கேதுவின் காயத்ரி மந்திரங்களை சொல்லி வந்தால் தோஷங்கள் விலகும்.
ராகு காயத்ரி
“ஓம் நகத் வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்தோ ராகு ப்ரசோதயாத்!”

ஒரு பசுவை நாள் முழுவதும் பார்த்தபடி, தொழுவத்தில் இருந்தாலே, பிரம்மஹத்தி தோஷம் விலகிவிடும் என்கிறார்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு முறை ரமண மகரிஷியைத் தேடி, ஒரு செல்வந்தர் வந்தார். அவர் வட்டிக்கு பணம் கொடுத்து தொழில் செய்பவர். மிகவும் கருமி. அவருக்கு உடல் முழுவதும் வெள்ளை வெள்ளையாய் படை போன்று வந்திருந்தது. எத்தனை எத்தனையோ வைத்தியர்களிடம் எல்லாம் இந்த நோய் பற்றி காட்டியும், அவர்கள் கொடுத்த மருந்து எதற்கும் நோய் குணமாகவில்லை. ஒரு கட்டத்தில் அந்த செல்வந்தருக்கு, உடலில் ஆடைகளே அணிய முடியாத அளவுக்கு, நோயின் தீவிரம் அதிகமானது. எரிச்சல் மற்றும் வலியால் துடித்துப் போனார்.
அவருக்குத் தெரிந்தவர்கள், ரமண மகரிஷியைப் போய் பார்த்தால், ஏதாவது தீர்வு சொல்வார் என்று சொன்னதைக் கேட்டுதான், திருவண்ணாமலையில் இருந்த ரமணரைத் தேடி வந்திருந்தார் அந்த செல்வந்தர்.
செல்வந்தரைப் பார்த்ததும், ‘நீ வட்டிக்கு விடுவதை முதலில் நிறுத்து. உன்னிடம் உள்ள செல்வத்தைக் கொண்டு ஏழை எளியோருக்கு தான, தர்மங்கள் செய். ஆசிரமத்தில் உள்ள கோ - சாலையில் ஒரு மண்டலம் வேலை செய். பசுக்களை குளிப்பாட்டு, சாணத்தை அள்ளிப்போடு, கோ-சாலையை சுத்தம் செய்!’ என்றார்.
ஏதாவது மருந்து சொல்வார் என்று வந்தால், இவர் என்ன பசுக் கூடத்தில் போய் வேலை பார்க்கச் சொல்கிறார்? என்று அந்தச் செல்வந்தருக்குத் தோன்றினாலும், சரி என்று ஒப்புக்கொண்டார். ஆசிரமத்தின் கோ-சாலையில் வேலை செய்யத் தொடங்கினார். சரியாக ஒரு மண்டலம்.. அதாவது 48 நாட்கள் கழித்துப் பார்த்த போது, அவரது உடலில் இருந்த தோல் நோய், இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது. அவர் பரிபூரண குணம் பெற்றிருந்தார்.
பசுக்களின் மூச்சுக் காற்றை சுவாசிப்பது, சஞ்சீவினியைவிட சிறந்த மருந்து என்பதை ரமண மகரிஷி உணர்ந்திருந்தார்.
தீராத தோல் நோய் உள்ளவர்கள், கவுரவக் குறைச்சலாக எண்ணாமல், உங்கள் அந்தஸ்தை கொஞ்சம் தூக்கி தூர போட்டுவிட்டு, ஏதேனும் கோ-சாலையில் தினசரி இரண்டு மணிநேரம் துப்புரவுப் பணியை செய்து பாருங்கள். கோ-சேவையின் மகத்துவம் புரியும்.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தோஷம் உண்டு, பசுவைத் தவிர.
ஒரு பசுவை நாள் முழுவதும் பார்த்தபடி, தொழுவத்தில் இருந்தாலே, பிரம்மஹத்தி தோஷம் விலகிவிடும் என்கிறார்கள். தோல் நோய் குணமாகாதா என்ன?..
ஒரு பசுவுக்கு ஒரு நாள் தண்ணீர் தந்தவனின், முன்னோர்களில் 7 தலைமுறையினர் முக்தியடைவார்களாம்.
அதிகாலையில் எழுந்தவுடன் யாரிடமும் பேசாமல்,
‘சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசினி
பாவனே சுரபி சிரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே’
என்ற மந்திரத்தை உச்சரித்தபடி, பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுத்தால், குழந்தைப் பேறு கிடைக்குமாம்.
பசு காயத்ரி மந்திரம்:
‘ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீ மஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்’

