என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழி பெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.
    • இதற்கான ஆதாரங்களை, கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    தியாகராஜ சுவாமி சன்னதி முன் மண்டபத்து தூணிலே உள்ள ஆஞ்சநேயர் வேண்டியவருக்கு அருளை அள்ளி வழங்கும் வள்ளல்.

    நாம் நினைத்த காரியம் இவரிடம் ஜெயமாகும்.

    ஒற்றியூரில் கம்பர் ராமாயணம் எழுதினார்.

    கல்வியில் சிறந்த கம்பன், வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழி பெயர்த்து எழுத சோழ நாட்டில் இருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார். கவி சக்கரவர்த்தி உவச்சர் குலத்தைச் சேர்ந்தவர்.

    இக்குலத்தை சேர்ந்தவர்களே ஸ்ரீ வட்டபாறை அம்மனை பூசித்து வந்தனர்.

    சோழ நாட்டு திருவெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார்.

    திருவொற்றியூரில் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழி பெயர்த்து ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார்.

    இதற்கான ஆதாரங்களை, கல்வெட்டுக்கள், புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    முதல் குலோத்துங்க சோழன் கி.பி. 12&ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான்.

    வடமொழியில் இருந்த வால்மீகி ராமாயணத்தை கற்க கம்பர் திருவொற்றியூர் வந்தார்.

    திருவொற்றியூர் சதுரானை பண்டிதர் என்பவர் மடம் ஒன்றை நிறுவினார்.

    இவர் கேரள நாட்டை சேர்ந்தவர்.

    பல கலைகளையும் பயின்றவர். இவரிடம் தான் பகல் எல்லாம் வடமொழி வான்மீகி ராமாயணத்தை கம்பர் கேட்டு, இரவு முழுவதும் அதைத் தமிழில் எழுதினார்.

    • திருவிழாவிலும் இரண்டு திருக்கல்யாணங்கள் நடைபெறும். சுந்தரர் சங்கிலியை திருமணம் செய்வார்.
    • இத்தகைய இரட்டைச் சிறப்புகள் இக்கோவிலின் தனி பெருமையாக உள்ளது.

    பிற கோவில்களில் ஒன்றாக இருக்கும். எல்லா அம்சங்களும் இங்கு இரட்டைச் சிறப்புகளாக அமைந்திருக்கிறது.

    இங்குள்ள விருட்சம் அத்தி, மகிழம் & இரண்டு திருக்குளங்கள் நந்தி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் & இரண்டு பெருமான் படம்பக்கநாதர், தியாகராஜர் என இரண்டு பேர் உள்ளனர்.

    அம்பிகை ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்டபாறையம்மன் என இரண்டு அன்னையர்கள் உள்ளனர்.

    விநாயகர், குணாலய விநாயகர், பிரதான விநாயகர் என இருவிதமாக உள்ளார்.

    முருகரும், அருட்ஜோதி பெருமான், பிரதானமுகர் என இரண்டு பேர், நடன நாயகர்கள் நடராஜ பெருமான் தியாகராஜர் என இரண்டு பேர்.

    திருவீதி விழாவில் கூட சந்திரசேகர் வீதி வலம்வந்த பின் இரண்டாவதாக தியாகராஜரும் வீதி வலம் வருவார்.

    பிரம்ம உற்சவம், வசந்த உற்சவம் என சிவனுக்கு இரண்டு உற்சவமும், சிவராத்திரி உற்சவம் வட்டபாறையம்மன் நவராத்திரி உற்சவம் என அம்பிகாவுக்கு இரண்டும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

    திருவிழாவிலும் இரண்டு திருக்கல்யாணங்கள் நடைபெறும். சுந்தரர் சங்கிலியை திருமணம் செய்வார்.

    இத்தகைய இரட்டைச் சிறப்புகள் இக்கோவிலின் தனி பெருமையாக உள்ளது. 

    • வெளிச்சுற்று பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
    • ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் பேறு இந்த கோவிலில் மட்டுமே வாய்த்துள்ளது.

