என் மலர்
ஆன்மிகம்
- அலரிப்பூ - சத்தியம்
- செந்தாமரை - அறிவு
புன்னை - கொல்லாமை
வெள்ளெருக்கு - அடக்கம்
செண்பகம் - பொறுமை
நந்தியாவட்டை - அன்பு
நீலோற்பவம் - தியானம்
பாதிரிப்பூ - தவம்
அலரிப்பூ - சத்தியம்
செந்தாமரை - அறிவு
ஆகியவை எட்டு குணங்களைக் குறிக்கும் மலர்களாகும்.
- பாதிரிப்பூ - நல்ல மனைவி கிடைப்பாள்
- பலாச மலர் - நிறைய பேரின் அன்பு கிடைக்கும்
பூஜைக்கு உதவாத மலர்கள்
எடுத்தபின் மலர்ந்த பூ, பழம் பூ, எருக்கம் இலையிலும், ஆமணக்கும் இலையிலும் கட்டி வைத்த பூ, கட்டிய ஆடையிலும், கையிலும் வைத்த பூக்கள், கீழே உதிர்ந்த பூக்கள், இடுப்புகளின் கீழேயுள்ள உறுப்புகளில் பட்ட பூக்கள், புழுக்கடித்த பூக்கள், சிலந்தி பறவைகளின் எச்சம் பட்ட பூக்கள், தலை முடி பட்ட பூக்கள், இரவில் எடுத்த பூக்கள், நீரில் மூழ்கிய பூக்கள், அசுத்தமானவரால் எடுக்கப்பட்ட பூக்கள் போன்ற பூக்கள் ஒரு போதும் பூஜைக்கு ஆகாதவை.
அம்பிகைக்கு உகந்த மலர்கள்
பாதிரிப்பூ - நல்ல மனைவி கிடைப்பாள்
பலாச மலர் - நிறைய பேரின் அன்பு கிடைக்கும்
தாழம்பூ - உயர் பதவி முதலிய பெருமைகளை அடைவர்
மாதுளை - எல்லோடைய கருணையையும் பெறுவர்
தாமரைப்பூ - பகை நீங்கப் பெறுவார்கள்.
- பலாசம் பூ - களவுபோன பொருள் கிடைக்கும்
- எள்ளுப்பூ - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
சிவன் - தாழம்பூ
பிரமன் - தும்பை
துர்க்கை - அருகம்புல்
சூரியன் - வில்வம்
விநாயகர் - துளசி
திருமால் - நந்தியாவர்த்தம்
உமை - நெல்லி
பாவம் அகற்றும் மலர்கள்
பலாசம் பூ - களவுபோன பொருள் கிடைக்கும்
எள்ளுப்பூ - பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
கொன்றைப்பூ - அறியாமல் செய்த கொலை
வெள்ளைப் பூ - பிறர் மனைவிக்கு இழைத்த குற்றம்
கத்தரிப் பூ - நோய் நீங்கும்.
நீலோற்பவம் - கொடிய வார்த்தையால் வரும் துன்பம் நீங்கும்.
தும்பைப் பூ - பசு வதை செய்த பாவம் விலகும்.
- காளியம்மன் - எலுமிச்சை பழம் மாலை
- நாகாத்தம்மன் - மல்லிகை மலர்
சிவபெருமான் - வில்வம், கொன்றை
விநாயகர் - அருகு, திருவாத்தி
முருகன் - கடம்பு
திருமால் - முல்லைப்பூ
சரஸ்வதி - வெண்தாமரை
உக்கிரமூர்த்திகள் - சிவப்பு மலர்கள்
எல்லாத் தேவருக்கும் - கருங்குவளை
சூரியன் - தாமரைப்பூ
சோமன் - வெள்ளைப்பூ
புதன் - பொன்னரளி
பிரகஸ்பதி - மஞ்சள் பூ
வெள்ளி - வெள்ளைப்பூ
செவ்வாய் - சிவப்புப் பூ
சனி - நீலம்
ராகு - புகை
கேது - சிவப்பு
மாரியம்மன் - மல்லிகைப்பூ
காளியம்மன் - எலுமிச்சை பழம் மாலை
நாகாத்தம்மன் - மல்லிகை மலர்
சீலக்காரி - கருகமணி மாலை
கருப்ப சாமி - பட்டுத் துணி
ஆஞ்சநேயர் - வடை மாலை
கங்காதேவி - மா இலை.
