என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம்.
    • 21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம்.

    தீர்க்க சுமங்கலியாக ஆசீர்வதிக்கும் விரதம்... கேதார கெளரி விரதம். தாலி பாக்கியத்தைத் தந்தருளும் விரதம், தாலி பலம் தரும் விரதம், கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம், குடும்பத்தில் ஒற்றுமையை மேம்படுத்தித் தரும் விரதம் என்றெல்லாம் கேதார கெளரி விரதத்தை போற்றுகின்றனர் பெண்கள்.


    உமையவள் கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கேதார கௌரி விரதம் என்றும் போற்றுவார்கள். கௌரிதேவியாகிய உமையவள் மேற்கொண்ட விரதம் என்பதால் கேதார கௌரிவிரதம் என்று இந்த விரதம் சொல்லப்பட்டது.

    இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பார்கள். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். இந்த நாட்களிலும் விரதம் மேற்கொள்வார்கள்.

    தேய்பிறை அஷ்டமியில் துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் எனப்படும்! குறிப்பாக, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பார்கள். மிக மிக முக்கியமாக, இந்த நாளில்தான் விரதம் மேற்கொள்வார்கள் பெண்கள்.


    கேதார கௌரி விரதத்தை, சுமங்கலிகள் கடைப்பிடிக்க வேண்டும். ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் குளக்கரைகளிலும் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜித்து வந்தார்கள் அந்தக்காலத்தில்! ஆலமரத்தடியிலும் பூஜை செய்து பிரார்த்தனை செய்துகொண்டார்கள்.

    விரத நாளில், ஸ்ரீவிநாயகப் பெருமானை வழிபட்டு, பிருங்கி, கௌதம முனிவர்களை வணங்கி சிவபூஜையைத் துவங்க வேண்டும். 14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும்.

    21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம். நம்மால் முடிந்தவற்றைக் கொண்டும் நைவேத்தியம் செய்யலாம். பூஜையில் முக்கிய அங்கமாகத் திகழ்வது நோன்புச்சரடு. சிவனாரையும் சக்தியையும் மனதாரப் பிரார்த்தித்து, நோன்புச்சரடு கட்டிக்கொள்வார்கள் பெண்கள். வயது முதிர்ந்த சுமங்கலிகள், மற்ற பெண்களுக்கு, சுமங்கலிகளுக்கு நோன்புச்சரடைக் கட்டிவிடுவார்கள்.


    கேதார கௌரி விரதத்தை, ஆத்மார்த்தமாகவும் முறையாகவும் செய்தால், பிரிந்த தம்பதி ஒன்றுசேருவார்கள். தாம்பத்யம் சிறந்து விளங்கும். மாங்கல்ய பலம் பெருகும். தீர்க்க சுமங்கலியாக வாழலாம். கணவரின் ஆயுள் நீடிக்கும்.

    மாங்கல்யம் காத்தருளும் கேதார கெளரி நோன்பு இருந்து சிவ சக்தியை வழிபடுவோம்.

    • இன்று அமாவாசை, கேதாரி கவுரி விரதம்.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-15 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அமாவாசை திதி (6.21-க்கு பிறகு பிரதமை திதி

    நட்சத்திரம்: சுவாதி அதிகாலை 4.13 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரைமாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை

    இன்று அமாவாசை, கேதாரி கவுரி விரதம். வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் உற்சவ சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருவனந்தபுரம் சிவன், திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. திருநெல்வேலி காந்திமதி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா.

    • இன்று தீபாவளி பண்டிகை. சுபமுகூர்த்த தினம்.
    • ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திருக்கு குருவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-14 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தசி மாலை 4.28 மணி வரை பிறகு அமாவாசை

    நட்சத்திரம்: சித்திரை நள்ளிரவு 1.55 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று தீபாவளி பண்டிகை. சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மன் ஊஞ்சலில் காட்சி. வள்ளியூர் ஸ்ரீ முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக் கடலைச்சாற்று வைபவம். சோழவந்தான் சமீபம் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திருக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உறுதி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-தெளிவு

    கடகம்-பக்தி

    சிம்மம்-லாபம்

    கன்னி-நிம்மதி

    துலாம்- மதிப்பு

    விருச்சிகம்-இன்பம்

    தனுசு- நற்செயல்

    மகரம்-இன்பம்

    கும்பம்-உற்சாகம்

    மீனம்-உதவி

    • இதுதான் தாலி என சொல்லப்பட்டு வந்தது. தாளை பனைமர ஓலைகள் என்றும் மங்காது.
    • எனவேதான் ஓலை சுவடிகள் எல்லாம் தாளை பனைமரத்து ஓலையில் எழுதப்பட்டது.

