என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-21 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி காலை 7.22 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: அனுஷம் நள்ளிரவு 12.34 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் காலையில் கற்பக விருட்ச வாகனத்திலும் இரவு சர்வ பூ பால வாகனத்திலும் புறப்பாடு. கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி. தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்க டேசப் பெருமாள் கஜேந்திர மோட்சம். சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ அம்பாள் கருட வாகனத்தில் வைஷ்ணவி அலங்காரத்தில் காட்சியருளல். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருவிடைமருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-பரிசு

    கடகம்-வரவு

    சிம்மம்-தெளிவு

    கன்னி-பரிசு

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- செலவு

    மகரம்-தாமதம்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-இன்பம்

    • நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும்.
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருவதால் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இங்கு சத்ரு சம்ஹார பூஜை, குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுவதால் ஏராளமானோர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.

    இங்கு வழங்கப்படும் நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும். இலை விபூதி பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இந்த கோவிலில் சுப முகூர்த்த நாட்களில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்கிறது. தற்போது புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா நடப்பதால் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கும் வந்து தரிசனம் செய்வதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதனால் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் புரட்டாசி மாதம் என்பதால் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம்.


    அதற்காக பக்தர்கள் இங்கு வந்து ஒரே இடத்தில் முருகப்பெருமானையும், பெருமாளையும் ஒரு சேர தரிசிக்க வாய்ப்பு உள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதாலும் விடுமுறையை கொண்டாட பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டு 4.30மணிக்கு விஸ்வரூபம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    • ஏழுமலையான் சின்னசேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா.
    • கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா 2-இரண்டாவது நாளான நேற்று காலை ஏழுமலையான் சின்னசேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர். நேற்று மாலை திடீரென 1 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைந்து அவதி அடைந்தனர். நேற்று இரவு ஏழுமலையான் வீணையை ஏந்தியபடி சரஸ்வதி அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    இன்று காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்ம வாகனத்தில் 4 மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் ஏழுமலையானுக்கு தீபாராதனை செய்து வழிபட்டனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நடன கலைஞர்கள் சாமி ஊர்வலத்தில் முன்பாக கண்ணைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 75 552 பேர் தரிசனம் செய்தனர் 35 885 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 2.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் பெரிய கெங்கையம்மன் கோவில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.
    • ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும்.

    முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாள் சதுர்த்தி ஆகும். மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சதுர்த்தி திதிகள் வருவதுண்டு.

    இவற்றில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தி என சொல்வதுண்டு. இந்த நாளிலேயே பெரும்பாலானவர்கள் விநாயகரை விரதம் இருந்து, வழிபடுவது உண்டு. துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.

    அதே சமயம் வாழ்க்கையில் வளம், நலம் பெருக வேண்டும், வளர்ச்சிகள் ஏற்பட வேண்டும், நன்மைகள் பெருக வேண்டும், மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைப்பவர்களை விநாயகரை வளர்பிறையில் வரும் சதுர்த்தியில் வழிபடுவது சிறப்பானதாகும்.

    அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து நான்கு நாட்களில் வரும் திதியை வளர்பிறை சதுர்த்தி. இந்நாளில் வீட்டில் பூஜை செய்து அருகில் உள்ள விநாயகர் சந்நதிக்கு சென்று விநாயகரை மனமுருகி வணங்கி வழிபட வேண்டும். அப்போது விநாயகரின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வழிபாடு முடிந்த உடன் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து வர விநாயகப் பெருமானின் அருள் ஆசி கிட்டும்..

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பதியில் ஏழுமலையான் ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார்.
    • புரட்டாசி 3-ம் சனிக்கிழமையன்று திருப்பதியில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி மாதமானது புதன் பகவானுக்குரியதாகும். புதன் கிரகத்திற்கு, அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதால் புரட்டாசி மாதம் விஷ்ணு பகவானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.

    திருப்பதியில் ஏழுமலையான் ஒரு புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். திருப்பதி சந்திரனுக்குரிய ஸ்தலமாகும். சந்திரனின் மகனாகிய புதனின் அதிபதியாக மகா விஷ்ணு இருப்பதால், புரட்டாசியில் அவரை வழிபடுவது நல்லது. புரட்டாசி 3-ம் சனிக்கிழமையன்று திருப்பதியில் நடைபெறும் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுபவர்களுக்கு சனியின் கெடுபலன்கள் நீங்குவதோடு பல நன்மைகள் கிடைக்கும். மேலும் 3 தலைமுறை முன்னோர்களுக்கும் மோட்சம் கிடைக்குமென்பது ஐதீகமாகும்.

    புரட்டாசி சனிக்கிழமையில் 108 திவ்ய தேசங்களில் ஏதாவது ஒரு பெருமாள் கோவிலுக்கு சென்று நல்லெண்ணை கொண்டு விளக்கேற்றி துளசி சாற்றி வணங்குவது நல்லது. பின்னர், பெருமாளுக்கு பிடித்த அவல், வெண்ணெய், பால் பாயாசம், பலகாரம் போன்றவற்றை படையல் செய்து வழிபட மகாவிஷ்ணுவின் அருளுடன், மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும்.

    மேலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதால் பெருமாளின் அருளோடு, குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம். 