- தாமரைப்பூ- 7 நாட்கள் வரை
- துளசி- 12 மாதங்கள்.
தாமரைப்பூ- 7 நாட்கள் வரை
அரளிப் பூ- 3 நாட்கள் வரை
வில்வத்தை - 6 மாதங்கள் வரை
துளசி- 12 மாதங்கள்.
12 மாதங்களுக்கு உரிய சிறப்பு மலர்கள்
சித்திரை - பலாசம்
வைகாசி - புன்னை
ஆனி - வெள்ளெருக்கு
ஆடி - அரளி
ஆவணி - செண்பகம்
புரட்டாசி - கொன்றை
ஐப்பசி - தும்பை
கார்த்திகை - கத்தரி
மார்கழி - பட்டி
தை - தாமரை
மாசி - நீலோற்பவம்
பங்குனி - மல்லிகை
சிவ பூஜைக்குரிய மலர்கள் நான்கு வகைப்படும். அவை
1. கோட்டுப்பூ, 2. கொடிப்பூ, 3. நீர்ப்பூ, 4. நிலப்பூ.
ஒவ்வொரு வகையிலும் இடம் பெற்றுள்ள பூக்கள் வருமாறு:
1. கோட்டுப் பூ
வன்னி, பலா, எலுமிச்சை, நார்த்தை, கோங்கு, மந்தாரை, கருஊமத்தை, மாவிலிங்கை, நொச்சி, பன்னீர், அகில், மாதுளை, அசோகு, பாதிரி, வெள்ளெருக்கு, இலந்தை, பலாசு, நுணா, நறவம், புன்னை, விளா, மருது, கொன்றை, நெல்லி, குரா, செருந்தி, பொன்னாவரை, கிளுவை, குருந்து, வில்வம், நாவல் இவைகள் கோட்டுப்பூ எனப்படும்.
2. கொடிப்பூ
நாட்டு மல்லிகை, முல்லை, மௌவல், வெற்றிலை, தாளி, கருங்காக்கொன்றை, வெண்காக்கொன்றை, குருக்கத்தி, இருவாட்சி (ஜாதிமல்லி), கொகுடி, பிச்சி இவை கொடிப்பூக்கள் எனப்படும்.
3. நீர்ப்பூ
செந்தாமரை, அதிக இதழில்லாத தாமரை, வெண்தாமரை, செங்கழுநீர், நீலோற்பவம், கருநெய்தல், செந்நெய்தல், வெண்நெய்தல் போன்றவை நீர்ப்பூ என்றழைக்கப்படுகிறது.
4. நிலப்பூ
பட்டி, நாயுருவி, கண்ணுப்பூ, பச்சை, சிவந்திப்பூ, தும்பை, வெட்டிவேர், மருக்கொழுந்து, சிவகரந்தை, விஷ்ணு கரந்தை, துளசி, செங்கீரை, கருஊமத்தை, செம்பரத்தை கொக்கிறகு, அனிச்சம், நந்தியாவட்டை இவை நிலப்பூ வகைகளாகும்.
- திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
- திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவர்ணம்.
25-ந்தேதி (செவ்வாய்)
* சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ரத உற்சவம்.
* மதுராந்தகம் கோதண்டராம சுவாமி தீர்த்தவாரி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
26-ந்தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் சப்தாவர்ணம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
27-ந்தேதி (வியாழன்)
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* குருவித்துறை குருபகவானுக்கு அபிஷேக ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.
28-ந்தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதி அம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை,
* கீழ்நோக்கு நாள்.
29-ந்தேதி (சனி)
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி, திருச்சேறை சாரநாதர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
30-ந்தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்
* காஞ்சிபுரம் காமாட்சியம்மன், சமயபுரம் மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் தலங்களில் சிறப்பு பூஜை.
* சமநோக்கு நாள்.
1-ந்தேதி (திங்கள்)
* திருவல்லிக்கேணி பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
- அங்காரகன் ‘பூமி காரகன்’ எனவும் அழைக்கப்படுகிறார்.
- அங்காரகன், சகோதரனுக்குரிய பலனையும் வழங்குபவர்.