    தாளை பனை மரத்தில் கட்டப்பட்டதால் இது தாலி என பெயர் பெற்றது.

    இதுதான் தாலி என சொல்லப்பட்டு வந்தது. தாளை பனைமர ஓலைகள் என்றும் மங்காது.

    எனவேதான் ஓலை சுவடிகள் எல்லாம் தாளை பனைமரத்து ஓலையில் எழுதப்பட்டது.

    அன்று எழுதப்பட்ட ஓலைசுவடிகள் தான் இன்றும் அழியாமல் இருக்கிறது.

    இந்த தாளை பனை மரம் தை மாதத்தில் மிக செழிப்பாக வளர்ந்து இருக்கும்.

    தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மட்டும் இது காணப்படுகிறது.

    சாதாரண பனை ஓலையில் எழுதினால் நாள் அளவில் இது மங்கி போகும்.

    ஆனால் தாளை பனை ஓலையில் எழுதினால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் நமக்கு பயன்படும் விதத்தில் தான் இருக்கின்றது.

    • அதே போல் பெண்களின் கழுத்தில் கட்டப்படுவதால் தாலி என பெயர் பெறுகிறது.
    • இன்றுதான் தங்கம் + மஞ்சள் சரடுடன் பெண்கள் கழுத்தில் கட்டப்படுகிறது.

    திருமணம் ஆன தம்பதியர்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் புதிய தம்பதியர்கள் போல் நினைத்து வாழ்ந்து வந்தோமானால் மனமகிழ்ச்சியோடும் பிறர் போற்றும் படியும் வாழலாம்.

    கையில் அணிவது வளையல், கைவிரலில் அணிவது மோதிரம், காலில் அணிவது கொலுசு, கால் விரலில் அணிவது மெட்டி என்று கூறுகிறோம்.

    அதே போல் பெண்களின் கழுத்தில் கட்டப்படுவதால் தாலி என பெயர் பெறுகிறது.

    இன்றுதான் தங்கம் + மஞ்சள் சரடுடன் பெண்கள் கழுத்தில் கட்டப்படுகிறது.

    தங்கம் கண்டு பிடிப்பதற்கு முன்பாக மங்கையர் கழுத்தில் மஞ்சள் கிழங்கு + மஞ்சள் பூசப்பட்ட நூலாலும் தாலியாக கட்டப்பட்டது.

    அதற்கும் முன்பாக அதாவது மஞ்சள் கிழங்கிற்கு முன்பாக பண்டைய காலத்தில் தாளை பனைமரம் ஓலையைதான் தாலியாக கட்டினார்கள்.

    அதாவது ஒரு பக்கத்தில் மணப்பெண்ணும், மணப்பெண்ணின் வீட்டாரும் உறவினர்களும், மறுபக்கத்தில் மணமகனும் மணமகன் வீட்டாரும், உறவினர்களும் மற்றும் ஊர் பெரியோர்களும், ஊர்காரர்களும் முன்னிலையில் தாளைபனை மரம் ஓலையில் இன்னாருடைய (தந்தை தாய் பெயர்) மகளை (மணமகள் பெயர்) இன்னாருடைய (மணமகன் தந்தை தாய் பெயர்) மகனுக்கு (மணமகன் பெயர்) ஊர் பெரியோர் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என எழுதுவார்கள்.

    அந்த ஓலையை மடித்து தாளை பனைமர ஓலையின் நாரை கிழித்து கட்டி மணமகன் கையில் தரப்படும்.

    மணமகன் அங்கு கூடி இருப்போர் முன்பாக மணமகள் கழுத்தில் கட்டுவார்.

    • திருமணம் செய்த தம்பதியர்கள் விருந்து ஒன்பால் செய்தால் தான் திருமணத்தின் சிறப்பு ஆகும்.
    • விருந்து ஒன்பால் என்பது விருந்து உபசரித்தல் என்று பொருள்.

    அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் மரபு உண்டு.

    ஏன் என்றால் அருந்ததி நட்சத்திரம் என்பது சாதாரண கண்களுக்கு ஒரு நட்சத்திரம் போல் காட்சியளிக்கிறது.

    ஆனால் அதையே நுண்ணோக்கு கருவியால் கண்டால் இரு நட்சத்திரம் போல் காட்சி அளிக்கும்.

    இதைத்தான் இரு உடல் ஒரு உயிர் என்பார்கள்.

