என் மலர்tooltip icon

    உலகம்

    இந்திய பிரதமர் மற்றும் பாகிஸ்தான் பிரதமரை ஒரே நேர்கோட்டில் நிறுத்தி டிரம்ப் புகழாரம்
    X

    இந்திய பிரதமர் மற்றும் பாகிஸ்தான் பிரதமரை ஒரே நேர்கோட்டில் நிறுத்தி டிரம்ப் புகழாரம்

    • டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
    • காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய தயார் என்று டிரம்ப் அறிவிப்பு

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக நேற்று அறிவித்தது. நாளை சண்டை நிறுத்தம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தீர்வு ஏற்பட மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "வலிமை, ஞானம் மற்றும் மன உறுதியைப் பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வரலாற்று சிறப்புமிக்க வீரதீரமான முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவியது குறித்து நான் பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இருவரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழ்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×