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சாலையில் உள்ள கோட்டை மலை வேணுகோபால சுவாமி இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருமணத்துக்கு பின்பு அனைவரது வீட்டிலும் ஆசைப்படுவது குழந்தைகளைத்தான். குழந்தை பாக்கியத்தை தடுத்து நிற்கும் தோஷங்களில் இருந்து விடுபட என்ன செய்யுறதுன்னு கவலைப்படுபவர்கள் இந்த கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோவிலுக்கு குடும்பத்துடன் போய் வழிபட்டால் மாதங்களிலேயே வீட்டில் ‘குவா… குவா…’ சத்தம் கேட்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் சாலையில் சில கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதிகளின் நடுவே மலைமேல் அமைந்துள்ளது கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோவில். இக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுபோலவே பல தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளதாகக் கூறுகின்றனர் சுற்றுவட்டார மக்கள்.
சம்புவராய மன்னர் தன் மனைவிக்கு குழந்தை பாக்கியம் வேண்டி கட்டியதே கோட்டை மலை ஸ்ரீ ருக்மணி, சத்யபாமா வேணுகோபால சுவாமி கோவில். இக்கோவிலின் சிறப்பாக, காலை நேர கதிரவனின் ஒளி பெருமாளின் திருமுகத்தில் படும் காட்சி காண்போரை பரவச நிலையடையச் செய்யும். ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஜனாகர்ஷண சக்கரமும் இக்கோவில் தளத்தில் அமைத்துள்ளது.
சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை வழியாக சுமார் 162 கிலோ மீட்டர் பயணித்தால் வேணுகோபால சுவாமி கோவிலை அடையலாம். திருச்சி எக்ஸ்பிரஸ், எல்டிடி காரைக்கால் எக்ஸ்பிரஸ், திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ், மதுரை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரயில்களும் திருவண்ணாமலைக்கு சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன.

ராகு காலத்தில் உக்கிர தெய்வங்களை வழிபட்டால், நம்மிடம் ஏற்படும் எல்லாவித பயம் நீங்கி மனதில் தைரியம் பிறக்கும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ராகுவின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடம் ஆகும். ஆக, ஒன்றரை மணி நேரம் ராகு காலம் இருக்கும்.
கிழமையைப் பொறுத்து ராகு கால நேரம் மாறும். இந்த நேரத்தில் வெளியூர் பயணம், புதியமுயற்சி, சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்வது கூடாது. இந்த நேரத்தில் உக்கிர தெய்வங்களான துர்க்கை, பைரவர், சண்டீதேவி, நரசிம்மர், பிரத்யங்கிரா, காளி, அங்காரகர்(செவ்வாய்) போன்ற தெய்வங்களை வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால், நம்மிடம் ஏற்படும் எல்லாவித பயம் நீங்கி மனதில் தைரியம் பிறக்கும்.
ராகு காலம் நல்லதும் செய்யும் யாருக்கு என்றால் ராகு நட்சத்திரத்தில்(திருவாதிரை, சுவாதி, சதயம்) பிறந்தவர்களுக்கும் ராகு தசை, புத்தி நடப்பவர்களுக்கும், ராகு = மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ராசிகளில் உள்ள ஜாதகர்களுக்கும் ராகு காலத்தில் தீமை எதுவும் நடக்காது.