அங்காரகன் 'பூமி காரகன்' எனவும் அழைக்கப்படுகிறார். இவர் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்த ஜாதருக்கு வீடானது அரண்மனையைப் போல அமையும். அதுவே பூமி ஸ்தானாதிபதியுடன் அங்காரகன் சம்பந்தப்பட்டிருந்தால், அந்த நபர் கோட்டை கட்டி வாழ்வார்.
அதே நேரத்தில் ஒருவரது ஜாதகத்தில் அங்காரகனும், 4-ம் பாவ அதிபதியும் பலவீனமாக இருந்தால், அந்த நபர் வீட்டை விற்க நேரிடும். மேலும் பூமி சம்பந்தமான வழக்குகளில் சிக்கி அவதிப்படுவார்.
அங்காரகன், சகோதரனுக்குரிய பலனையும் வழங்குபவர். எனவே ஒருவர் ஜாதகத்தில் அங்காரகன் நல்ல நிலையில் அமைந்தால், அவரது சகோதரர்களின் உதவியுடன் பல காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். அதுவே சரியான ஸ்தானத்தில் அங்காரகன் இல்லையென்றால், அல்லது நீச்சமோ, வக்ரமோ பெற்று இருந்தால், சகோதரர்களுடன் பகையை ஏற்படுத்தும். அதே நேரம் நீச்சபங்க ஸ்தானமாக இருப்பின், ராஜயோகம் வாய்க்கும்.
திருமணப் பொருத்தம் பார்க்கையில் அங்காரகனுக்கு முக்கிய பங்கு உண்டு. இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இவர் இருப்பதை 'அங்கார தோஷம்' என்பார்கள். இதனை 'செவ்வாய் தோஷம்' என்றும் அழைப்பார்கள்.
ஆனால் குரு பார்த்தாலோ, சனி பார்த்தாலோ அந்த தோஷம் நிவர்த்தியாகிவிடும். அதேபோன்று கடகம் மற்றும் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷத்தை செய்யமாட்டார்.
இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்து, மிதுனம் அல்லது கன்னி லக்னமாக இருந்தாலும் அது தோஷம் இல்லை. செவ்வாய் 4-ம் இடத்தில் இருந்து மேஷம் அல்லது விருச்சிகம் லக்னமாக அமைந்தாலும் தோஷம் கிடையாது.
செவ்வாய் 7-ம் இடத்தில் இருந்து, மகர லக்னம் என்றாலும் தோஷம் வராது. செவ்வாய் 8-ம் இடத்தில் இருந்து தனுசு அல்லது மீனம் லக்னமாக இருப்பினும் தோஷம் இல்லை. செவ்வாய் 12-ம் இடத்தில் இருந்து ரிஷபம் அல்லது துலாம் லக்னம் அமைந்தாலும் தோஷம் கிடையாது.
இதுபோன்று செவ்வாய் தோஷ நிவர்த்தியை பற்றிய பல தகவல்களை, 'ஜாதக பிரகாசிகா' என்ற நூல் விவரமாக கூறுகிறது.
செவ்வாய்க்கிழமையும் சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் நாளில், விநாயகரையும் முருகரையும் பூஜித்தால் கட்டாயம் மேற்கண்ட தோஷங்கள் அனைத்தும் விலகும். மக்கள் செல்வமும் உண்டாகும்.

அங்காரகன் பிறப்பு
ஒரு முறை சிவபெருமான் யோகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வியர்வை உண்டாகி, அது பூமியில் விழுந்தது. அந்த வியர்வை ஒரு குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தையை, பூமாதேவி எடுத்து வளர்த்தாள்.
குழந்தை வளர்ந்து, சிவபெருமானை நோக்கி தவம் செய்தது. அந்த தவத்தின் பயனாக, உடம்பில் யோக அக்னி உண்டாகி 'செவ்வாய்' (அங்காரகன்) என்ற பெயருடன் கிரக பதத்தைப் பெற்றது.
அங்காரகன் பிறப்பு குறித்த இன்னொரு நிகழ்வும் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு முறை பரத்வாஜர் என்ற முனிவர் நீராடுவதற்காக நதிக்கு சென்றார். அங்கு ஒரு தேவப் பெண்ணைக் கண்டார். அவளுடன் சில காலம் வாழ்ந்தார்.
