வெள்ளத்தால் சேதமான பகுதிகளை பார்வையிட பாகிஸ்தான் செல்கிறார் ஐ.நா.சபை பொது செயலாளர்

பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கு கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
அண்டோனியோ குட்டரெஸ்
அண்டோனியோ குட்டரெஸ்
Published on

நியூயார்க்:

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையையொட்டி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர்.

பாகிஸ்தானில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என தேசிய பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் விளைவாக பாகிஸ்தானின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாக அந்நாட்டின் பருவநிலை மாற்றத்துறை மந்திரி ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் அடுத்த வாரம் பார்வையிட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com