என் மலர்
தோஷ பரிகாரங்கள்
பல்வேறு உடல்நலப்பிரச்சனைகள், தோல்வி, திருமண தடை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ராசிக்கற்கள் தீர்வு தருகின்றன.
நவக்கிரகத்தில் புதனுக்குரிய கல் மரகதம். அதாவது பச்சைக்கல். ‘மத்தளம் அடித்தால் மரகதம் சிதறும்’ என்பார்கள். எனவேதான் மரகத லிங்கம் உள்ள திருக்கோவில்களில் இறைவனுக்கு தீபம் மட்டும் காட்டுவதாகச் சொல்வார்கள்.
புதன் கிரகத்தால் பலன்பெற விரும்புபவர்கள் மரகதப் பச்சை மோதிரத்தை எந்த வடிவத்தில் செய்து, எந்த விரலில், எப்பொழுது அணிய வேண்டும் என்பதை சுய ஜாதக ரீதியாக அறிந்து கொண்டு அணிந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்.
பொதுவாக பெண்கள் நல்ல மரகதத்தை அணிந்து கொண்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அகலும். இருதயத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும்.

குலதெய்வம் தெரியாமல் எந்த பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். தெய்வங்களில்மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். எத்தனைதெய்வங்கள் இருப்பினும் எல்லா வித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும்சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.
நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறுசெய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவைஇஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்டதெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூடகுலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.
இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரதுகுலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்தியதேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள்.
மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாதகுலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு. குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்டபுண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும்வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள்என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்ம வினைகள் மிக அதிகமாகஇருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.
குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூஜைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரியவழிபாட்டினை செய்து வரவேண்டும்.
நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்டநாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவைசூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர்.
ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது. அந்த தோஷங்கள் 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம் 4.வந்தூலக தோஷம் 5.ப்ரணகால தோஷம் எனப்படும்.
வஞ்சித தோஷம்:- பார்க்கக் கூடாத படங்கள், வெறியூட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.
பந்த தோஷம்:- நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.
கல்பித தோஷம்:- பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.
வந்தூலக தோஷம்:- ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.
ப்ரணகால தோஷம்:- திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்…

சரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்தால் தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி கிடைக்கும்.
சரபேஸ்வரரை ஞாயிற்றுக் கிழமை ராகு கால வேளையில் (மாலை 4.30-6) வழிபடுவது விசேஷ பலனைத் தரும். சரபர் பைரவர் அம்சம் என்பதால் 11 நெய்தீபம் ஏற்றி வணங்குவது விஷேசம். உலகைகாக்கும் ஈசனின் ஒரு வடிவமே சரபேஸ்வரர் ஆவார்.
சரபேசர் : 1. சிவன் , 2. விஷ்ணு , 3. காளி(பிரத்யங்காரா தேவி), 4. துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம்தான் சரபேசர்.
எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.
இரணியனது வரத்தின் படியே,அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரணியனை வதம் செய்தார்.
அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார்.நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார்.
பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் சிவன் நடுக்கம்தீர்த்த பெருமான் என்றானார். சரபம் என்ற சொல்லுக்கு எட்டு கால்களை கொண்ட பறவை, இரண்டு தலைகளை கொண்ட வடிவம் எனப் பொருள்.
பட்சிகளின் அரசன். சிங்கத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டது சரபம். இத்திருவடிவம் “சிம்மக்ன மூர்த்தி”, “சிம்ஹாரி”, நரசிம்ம சம்ஹாரர்” என்றும் அழைக்கப்படுகின்றது.
பறவை போன்ற பொன்னிறம், இரு இறக்கைகள், சிவப்பேறிய கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய சிங்கத்தை போன்ற கால்கள் நான்கு. மனித உடல். கிரீடம் தரித்த சிங்க முகம். தந்தங்களை போன்ற கோரைப் பற்கள் என பயங்கர உருவமே சரபர்
சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள்.
பிரத்யங்கரா எனும் காளியும், துர்க்கையுமே இறக்கைகள்.
இந்திரனே நகங்கள். காலனே தொடைகள்.
சரபர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும்.
தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி. சரப மூல மந்திரத்தினை 100 அல்லது 1000 முறை ஜெபித்து, ராகு காலத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாதம், சூலை போன்ற கொடிய நோய்கள் தீரும். மலட்டுத் தன்மை நீங்கும்.
ராகு காலம் நீடிக்கும் 1 மணி நேர மும் சரப காயத்ரி மந்திரம் ஜெபிப்பது பாம்பு களிடமிருந்து காத்திடும்.

இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்.
இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்...கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்..
சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து தலையை 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்..பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்...குழந்தை அழாமல் தூங்கி விடும்.

குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெரு மண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்..இது கண் திருஷ்டியை போக்கும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்..
நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம். வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்...வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்...செவ்வாய் கிழமையில் இதை செய்யலாம்..!! சிலர் படிகாரக்கல், வெள்ளெருக்கு வேர், மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்...
மூன்று வயது குழந்தை வரை கன்னத்தில் கருப்பு பொட்டு வைத்துவிடுவர்..இதுவும் கெட்ட கண் பார்வையை தடுக்கும்...நாமும் வெளியே செல்லும்போது கருப்பு பொட்டு சிறிது வைக்கலாம்.. அந்த கருப்பு பொட்டு ஹோம குண்டத்தில் எடுக்கப்பட்ட சாம்பலாக இருக்க வேண்டும். அதனை நெய்யில் கலந்து இட்டுக்கொள்ள வேண்டும்...

மயில் இறகை புனிதமானதாக கருதி, வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.
மயில் இறகு என்று கேட்டதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது ஞாபகத்திற்கு வரும்.
மேலும், மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.
இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.

வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்கவும் செய்யும்.
மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்.

பில்லி, சூனியம் விலகவும், சந்தோஷம் பெருகவும், உயர்பதவி வேண்டியும், அரசியல் வாழ்வு சிறக்கவும் முருகப்பெருமானுக்கு காணிக்கை செலுத்தப்படுகிறது.
பழனி ஆண்டவனுக்கு செலுத்தப்படும் காணிக்கையால் குடும்பத்தில் கடன் தொல்லை தீரும். மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உடலில் ஏற்பட்டுள்ள நோய்கள் விலகவும், உடல் ஊனம் களையவும், தங்களின் விளை நிலத்தில் பன்மடங்கு விளைச்சல் பெருகவும், லாபம் கிடைக்கவும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு காவடி எடுத்து வருகின்றனர். செய்வினை, பில்லி, சூனியம் விலகவும், சந்தோஷம் பெருகவும், உயர்பதவி வேண்டியும், அரசியல் வாழ்வு சிறக்கவும் முருகப்பெருமானுக்கு காணிக்கை செலுத்தப்படுகிறது.
இது தவிர தங்கள் ஊரில் மழைவளம் சிறக்கவும், மருத்துவ கல்லூரியில் தங்கள் குழந்தைகளுக்கு இடம் கிடைக்கவும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கவும் பக்தர்களால் பழனி முருகன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. செவ்வாய்தோஷம் விலகி திருமணம் நடைபெறவும், தங்கள் தோட்டத்தில் உள்ள கால்நடைகள் பெருகவும் காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. தங்கள் குழந்தையின் அறுவை சிகிச்சை இனிதே நடைபெற வேண்டி காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. வெளிநாடு சென்று வேலை செய்வதற்கும் காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. நீண்டநாள் பிரிந்த கணவனுடன் இணைந்து வாழவேண்டி காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. தொலைந்து போன தங்கள் குழந்தை மீண்டும் கிடைக்க வேண்டியும், மனநிலை சரியில்லாத பெற்றோர்கள் குணமடைய வேண்டியும் பக்தர்கள் காணிக்கைகள் செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.
அதே போல் அரசு தேர்வுகளில் தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டியும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தப்படுகின்றன. கறவை மாடுகள், யானை குட்டிகள், சேவல் முதலானவற்றை நேர்த்திக்கடனாக செலுத்துவதாக வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் பழனி முருகன் கோவிலுக்கு அவற்றை காணிக்கையாக அளிக்கின்றனர்.
மேலும் திருவிழாக்காலங்களிலும், சாதாரண நாட்களிலும் பக்தர்கள் முடிக் காணிக்கை செலுத்தி பழனி ஆண்டவனை வழிபடுகின்றனர். பழனி முருகப்பெருமானுக்கு தானியங்களை காணிக்கையாக அளித்து வழிபடும் வழக்கம் தற்போது வரை இருந்து வருகின்றது. மலைக்கோவிலில் உள்ள படிப்பாதையில் பக்தர்கள் தானியங்களை சூறைவிடும் நிகழ்வும் நடைபெறும்.
தானியங்களை சூறைவிடுதல் கொங்கு நாட்டுப்புற கோவில்களில் காணப்படும் வழக்கமாகும். இந்நாட்டுப்புற வழக்கத்தினை பழனிமுருகன் கோவிலிலும் நம்மால் காணமுடிகின்றது. பழனி ஆண்டவனை செழிப்பு தெய்வமாக கருதி கொங்கு நாட்டு விவசாயிகள் வழிபட்டு செல்கின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் முந்திரி கொட்டைகளை நவதானிய உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரள மாநில மக்களுக்கு இடையே நிகழும் சமூக ஒருமைப்பாட்டுணர்வை இது காட்டுகின்றது.