அந்த தேவப் பெண்ணிற்கும், பரத்வாஜ முனிவருக்கும் பிறந்தவர்தான், செவ்வாய். அவர் குழந்தை பருவத்தில் சகல கலைகளையும் கற்று, சிவபெருமானை நோக்கி தவம் செய்து, அங்காரக பதத்தை அடைந்ததாகவும் சொல்வார்கள்.
- செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் இணையும் நாள் அங்காரக சதுர்த்தி.
- விநாயகரையும், முருகரையும் வழிபாடு செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.
உஜ்ஜைனி நகரை ஆட்சி செய்த அரசருக்கு நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லை. அவரது அரசவையில் மருத்துவம், வான சாஸ்திரம், விவசாயம், உளவுத்துறை என்று ஒவ்வொரு துறைக்கும் சிறந்த மந்திரிகள் இருந்தனர். அதே போல் ஜோதிடத்தை எடுத்துச் சொல்லவும் மிகப்பெரிய ஜோதிடர் இருந்தார்.
ஒரு நாள் அந்த ஜோதிடரை அழைத்த அரசன், "எனக்கு இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இதனைப் போக்க ஜோதிடத்தில் ஏதாவது பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்" என்று ஆலோசனை கேட்டான். (ஜோதிடருக்கும் வெகு காலமாக குழந்தை பாக்கியம் இல்லை).

அரசனின் வருத்தத்தை உணர்ந்த ஜோதிடர், "மன்னா.. செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் இணையும் நாளை 'அங்காரக சதுர்த்தி' என்பார்கள். அந்த நாளில் விநாயகரையும், முருகரையும் வழிபாடு செய்தால் புத்திரப்பேறு உண்டாகும்.
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சரியாக அமையவில்லை. எனவேதான் செவ்வாயின் பார்வை தோஷத்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. அங்காரகனை திருப்தி செய்ய 'அங்காரக சதுர்த்தி' அன்று நீங்களும், உங்கள் மனைவியும் விரதம் இருங்கள்' என்றார்.
அன்றைய தினம் ஜோதிடர் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி "இன்று அரசவையில் ஏதேனும் விசேஷம் உண்டா?" என்று வழக்கம் போல் விசாரித்தாள். ஜோதிடரும் தன் மனைவிடம், மன்னன் புத்திர பாக்கியம் இல்லை என்று வருத்தப்பட்டது பற்றியும், அவருக்கு அங்காரக சதுர்த்தி விரதம் இருக்கும்படி அறிவுறுத்தியது பற்றியும் கூறினார். உடனே ஜோதிடரின் மனைவி, "அங்காரக சதுர்த்தியின் விசேஷம் என்ன?" என்று கேட்டாள்.
மனைவிக்கு அந்த விரதம் இருக்கும் முறையைப் பற்றி கூறினார், ஜோதிடர். "பவுர்ணமி மற்றும் அமாவாசைக்கு பின் வரும் நான்காம் நாள் திதியே 'சதுர்த்தி திதி'. இதில் தேய்பிறையில் (பவுர்ணமிக்குப் பிறகு) வரும் சதுர்த்தியை, 'சங்கடஹர சதுர்த்தி' என்பார்கள்.
சதுர்த்தி திதியும் செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய தினத்தையே 'அங்காரக சதுர்த்தி' என்கிறோம். அன்று காலை குளித்துவிட்டு விநாயகப்பெருமானையும், முருகப்பெருமானையும் விரதம் இருந்து பூஜிக்க வேண்டும். விநாயகரை அருகம்புல் கொண்டு அர்ச்சிப்பது விசேஷமானது.
விநாயகருக்கு கொழுக்கட்டையும், முருகப்பெருமானுக்கு தேன் கலந்த தினை மாவும் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இவ்வாறு விரதம் இருப்பவர்களுக்கு அங்காரகன் அருள்புரிவார்.
இந்த விரதத்தின் பலனாக மக்கட்செல்வம் உட்பட அனைத்து செல்வங்களும் கிடைக்கும். செவ்வாய் சம்பந்தமான அனைத்து தோஷமும் நிவர்த்தியாகும்" என்றார்.
பின்னர் "அடுத்த வாரம் வரும் அங்காரக சதுர்த்தி அன்று, அரசரையும் அவரது மனைவியையும் விரதம் இருக்கச் சொல்லி உள்ளேன்" என்றும் தெரிவித்தார்.