    மண்ணுக்குச் சோமசுந்தரர் கோவிலும்,

    விண்ணுக்கு ஆகாசலிங்கமும்,

    நெருப்புக்கு அண்ணாமலையார் கோவிலும்,

    காற்றுக்கு காளத்தீஸ்வரரர் கோவிலும்,

    வெளிச்சுற்று பிரகாரத்தில் வரிசையாக பஞ்சபூதத் தலங்களாக இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

    ஒரே இடத்தில் பஞ்சபூத லிங்கங்களைத் தரிசிக்கும் பேறு இந்த கோவிலில் மட்டுமே வாய்த்துள்ளது.

    • அதில் பெரும் புகழ்பெற்றது, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.
    • பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது.

    தமிழ்நாட்டில் பாடல் பெற்ற பழமையான சிவாலயங்கள் மொத்தம் 274 உள்ளன.

    இந்த ஆலயங்களில் சென்னை உள்ளிட்ட தொண்டை மண்டலத்தில் 32 திருத்தலங்கள் உள்ளன.

    அதில் பெரும் புகழ்பெற்றது, பழமையானது திருவொற்றியூர் திருத்தலமாகும்.

    பூவுலக சிவலோகம் என்று இக்கோவில் போற்றப்படுகிறது. முக்தி தலம், ஞானத்தலம் என்றும் இதனை போற்றுவர்.

    ஆகம விதிபடி 4 கால பூஜை இங்கு நடைபெறுகிறது.

    மூன்று தனித்தனி கொடி மரங்கள், ராஜகோபுரம் 7 நிலையில் 120 அடி உயரத்துடன் நிற்கிறது.

    கோவிலில் நுழைந்ததும் 60 அடியில் உயர்ந்தோங்கிய கொடி மரத்தைக் காணலாம்.

    இக்கோவிலில் ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ வடிவுடையம்மன், ஸ்ரீ வட்டபாறையம்மன் என்ற மூவருக்கும் தனித்தனி திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.

    இதனால் இத்தலத்தில் மூன்று கொடி மரங்கள் தனித்தனியே உள்ளது.

    இதில் கொடியேறியதும் 10 நாள் திருவிழாக்கள் தனித்தனியே நடைபெறும்.

    உள்ளே நுழைந்ததும் மேற்கு பார்த்த சன்னதியில் வரிசையாக சூரிய பகவான், தேவார மூவர், சுந்தரர், சங்கிலி நாச்சியார் 1008 கோடுகளை லிங்கங்களாக கொண்ட சரஸ்ரலிங்கம், ஏகாம்பரேஸ்வரர், ராமநாதர் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.

    ஸ்ரீ தியாகராஜர் மற்றும் ஸ்ரீ வடிவுடையம்மனை அந்திசாயும் மாலை நேரத்தில் சிவனை வழிபடுவது உகந்தது.

    விளக்கேற்றும் மண்டபத்தில் விளக்கேற்றி அங்கிருந்து கோபுரத்தை கை உயர்த்தி கும்பிடுவது சிறந்தது.

    வள்ளலார் குறிப்பிட்ட இந்த முறையை தான் பின்பற்றினார். எனவே நாமும் இந்த வழிபாட்டு முறையையே பின்பற்ற வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை.
    • சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வேறு எந்த ஒரு கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு உள்ளது. இங்கு இருக்கும் நாகராஜர் கோவில் பாம்பு புற்றை சுற்றி கோவில் எழுப்பி இருக்கிறார்கள்.

    நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பழம், பால் படைத்து வணங்கி செல்கின்றனர். அவரவர் வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

    இந்த தலத்தில் உள்ள புற்று மண் மிகவும் விசேஷமானது. பல சரும நோய்களை குணமாக்க வல்ல மண் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த புற்றில் இருந்து மண்ணை எடுத்து அருகிலுள்ள தொட்டியில் போட்டிருக்கிறார்கள்.

    அம்பாள் சன்னதியிலும் புற்று மண் இருக்கிறது. இந்த மண்ணை சிலர் மருந்தாக சாப்பிட்டு வருகிறார்கள். நெற்றியிலும் இதை திலகமாக வைத்துக் கொள்கிறார்கள்.

    இந்த கோவில் அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை. காரணம் ஒரே சிலையில், ஒரு பாதி சிவனும், மறுபாதி விஷ்ணுவும் போன்ற தோற்றம் உடையது. தலையில் கங்கையை முடிந்து இருக்கிறார். ரத்ன கிரீடம் சூடியிருக்கிறார். கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருக்கிறார். இடுப்பில் புலித்தோல் கட்டியிருக்கிறார். இவை அனைத்தும் சிவனின் வடிவங்கள்.