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-19 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை (முழுவதும்)

    நட்சத்திரம்: சுவாதி இரவு 9.06 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். தல்லாகுளம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கிருஷ்ணாவதாரம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் சந்திர பிரபையில் பவனி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ மகேஸ்வரி அலங்காரத்தில் காட்சியருளல். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கும் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-போட்டி

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-நட்பு

    துலாம்- பொறுப்பு

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- பெருமை

    மகரம்-புகழ்

    கும்பம்-ஆக்கம்

    மீனம்-பக்தி

    • ஆஞ்சனேயர் சந்நிதிக்குப் பால், பன்னீர் வாங்கிக்கொடுக்கவும்.
    • விநாயகரை வணங்கவும்.

    ஆஞ்சனேயர் சந்நிதிக்குப் பால், பன்னீர் வாங்கிக்கொடுக்கவும்.

    விநாயகரை வணங்கவும்.

    விநாயகர் சந்நிதிக்கு வஸ்திரம் வாங்கித்தரவும்.

    திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வணங்கவும்.

    சிவன் சந்நிதியில் விளக்கேற்ற நல்லெண்ணெய் வாங்கிக்கொடுக்கவும்.

    • கும்பம் ராசிக்காரர்கள் சனீஸ்வரர் சந்திதியில் விளக்கேற்றுவது நலம்.
    • ஒருமுறை திருநள்ளாறு சென்றுவரவும்.

    கும்பம் ராசிக்காரர்கள் சனீஸ்வரர் சந்திதியில் விளக்கேற்றுவது நலம்.

    ஒருமுறை திருநள்ளாறு சென்றுவரவும்.

    ஆஞ்சனேயருக்கு உங்கள் நட்சத்திர நாளில் பூஜை செய்யுங்கள்.

    பஞ்சமுக ஆஞ்சனேயர் வழிபாடு சிறப்பு.

    விநாயகர் அபிஷேகத்திற்கு தேவையானதைக் கொடுக்கவும்.

    வில்வாஷ்டகம் கூறவும்.

    ஒம் நமசிவாய என்று கூறவும்.

    கால் ஊனமுற்றவருக்கு உதவவும்.

    • மகரம் ராசியில் பிறந்தவர்கள் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.
    • அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அபிஷேகத்திற்கும், விளக்குக்கும் நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கவும்.

    மகரம் ராசியில் பிறந்தவர்கள் ஆஞ்சனேயருக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.

    அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அபிஷேகத்திற்கும், விளக்குக்கும் நல்லெண்ணெய் வாங்கி கொடுக்கவும்.

    சென்னை பொழிச்சலூரில் உள்ள சிவனை வணங்கவும்.

    சிவ அஷ்டோத்திரம் கூறவும். "நமசிவாய நம" என்று கூறவும்.

    சனீஸ்வரர் கோவில் அர்ச்சகருக்கு அவர் சாப்பிட உணவுக்குரிய பணம் அல்லது அரிசி, பருப்பு வாங்கிக்கொடுங்கள்.

    • தனுசு ராசிக்காரர்கள் காளியை கண்டிப்பாக வணங்க வேண்டும்.
    • திருநள்ளாறு சென்று வணங்கவும். பக்த ஆஞ்சனேயரை வணங்கவும்.

    தனுசு ராசிக்காரர்கள் காளியை கண்டிப்பாக வணங்க வேண்டும்.

    திருநள்ளாறு சென்று வணங்கவும். பக்த ஆஞ்சனேயரை வணங்கவும்.

    ஆஞ்சனேயர் சந்நிதியை முடிந்த மட்டும் தினமும் வலம் வந்து வணங்கவும்.

    அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வணங்கவும்.

    ஆலங்குடி சென்று வணங்கவும்.

    சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறவும்.

    "ஓம் நம சிவாய" என்று கூறவும்.

    மகாமிருத்யுஞ்சய மந்திரத்தை கேட்பதும் நன்மை தரும்.

    • ஆஞ்சநேயர் சந்நிதிக்கு செந்தூரம் வாங்கிக்கொடுக்கவும்.
    • காளஹஸ்தி சென்று சிவனை வணங்கவும்.

    விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் விநாயகர், ஆஞ்சநேயர், சிவன் கோவில்களுக்கு மைக் செட், மின் மேள வாத்தியம் தேவைப்பட்டால் வாங்கிக்கொடுக்கவும்.

    ஆஞ்சநேயர் சந்நிதிக்கு செந்தூரம் வாங்கிக்கொடுக்கவும்.

    காளஹஸ்தி சென்று சிவனை வணங்கவும்.

    வைத்தியநாத அஷ்டகம் கூறி வழிபடவும், முடியாதவர்கள் 'நமசிவாய நம'என்று கூறி வழிபடவும்.

    • துலாம் ராசியில் பிறந்தவர்களை சனிப் பெயர்ச்சி அடிக்கடி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும்.
    • விநாயகரின் நைவேத்யத்துக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை வாங்கிக் கொடுக்கவும்.

    துலாம் ராசியில் பிறந்தவர்களை சனிப் பெயர்ச்சி அடிக்கடி சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும்.

    விநாயகரின் நைவேத்யத்துக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை வாங்கிக் கொடுக்கவும்.

    ஆஞ்சநேயரை வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம்.

    திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரரையும், மிருதபாதநாயகி அம்மனையும், அங்குள்ள சனீஸ்வரரையும் வணங்கவும்.

    ஆதிசங்கரர் அருளிய சந்திரசேகர மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.

    அருகில் உள்ள சிவன் கோவில், அங்குள்ள சனீஸ்வரர் சந்திதிகளில் ஏதேனும் கட்டிட பழுதிருப்பின் நீங்கள் சற்று முயற்சி எடுத்து சரி செய்யவும்.

    ×