இதைக் கேட்ட ஜோதிடரின் மனைவி, தானும் அந்த விரதத்தை மேற்கொள்ளப் போவதாக கூறினாள். ஒரே நேரத்தில் மன்னனின் மனைவியும், ஜோதிடரின் மனைவியும் 'அங்காரக சதுர்த்தி' விரதம் இருந்தார்கள். விரதம் இருந்த ஒரு வருடத்திற்குள் அவர்களுக்கு பலன் கிடைத்தது.
மன்னனுக்கும், ஜோதிடருக்கும் ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று, செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிஷ நட்சத்திரத்தில் செவ்வாயின் லக்னமான மேஷ லக்னத்தில் ஆண் குழந்தைகள் பிறந்தன.
மன்னன் மகிழ்ச்சியடைந்து, ஜோதிடரை அழைத்து ஆயிரம் பொன்னை பரிசாக அளித்தான். அதைத் தொடர்ந்து மன்னனின் மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி, அந்தக் குழந்தையின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர், "மன்னா.. உங்கள் பிள்ளை, தனது 21-வது வயதில் இந்த நாட்டின் அரசனாக முடி சூட்டிக்கொள்வான். புகழ்பெற்று விளங்குவான். சகலவிதமான மரியாதையும் அவனுக்கு கிடைக்கும். இது ராஜயோக ஜாதகம்" என்று கூறினார்.
பின்னர் வீட்டிற்கு வந்த ஜோதிடரிடம் அவரது மனைவி, "நம் பிள்ளையின் ஜாதகம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டாள். அதற்கு ஜோதிடர், "அரசரின் குழந்தையும், நம் குழந்தையும் ஒரே நேரத்தில் பிறந்தது. இரண்டுமே ராஜ யோக ஜாதகம்" என்றார்.
ஜோதிடரின் பிள்ளை வளர்ந்தான். அவன் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்படவில்லை. தந்தைக்கும், மகனுக்கும் கருத்து முரண்பாடு வளர்ந்தது. வாலிபனான ஜோதிடரின் மகன், 19-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.
ஜோதிடர் தன் மகனை, இரண்டு ஆண்டுகள் தீவிரமாக பல இடங்களில் தேடியும் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை. மகன் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பதைக் கூட அவரால் அறிய முடியவில்லை. வருத்தத்தில் துவண்டு போனார், ஜோதிடர்.
அதே நேரம் சிறப்பான முறையில் வளர்ந்து நின்றான், மன்னனின் மகன். அரசர் தனக்கு வயதான காரணத்தால், பிள்ளைக்கு முடி சூட்ட எண்ணினார். அதற்கான நாள் பார்த்து சொல்லும்படி ஜோதிடரை அழைத்து கேட்டார். நாள் குறித்துக் கொடுத்தார், ஜோதிடர். மன்னனின் மகன் 21 வயதில் அந்த நாட்டின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டான்.
அவன் பட்டம் ஏற்ற மறுதினம் இரவு, செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஓரையில், நதிக்கரை ஒன்றில் அமர்ந்திருந்த ஜோதிடர், தன்னிடம் இருந்த அற்புதமான ஜோதிட ஓலைச் சுவடிகளை நெருப்பில் போட்டு கொளுத்தினார்.
அப்போது உயர்ந்த தோற்றத்துடன், ஜொலிக்கும் சிவப்பு நிற ஆடை அணிந்து, தாடி, மீசையுடன் ஒரு பெரியவர் அங்கு வந்தார். அவர், "ஜோதிடரே.. என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு ஜோதிடர், "நான் சொன்னபடி என் மகனுக்கு அதிர்ஷ்டம் இல்லை. ஒரே நேரத்தில் மன்னனின் மகனும், என் மகனும் பிறந்தனர். மன்னனின் மகன், இந்த நாட்டையே ஆள்கிறான். ஆனால் என் மகனோ, கண்காணாமல் போய்விட்டான். இந்த துக்கத்தை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான் சொன்ன ஜோதிடம் பொய்த்து விட்டது" என்றார்.
அதற்கு அந்த பெரியவர், "நீங்கள் சொன்ன ஜோதிடம் பொய்க்கவில்லை" என்றார். அதைக் கேட்ட ஜோதிடர், "அதை உறுதிப்படுத்திச் சொல்வதற்கு, ஜோதிடர் நீங்களா? நானா?" ஆவேசமாக கேட்டார், ஜோதிடர்.