    மறுபாதியில் தலையில் கிரீடம், காதில் மசியக் குண்டலம், கையில் சங்கு, சிம்மகரணம், இடுப்பில் பட்டு பீதாம்பரம் இருக்கிறது. இந்த வடிவம் விஷ்ணுவின் வடிவமாகும். எனவே சிவனும், விஷ்ணுவும் சேர்ந்திருப்பதால் சங்கரநாராயண சுவாமி என்கிறார்கள்.

    ஒருமுறை பார்வதி தேவியாருக்கு சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அதை சிவனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். உடனே சிவபெருமான் பாதி சிவனாகவும், பாதி விஷ்ணுவாகவும் தோன்றினார்.

    உடனே சிவனார், பெரியவர் யார், சிறியவர் யார் என்பது பார்ப்பவர் கண்ணில் தான் உள்ளது. இரண்டு பேருமே ஒன்று தான் என்று விளக்கமும் கூறினார். இதை உணர்த்தும் விழா, சங்கரன் கோவிலில் காட்சி அளிக்கும் ஈசனை காண தேவி புறப்பட்டு வரும் வைபவமாக ஆடித்தபசு எனும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.

    அம்பாள் தவக் கோலத்தில் காணப்படுகிறார். அம்பாள் சன்னதியை சுற்றி உள்ள கிரிவீதியை 108 முறை சுற்றினால் நினைத்தது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    அதுவும் ஆடித்தபசுக்கு முன்பு சுற்ற வேண்டும். ஆடித்தபசு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று நடந்தேறுகிறது.

    பொதுவாக சிவன் அபிஷேகப்பிரியர். விஷ்ணு அலங்காரப் பிரியர். ஆனால் சங்கரன்கோவிலில் இருவரும் ஒரே சிலையாக அமைந்திருப்பதால் அதற்கு அபிஷேகம் செய்வது சிரமமாக இருந்தது. இதையறிந்த ஆதிசங்கரர் தாம் வைத்திருந்த ஸ்படிகலிங்கத்தை கோவிலுக்கு கொடுத்து அதற்கு அபிஷேகம் செய்யுமாறு கூறினார்.

    இந்த லிங்கத்தை தண்ணீரில் போட்டால் லிங்கம் இருப்பதே தெரியாது. இது ஒரு இயற்கை அற்புதமாகும். அதுபோல் சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது. இதில் சாமியை பிரதிஷ்டை செய்திருப்பதாக ஒரு ஐதீகம். எனவே பேய் மற்றும் பில்லி சூனியத்திற்கு ஆளான பலர் இந்த வனக்குழியில் அமர்ந்து பூஜை செய்வார்கள்.

    • சங்கரன்கோவிலில் ஆடி தபசு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • பெரிய பாளையத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    1. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

    2. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரிய பாளையத்தம்மன் கோவிலில் தான் ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    3. கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைெபறும்.

    4. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 5 நாட்கள் நடை திறந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.

    5. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும். சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    6. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

    7. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடை பெறும் பத்து நாட்களில், ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார்.

    8. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

    9. கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப் பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள். அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மா விளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்து விட்டு வருவர்.

    10. தமிழ்நாட்டில் பண்டை காலத்தில் காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆகிய 3 நதிகளிலும் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த 3 ஆறுகளில் தண்ணீர் பெருகுவதை முவ்வாறு பதினெட்டு என்று குறிப்பிட்டுள்ளனர்.

    11. ஆடி மாதம்தான் கிராம தெய்வங்களான மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்றவைகளுக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படும்.

    12. ஆடி மாதம் குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

    13. திருச்சி அருகே உள்ள திருநெடுங்காநாதர் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் சூரிய ஒளி மூலவர் மீது படுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    14. சேலத்தில் ஆடிமாதம் நடக்கும் செருப்படிதிருவிழா தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாத விழாவாகும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம் கொண்டு வருவார்கள். பூசாரி பக்தர் மீது 3 தடவை மெல்ல நீவிவிடுவார்கள். இதுதான் செருப்படித் திருவிழா.

    15. சென்னை திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சள் ஆடை தரித்து பய பக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.

