என் மலர்
இலங்கை
- ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.
- இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே இன்று பொறுப்பேற்றார்.
கொழும்பு:
இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். ஆனால் அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சேவும் இன்னும் இலங்கையில் தான் உள்ளனர்.
அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தங்களுக்கு எதிரான இந்த வழக்கு விசாரிக்கப்படும் வரை தாங்கள் நாட்டை விட்டு வெளியேறமாட்டோம் என ராஜபக்சே சகோதரர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்தனர்.
இந்நிலையில், ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மகிந்த ராஜபக்சேவும், பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டைவிட்டுச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்சே முறைப்படி தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்தார். ரணில் இடைக்கால அதிபராக இன்று பொறுப்பேற்றார். ஜூலை 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
- இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றார்.
- தலைமை நீதிபதி ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.
இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்ந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர், சவுதி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்கிடையே, இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கோத்தபய ராஜபக்சே நியமனம் செய்தார்.
இந்நிலையில், ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சேவின் வாரிசை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கும் வரை இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றுக் கொண்டார்.
73 வயதான விக்கிரமசிங்கே இலங்கையின் தற்காலிக அதிபராக பிரதமர் அலுவலகத்தில் இன்று, தலைமை நீதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
- அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார்.
- ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கொழும்பு :
இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அந்த நாட்டு மக்கள் கடந்த 9-ந்தேதி அதிபர் மாளிகைக்குள் நுழைந்து சூறையாடினர். நிலைமை கைமீறி போனதை தொடர்ந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பி செல்ல முடிவு செய்தனர். அதன்படி அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார்.
ஆனால் அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சேவும் இன்னும் இலங்கையில் தான் உள்ளனர். அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்களுக்கு எதிரான இந்த வழக்கு விசாரிக்கப்படும் வரை தாங்கள் நாட்டை விட்டு வெளியேறமாட்டோம் என ராஜபக்சே சகோதரர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்துள்ளனர்.
இதனிடையே ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
- நாட்டை விட்டு சென்ற கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமித்தார்.
- மாலத்தீவில் கோத்தபயவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.
கொழும்பு:
முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்தது. அதிபர் பதவி விலக வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. 13ம் தேதி ராஜினாமா செய்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாலத்தீவு சென்ற அவர் அங்கிருந்தபடி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராக நியமித்தார். அவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில், அவசர நிலையை பிரகடனம் செய்தார் ரணில்.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு இ-மெயில் மூலம் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே மாலத்தீவில் கோத்தபயவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். மாலத்தீவில் இருந்து தனிப்பட்ட பயணமாக அவர் சிங்கப்பூரில் நுழைய அனுமதித்துள்ளதாகவும், அவர் அடைக்கலம் கோரவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
- பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தற்காலிக இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டார்.
- மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.
இதனால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறியதால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தற்காலிக இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கு எதிர்ப்பு கிளம்பியதால், இன்று சிங்கப்பூர் செல்வதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார். மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார்.
தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சிங்கப்பூர் புறப்பட்டார்.
- கொழும்புவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். இதனால், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பித்துவிட்டதால், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தற்காலிக இடைக்கால அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சிங்கப்பூர் புறப்பட்டார்.
இருப்பினும், இலங்கை தலைநகர் கொழும்புவில் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. இதனால், கொழும்புவில் இன்று மதியம் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு பிறப்பித்துள்ளது. தலைநகர் கொழும்புவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை மற்றும் அரசு அலுவலகங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்
- நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை கோத்தபய நியமித்துள்ளார்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். அதேசமயம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வலியுறுத்தியும் போராட்டம் தொடர்கிறது. அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை மற்றும் அரசு அலுவலகங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார் ரணில்.
இதற்கிடையே நாட்டை விட்டு தப்பிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்துள்ளார். எனினும் மக்கள் போராட்டம் தொடர்கிறது.
இந்நிலையில், தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ரணில் விக்ரமசிங்கே, இலங்கையில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க ராணுவம் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். நிலைமையை சரிசெய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கையை எடுக்கலாம் என்று அவர் கூறியிருக்கிறார்.
- இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் புகலிடம் கொடுக்க கூடாது.
- மாலத்தீவிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் வேறு நாட்டுக்கு தஞ்சம் கேட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டுள்ளார்.
மக்கள் போராட்டத்தால் ஆட்சியை இழந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டுவெளியேறியதும் ராணுவத்தின் பாதுகாப்பில் கொழும்பு புறநகரில் தங்கி இருந்தார்.
அங்கிருந்து முதலில் அவர் துபாய் செல்ல முடிவு செய்தார். ஆனால் விமான நிலையத்திலும், கடற்படை தளத்திலும் மக்கள் குவிந்ததால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவரால் தப்பி செல்ல இயலவில்லை. இதற்கிடையே சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகளிடம் அவர் உதவி கேட்டார். ஆனால் அந்த நாடுகளில் இருந்து சாதகமான பதில் வரவில்லை.
கோத்தபய ராஜபக்சே ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தார். 2019-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது அவர் அமெரிக்க குடியுரிமையை திரும்ப பெற்றார். என்றாலும் அமெரிக்க அரசை தொடர்பு கொண்டு தனக்கு உதவி செய்யுமாறு கெஞ்சி கேட்டார்.
ஆனால் கோத்தபய ராஜபக்சேவின் விசாவை பரிசீலிக்க கூட அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கொழும்பில் இருந்து வெளியேற எந்த ஒரு உதவியும் செய்ய இயலாது என்று அமெரிக்காவும் கைவிரித்தது. இதனால் எப்படி நாட்டை விட்டு வெளியேறுவது என்று கோத்தபய குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டார்.
