என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன் யானை செல்ல பஞ்சவாத்தியங்கள் வாசிக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    12 நாட்கள் நடைபெறும் விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 7-ம் நாளான கடந்த 30-ந்தேதி சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    8-ம் நாள் திருவிழாவான 31-ந்தேதி காலையில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் காட்சியளித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதைமுன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து 7.05 மணிக்கு நிலையம் சேர்ந்தது.

    அதனைத்தொடர்ந்து 7.10 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தேரோட்டத்தை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன்பு யானை செல்ல பஞ்சவாத்தியங்கள் வாசிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து வள்ளியம்மன் எழுந்தருளிய தேரானது, நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தில் கோவில் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், அஜித், முத்துமாரி, ஒய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குநர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், ராதாகிருஷ்ண ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அறங்காவலர் குழு உறுப்பினர் ராம்தாஸ், குமார் ராமசாமி ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், வைத்தீஸ்வரன் ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், முரளி காந்த ஆதித்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • இன்று சர்வ அமாவாசை.
    • இளையாங்குடி நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-17 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி காலை 6.32 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம்: மகம் நள்ளிரவு 1.50 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சர்வ அமாவாசை. (அமா சோம பிரதட்சிணம்). தேவக்கோட்டை, திண்டுக்கல், மிலட்டூர் கோவில்களில்ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளூர், திலகர்பணப்புரி, திருவெண்காடு கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. மதுரை ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி ஆண்டாள் திருக்கோலம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் வெள்ளிக் கேடயத்தில் பவனி. இளையாங்குடி நாயனார் குருபூஜை. திருச்செந்தூர், பெருவயல் கோவில்களில் ஸ்ரீ முருகப் பெருமான் தேரோட்டம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-தெளிவு

    கடகம்-தாமதம்

    சிம்மம்-கவனம்

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- நலம்

    விருச்சிகம்-பணிவு

    தனுசு- பண்பு

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-லாபம்

    • இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர்.
    • ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோவிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    திருவான்மியூர்:

    சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.

    இலுப்பைக்குடி:

    இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர்.

    இங்குதான் கொங்கண சித்தர் தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

    அந்தியூர்:

    ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் செல்லீஸ்வரர் திருக்கோவிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோவிலில் ஈசான்ய திசையில் பைரவர் காட்சியளிக்கிறார்.

    சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு செய்ததாக வரலாறு கூறுகிறது.

    திருவியலூர் (திருவிசநல்லூர்):

    கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது.

    இத்திருக்கோவிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு பைரவர்கள் உள்ளனர்.

    • ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார்.
    • அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.

    காளஹஸ்தி:

    இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி தடையின்றி நடைபெறும்.

    பழநி:

    அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.

    சீர்காழி:

    சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும்.

    சீர்காழிக்கு செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் காமநாத ஈஸ்வரர் திருக்கோவிலில் பைரவர்களை வழிபட்டு இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய கால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.

    சேலம்:

    இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது.

    ஆபத்துத்தாரண மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார்.

    மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.

    • கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது.
    • இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.

    திருவாஞ்சியம்:

    தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார்.

    எனவே இவர் ஆசன பைரவர் என அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.

    திருச்சேறை:

    கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.

    திருப்பாச்சேத்தி:

    மதுரை - ராமேஸ்வரம் சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார்.

    ஒரு நாய் நின்ற கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம்.

    சரும நோய், வயிற்று நோய், வாத நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

    நாகை:

    இங்கு சம்ஹார பைரவராக தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.

    கும்பகோணம்:

    வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை ஒரே நேரத்தில் வழிபடலாம்.

    • எந்தக் கோவிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார்.
    • ஆனால் முறப்ப நாடு கோவிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர்.

    பொன்னமராவதி புதுப்பட்டி:

    இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

    சேந்தமங்கலம்:

    இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் காணப்படுகிறார்.

    எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு திருஉருவமாகும்.

    முறப்ப நாடு:

    எந்தக் கோவிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி தருகிறார்.

    ஆனால் முறப்ப நாடு கோவிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர்.

    ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார்.

    மற்றொரு பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    நாய் வாகனத்துடன் காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர பைரவர் என்றும் கூறுகின்றனர்.

    இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.

    • மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது.
    • திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர்.

    திருநாகை:

    நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால சம்ஹார பைரவ மூர்த்தி.

    மதுரை:

    இங்கு இம்மையில் நன்மை தருவார் கோவிலிலும், கீழ ஆவணி மூல வீதி புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர்.

    மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோவிலில் உள்ள இரட்டை கால பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது.

    இது போன்ற அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.

    திருவண்ணாமலை:

    இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.

    திருமயம்:

    இக்கோவில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது.

    இங்கு மிகப் பெரிய கோட்டை அமைந்துள்ளது.

    கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான கால பைரவர் அருள்பாலிக்கிறார்.

    இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் எனப்படுகிறார்.

    திருமயம் கோட்டை பைரவர் சக்தி வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.

    • இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார்.
    • இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    திருக்கோஷ்டியூர்:

    இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. வைரவன்பட்டி.

    இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் உடையவர்.

    பைரவபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெண்பாக்கம் அருகில் உள்ளது பைரவபுரம். ஸ்வர்ண கால பைரவர் கோவில் இங்கே உள்ளது.