    16. கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள். ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள். கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும். அதில் மாங்கல்ய சரடு வைத்துப் பூஜித்து பெண்மணிகள் அனைவருக்கும் வழங்குவார்கள்.

    17. ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுரபேரவியையும் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.

    18. செஞ்சிக் கோட்டை அருகே உள்ள கமலக்கண் ணியம்மன் ஆலயத்தில் ஆடிமாதம் பெரிய அளவில் விழா நடைபெறும். அப்ேபாது 10,000 ேபருக்கு அன்னதானம் அளிப்பார்கள்.

    19. தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.

    20. தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடிவெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள். 9 சிவாச்சாரியார்கள் 9 வகை மலர்களால் 9 சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.

    21.புதுச்சேரி அருகே வங்க கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் முதல் வெள்ளியில் இருந்து கடைசி வெள்ளிவரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும் விதவிதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும். தேரோட்டத்தை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள். புதுச்சேரி கவர்னர் தேர்வடத்தை இழுத்து விழாவைத் தொடங்கி வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. ஆடி மாதம் முழுவதும் இவ்வூரில் விழாக் கோலம்தான்.

    22.சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர். இந்த அம்மன் காதுகளில் உள்ள தாடகங்களில் ஸ்ரீசக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று இந்த அம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

    23. திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.

    24. ஆடிப் பவுர்ணமி அன்றுதான் திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளியது. அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர். காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.

    25. திருவல்லிக்கேணி எல்லை அம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி ''சுவாசினி பூஜை'' நடைபெறுகிறது. இப்பூஜை, சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    • புண்ணிய தினத்தில் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
    • சிறுவர்-சிறுமிகளுக்கு நல்ல கல்வி அறிவு கிடைக்கும்.

    புதன்கிழமையும் அனுஷம் நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்து வரும் தினத்தை புதானூராதா புண்ணிய கால தினம் என்று சொல்வார்கள். இது விசேஷமான தினமாகும். இந்த புண்ணிய தினம் இன்று.

    இந்த தினத்தை அட்சய திருதியை தினத்துக்கு சமமானதாக சொல்வார்கள். அதாவது இன்றைய தினம் நாம் ஒரு நல்ல செயலை செய்தால் அது பல மடங்கு பெருகி நமக்கு பலனாக வந்து கை கொடுக்கும் என்பது ஐதீகம்.

    இந்த புண்ணிய தினத்தில் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. இன்று பெருமாள் ஆலயங்களுக்கு செல்லும்போது தயிர் சாதம் தயாரித்து ஊறுகாயுடன் சேர்த்து வைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த தயிர் சாதம்-ஊறுகாயை ஆழ்வார்கள் சன்னதியில் வைத்து பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

    இந்த தானத்தால் குடும்பத்தில் உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு நல்ல கல்வி அறிவு கிடைக்கும். சிலருக்கு சனி தோஷம் மிகவும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் இந்த புதானூராதா புண்ணிய கால வழிபாட்டை செய்தால் சனி தோஷத்தில் இருந்து சற்று ஆறுதல் பெறலாம்.

    மேலும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் கிடைக்க செய்யும் ஆற்றலும் இந்த வழிபாட்டுக்கு உண்டு.

    • பிரகாரங்களை வலம் வந்து வழிபடுவது லட்சபிரதட்சணம் எனப்படும்.
    • அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு விலகும்.

    ஆலய வழிபாட்டில் இறைஅருளை பெற எத்தனையோ வழிகள் இருந்தாலும் ஆலய பிரகாரங்களை வலம் வந்து தரிசனம் செய்யும் முறைக்கு அதிக பலன்கள் தரும் ஆற்றல் உண்டு. எனவேதான் ஆலயத்துக்கு சென்றதும் பிரகாரங்களை அவசியம் சுற்றி வர வேண்டும் என்றார்கள்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சயன ஏகாதசி தொடங்கி கார்த்திகை மாதம் வரும் உத்தான ஏகாதசி வரை தினமும் ஆலயங்களுக்கு சென்று பிரகாரங்களை வலம் வந்து வழிபட வேண்டும் என்று நமது முன்னோர்கள் வகுத்து வைத்து இருக்கிறார்கள்.