தேர்வுக்கு படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரங்களை செய்து வரலாம்.
(1) படிக்கும் அறையை / இடத்தை கண்டிப்பாக சுத்தமான முறையில் எபோதும் வைத்திருக்க அறிவுறுத்தவும்.
(2) குரங்குகளுக்கு வெல்ல கட்டி கொடுப்பது, படிக்கும் முன் அஞ்சநேயரை வழிபட்டு பின்பு படிப்பது அல்லது பரீட்சைக்கு செல்வது நல்ல பலன் தரும்
(3) குரங்குகளுக்கு உணவிட முடியாதோர், பறவைகளுக்கு உணவிட்டு வரலாம்.
(4) அடிக்கடி மறதி ஏற்படும் மாணவர்கள் மற்றும் தோல்வி பயத்தில் எப்போதும் உள்ளோருக்கு, பாக்கெட்டில் சிறிய கற்பூர கட்டி மற்றும் படிகார கட்டி வைத்து வர எதிர் மறை பயங்கள் நீங்கி, வெற்றி கிட்டும். பெண் குழந்தைகளுக்கு இவை இரண்டையும் கண் மூடி கையில் 10 நிமிடம் வைத்திருக்க கூறி பின்பு பர்சில் அல்லது பையில் வைத்திருக்க சொல்லவும்.
(5) குழந்தைகள் ஸ்கூல் அல்லது காலேஜ் செல்லும் முன் சிறிய கிண்ணத்தில் தயிரில் சிறிது சக்கரை கொண்டு கலக்கி, அதை உண்டு விட்டு செல்ல செய்யவும்.

ராகு, கேது, ஸ்தலங்களுக்கு சென்று முறையான பரிகாரங்களை செய்து வந்தால் நாக தோஷம் விலகி நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.
ராகு, கேது, தலமான காளகஸ்திக்குச் சென்று மூன்று இரவுகள் தங்கி ஈசனை வணங்கி வந்தால் நாக தோஷம் விலகி நல்ல குழந்தைகள் பிறப்பார்கள்.
ராமேஸ்வரம் சென்று மூன்று நாள் தங்கி கடலில் நீராடி ராமலிங்க சுவாமியை வணங்கி வந்தால் சர்ப்ப தோஷம் பரிகாரமடைந்து குழந்தைகள் பிறப்பார்கள்.
இராமநாதபுரம் ரெயில் நிலையத்தில் இறங்கி தேவிபட்டினம் போகும் பஸ்சில் ஏறி நவபாஷணத்தில் இறங்கவும். கடலில் ஸ்ரீராமபிரானால் அமைக்கப்பட்ட நவக்கிரகங்கள் இருக்கின்றன. கடலில் நீராடி நவக்கிரக பூஜை செய்தால் நாகதோஷம் பரிகாரமடையும். இதனால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
ராமநாதபுரத்திலிருந்து தர்ப்ப சயனம் சென்று விபீடணனுக்கு அபயமளித்த சேத்திரம் வணங்கி, அங்குள்ள தல விருட்சத்தில் தாங்கள் கட்டியுள்ள உடையில் சிறிது கிழித்து ஒரு சிறு கல் வைத்து மரக்கிளையில் கட்டி வந்தால் நாகதோஷம் விலகும்.
நாகர்கோவிலில் நாகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கு சென்று மூன்று இரவு தங்கி ஈசனை வணங்கினால் நாகதோஷம் பரிகாரமாகும்.
கும்பகோணத்திற்கு அருகில் திருநாகேசுவரம் இருக்கிறது. அந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனை வழிபட்டால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
பொருள் படைத்தவர் தங்கத்தால் குழந்தை உருவம் செய்து ஏழைக்கு அன்னம் அளித்து வேட்டி, துண்டு தாம்பூலம் பழத்துடன் சொர்ண விக்ரகத்தைத் தானம் செய்தால் நாகதோஷம் விலகும்.
தங்கத்தில் செய்ய சக்தியில்லாதவர்கள் வெள்ளியில் செய்து தானம் அளிக்கலாம்.
தங்கம் அல்லது வெள்ளி சிறு ஐந்து தலை நாகம் செய்து வீட்டில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகம் செய்து, பூஜித்து பிறகு ஒருவருக்கு புது வேட்டி, துண்டு தாம்பூலம் தட்சணையுடன் நாக விக்கிரகத்தையும் தானம் செய்யலாம்.
கருங்கல்லில் நாகப் பிரதிஷ்டை செய்து ஆறு, குளம் அருகில் வைத்து நாற்பது நாள்கள் பாலபிஷேகத்துடன் பூசித்து தினமும் 108 முறை வலம் வந்தால் நாக தோஷம் நிவர்த்தியாகும்.
இரண்டு நாகங்கள் பின்னிக்கொண்டு ஒன்றின் முகத்தை ஒன்று பார்க்குமாறு கல்லில் வடித்து அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாட்கள் விளக்கேற்றி வைத்து பூஜித்தால் நாகதோஷம் விலகும்.
கண்ணன் நடனமாடுவது போலவும், அவனுக்கு ஐந்து தலைநாகம் குடை பிடிப்பது போலவும் கல்லில் வடித்து வேம்பும் அரசும் இணைந்திருக்கும் குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் விளக்கேற்றி வலம் வந்து வணங்கினால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.