    அதாவது கணவன்+மனைவி இருவரும் இரு உடலாக இருந்தாலும் ஒரு உயிராக ஒற்றுமையுடனும் அன்யோன்யமாக 16 செல்வங்களையும் பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என்பதே இந்த மரபில் மறைந்து இருக்கும் மறைபொருள் ஆகும்.

    திருமணம் என்பது வெறும் இனபெருக்கம் செய்யும் செயல்தான் என்று எல்லோரும் நினைப்பது தவறான கருத்தேயாகும்.

    திருமணம் செய்த தம்பதியர்கள் விருந்து ஒன்பால் செய்தால் தான் திருமணத்தின் சிறப்பு ஆகும்.

    விருந்து ஒன்பால் என்பது விருந்து உபசரித்தல் என்று பொருள்.

    ஆன்றோர்களும், சான்றோர்களும் விருந்து உபசரித்தல் செய்து அவர்களிடம் நல்லாசி பெற வேண்டும் என்பதுதான் திருமண தர்மம் கூறுகிறது.

    அதற்கு பிறகு தன் வம்ச விருத்திக்காக பிள்ளை பெறுதல் வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

    • திருமண மண்டபத்தில் திருமண தம்பதியர் முன்பாக அக்கினி குண்டம் வளர்க்கப்படும்.
    • இந்த அக்கினியை சாட்சியாக வைத்துதான் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார்.

    இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் சொல்லப்படும் செய்திகளும், ரகசியங்களும் எண்ணில் அடங்கா ஏராளமான நுணுக்கங்கள் உள்ளன.

    திருமண மண்டபத்தில் திருமண தம்பதியர் முன்பாக அக்கினி குண்டம் வளர்க்கப்படும்.

    இந்த அக்கினியை சாட்சியாக வைத்துதான் மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார்.

    அங்கு இருவருமே ஒருவருக்கு ஒருவர் இன்ப துன்பம் கர்மா இவைகளை ஒருவருக்கு ஒருவர் பங்கு ஏற்பதாகவும் உறுதிமொழியுடன் திருமணம் நடக்கிறது.

    வாழ்க்கையில் யாராவது ஒருவர் ஒருவருக்கு துரோகம் செய்தால் அவரை பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த அக்கினி சுடும் என்பதால் தான் அக்கினியை சாட்சியாக வைத்து திருமணம் நடைபெறுகிறது.

    • இருமனம் சேர்ந்து வாழ்வதுதான் திருமணம்.
    • இந்த திருமணத்திற்கு முதன்மையும், முத்திரையும் ஆனதுதான் தாலி.

    மாங்கல்யம் (மாங்கல்யத்திற்கு) தாலி என்ற சொல் எப்போது சொல்லப்பட்டது.

    இதை தாலி என்று ஏன் சொல்கிறோம்.

    இருமனம் சேர்ந்து வாழ்வதுதான் திருமணம்.

    இந்த திருமணத்திற்கு முதன்மையும், முத்திரையும் ஆனதுதான் தாலி.

    பெண்மகள் கழுத்தில் ஆண் மகன் இரு உறவினர்கள் முன்னிலையிலும் மற்றும் ஊரார் முன்னிலையிலும் கட்டவதுதான் தாலி என்கிறோம்.

    இந்த தாலி தங்கத்தால் ஆன பொட்டுடன் மஞ்சள் சரடுடன் கட்டப்படுகிறது.

    தங்கத்தால் கட்டப்படுவதால் இது தாலி என்று பெயர் பெற்றதா?

    தமிழகத்தில் சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஏராளமாக சொல்லப்பட்டுள்ளன.

    கருவறை முதல் கடைசி காலம் வரை மனிதனின் ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்வுகளிலும் சுப நிகழ்ச்சிகளும் வாழ்க்கை வளமுடன் நலமுடன் வாழ்வாதார நிலை மேம்படவும் தர்ம சிந்தனையுடன், தீர்க்க ஆயுளுடனும் வாழ்வதற்கு உருவாக்கி அமைக்கப்பட்டதுதான் சடங்குகளும், சம்பிரதாயங்களும்.

    • அன்று ஒருநாள் மட்டும் கங்கா தேவி நாம் குளிக்கும் நீரில் இருப்பாள்.
    • இதனால் எல்லோரும் எண்ணைய் தோய்த்து கங்கா ஸ்ஞானம் செய்ய வேண்டும்.

    தீபாவளி திருநாள் அன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்னால் எழுந்து எண்ணைய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    அன்று எண்ணைய் தேய்த்து குளித்தால் கங்கையில் குளிப்பதற்கு சமம்.