    பிரகாரங்களை வலம் வந்து வழிபடும் இந்த வழிபாட்டை லட்சபிரதட்சணம் என்று அழைக்கிறார்கள். ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை செய்ய வேண்டிய இந்த வழிபாட்டின் போது லட்சம் தடவைக்கு மேல் ஆலய பிரகாரங்களை வலம் வந்து விட முடியும் என்று நமது முன்னோர்கள் கணித்துள்ளனர். எனவே இதற்கு லட்சபிரதட்சண வழிபாடு என்று சொல்கிறார்கள்.

    ஆண்டுக்கு ஒரு தடவையே வரும் இந்த சிறப்பான வழிபாடு இன்று விஷ்ணு சயனிக்கும் ஏகாதசி அன்று தொடங்குகிறது. 12.11.2024 வரை தினமும் இந்த பிரகாரம் வலம் வரும் வழிபாட்டை செய்ய வேண்டும்.

    ஆலயத்தில் அரச மரம், துளசி இருந்தால் அவற்றை காலையில் மட்டுமே வலம் வந்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை வேதவியாசர் ஒரு தடவை தர்மருக்கு அறிவுறுத்தி செய்ய வைத்ததாக புராணங்களில் சொல்லப்பட்டு உள்ளது.

    ஆலயத்தை வலம் வரும் இந்த வழிபாட்டை செய்து முடித்தால் மிகுந்த பலன்கள் கிடைக்கும். குறிப்பாக அறிந்தும் அறியாமல் செய்த பாவங்கள் நம்மை விட்டு விலகும்.

    • இன்று சர்வ ஏகாதசி.
    • பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-1 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி இரவு 7.16 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: அனுஷம் பின்னிரவு 2.14 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராஜாங்க சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் பூப்பல்லக்கில் பவனி. மதுரை ஸ்ரீ கடலழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் ஸ்ரீ ரங்கம் நம் பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சனம். திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சனம், பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-ஆக்கம்

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-வெற்றி

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-வாழ்வு

    துலாம்- நிம்மதி

    விருச்சிகம்-ஈகை

    தனுசு- தேர்ச்சி

    மகரம்-கவனம்

    கும்பம்-இன்பம்

    மீனம்-ஆசை

    • ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி.
    • நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம்.

    விரதங்களில் மிக மிக உயர்ந்தது ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் 24 அல்லது 25 ஏகாதசி விரதங்கள் வரும். இந்த ஏகாதசி விரதங்களில் சில ஏகாதசி விரதங்கள் மிகுந்த பலன்களை தரும் ஆற்றலை கொண்டது.

    குறிப்பாக ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி. அடுத்து மகாவிஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தனை ஏகாதசி மற்றும் மகாவிஷ்ணு படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் உத்தான ஏகாதசி ஆகிய 3 ஏகாதசிகளும் மிகவும் சிறப்பானவை.

    ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் சயன ஏகாதசியான இன்று குடும்பத்தில் யார் யாருக்கு முடியுமோ அவர்கள் அனைவரும் முழு உபவாசம் இருக்க வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிட்டு உண்ணாவிரத நோன்பு இருக்கலாம்.

    இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு மகாலட்சுமியுடன் கூடிய மகாவிஷ்ணு படத்தை பூஜை அறையில் அலங்கரித்து வைத்து நைவேத்தியம் படைத்து தீபதூபங்கள் காட்டி வழிபட வேண்டும். மகாவிஷ்ணுவை அலங்கரிக்கும்போது தாமரை அல்லது மல்லிகைப்பூவை பயன்படுத்துவது நல்லது.

    நைவேத்தியமாக பால் பாயாசம் படைத்து வழிபடலாம். பூஜைகள் முடிந்ததும் மகாவிஷ்ணு போற்றி சொல்ல வேண்டும். இன்றைய தினம் இந்த வழிபாட்டை செய்தால் ஆண்டு முழுவதும் ஏகாதசி விரதம் இருந்ததற்கு சமமான பலன்கள் கிடைக்கும்.

    பிரம்மகத்தி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் விலகிச் செல்லும். மேலும் நல்ல வீடும், அமைதியான வாழ்க்கையையும் இந்த வழிபாடு பெற்று தரும். 

    சயன ஏகாதசியான இன்று மேற்கொள்ளப்படும் விரதத்திற்கு கோபத்ம விரதம் என்று பெயர். காலை மற்ற கடமைகளை முடித்து விட்டு பூஜை அறையில் 3 கோலங்கள் போட்டு தாமரை மலர்களால் அலங்கரித்து அதன் நடுவில் மகாலட்சுமியுடன் மகாவிஷ்ணு இருக்கும் படத்தை வைத்து வழிபட வேண்டும்.