சிவலிங்கத்திற்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் சிலை வடித்து நதிக்கரை அல்லது குளக்கரையில் பிரதிஷ்டை செய்து நாற்பது நாள் பூஜித்து வலம் வந்தால் நாகதோஷம் பரிகாரமாகும்.
குளம் அல்லது நதிக்கரையில் அரசு வேம்பு கன்றுகளை நட்டு, முறையாகத் திருமணம் செய்து குறைந்தது நூறு தம்பதிகளுக்கு விருந்தும் தட்சணை தாம்பூலம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும். நல்ல குழந்தைகள் பிறப்பதுடன் வாழ்க்கையும் இன்பமாக அமையும்.
வசதி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு பயிர் நிலம் வாங்கி தானம் அளித்தால் நாகதோஷம் நிவர்த்தியாகும்.
ஓர் ஏழைக்கு அன்னதானம் செய்து அளித்து புது வேட்டி துண்டு. தாம்பூலம் தட்சணையுடன் பால் பசுவும் கன்றையும் தானம் செய்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.
வீட்டில் ராகு படம் வைத்து தினமும் பூஜை செய்யலாம்.
தினமும் இராமாயணம் படிக்கலாம்.
மாதம் ஒரு சிவாலயம் சென்று ஈசனை வழிபட்டு வரலாம். நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஒரு தம்பதிக்கு உணவு அளித்து தாம்பூலம் தட்சணை கொடுத்து வலம் வந்து நமஸ்கரித்து வருவதால் எல்லா தோஷங்களும் நிவர்த்தியாகி வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
புத்திரதோஷம் ராகுவால் ஏற்பட்டால் செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தின் போது ராகுவின் இஷ்ட தெய்வமான பத்ரகாளிக்கு எலுமிச்சம் பழத்தோலில் எண்ணெய் விட்டுத் திரிபோட்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். தோஷம் நீங்கி குழந்தை பிறந்து நீண்ட ஆயுளுடன் இருப்பர்.
சிவாலயம் சென்று நவக்கிரகப் பிரதட்சணம் செய்யும் போது முதலில் வசமாக ஒன்பது முறை வலம் வந்து பிறகு ராகு கேதுவுக்கு பிரீதியாக இரண்டு முறை இடமாக வலம் வரவேண்டும். இவ்விதம் தினமும் செய்து வந்தால் நாகதோஷம் விலகி சத்புத்திரர்கள் பிறந்து நீண்ட ஆயுகளுடன் இருப்பார்கள்.
நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்யச் செல்லும் போது ஓரு பிடி உளுந்து எடுத்துச் செல்லவும். ராகுவின் பாதங்களில் உளுந்தையும் கேதுவின் பாதங்களில் கொள்ளையும் வைத்து வணங்கி வந்தால் நாக தோஷம் பரிகாரமாகும்.
ராகுவை பிரீதி செய்ய கருப்பு வேட்டி வாங்கி தானம் செய்வதாலும் நாகதோஷம் அகலும்.

இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில் வியாபார நஷ்டம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அரியலூர் மாவட்டம் செட்டித் திருக்கோணம் கிராமத்தில் உள்ள இரணசிங்க ஈஸ்வரர் திருக்கோவில், பிற்கால சோழர் கலைக்கு சான்றாகவும், புராணச் செய்திகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டும் பழமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த ஆலயம் வியாபார நஷ்டம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது. முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் இவ்வூர் மதுராந்தகபுரம் என்ற பெயரோடு பெரிய வணிக நகரமாக திகழ்ந்தது. இப்பகுதியில் வாழ்ந்த எண்ணெய் வியாபாரம் செய்யும் செட்டியார் ஒருவர், தன்னுடைய வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, குடும்ப பாரம் தாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார்.
சிறந்த சிவ பக்தரான அவரது கனவில் தோன்றிய இத்தல இறைவன், ‘மகா சிவராத்திரி அன்று என்னை பூஜித்து அருள் பெருவாயாக!’ என்று கூறி மறைந்தார். மறுநாள் சிவராத்திரி என்பதால் அந்த வியாபாரி, இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை பூஜித்தார். இதையடுத்து அவரது வியாபாரம் பெருகி, நஷ்டத்தை ஈடுகட்டியதுடன் பெரும் பொருள் சேர்த்தார் என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.
எனவே வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள், பொருள் சேர்க்க நினைப்பவர்கள் மகா சிவராத்திரி அன்று, இங்குள்ள அடியார் தீர்த்தத்தில் நீராடி தல இறைவனை பூஜிப்பதால் வியாபார நஷ்டம் தீர்ந்து வியாபாரம் இரட்டிப்பாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இழந்த செல்வம், சரிந்த புகழ், கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம் அனைத்தையும் திரும்ப பெற எளிய பரிகாரம் உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6 மணியில் இருந்து முதல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முடிந்து அதில் நல்லெண்ணெய் விட்டு தீபமிட்டு மனதார வேண்டுதல் வைத்தால் மேற்கண்ட அனைத்தையும் திரும்ப பெறலாம்.
கோவிலுக்கு செல்ல முடியாதோர் வீட்டிலேயே அம்மனின் படத்தை வைத்து தனி பரிகார தீபமாக ஏற்றி வரலாம்.

நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
தீப வழிபாடு என்பது நம் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது என்றால் அது மிகையல்ல. நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.
வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வதனால், சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் ‘திருக்கார்த்திகை’ ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழி படுவது மிகவும் விஷேசமானதாகும்.

தானாக தோன்றிய ஈஸ்வரன் என்பதால் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்றும், ‘சுயம்பு லிங்கம்’ என்றும் அழைப்பது வழக்கம். அங்ஙனம் சிவலிங்கம் அமைந்த ஆலயங்களை வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
தமிழகத்தில் பல இடங்களில் சுயம்பு லிங்கங்கள் உள்ளன.
தானாக தோன்றிய ஈஸ்வரன் என்பதால் ‘தான்தோன்றீஸ்வரர்’ என்றும், ‘சுயம்பு லிங்கம்’ என்றும் அழைப்பது வழக்கம். அங்ஙனம் சிவலிங்கம் அமைந்த ஆலயங்களைத் தேடிச் சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
ஜென்ம நட்சத்திரம் அன்று சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடும். பிரதோஷ நேரத்தில் நந்தியம்பெருமானையும் வழிபாடு செய்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும்.
வைரவருக்கு வடைமாலை அணிவித்து வழிபட்டால் காரியத் தடை நீங்கும்.