    அன்று ஒருநாள் மட்டும் கங்கா தேவி நாம் குளிக்கும் நீரில் இருப்பாள்.

    இதனால் எல்லோரும் எண்ணைய் தோய்த்து கங்கா ஸ்ஞானம் செய்ய வேண்டும்.

    எல்லோர் வாழ்விலும் இருள் அகன்று தித்திக்கும் தீப ஒளி வீசட்டும்.

    ஈசன் அருள் பெற்று மனமகிழ்ச்சியோடு வாழுங்கள். மற்றவரையும் மன மகிழ்ச்சியோடு வாழ வையுங்கள்.

    • குபேரருக்கு வியாழக்கிழமை பூஜை செய்வது உகந்தது ஆகும்.
    • தீபாவளி தினத்தில் குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் செல்வம் செழித்தோங்க குபேர பூஜை செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். பணம் உள்ளிட்ட செல்வம் செழிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமின்றி, வீட்டில் தீமைகள் விலகி நன்மைகள் பெருகி மகிழ்ச்சி பெருக வேண்டும் என்பதற்காக இந்த பூஜை செய்யப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. பொதுவாக குபேரருக்கு வியாழக்கிழமை பூஜை செய்வது உகந்தது ஆகும். குபேரரை தனியாக மட்டுமின்றி லட்சுமியுடன் சேர்த்து பூஜை செய்வது மிகவும் சிறப்பானது ஆகும்.


    குபேர பூஜையை பொதுவாக அமாவாசை திதி இருக்கும் நேரத்தில் தான் செய்ய வேண்டும். தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி மாலை 4.29 மணிக்கு அமாவாசை திதி தொடங்குகிறது.

    அமாவாசை திதியானது நவம்பர் 1-ந்தேதி மாலை 6.25 மணி வரை உள்ளது. நவம்பர் 1-ந்தேதி கவுரி விரதமும் வருகிறது. தீபாவளி தினத்தில் குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.

    தீபாவளி நாளில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவது வழக்கம் ஆகும். அவ்வாறு அசைவம் சாப்பிடுபவர்கள் அடுத்த நாள் குபேர பூஜை செய்வது நல்லது. ஏனென்றால் அடுத்த நாள் மாலை வரை அமாவாசை திதி இருப்பதால் அன்றைய தினம் செய்யலாம். ஆனாலும், தீபாவளி நாளிலே லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது ஆகும்.

    குங்குமம், மகாலட்சுமி படம், குபேரர் படம், 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் ஒரே மாதிரியான 9 அல்லது 108 நாணயங்கள், மலர்கள் (தாமரை இருந்தால் சிறப்பு), துளசி, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, அட்சதை ஆகியவை பூஜைக்கு தேவையான பொருட்கள் ஆகும்.


    குபேரருக்கு உரிய வட திசையில் சிறிய மனை வைக்க வேண்டும். அதில் குபேரர் சிலை வைக்க வேண்டும். குபேரர் படம் அல்லது சிலையை வடக்கு நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும்.

    மனைப்பலகையின் ஒரு ஓரத்தில் குபேர யந்திரம் வரையப்பட்டிருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து இருக்க வேண்டும்.

    பின்னர் குல தெய்வத்தை வழிபட்டு விட்டு குபேர மற்றும் லட்சுமியை வணங்கி மகாலட்சுமியின் 108 போற்றிகளையும் கூறி குங்குமம், மலர்கள் அல்லது அட்சதை தூவி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    லட்சுமி குபேர பூஜையின் பிரசாதத்தை மட்டும் நாம் சாப்பிட வேண்டும். மறுநாள் பூஜையில் பயன்படுத்திய நாணயங்களை எடுத்து ஒரு துணியில் கட்டி உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பீரோ ஆகிய இடத்தில் வைக்க வேண்டும்.

    • முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்.
    • பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த ஆண்டுக் கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகரவிளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாமல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. அதற்கான பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு மந்திரி வாசவன் கூறியிருப்ப தாவது:-

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் சரிபார்க்கப்படும் போது ஆதார் அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

    அவர்களின் பதிவு எப்படி செய்யப்பட வேண்டும்? என்பதை காவல்துறையும், தேவசம்போர்டும் கூட்டாக முடிவு செய்யும். அது தொடர்பான முடிவு நவம்பர் 10-ந்தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்.