சொந்த கட்சியிலும், ராணுவத்திலும் ஒரு பிரிவினர் தனக்கு எதிராக செயல்படுவதை கண்கூடாக பார்த்த கோத்தபய ராஜபக்சே உயிருடன் தப்ப முடியுமா என்று தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். கொழும்பு புறநகரில் அவர் ஒரே இடத்தில் தங்காமல் ரகசிய இடங்களுக்கு மாறிக் கொண்டே இருந்தார்.
ராணுவத்தின் கமாண்டோ வீரர்கள் அவரை சுற்றி நின்று பாதுகாப்பு அளித்தனர். மக்கள் போராட்டத்தால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் கொழும்பில் அவர் படாதபாடுபட்டார். எனவேதான் வெளி நாட்டுக்கு தப்பி செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அமெரிக்கா உதவ மறுத்த நிலையில் அடுத்து இந்தியாவின் உதவியை ராஜபக்சே நாடினார். விமானம் மூலம் தப்புவது கடினம் என்பதை உணர்ந்த அவர் கடல் வழியாக தப்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். கப்பல் மூலம் இந்தியா வந்து பிறகு துபாய் செல்ல அனுமதி கேட்டார்.
ஆனால் அதற்கு இந்திய வெளியுறவுத்துறை சாதகமான பதில் சொல்லவில்லை. இதையடுத்து சரக்கு விமானத்தில் இந்தியா வருவதாகவும், இந்தியாவில் இருந்து தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோத்தபய ராஜபக்சே இந்திய அரசுக்கு தூதுவிட்டார்.
அவரது இந்த கோரிக்கையையும் இந்தியா ஏற்கவில்லை. இதனால் உள்ளூர் அரசியல்வாதிகளிடம் கெஞ்சி கூத்தாடி ஒரு விமானத்தை வாங்கி கொண்டு மாலத்தீவு சென்று சேர்ந்திருக்கிறார்.
இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பி சென்ற கோத்தபய ராஜபக்சேவை அந்த நாட்டு ராணுவத்தினர் ரகசிய தீவு ஒன்றுக்கு அழைத்து சென்று உள்ளனர். அந்த தீவில் உள்ள பங்களாவில் கோத்தபய ராஜபக்சேவும், அவரது மனைவியும் தங்கி உள்ளனர்.
மாலத்தீவு மக்களுக்கு இன்று காலை இந்த தகவல் தெரியவந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாலத்தீவில் கணிசமான அளவுக்கு இலங்கை தமிழர்கள் உள்ளனர். அவர்களும் கோத்தபய ராஜபக்சேவின் வருகைக்கு அதிருப்தி வெளியிட்டனர்.
இதற்கிடையே மாலத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தையூப் சாஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவில் புகலிடம் கொடுக்க கூடாது. அவரை உடனே வெளியேற்ற வேண்டும்" என்று கூறி உள்ளார்.
மாலத்தீவில் உள்ள சில கட்சி தலைவர்கள் கூறுகையில், "கோத்தபய ராஜபக்சேவுக்கு அகதி அந்தஸ்து வழங்ககூடாது" என்று வலியுறுத்தி உள்ளனர். மாலத்தீவிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் வேறு நாட்டுக்கு தஞ்சம் கேட்டு செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு கோத்தபய ராஜபக்சே தள்ளப்பட்டுள்ளார்.
- இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கோத்தபய ராஜபக்சே நியமனம் செய்துள்ளார்.
- ரணிலை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக சபாநாயகரிடம் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலையை பிரகடனம் செய்தார். மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்வதால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில் போராட்டம் தொடர்கிறது. இலங்கை பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை கோத்தபய ராஜபக்சே நியமனம் செய்துள்ளார்.
இலங்கையில் இருந்து தப்பி மாலத்தீவில் தஞசமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். ரணிலை இடைக்கால ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக சபாநாயகரிடம் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே செயல்படுவார் என கோத்தபய ராஜபக்சே தன்னிடம் தெரிவித்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
- அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில் போராட்டம் தொடர்கிறது.
- இலங்கை பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று அதிகாலையில் அவர் மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோத்தபயவுடன் 13 பேர் ஏஎன்32 விமானத்தில் மாலத்தீவு சென்றதாக தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலையை பிரகடனம் செய்தார். மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்வதால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில் போராட்டம் தொடர்கிறது. இலங்கை பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- கோத்தபய தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
- மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் சென்றார்.
கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர்.
போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றனர். சில போராட்டக்காரர்கள் அதிபர் வீட்டிலேயே தங்கி உள்ளனர். போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி கடற்படை முகாமில் தஞ்சம் அடைந்ததாக கூறப்பட்டது. இலங்கை அதிபர் பதவியை கோத்தபயா ராஜபக்சே 13ந்தேதி ராஜினாமா செய்வார் என அந்நாட்டு பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்திருந்தார்.
அதிபர் கோத்தபயா இலங்கையில் இருந்து வெளியேறியதாக நேற்று முதலில் தகவல் வெளியானது. பின்னர் அது உண்மையில்லை என்றும் கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார் என்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.
இதற்கிடையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று அதிகாலையில் அவர் மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
- போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குகள் புகுந்து சூறையாடினார்கள்.
- அலரி மாளிகையில் 2 குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு:
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குகள் புகுந்து சூறையாடினார்கள். மேலும் அலரி மாளிகை, தலைமை செயலகம் ஆகியவற்றையும் போராட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு போராட்டக்காரர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் அலரி மாளிகையில் 2 குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் காயம் அடைந்த பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அலரி மாளிகையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.