பக்தர்கள் மலைக்கோவிலில் துலாபார காணிக்கையாக சர்க்கரை, அச்சுவெல்லம், வாழைப்பழத்தார், நெய், கற்கண்டு போன்றவற்றை காணிக்கையாக வழங்குகின்றனர். பழனி முருகன் கோவிலில் நம்பிக்கை தொடர்பான காணிக்கைகளாக காதுகுத்துதல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், அன்னதானம் வழங்குதல், கங்கணக்காணிக்கை, உருவார காணிக்கை, தாலிக் காணிக்கைகளை அளித்தல் முதலியவை பக்தர்களால் செலுத்தப்பட்டு வருகின்றது.
மஞ்சள் துணியில் முடிந்து வைத்துள்ள கங்கணக்காணிக்கையை ஆண்களும் பெண்களும் பழனியாண்டவனுக்கு செலுத்தி வழிபாடு செய்கின்றனர். பக்தர்கள் பழனி ஆண்டவனுக்கு வழிபாட்டின் போது சொத்து காணிக்கைகளாக நிலங்கள், மண்டபங்களை செலுத்தியுள்ளதை அறியமுடிகின்றது. கோவிலுக்கும், சமூகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை இக்காணிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
இதே போல் பக்தர்கள் உண்டியல் காணிக்கைகளாக நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள், காசோலைகள், கைக்கடிகாரங்கள், வேல்கள் போன்றவற்றை செலுத்தி வழிபடுகின்றனர். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருகிற பக்தர்கள் தங்கள் நாட்டு நாணயங்கள், கரன்சி நோட்டுக்களை உண்டியலில் செலுத்தி வழிபட்டு செல்வதை காண முடிகின்றது.
நூற்றுக்கணக்கான கல் இருக்கைகள், படிக்கட்டுகள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளதை மலைக்கோவில் வளாகத்தில் காணமுடிகின்றது. பக்தர்கள் வேண்டுதல் அடிப்படையில் முருகனுக்கு தங்கத்தேர், சப்பரம், தங்கமயில் வாகனம் முதலியவற்றை காணிக்கையாக அளித்துள்ளனர். மன்னர்கள் பழனியாண்டவனுக்கு பூசை செய்வதற்காக நிலங்கள், பூசை பொருள்கள் வழங்கியது பற்றி கல்வெட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே பழனியாண்டவனுக்கு பங்குனி திருநாளில் காணிக்கை செலுத்தி எல்லா வளமும் பெறுவோமாக...!