அப்போது அந்த பெரியவர், "மன்னனின் ஜாதகத்திலும், உங்கள் பிள்ளையின் ஜாதகத்திலும், எந்தக் கிரகம் யோகத்தை தந்தது" என்று கேட்க, 'அங்காரகன்' என்று பதிலளித்தார், ஜோதிடர்.
"அந்த அங்காரகனே நான்தான்" என்று பெரியவர் சொன்னதும், சர்வமும் ஒடுங்கி எழுந்து, அவரை கைகூப்பி நின்றார், ஜோதிடர்.

இப்போது அங்காரகன் மேலும் சொன்னார். "நன்றாகக் கேள்.. மன்னனுடைய ஜாதகத்தில், மகன் நாட்டை ஆள்வதை காணக்கூடிய யோகம் இருந்தது. ஆனால் உன் ஜாதகத்தில், நீ உன் பிள்ளை நாட்டை ஆள்வதை பார்க்கும் யோகம் இல்லை.
உனக்கு ஜாதகத்தில் புத்திர சோகம் உள்ளது. மன்னனின் ஜாதகத்திலோ புத்திர யோகம் உள்ளது. அதனால்தான் உன் மகனால் இப்போது நீ சோகத்தில் வருந்துகிறாய். ஆனால் நீ கணித்தபடியே உன் பிள்ளை இப்போது அரசனாகத்தான் இருக்கிறான்.
கடல் வழியாக ஆயிரம் மைல் கடந்து, ஒரு தீவை அடைந்தான் உன் மகன். அவன் சென்ற நேரத்தில் அந்த தீவை ஆட்சி செய்த மன்னன் இறந்து விட்டான். அவனுக்கு பிள்ளை இல்லாததால், அவர்களின் வழக்கப்படி யானை மாலையிடும் நபரை மன்னனாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்திருந்தனர்.
அந்த யானை மாலையை அணிவித்தது உன் மகனின் கழுத்தில். அதனால் மன்னனாக முடிசூட்டிய உன் பிள்ளை, அங்கு சிறப்பான ஆட்சியை செலுத்தி வருகிறான். உன் ஜோதிடம் பொய்க்கவில்லை. நீ இருந்த அங்காரக சதுர்த்தி விரத பலன் உனக்கு முழுமையாக கிடைத்துள்ளது" என்று கூறிய அங்காரகன் மறைந்தார்.
தன் பிள்ளையின் ராஜ வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொண்ட ஜோதிடர், மன மகிழ்வோடு இல்லம் திரும்பினார்.
- அம்பாசமுத்திரம் அருகே மயில் ஏறி முருகன் கோவில் உள்ளது.
- ஆலயத்தை அடைய 500 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்' என்பார்கள். அப்படி ஒரு குன்றின் மேல் அமைந்த ஆலயம்தான், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மயில் ஏறி முருகன் கோவில். இந்த குன்றின் மீதுள்ள முருகன் ஆலயத்தை அடைய 500 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். குன்றின் அடிவாரத்தில் சிறிய பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. மலை ஏறிச் செல்லும் வழியில் இடும்பன் சன்னிதியும், அகத்தியர் சன்னிதியும் உள்ளன

குன்றின் உச்சியில் சிறிய அளவிலான முருகன் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி-தெய் வானையுடன் கல்யாண கோலத்தில், மயில் வாகனத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். அருகிலேயே உற்சவ மூர்த்தங்களும் காணப்படுகின்றன. கருவறையின் முன்பாகவும் மயில் வாகனம் இருக்கிறது.

தல வரலாறு
தூத்துக்குடியில் துறைமுகம் அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தேவையான பாறைகளை அருகில் உள்ள மலைக் குன்றில் இருந்து வெட்டி எடுத்தனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அயர்ச்சியையும் சோர்வையும் போக்குவதற்காக தங்களின் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை வேண்டிக்கொண்டனர். அதற்காக அங்கிருந்த பாறை ஒன்றில், வேல், மயில், ஓம் என்ற எழுத்துக்களை புடைப்புச் சிற்பமாக செதுக்கி வைத்து வழிபடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் வந்த வேலை முடிந்ததும், தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
காலப்போக்கில் மலையடிவாரத்தில் மக்கள் வீடு கட்டி குடியேறத் தொடங்கினர். மக்கள் நடமாட்டம் அதிகரித்த நிலையில், அனுதினமும் காலையிலும் மாலையிலும் ஒரு மயில் எங்கிருந்தோ பறந்து வந்து, தொழிலாளர்கள் புடைப்புச் சிற்பமாய் முருகனை வணங்கிய பாறையில் நின்று தோகை விரித்து நடனமாடிச் சென்றது.