    சிவபுரம்:

    இது கால பைரவ சத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோவிலாக விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

    எமனேஸ்வரம்:

    எமனேஸ்வரமுடையார் கோவிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

    காளையார் கோவில்:

    இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார்.

    இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    • பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது.
    • இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் ளக்ஷத்திர பாலகராக இருந்து ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார்.

    சிவன் கோவில்களில் மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோவிலில் வீற்றிருப்பது ஒரு தனிச்சிறப்பு.

    பஞ்சமுக பைரவர்:

    முசிறி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வீற்றிருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் யாளி வாகனத்தில் அமர்ந்து பஞ்சமுக பைரவர் அருள்பாலிக்கிறார்.

    முக்கிய பைரவர் ஸ்தலங்கள்:

    வைரவன்பட்டி:

    பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே தோண்டிய சுனை உள்ளது.

    இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.

    • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோவில் இங்கு தான் முதன்முதலில் கட்டப்பட்டது.
    • மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.

    காரைக்குடி:

    இங்கு புகைவண்டி நிலையத்திற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இலுப்பைக்குடி என்னும் தலம்.

    இங்குள்ள பைரவர் தனாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். ஆலயம் சிவாலயம் என்றாலும் பைரவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

    படப்பை:

    தாம்பரத்திலிருந்து காஞ்சி செல்லும் சாலையில் படப்பை என்னும் ஸ்தலமுள்ளது. அங்கு துர்க்கை சித்தர் அவர்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மூர்த்திகளை சிறப்புற அமைத்துள்ளார்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு தனிக்கோவில் இங்கு தான் முதன்முதலில் கட்டப்பட்டது.

    மிகச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது.

    ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.

    • விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்.
    • ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.

    அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு செய்ய வேண்டிய அலங்காரங்கள்:-

    அஸ்வினி: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்கரித்து அருகம்புல் மாலை சாற்றலாம்.

    பரணி: சந்தன அலங்காரம் செய்வித்து, தங்கக் கிரீடம் சாற்றலாம்.

    கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடத்தால் அலங்காரம் செய்விக்கலாம்.

    ரோகினி: சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை அணிவிக்கலாம்.

    மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரத்தில் அழகு படுத்தி, அருகம்புல் மாலையைச் சாற்றலாம்.

    திருவாதிரை: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கலாம்.

    புனர்பூசம்: சந்தன அலங்கா ரத்துடன் அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

    பூசம்: தங்கக் கிரீடத்தால் அழகு படுத்தி, அருகம்புல் மாலையை அணிவிக்கலாம்.

    ஆயில்யம்: அருகம்புல் மாலை போதும்.

    மகம்: தங்கக் கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அழகு செய்து, அருகம்புல் மாலையை அணிவிக்கவும்.

    பூரம்: கஸ்தூரி மஞ்சளால் அலங்கரித்து, தங்கக் கிரீடம் சாற்றவும்.

    உத்திரம்: அழகு தரும் திருநீறு அலங்காரம் செய்வித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    ஹஸ்தம்: குளிர்வூட்டும் சந்தன அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    சித்திரை: வெள்ளிக்கவசம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.

    சுவாதி: தங்கக் கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதுடன், அருகம்புல் மாலையும் சாற்றலாம்.

    விசாகம்: திருநீறு அலங்காரம் போதும்.

    அனுஷம்: கஸ்தூரி, மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை சாற்றலாம்.

    கேட்டை : தங்கக்கிரீடத்தால் அழகுபடுத்தி திருநீறு அலங்காரம் செய்வதுடன் அருகம்புல் மாலையும் சாற்றவும்.

    மூலம்: சந்தன அலங்காரமும், அருகம்புல் மாலை சாற்றலுமே போதுமானது.

    பூராடம்: தங்கக்கிரீடம் அணிவித்து, திருநீறு அலங்காரத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றுங்கள்.

    உத்திராடம்: அருகம்புல் மாலையே போதும்.

    திருவோணம்: சுவர்ணத்தால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றவும்.

    அவிட்டம்: வெள்ளிக்கவசம் சார்த்தி, மலர் அலங்காரம் செய்வித்தால் போதும்.

    சதயம்: குங்கும அலங்காரத்தால் அலங்கரித்து, வெள்ளிக்கவசம் அணிவியுங்கள்.

    பூரட்டாதி: தங்கக் கிரீடம் அணிவித்து, அருகம்புல் மாலையால் அலங்கரிக்கவும்.

    உத்திரட்டாதி: ரோஜா மாலை அலங்காரமே போதும்.

    ரேவதி: மலர்களால் அலங்கரித்து, அருகம்புல் மாலை சாற்றி, வெள்ளிக்கவசம் அணிவிக்கவும்.

    • இன்று மாத சிவராத்திரி.
    • கண்டருளல் அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குரு பூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-16 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி (முழுவதும்)

    நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 11.49 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று மாத சிவராத்திரி. சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி ராமாவதாரம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கமல வாகனத்தில் புறப்பாடு. கண்டருளல் அதிபத்த நாயனார், புகழ்த்துணை நாயனார் குரு பூஜை. உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஜெயம்

    ரிஷபம்-கவனம்

    மிதுனம்-பரிவு

    கடகம்-பாசம்

    சிம்மம்-நிறைவு

    கன்னி-நலம்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- விருத்தி

    மகரம்-சுகம்

    கும்பம்-பரிசு

    மீனம்-கடமை

    ×