என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • தமிழ்க்கடவுள் அல்லது தமிழர்களின் தெய்வமாகக் கருதப்படுபவர் முருகப் பெருமான்.
    • உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அவதாரமே ஆறுமுகக் கடவுளாகும்.

    தமிழ்க்கடவுள் அல்லது தமிழர்களின் தெய்வமாகக் கருதப்படுபவர் முருகப் பெருமான்.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதாக புராண வரலாற்றுச் செய்திகள் மூலம் அறிகிறோம்.

    ஆறுமுகன் அவதரித்தல் :

    உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அவதாரமே ஆறுமுகக் கடவுளாகும்.

    கருணையே வடிவான ஆறு திருமுகங்களையும், பன்னிரெண்டு கரங்களையும் தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர்.

    முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். "முருகு" என்னும் திருப்பெயரோடு "அன்" விகுதி சேர்த்து முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகின்றனர்.

    அப்பேற்பட்ட முருகப் பெருமானின் அவதாரப் பெருமையையும், ஆறுபடை வீடுகளின் தலச் சிறப்பையும் வாசகர்களுக்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

    • கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும்.
    • மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

    கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர்.

    அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே!நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

    அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார்.

    அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று நீராடி பகலில் உணவு உண்டு இரவில் ஏதும் உண்ணாதிருத்தல் வேண்டும்.

    மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலையில் நதிநீராடி திருநீறு பூசி முருகனை வழிபாடு புரிய வேண்டும்.

    தண்ணீர் மட்டும் அருந்தி முருக மந்திரங்கள் முருகன் துதிகளை பாராயணம் செய்து ஜெபம் தியானம் கோவில் வழிபாடு இவைகளை செய்தல் வேண்டும்.

    இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணியன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.

    ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். மாதாமாதம் வரும் கார்த்திகை மாதக்கார்த்திகை அல்லது கிருத்திகை விரதம் எனப்படும்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை மற்றும் கார்த்திகை தீபவிழா எனப்படும்.

    மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களுடைய கூட்டமாகும்.

    கிருத்திகையில் மட்டும் நட்சத்திரங்கள் தாராளமாக இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் தானம் செய்யும் எஜமானனும் அவன் வம்ச பரம்பரையினர்களும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள்.

    அது போல ஆடி கிருத்திகைக்கும் மிகுந்த சிறப்பு உண்டு.

    ஆடி கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும்.

    • தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.
    • தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது.

    விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் கந்தனுக்குரிய விரதங்களில் உப்பு தவிர்க்கப் படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர்.

    உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதமோ, சஷ்டி விரதமோ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது.

    ஆடி மாதக் கார்த்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தக்ஷிணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது.

    ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டி செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன.

    தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது.

    ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    கார்த்திகை விரதம் இருந்தாலும், இருக்கமுடியாவிட்டாலும் கீழ்க்கண்ட இரு திருப்புகழ்ப் பாடல்களை மட்டுமாவது படிக்கலாம் என்றும் சொல்லுகின்றனர்.

    இவை மனதுக்கு நிம்மதியையும், சகல செல்வங்களையும் அருளிச் செய்யும் என வாரியார் ஸ்வாமிகள் கூறி இருக்கிறார்.

    "அதிருங் கழல்பணிந்து னடியேனுன்

    அபயம் புகுவதென்று நிலைகாண

    இதயந்தனிலிருந்து க்ருபையாகி

    இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!

    எதிரங்கொருவரின்றி நடமாடும்

    இறைவன் தனது பங்கிலுமைபாலா

    பதியெங்கிலுமிருந்து விளையாடிப்

    பலகுன்றிலும மர்ந்த பெருமானே."

    சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்

    தவமுறை தியானம் வைக்க அறியாத

    சடகசட மூட மட்டி பலவினையிலேசனித்த

    தமியன்மிடியால்மயக்கமுறுவேனோ!

    கருணைபுரியாதிருப்பதென குறையி வேளை செப்பு

    கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே!

    கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை

    கமழுமணமார் கடப்ப மணிவோனே

    தருணமிதையாமி குத்தகனமதுறு நீள் சவுக்ய

    சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு

    தமைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீ கொடுத்து

    தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா!

    அருணதள பாத பத்ம மதுநிதமுமேது திக்க

    அரிய தமிழ்தானளித்த மயில்வீரா

    அதிசயம நேகமுற்ற பழநிமலை மீதுதித்த

    அழகதிருவேரகத்தின் முருகோனே!

    • நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று.
    • கார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும்விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக் கூறுவார்கள்.

    முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு.

    முருகன் பிறந்தது விசாக நக்ஷத்திரம் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை.

    கங்கையாகிய ஆறு தாங்கிய ஆறு அக்னிப் பொறிகள் மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறு பெண்களால் வளர்க்கப் பட்டான்.

    அவன் குழந்தையாய் வளர்ந்ததும், திருவிளையாடல்கள் புரிந்ததும் ஆறு நாட்களே என்று சொல்லப் படுகிறது.

    இப்படிச் சகலத்திலும் ஆறு என்னும் எண் முக்கியமாய் அமையப் பெற்ற முருகனுக்கான நாமம் "சரவணபவ" என்னும் ஆறெழுத்தே ஆகும்.