    பதினெட்டாம்படியில் ஒரு நிமிடத்தில் 70 முதல் 75 பக்தர்கள் வரை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல்லில் ஒரே நேரத்தில் 15,500 வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். பம்பை வரை சிறிய வாகனங்கள் செல்ல கோர்ட்டின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

    பம்பையில் இருந்து சபரி மலைக்கு ஏறிச்செல்லும் பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.

    மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் மின் கழிப்பறைகள் வசதி செய்யப்படும். யாத்திரை காலங்களில் 13,600 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம்.
    • 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார்

    சிவபெருமானும், பார்வதியும் வீற்றிருக்கும் இடம், கயிலாய மலை. அங்கே சிவ-பார்வதியை தரிசிப்பதற்காக, அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து செல்வார்கள். அவர்களில் பிருங்கி முனிவர் ஒருவர். ஆனால் அவர் சிவ-பார்வதியை இணைத்து வணங்காமல், சிவனை மட்டுமே வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.


    இதனால் வருத்தம் கொண்ட பார்வதி, அதுபற்றி சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு ஈசன், "தேவி.. பிருங்கி முனிவருக்கு, எந்த பாக்கியங்களும் தேவையில்லை. அவருக்கு மோட்சம்தான் விருப்பம். எனவேதான் அவர் என்னை மட்டும் சுற்றி வந்து வழிபடுகிறார்" என்று விளக்கம் அளித்தார்.

    சிவபெருமான் சொன்ன விளக்கத்தில், பார்வதிக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே அவர் பிருங்கி முனிவரிடமே, "உன் தேகத்திற்கு தேவையான சக்தி அனைத்தும் நான் வழங்கியவை. ஆனால் என்னை வழிபட மறுக்கிறாய். அப்படியானால் சக்திக்கு தேவையான ரத்தம், தசை, நரம்பு போன்றவற்றை திருப்பிக்கொடு" என்றார்.

    பிருங்கி முனிவரும் அப்படியே செய்தார். இதனால் எலும்பும், தோலும் மட்டும் கொண்டு வலுவிழந்து தடுமாறினார். சிவபெருமான் அவருக்கு கைத்தடி ஒன்றை வழங்கி நிற்கச் செய்தார்.

    இதனால் கோபம் கொண்ட பார்வதி, கயிலாயத்தை விட்டு பூலோகம் வந்தார். அப்படி அவர் வந்து சேர்ந்த இடம் ஒரு நந்தவனம். அந்த நந்தவனம், 12 ஆண்டுகளாக மழை இன்றி வறண்டு காணப்பட்டது.

    பார்வதி தேவி வந்ததும் மழை பெய்து, அந்த நந்தவனம் புத்துயிர் பெற்றது. பல அரிய பூக்கள் பூத்தன. அதன் வாசத்தை நுகழ்ந்து அங்கு வந்த வால்மீகி முனிவர், அம்பிகையை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.

    அப்போது பார்வதி தேவி, "முனிவரே.. நான் மீண்டும் ஈசனுடன் சேருவதற்கு, அனைத்து விரதங்களையும் விட மேலான விரதம் ஒன்று வேண்டும். அப்படியொரு விரதம் இருக்கிறதா?" என்று கேட்டார்.

    அதற்கு வால்மீகி முனிவர், "தாயே.. இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு 'கேதாரீஸ்வரர் நோன்பு' என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்" என்றார்.

    அதன்படி அம்பிகை, அந்த விரதத்தை முறை தவறாமல் கடைப்பிடித்தார். இதையடுத்து விரதத்தின் 21-ம் நாள் அன்று, தேவ கணங்கள் சூழ அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் சென்றார். அம்பிகையே விரதம் இருந்த காரணத்தால், இது 'கேதார கவுரி விரதம்' என்று அழைக்கப்படுகிறது.


    விரதம் இருப்பது எப்படி?

    கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது.

    தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும். நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவ-பார்வதியாக வழிபடப்படுகின்றது.

    இந்த விரதம் இருப்பவர்கள், தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்பார்கள். 21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து உற்றார், சுற்றார் சூழ சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர்.

    இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும். இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது.


    ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி, பட்டு வஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும்.

    மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு இறைவனின் 16 நாமங்களைச் சொல்லி தூப, தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.


    பின்னர் அம்மி குழவியை நன்கு சுத்தம் செய்து பலவித அலங்காரங்களை அதற்கும் செய்து வில்வம், தும்பை போன்ற விசேஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ நாமம் செய்து பூஜிக்க வேண்டும். தூப, தீப ஆராதனைகள், நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும்.

    ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.

    ×