என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • பாகிஸ்தானில் நடப்பு ஆண்டில் மட்டும் 8 பேருக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டது.
    • அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெறுகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் நடப்பு ஆண்டில் மட்டும் 8 சிறார்கள் போலியோவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து இந்த ஆண்டு மே மாதம் நாடு முழுவதும் போலியோ தடுப்பு திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியது. இதன்படி, வீடு வீடாக போலியோ தடுப்பு மருந்து போட குழு அமைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின மாவட்டத்தில் போலியோ தடுப்புக் குழு மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலில் 2 போலீசார் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

    இந்த தாக்குதலுக்கு கைபர் - பக்துன்க்வா மாகாண முதல் மந்திரி மெகமூத் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    • உள்நாட்டு விமானங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
    • தடுப்பூசிகள் இப்போது செயல் திறனை இழந்து விட்டன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2வது நாளாக 400 ஐ தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 94 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தான் உள்நாட்டு விமானங்களில் பயணிப்போருக்கு முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் ஒரு ரோலர் கோஸ்டர் போல் செயல்படுவதாக, பாகிஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஜாவேத் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    இதனால் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனா வைரஸ் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், தடுப்பூசிகள் இப்போது செயல்திறனை இழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தியது.
    • மும்பை தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இஸ்லாமாபாத்:

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தாஜ் ஓட்டல், சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இதில் 6 அமெரிக்கர்களும் அடங்குவர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உறுப்பினர் சஜித் மஜித் மிர். இவர் மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளி ஆவார். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டிய வழக்கில் சஜித்தை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில், லாகூர் பயங்கரவாத தடுப்பு சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது நிரூபிக்கப்பட்டதால் சஜித்திற்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து சஜித் மிர் சிறையில் அடைக்கப்பட்டான்.

    • கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்து ஒப்பந்தம் எதுவும் நடைபெறவில்லை.
    • பாகிஸ்தான்-ரஷியா இடையே வர்த்தக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இலங்கையை போன்று பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் கடன் பிரச்சினை காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்பட எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான பேச்சுவார்த்தையை ஷபாஸ் ஷெரீப் அரசு நிறுத்தி விட்டதாக முன்னாள் எரிசக்தி அமைச்சர் ஹம்மாத் அசார் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தானுக்கான ரஷிய தூதர் ஜெனரல் ஆன்ட்ரே விக்டோரோவிச் பெட்ரோவ், இஸ்லாமாபாத்தில் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கும், ரஷிய அதிபர் புத்தினுக்கும் இடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது கச்சா எண்ணெய் கொள்முதல் குறித்து ஒப்பந்தம் எதுவும் நடைபெறவில்லை என கூறினார்.

    ஐரோப்பிய நாடுகளின் சட்டவிரோத தடைகள் காரணமாக பாகிஸ்தான் -ரஷியா இடையே வர்த்தக உறவுகள் பாதிக்கப் பட்டுள்ளதாக அவர் கூறினார். ரஷியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை அதிகரிக்க புதின் நிர்வாகம் விரும்புவதாக கூறிய பெடரோவ், ரஷியா பல துறைகளில் பாகிஸ்தானுக்கு முக்கியமான வர்த்தக பங்காளியாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.
    • பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் இம்ரான் கான் பாதுகாப்பு.

    பெஷாவர்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கொல்ல பயகரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு துறையின் கைபர் பக்துன்க்வா பிரிவு கூறியதாவது:-

    இம்ரான்கனை கொல்ல பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு கொலை செய்யும் நபரின் உதவியை நாடியுள்ளனர்.

    இம்ரான்கானுக்கு எதிரான எச்சரிக்கை வாசகம் பல்வேறு அமைப்புகளுடன் பகிரப்பட்டு வருகிறது. இதில் அவரை குறி வைக்கும் பொறுப்பு ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    இந்த தகவல் உருது நாளிதழ் ஒன்றில் வெளியாகி இருக்கிறது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் இம்ரான் கானுக்கு பாதுகாப்புக்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீஸ் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பயங்கரவாத தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது என்றும் இந்த எச்சரிக்கை கடந்த 18-ந்தேதி விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் பயாஸ் சோகன் கூறும்போது, "இம்ரான்கனை கொல்ல சிலர் பயங்கரவாதியை நாடி உள்ளனர். இது கவலை அளிக்கும் விஷயம். அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்" என்றார்.