தினம் தினம் இது நடக்கவே, என்ன காரணமாக இருக்கும் என யோசித்த மக்கள், ஒருநாள் மலை மீது ஏறிச் சென்று பார்த்தனர். அங்கு பாறையில் புடைப்புச் சிற்பத்தை கண்டு மெய்சிலிர்த்த அப்பகுதி மக்கள், இவ்விடத்தில் முருகன் கோவில் அமைத்து வழிபட நினைத்தனர்.
ஆனால் இங்கு கோவில் அமைப்பதில் இறைவனுக்கு விருப்பமா என்பதை அறிய, அந்த ஊரில் இருந்து ஒரு சிறுவனிடம் வேல் ஒன்றைக் கொடுத்து, "உனக்கு விருப்பமாக இடத்தில் இந்த வேலை ஊன்று" என்று கூறினர்.
உடனே அந்த சிறுவன், தன்னுடைய குடியிருப்பு பகுதியில் இருந்து மலைக் குன்றை நோக்கி ஓடினான். குன்றின் மீது ஏறிச் சென்று அங்கு புடைப்புச் சிற்பங்கள் இருந்த இடத்தில் வேலை ஊன்றினான். எனவே மக்கள் அனைவரும் ஒரு மனதாக அங்கே கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பது இந்த ஆலயத்தின் வரலாறாக சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்தால், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து 13 செவ்வாய்க்கிழமைகளில், இத்தல முருகனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, எலுமிச்சைப் பழம் சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள். வேலை கிடைக்கவும், கடன் தொல்லை அகலவும் இந்த முருகனை வழிபாடு செய்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கியவாறு தொழிலாளர்கள் அமைத்த பாறை சிற்பம் அமைந்துள்ளது. அதன் பின்புறம் உள்ள பாறை, இயற்கையாக நந்தி அமர்ந்திருப்பது போல் காட்சி தருகிறது. அதன் அருகில் காசியில் இருந்து கொண்டுவந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். மலையில் இருந்து கீழிறங்கி வர தனியாக படிகள் உள்ளன.
இங்கு பவுர்ணமி இரவில் அகத்தியருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் கூட்டு வழிபாடும் உண்டு. மயிலேறி முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியில் அபிஷேக அலங்கார ஆராதனை சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாகம் அன்று சிறப்பு வழிபாடும் நடக்கிறது.
அமைவிடம்
அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் டீச்சர்ஸ் காலனி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இறங்கி நடந்து செல்லும் தொலைவில் என்.ஜி.ஓ. காலனியில் இருக்கிறது, மலையேறி முருகன் கோவில்.
- இன்று சங்கடஹர சதுர்த்தி.
- சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், தோலுக்கினியானில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆனி-11 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி பின்னிரவு 1.25 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.52 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சங்கடஹர சதுர்த்தி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் ரதம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், தோலுக்கினியானில் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் தேரோட்டம். திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில்களில் விநாயகப்பெருமானுக்கு சிறப்பு ஹோமம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-நன்மை
மிதுனம்-ஆசை
கடகம்-நலம்
சிம்மம்-செலவு
கன்னி-மேன்மை
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-உதவி
தனுசு- முயற்சி
மகரம்-உறுதி
கும்பம்-பக்தி
மீனம்-தாமதம்
- கோவிலின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ஒரு லட்சம் கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது.
- இத்தாலி நாட்டு மார்பிளால் ஆன பளிங்கு கல்லால் செல்லப்பட்ட சாய்பாபாவின் சிலை பல லட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது.
நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஏராளமான கோவில்களைக் கொண்ட இந்தியா, 'கோயில்களின் பூமி' என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்கள் முதல், அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோவில் வரை என பட்டியலில் கோவில்களை சேர்த்துக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் எளிமையான, அல்லது சில உலகத்தரம் வாய்ந்த கட்டிடக்கலைகளை உள்ளடக்கியது. இதில் இன்று நாம் பணக்கார கோவில்களான முதலிடத்தில் இருக்கும் நாட்டிலுள்ள சில பணக்காரக் கோயில்களைப் பற்றி பார்க்கலாம்.
ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்
கேரளா இந்தியாவின் பணக்கார கோவில்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கேரளாவில் உள்ள பத்மநாப சுவாமி திருக்கோவில். இந்தியா மட்டுமல்ல உலகின் பணக்கார இந்து கோவிலும் இது தான். இந்த கோவிலை அடிப்படையாக வைத்து தான் திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்ற பெயரே உருவானது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ஒரு லட்சம் கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது. 2011 ல் திறக்கப்பட்ட ரகசிய அறை ஏ வில் இருந்த தங்கம் உள்ளிட்டவைகளின் மதிப்பு தான் இது. இதுவரை பி அறை திறக்கப்படவில்லை.

திருப்பதி
ஆந்திராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏறக்குறைய 80,000 வரையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவிலில் தினமும் உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.4.5 கோடி கிடைக்கிறது. இந்த கோவிலில் சொத்து மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடிக்கு அதிகம் என சொல்லப்படுகிறது.
ஷீரடி சாய்பாபா மந்திர், மகாராஷ்டிரா
உலகில் வருடம் முழுவதும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்று ஷீரடி சாய்பாபா கோவில். இத்தாலி நாட்டு மார்பிளால் ஆன பளிங்கு கல்லால் செல்லப்பட்ட சாய்பாபாவின் சிலை பல லட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது.

வைஷ்ணவ தேவி கோவில், ஜம்மு
அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாகும், அதிக சொத்து மதிப்பையும் கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது காஷ்மீர் மாதா வைஷ்ண தேவி கோவில். இந்த கோவிலுக்கு வருடத்திற்கு ரூ.500 கோடி வருமானம் வருகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த குகை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தின் மதிப்பு மட்டும் 1.2 டன்னுக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோவில்
இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாகும். மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.90,000 கோடிக்கும் அதிகமாகும். தங்கம், தங்கம் சிலை, வெள்ளி, வைரம் உள்ளிட்ட பொருட்களும் இதில் அடங்கும்.

புரி ஜெகந்நாதர் கோயில்
இந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் புரி ஜெகந்நாதர் கோவிலில் தினமும் சராசரியாக 30,000 க்கும் அதிகமான பக்தர்கள் வந்த செல்கிறார்கள். இந்த கோவிலின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கோவிலின் கருவூலங்களில் உள்ள ஏழு அறைகளில் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. மற்ற அறைகள் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளன. இவற்றில் தான் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தங்கம், வெள்ளி நகைகள் சேமித்து வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

குருவாயூர் கிருஷ்ணன்
காக்கும் கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்தாலும் அதில் அனைவருக்கும் பிடித்து கிருஷ்ணன் அவதாரம். பிறந்தது முதல் கீதை உபதேசம் வரை அவரின் லீலைகள் பல. அப்படி குட்டி கிருஷ்ணராக சில லீலைகளை செய்தவராக கேராளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் குருவாயூரப்பனாக காட்சி தருகின்றார். கிருஷ்ணரின் தனிப்பெரும் சிறப்பு மிக்க குருவாயூர் ஸ்ரீ கிருணன் கோயில் பணக்கார கோவில்களில் ஒன்று.

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில்
தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் பெறும் கோவிலாக விளங்குகிறது. பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை, பிரசாதம் விற்பனை என ஆண்டுக்கு சுமார் 33 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.

காசி விஸ்வநாதர் ஆலயம், வாரணாசி
இந்தியாவில் புண்ணிய தலங்களில் தலைமை தலமாக உள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இரண்டு தங்கத்தால் ஆன கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவில் வருடத்திற்கு 4 முதல் 5 கோடி வருமானம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

பஞ்சாபின் பொற்கோயில்
பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொதுவாக பொற்கோயில் (Golden Temple) என அழைப்பர். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். இந்த கோயில் இந்தியாவின் பணக்கார கோவிலாகும்.