    நம் உடலிலும் ஆறு ஆதாரங்களிலும் நிலை பெற்றிருப்பது இந்த முருகனே என்பதே அருணகிரியார் கூற்று.

    கார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றி செலுத்தும்விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக் கூறுவார்கள்.

    சூரனை வதைக்க வேண்டி ஆறுமுகன் தோன்றியதும், அவனைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிப் போற்றி வளர்த்ததும், குமரன் வளர்ந்ததும், அவனை அணைத்து ஒன்று சேர்க்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான், கார்த்திகைப் பெண்களைப் போற்றி வாழ்த்தியதோடு, இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால், "கார்த்திகேயன்" எனவும் அழைக்கப் படுவான் என்று சொன்னார்.

    இதைக் கந்த புராணம்,

    "கந்தன் தனை நீர் போற்றிய கடனால்

    இவன் உங்கள் மைந்தன் என்னும் பெயராகுக!"

    என்றும் அருளியதோடு மேலும் அவர்களுக்கு நட்சத்திரப் பதவியும் அளித்து, இந்தக் கார்த்திகைப் பெண்களின் நக்ஷத்திரம் வரும் சமயம் விரதம் இருப்பவர்களுக்குக் குறைகள் நீங்கி, நல்வாழ்வும், முக்தியும் கிடைக்கும், என்று அருளிச் செய்தார்.

    கார்த்திகை விரதம் இருப்பது பற்றிக் கந்த புராணத்தில்,

    "நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்

    தந்தம் குறை முடித்துப் பரந்தனை நல்குவம் என்றான்"

    எனவும் சொல்லுகின்றது.

    • “கொக்கு” என்றால் மாமரம் என்று பொருள்.
    • கொக்கை (மாமரத்தை) அறுத்த தலைவன் என்ற பொருளில் சேவல், “கொக்கு அறு கோ” என்று முருகனைப் போற்றியது.

    முருகனின் கையில் கொடியாக அமர்ந்த அமர்ந்த சேவல் "கொக்கு அறு கோ!" என்று கூவியது.

    மனித இனத்தை விழிப்படையச் செய்ய இன்றும் தொடர்ந்து, அதிகாலையில், "கொக்கு அறு கோ!" என்று கூவுகிறது! ஏன் அவ்வாறு கூவுகிறது?

    "கொக்கு" என்றால் மாமரம் என்று பொருள்.

    கொக்கை (மாமரத்தை) அறுத்த தலைவன் என்ற பொருளில் சேவல், "கொக்கு அறு கோ" என்று முருகனைப் போற்றியது.

    அழகனான குமரக்கடவுள், மேனி முழுவதும் கண்களாக இருந்த இந்திரனாகிய மயிலூர்தியை விடுத்து, நல்லுணர்வு பெற்று நல்லொழுக்கம் வரப் பெற்ற சூரனின் ஒரு கூறாகிய மயில் மேல் எழுந்தருளினான்!

    "மயிலே! எம்மைச் சுமந்திடுவாயாக!" என்று கூறி அம்மயிலை வானத்திலும், திக்குகளிலும், பூமியிலும் செலுத்தலானான்.

    இந்திரன் முருகனின் இடைக்கால மயிலூர்தியாக இருந்து போர்க்களத்தில் பணியாற்றினான்.

    சூரன் மயிலாக மாறியவுடன் இடைக்கால ஊர்தியை விட்டு இறங்கினான்.

    சேவலும் மயிலும் ஆகிட, விரும்பி, தவம் செய்த சூரனுக்கு பேரருள் செய்யும் பொருட்டு அவனைத் தன் ஊர்தியாக்கி அதன் மீதேறி உலகைச் சுற்றி வந்தான்.

    புதிய மயிலூர்தியில் வலம் வந்த வடிவேல் முருகனை அமரர்களும், தம்பியரும் சூழ்ந்து நின்று போற்றினர்.

    • அதே மாதிரி, கர்ம வினையை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.
    • இந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முருகன் தலம் முதன்மையான இடமாக கருதப்படுகிறது

    குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான்.

    அங்குள்ள முருகன் குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு.

    அடுத்து, மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம்.

    அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான்.

    அதே மாதிரி, கர்ம வினையை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.

    இந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முருகன் தலம் முதன்மையான இடமாக கருதப்படுகிறது

    • கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள்.
    • அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

    கார்த்திகை விரதம் :

    கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள்.

    அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார்.

    "கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்" என்று அருள் புரிந்தார்.

    கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேலை வழிபாடு செய்ய வேண்டும்.

    அன்று பகலில் உறங்குதல் கூடாது.

    விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னிரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.

    • சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
    • சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரமோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆடிப்பூர பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு பராசக்தி அம்மன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மேலாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதி உலா நடைபெறும்.

    10-ம் நாள் கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா நடைபெறும். 

    • வடபழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    போரூர்:

    ஆடி கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இன்று அதிகாலை 3மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு பின்னர் பள்ளியறை பூஜை முடிந்து முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    இதையடுத்து அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 11 மணி வரை முருகனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நண்பகல் 12 மணி வரை சந்தனகாப்பு அலங்காரத்திலும், அதைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை ராஜ அலங்காரமும், பின்னர் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்துடனும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.

    பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் ஆங்காங்கே குடி தண்ணீர் வசதி, முதியோர், கைக்குழந்தையுடன் வருபவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை என பல்வேறு வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • முருகருக்கு மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கிறது.

    ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு முருகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    இதில் பால், தயிர், இளநீர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம். வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    ஆடி கிருத்திகை விழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள், பால் காவடி, மலர் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.

    இந்த ஆடிக்கிருத்திகை விழா கடந்த 27-ந் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்கி, நேற்று ஆடிப்பரணியும், இன்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பம், நாளை இரண்டாம் நாள் தெப்பம், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்பம் நடக்கிறது.

    இந்த 3 நாட்கள் தெப்ப உற்சவத்தில் முருகர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    இந்த விழாவில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், பொது தகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் மலைக்கோவில், மலை அடிவாரம், மக்கள் அதிகம் கூடும் பகுதியில் 160 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பாக சென்னை, வேலூர், அரக்கோணம், காஞ்சிபுரம், திருப்பத்தூர், குடியாத்தம், ஆரணி, திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், சோளிங்கர், செய்யார், வந்தவாசி, ஆம்பூர், பேரணாம்பட்டு, பள்ளிப்பட்டு, திருப்பதி, சித்தூர், புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருத்தணிக்கு 560 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இந்த ஆடி கிருத்திகை விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருணகிரிநாதருக்கு வழிகாட்டிய முருகப்பெருமான்.
    • அருணகிரிநாதர் முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளார்.

    முருகன் சுருட்டு புகைப்பாரா?... எந்த ஒரு இறை வழிபாடும் காரண காரியங்கள் இல்லாமல் செய்வதில்லை. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் நடைமுறை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள மலைமீது அமைந்துள்ள முருகன் கோவிலில் இன்றும் உள்ளது.

    வயலூரில் அருணகிரிநாதருக்கு காட்சி தந்த முருகன் விராலிமலைக்கு வரச் சொல்லியதால் இங்கு அருணகிர நாதர் வந்துள்ளார். வயலூரில் இருந்து கிளம்பிய அருணகிரிநாதர் முருகப்பெருமான் சொன்ன விராலிமலை எங்கிருக்கிறது என்று வழி தெரியாமல் தவிக்கவே வேடன் ரூபத்தில் முருகப்பெருமான் வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி அழைத்து வந்தாராம். அத்தகைய சிறப்பு வாய்ந்த தலம் விராலிமலை தலம்.

    வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் இந்த விராலிமலை தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி (கூடு விட்டு கூடு பாயும் வித்தை) வழங்கியுள்ளார். இங்கு பலகாலம் தங்கியிருந்த அருணகிரிநாதர் இங்குள்ள முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளார். இந்த ஆலயத்துக்கு பல பெருமைகள் உண்டு.

    திருவண்ணாமலைக்கு ஈடாக ஏராளமான ஞான சித்தர்கள் தவம் செய்த மலை. திருவாரூர் தட்சிணா மூர்த்தி அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம்.

    ஜெனகர், செனந்தர், செனாதனர், செனக்குமாரர் நால்வருக்கும் தியானம் செய்த போது முருகனே தோன்றி அருள் தந்த திருத்தலம். இக்கோயிலில் ஒரு காலத்தில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து என்றபக்தர் ஈடுபட்டார்.

    ஒருநாள் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்றவைத்தார்.

    அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, "உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா?' என கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோயிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்தபோது அவர் முன்னால் சுருட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்தார்.

    கருப்பமுத்து நடந்ததைக்கூற அங்கிருந்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார்.

    அவர் கனவில் தோன்றிய முருகன், "எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என பக்தர் விரும்பினார்.

    அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே!' என்றார். அதன்பிறகு இன்றுவரை இப்பழக்கம் இருக்கிறது.

    இந்த சுருட்டை பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவனுக்கு என்ன படைக்கிறோம் என்பது முக்கியமல்ல; பக்தியும் அன்புமே முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.

    இந்த கோவிலில் கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் என்பது அதிகளவில் நடக்கிறது. அந்த வகையில் ஆடி கிருத்திகையில் இங்கு பக்தர்கள் பலரும் அன்னதானம் வழங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.

    • சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் தலங்களில் திருமஞ்சன சேவை.
    • சமயபுரம் ஸ்ரீமாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் தலங்களில் திருமஞ்சன சேவை. நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் ஸ்ரீகாந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-13 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி இரவு 9.11 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: பரணி பிற்பகல் 2.40 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று ஆடி கிருத்திகை விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம் மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் உற்சவம் ஆரம்பம். திருக்குளம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கோவில்களில் தெப்ப உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியுர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-உயர்வு

    கடகம்-உற்சாகம்

    சிம்மம்-இன்பம்

    கன்னி-லாபம்

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-பரிசு

    தனுசு- ஆர்வம்

    மகரம்-மேன்மை

    கும்பம்-வரவு

    மீனம்-முயற்சி

    ×