என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்த நிலையில் ஒற்றையர் பிரிவிலும் தோற்றுள்ளார்.
    • இந்த போட்டியுடன் தான் ஓய்வுப் பெறுவதாகவும் செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சுற்றில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக் ஆகியோர் மோதினர்.

    இதில், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்லஜனோவிக்கிடம் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார்.

    ஏற்கனவே மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்த நிலையில் ஒற்றையர் பிரிவிலும் தோற்றுள்ளார்.

    இந்த போட்டியுடன் தான் ஓய்வுப் பெறுவதாகவும் செரீனா வில்லியம்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த போட்டியின் தோல்வியுடன் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தை செரீனா நிறைவு செய்துள்ளார்.

    • ஜின்ஜியாங் விவகாரத்தில் ஐ.நா. அறிக்கை பரிந்துரைகளை சீனா பின்பற்றவேண்டும் என ஐ.நா. பொதுசெயலாளர் வலியுறுத்தினார்.
    • ஜின்ஜியாங்கில் நடந்த மனித உரிமை மீறல் விவகாரத்துக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.

    ஜின்ஜியாங் மாகாணத்தில் பல லட்சம் முஸ்லிம்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு வருகின்றனர் என்று உலகம் முழுவதும் தெரியவந்தது. ஆனால் இதனை சீனா மறுத்து வந்தது.

    இதற்கிடையே, மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் அலுவலகம் சீனாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் பகுதியில் அரங்கேறிய கொடுமைகள் பற்றிய அறிக்கை ஒன்றை புதன்கிழமை வெளியிட்டது.

    இதனைத் தொடர்ந்து, ஜின்ஜியாங் விவகாரம் பற்றி ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை சீனா பின்பற்ற வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இந்நிலையில், சீனாவின் மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அறிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது. இந்த முக்கியமான அறிக்கை, உய்குர் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்களை சீன மக்கள் குடியரசின் வெறுக்கத்தக்க மனித உரிமைகள் நடத்துவதை அதிகாரப்பூர்வமாக விவரிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை வீழ்த்தினார்
    • 3-வது தரவரிசையில் உள்ள மரியா ஷகாரி சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் , 23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2-வது சுற்றில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை வீராங்கனையான அனெட் கோன்டா வெயிட்டை எதிர்கொண்டார். இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அனெட் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    செரீனா வில்லியம்ஸ் 7-6 ( 7-2 ), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் 12வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை கோகோ கவூப் 6-2 , 7-6 ( 7-4 ) என்ற நேர் செட் கணக்கில் எலீனா கேப்ரியலாவை (ருமேனியா) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 20 வது வரிசையில் உள்ள மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) , 5-ம் நிலை வீராங்கனையான ஜபேவுர் (துனிசியா ) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    3-வது வரிசையில் உள்ள மரியா ஷகாரி (கிரீஸ் ) 6-3 , 5-7 , 5-7 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனை வாங்கிடம் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    இதே போல 14-வது இடத்தில் உள்ள லைலா பெர்னாண்டஸ் (கனடா), 23-ம் நிலை வீராங்கனையான பார்பரா கிரெச் கோவா (செக் குடியரசு) ஆகியோரும் அதிர்ச்சிகரமாக 2-வது சுற்றில் வெளியேறினார்கள்.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 2-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த எமிலியா நவாவை எதிர்கொண்டார். இதில் முர்ரே 5-7, 6-3, 6-1, 6-0 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு நுழைந்தார்.

    மற்ற ஆட்டங்களில் 13-வது வரிசையில் இருக்கும் பெரிடினி (இத்தாலி), 23-ம் நிலை வீரர் ஷர்ஜியாஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் வெற்றி பெற்றனர். 21-ம் நிலை வீரரான போடிக் வான்டே (நெதர்லாந்து) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    • பாகிஸ்தானில் இதுவரை பெண்கள், குழந்தைகள் என 1100-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
    • மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சோகத்தை பாகிஸ்தான் மக்களுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது.

    பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பருவ நிலை மாற்றம் காரணமாக பெய்து வரும் மழை காரணமாக நாட்டின் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

    தொடர் மழை காரணமாக பாகிஸ்தானில் இதுவரை பெண்கள், குழந்தைகள் என 1100-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் மழையால் பலர் பலியான சம்பவத்திற்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சோகத்தை பாகிஸ்தான் மக்களுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும்.

    மழை வெள்ள நிவாரண பணிகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கூடுதலாக ரூ.239 கோடி நிதி உதவி வழங்குகிறது. மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா எப்போதும் உதவியாக இருக்கும். இவ்வாறு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் பாகிஸ்தானில் மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளது.
    • அங்கு கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.

    பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது.

    பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் விளைவாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் மக்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2வது ஆண்டி முர்ரே வெற்றி பெற்றார்.
    • ஆண்டி முர்ரே அமெரிக்க வீரரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே, அமெரிக்காவின் எமிலோ நாவாவைச் சந்தித்தார். முதல் செட்டை கோட்டை விட்ட ஆண்டி முர்ரே அடுத்த மூன்று செட்டையும் தனதாக்கினார்.

    இறுதியில், ஆண்டி முர்ரே 5-7 6-3 6-1 6-0 என்ற கணக்கில் வென்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மேட்டிஸ் பெரெட்டினி, பிரான்சைச் சேர்ந்த ஹியூகோ கிரெய்னியரைச் சந்தித்தார்.