    33 முறை வலம் வந்து 33 முறை வழிபட வேண்டும். படம் இல்லாமல் கலசம் வைத்தும் இந்த வழிபாட்டை செய்யலாம். பிறகு 33 நபர்களுக்கு பிரசாதம் அளிப்பது சாப்பிட செய்ய வேண்டும். இந்த பூஜை செய்பவர்களுக்கு பாவங்கள் விலகும். பேரன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்று பத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், உலகமே இமயமலையில் கூடியது.
    • அதனால் வடக்கு திசை தாழ்ந்த போது, தெற்கு நோக்கி அகத்தியர் அனுப்பப்பட்டார்.

    மனிதன் இருக்கும் வரை தான் அவன் பாவ ஜென்மம். இறந்து போனால் அவன் புண்ணிய ஆத்மா. அவனுக்கு நம்மை நல்வழிப் படுத்துவதற்குரிய அனைத்து தகுதிகளும் உண்டு. எனவே இறந்து போன நம்மைச் சார்ந்த அனைவருமே, வயது வித்தியாசமின்றி நம்மை பாதுகாக்க வருகிறார்கள்.

    தமிழகத்தில் காவிரிக்கரைப் பகுதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி ஆற்றங்கரை, பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோயில் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவருவது மிகுந்த நன்மையை தரும்.

    ஏனெனில், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், உலகமே இமயமலையில் கூடியது.

    அதனால் வடக்கு திசை தாழ்ந்த போது, தெற்கு நோக்கி அகத்தியர் அனுப்பப்பட்டார்.

    அவர் தனது கமண்டலத்தில் கங்கையைக் கொண்டு வந்தார். அப்போது விநாயகர் காகம் உருவமெடுத்து கமண்டலத்தை தட்டி விட, காவிரி உருவானது.

    விழுந்த கமண்டலத்தை அகத்தியர் படாரென பாய்ந்து எடுத்து மீதி தண்ணீருடன் பொதிகை வந்தார்.

    அந்த தண்ணீரை பொதிகையின் உச்சியில் ஊற்ற அது தாமிரபரணியாக உருவெடுத்தது. எனவே காவிரி, தாமிரபரணி ஆகிய இரண்டு மாபெரும் நதிகளும் ஆடியில், பிறந்ததாக கூறப்படுவதுண்டு.

    நதிகள் பிறந்த இந்த புண்ணிய மாதத்தில் வரும் ஆடி அமாவாசை நாளில், நீர் நிலைகளில் நீராடி, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட வேண்டும் என கூறப்படுகிறது.

    கிராமக்கோயில்களில் இப்போது ஆடி அமாவாசை விழாவை, ஆடு வெட்டி கொண்டாடுகிறார்கள். இந்த பழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது. ஒரு முக்கியமான விஷயத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள்.

    ஆடி அமாவாசை தினத்தில் தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் ஆடு வெட்டுதல் போன்ற பலி வாங்கும் பாவ காரியங்களைச் செய்யாமல் முன்னோர்களை வணங்கி புண்ணியத்தை சேர்க்க வேண்டும்.

    • நாட்டில் எத்தனையோ பேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    • உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவலாம்.

    தானம்...

    உங்களால் என்ன தானம் செய்ய முடிகிறதோ அதை செய்யுங்கள்.

    நாட்டில் எத்தனையோ பேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவலாம்.

    ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம். நீங்கள் செய்யும் தானம் ஏழை & எளிய மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சி யையும் ஏற்படுத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.

    இதையடுத்து தர்ப்பணம்...

    நாளை நாம் ஒவ்வொருவரும் மறக்காமல் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுத்தாலும் நாளை மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

    நாம் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும்தான் அவர் களுக்கு உணவு, நம்மை சீராட்டி, பாராட்டி வளர்த்த நம் முன்னோர்களை நாம் பட்டினிப் போடாலாமா?

    அது எவ்வளவு பெரிய பாவம்?

    இந்த பாவ மூட்டை களை நீக்க மறக்காமல் தர்ப் பணம் கொடுங்கள். 

    ×