ஜாதகத்தில் ராகு திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருநாகேஸ்வரம் கோவிலுக்கு வழிபாடு செய்தால் தோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.
நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு தனிக்கோவில் திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ராகுபகவான் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் தனது இரு தேவியர்களுடன் மங்கள ராகுவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
கயிலாயத்தில் சிவபெருமானை மட்டுமே பிருகு முனிவர் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சிவனிடம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தார். பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் அவளுக்கு தன் உடலில் பாதியை கொடுத்து உமையரு பாகமானார். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள்.
அதன்படி இந்த தலத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபெருமான், பார்வதி தேவி காட்சியளிக்கின்றனர். இறைவன் பெயர் நாகேஸ்வரர். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவியின் நாமம் பிறையணிஅம்மன். மகாசிவராத்திரி அன்று ராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். இதனால் தினமும் சிவ தரிசனம் பெறவேண்டி தனது மனைவிகள் நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் மங்கள ராகுவாக திருநாகேஸ்வரத்தில் தங்கி விட்டார்.
பொதுவாக ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, ராஜயோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.
இந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். இத்தல இறைவனுக்கு நாகநாதர், அர்த்தநாரீஸ்வரர் என இரு சன்னதிகள் உண்டு. அதைப்போல அம்மனுக்கு பிறையணி வாநுதல் உமை சன்னிதி, கிரிகுஜாம்பிகை சன்னிதியும் உண்டு. இத்தலத்தில் ராகுபகவான் உருவாக்கிய நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், எம தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள் இருக்கின்றன. ஆதி விநாயகர், கிரிகுஜாம்பாள், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்கள் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சன்னிதி உண்டு.
ராகுவை போல் கொடுப்பாரும் இல்லை. கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி. ஒருவர் ஜாதகத் தில் 3, 6, 11 ஆகிய இடங்களில் ராகு விளங்கினால் ராஜயோகம் கிட்டும்.
பரிகாரமுறை
ஜாதகத்தில் ராகு திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருநாகேஸ்வரம் கோவிலுக்கு வந்து விநாயகர், சிவன், கிரிகுஜாம்பாள் ஆகியோரை வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஹோமம், நாகசாந்தி செய்யலாம்.
கோவிலில் உள்ள வன்னி மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் திருமண தோஷம் விலகும். அதே போன்று வீட்டிற்கு நாகம் வந்தால் அவர்கள் பித்தளையில் நாக வடிவினை செய்து கோவிலில் வைக்க வேண்டும். நாகதோஷம் உள்ளவர்கள் கல்லால் ஆன நாக வடிவை வைத்து தோஷம் நீங்க வழிபாடு செய்ய வேண்டும்.
ராகு திசை கடுமையாக பாதித்தால் செவ்வாய்க்கிழமை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் துர்க்கை, காளியை வழிபடுவது நல்லது. உளுந்துசாதம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். நாகநாதருக்கு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தால் சகல தோஷங்களும், துன்பங்களும் நீங்கி நாகநாதரின் பரிபூரண அருள் கிடைக்கும் கும்பகோணத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல அடிக்கடி பஸ்வசதி உள்ளது.

செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் அழகிய முருகன் கோயில் ஸ்ரீசுப்பிரமணியரை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில திருமண வரம் கைகூடும்.
புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோயில் உள்ளது.
செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க்கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும். பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.
மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது. இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும். கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப்பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம். ஸ்ரீவள்ளி-ஸ்ரீதெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இருமத்தூரில் அமைந்துள்ள கொல்லாபுரியம்மன் கோவில் உள்ள இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சுயம்பு வடிவில் அம்மன் சிலை உருவானதாக கூறப்படுகிறது.
திருட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்காக கொல்லாபுரி அம்மன் கோவிலில் நூதன வழிபாடு நடத்தப்படுகிறது. கோவிலின் தெற்கு பகுதியில் தர்மபுரி- திருப்பத்தூர் சாலையின் ஓரத்தில் ஒரு பழமையான புளிய மரம் உள்ளது. திருட்டு போன பொருட்கள் கிடைக்க வேண்டி கொள்ளும் பக்தர்கள் கோழிகளை உயிருடன் கயிற்றில் கட்டி இந்த மரக்கிளைகளில் தொங்க விட்டு விடுகிறார்கள்.
இவ்வாறு கட்டப்பட்ட கோழிகள் இறந்து அவற்றின் உடல் காய்ந்து போவதற்குள் திருட்டு போன பொருட்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. இவ்வாறு திருட்டு போன பொருட்கள் கிடைத்தால் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடுகளை வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவில் வளாகத்தில் ஏராளமான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
வாகனங்களில் செல்லும்போது கொல்லாபுரிஅம்மன் கோவிலில் வழிபட்டால் வாகன விபத்துகள் ஏற்படாது என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து விதமான வாகனங்களையும் கோவில் வளாகத்தின் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜை நடத்திவிட்டு செல்லும் வழக்கம் உள்ளது.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் நிலக்கோட்டை மாரியம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கடந்த 1912-ம் ஆண்டுக்கு முன்பு மாரியம்மன் கோவில் பீடமாக இருந்தது. பின்னர் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இந்த கோவில் பைரவரை அஷ்டமி திதியில் வணங்கி வந்தால் அனைத்து தொல்லைகள், பீடைகள் நீங்கும். அதே போன்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இவ்வாறு குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியினர் ஆண்டுதோறும் கரும்பு தொட்டில்களுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது தவிர தங்கள் குறைகள் தீர்த்து வைக்கக்கோரி அம்மனிடம் மனம் உருகி வேண்டும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும், தீச்சட்டி, தீர்த்தக்காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பக்தர்களின் வாழ்வில் உள்ள இடர்பாடுகள் நீங்குகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களில் ஒன்றான அம்மைநோய் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய்தீர அம்மனை மனதார வேண்டிக்கொள்வார்கள். குறிப்பாக அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மைநோய் குணமாகும் என பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் அருள மனம் உருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனிடம் வேண்டுதல் வைத்து குழந்தை வரம் கிடைத்ததும் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து, அதை கரும்பில் தொட்டிலாக கட்டி அந்த தொட்டிலில் குழந்தையை வைத்து மாரியம்மன் கோவிலை 3 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பின்னர் தொட்டில் கட்டிய கரும்புகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.

கயிலாயமுடையார் திருக்கோவில் சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்து வந்தால், பூர்வ ஜென்ம சாபங்களில் இருந்து நிச்சயம் விடுபடலாம் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
திருச்சி அருகே சோழமாதேவியில் உள்ளது கயிலாயமுடையார் திருக்கோவில். உய்யகொண்டான் ஆற்றின் அருகே அமைந்துள்ள இந்த ஆலயம், பல வரலாற்றுச் சிறப்புகளை தன்னகத்தேக் கொண்டது. ஊரின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இத்தல இறைவனின் பெயர் ‘கயிலாயமுடையார்’ என்பதாகும். இறைவனின் இன்னொரு பெயர் ‘கைலாசத்து பரமேஸ்வரர்’ ஆகும். இறைவியின் திருநாமம் கற்பகாம்பாள்.
இந்த கோவிலில் தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. பிரதோஷம், சிவராத்திரி, சோமவாரம் போன்ற நாட்களில் இறைவன் மற்றும் இறைவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மார்கழி மாத தனுர் பூஜை இங்கு 30 நாட்களும் நடைபெறுகிறது.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் சுவாமியையும், அம்பாளையும் வழிபாடு செய்து வந்தால், பூர்வ ஜென்ம சாபங்களில் இருந்து நிச்சயம் விடுபடலாம் என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்: திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் உள்ள திருவெறும்பூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோழமாதேவி என்ற கிராமத்தில் உள்ளது இந்த கயிலாயமுடையார் ஆலயம்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவெறும்பூர் சென்று அங்கிருந்து சூரியூர் அல்லது துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் நகர பேருந்தில் பயணித்து சோழமாதேவி பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டும். அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.