    இதில், 2-6, 6-1, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்ற பெரெட்டினி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • அமெரிக்க ராணுவம் சுமார் 400 சினூக் ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை நிறுத்தி வைத்துள்ளது.
    • இந்திய விமானப் படையில் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

    வாஷிங்டன்:

    போயிங் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சினூக் ஹெலிகாப்டர் அமெரிக்க ராணுவ வீரர்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், சரக்குகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தி வந்தனர்.

    இதற்கிடையே, அமெரிக்க பாதுகாப்புப் படையில் பயன்பாட்டில் உள்ள 400 சினூக் ஹெலிகாப்டர்களை பயன்பாட்டிலிருந்து நிறுத்துவதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அடிக்கடி எஞ்சின் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தது.

    இந்திய விமானப் படையில் தற்போது 15 சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க ராணுவம் அனைத்து சினூக் ஹெலிகாப்டர்களையும் நிறுத்துவதற்கான முழு விவரங்களை அளிக்கும்படி போயிங் நிறுவனத்திடம் இந்தியா சார்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    அமெரிக்கா அளிக்கும் விளக்கத்திற்கு பிறகு, இந்திய விமானப் படையும் சினூக் ரக ஹெலிகாப்டர் பயன்பாட்டை நிறுத்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.
    • எம்மா ரடுகானு முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலகின் இரண்டாம் நிலை வீரரும், 22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிங்கி ஹிஜிகடாவை எதிர்கொண்டார்.

    'வைல்டு கார்டு' வீரரான ரிங்கி முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் பின்னர் நடால் சுதாரித்து விளையாடி தொடர்ந்து 3 செட்களையும் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ஸ்கோர் 4-6, 6-2, 6-3, 6-3

    நடால் 2-வது சுற்றில் இத்தாலியை சேர்ந்த பேபியோ போக்னினியை சந்திக்கிறார்.

    செபாஸ்டியனுக்கு (அர்ஜென்டினா) எதிரான ஆட்டத்தில் 3-வது வரிசை யில் உள்ள கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), 7-5, 7-5, 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.அப்போது செபாஸ்டியன் காயத்தால் வெளியேறினார். இதனால் அல்காரஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    மற்ற ஆட்டங்களில் ஜான் இஸ்னெர் (அமெரிக்கா), சின்னெர் (இத்தாலி), டிமிட்ரோவ் (பல்கேரியா) போன்ற முன்னணி வீரர்கள் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 8-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கோல் பிக்கை எதிர்கொண்டார்.

    இதில் பெகுலா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஸ்டெப் ஹென்ஸ் (அமெரிக்கா), யுலியா புதின் சேவா (ரஷியா) ஜூலி நெய்மா (ஜெர்மனி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    11-வது வரிசையில் உள்ள எம்மா ரடுகானு (இங்கிலாந்து), முதல் சுற்றிலேயே தோற்று அதிர்ச்சிகரமாக வெளியேறினார். பிரான்சை சேர்ந்த அலிசியா தோர்னெட் 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ரடுகானுவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இதே போல 16-வது வரிசையில் உள்ள ஜெலீனா ஒஸ்டாபென்கோ (லாத்வியா), 24-ம் நிலை வீராங்கனையான அமண்டா அனிஷ்மோவா (அமெரிக்கா), 25-வது வரிசையில் உள்ள எலீனா ரைபகினா (கஜகஸ்தான்), 32-வது இடத்தில் இருக்கும் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோரும் முதல் சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் கொலம்பிய வீரரிடம் தோற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. உலகின் 5-ம் நிலை வீரரான கிரீசைச் சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், கொலம்பியா வீரரான காலனைச் சந்தித்தார்.

    முதல் 2 செட்களை கோட்டை விட்ட சிட்சிபாஸ், மூன்றாம் செட்டை தனதாக்கினார். ஆனால் காலன் போராடி நான்காம் செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில், சிட்சிபாஸ் 0 - 6, 1 - 6, 6 - 3, 5- 7 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    • பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
    • அங்கு கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    நியூயார்க்:

    பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.

    பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் விளைவாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் அடுத்த வாரம் பார்வையிட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • முதல் சுற்றில் ஜார்ஜியா வீரரை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேற்றம்.
    • 1959 ஆண்டு சீன வீரர் மெய் ஃபூ சி, விம்பிள்டன் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.

    நியூயார்க்:

    நடப்பாண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் 31வது நிலை வீரரான ஜார்ஜியாவைச் சேர்ந்த நிகோலோஸ் பசிலாஷ்விலியை, சீன வீரர் வூ யிபிங் எதிர்கொண்டார்.

    22 வயதான வூ, முதல் சுற்றில் 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். கடந்த 1959 ஆண்டு விம்பிள்டன் போட்டியில் சீன வீரர் மெய் ஃபூ சி, ஒரு போட்டியில் வென்றிருந்தார்.

    அதன் பின்னர் சீன வீரர்கள் யாரும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சீன வீரர வூ யிபிங் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
    • சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனையிடம் தோற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

    உலகின் 7-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப், உக்ரைன் வீராங்கனை டரியா ஸ்னைகுரை சந்தித்தார்.

    முதல் செட்டை கைவிட்ட ஹாலெப், இரண்டாம் செட்டை தனதாக்கினார். ஆனால் டரியா அதிரடியாக ஆடி மூன்றாம் செட்டை கைப்பற்றினார்.

    இறுதியில், சிமோனா ஹாலெப் 2- 6, 6- 0, 4- 6 என்ற கணக்கில் தோற்று, தொடரில் இருந்து அதிர்ச்சிகரமாக வெளியேறினார்.

    ×