    கைபர் பக்துன்க்வா மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவர் டுவிட்டரில் கூறும்போது, "இம்ரான் கானை கொலை செய்ய ஆப்கானிஸ்தானில் உள்ள கொச்சி என்ற பயங்கரவாதிகள் சிலர் உத்தரவிட்டுள்ளனர் என்ற விவரம் என்னிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் அதிகாலை 2.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தால் உடனடி சேதம் ஏதும் இல்லை.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.24 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

    ஏற்கனவே நேற்று நள்ளிரவில் மலேசியாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது.
    • இதனை எதிா்த்து போராட்டம் நடத்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு விடுத்தாா்.

    இஸ்லாமாபாத்:

    அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு, அதிக அளவு பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தானில் புதிய அரசு பதவிக்கு வந்த பிறகு 3-வது முறையாக பெட்ரோல் விலையை உயா்த்தியது. அங்கு நிலவி வரும் பணவீக்கத்திற்கு எதிராக முக்கிய நகரங்களில் இம்ரான்கான் ஆதரவாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் போராட்டக்காரர்களோடு காணொளி மூலம் உரையாடினாா். அப்போது அவர் பேசியதாவது:

    நான் உங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கிறேன். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தப்படாவிட்டால் மேலும் குழப்பம் பரவும். முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மேலும் மோசமடையும்.

    தற்போது உள்ள அரசானது பொருளாதாரத்தைக் கையாளும் திறனற்றது. வரும் நாட்களில் விலைகள் அதிகமாக உயரும் என குறிப்பிட்டார்.

    • பாகிஸ்தான் சிறையில் 5 ஆண்டாக அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 20 பேர் விடுவிக்கப்பட்டனர்.
    • லாகூர் நகரில் இருந்து ரெயிலில் வந்த 20 மீனவர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

    கராச்சி:

    இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை 2018, ஜூன் மாதம் பாகிஸ்தான் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று கராச்சி சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

    இதற்கிடையே, பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது. கராச்சியின் லாந்தி பகுதியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வாகா எல்லைக்கு செல்வதற்காக லாகூர் அனுப்பப்பட்டனர்.

    இந்நிலையில், லாகூர் நகரில் இருந்து ரெயிலில் வந்த 20 மீனவர்களும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வாகா எல்லையில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர் என பாகிஸ்தான் சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 சென்டிமீட்டர் நீளமான காது இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • அந்த ஆட்டுக்குட்டியை அக்கம்பக்கத்தினர் வந்து ஆர்வமாக கண்டு சென்றனர்.

    லாகூர் :

    பாகிஸ்தான் நாட்டின் கராட்சி மாகாணத்தை சேர்ந்தவர் முகமது ஹசன் நரிஜோ. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், அவரது ஆட்டுப்பண்ணையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆடு ஒன்று குட்டியை ஈன்றது. அந்த ஆட்டுக்குட்டியின் காது மற்ற ஆட்டுக்குட்டிகளின் காதை விட மிகவும் நீளமாக இருந்ததை கண்டு உரிமையாளர் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

    அந்த ஆட்டுக்குட்டிக்கு சம்பா என பெயரிட்ட முகமது ஆட்டுக்குட்டியின் காது எவ்வளவு நீளமாக உள்ளது என அளவெடுத்துள்ளார். அதில் ஒவ்வொரு காதும் 19 இன்ச் நீளமாக அதாவது சுமார் 50 சென்டிமீட்டர் நீளமாகும்.

    பிறந்து 2 வாரங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு 50 சென்டிமீட்டர் நீளமான காது இருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த ஆட்டுக்குட்டியை அக்கம்பக்கத்தினர் வந்து ஆர்வமாக கண்டு சென்றனர்.

    • பாகிஸ்தான் சிறையில் 5 ஆண்டாக அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 20 பேர் விடுவிக்கப்பட்டனர்.
    • மீனவர்கள் இந்தியா திரும்புவதற்கான பயண செலவை எதி பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் ஏற்றுள்ளது.

    கராச்சி:

    இந்திய எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் எல்லைக்குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 20 பேரை 2018, ஜூன் மாதம் பாகிஸ்தான் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்று கராச்சி சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது.

    கராச்சியின் லாந்தி பகுதியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வாகா எல்லைக்கு செல்வதற்காக லாகூர் அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

    இதுதொடர்பாக, சிறை கண்காணிப்பாளர் முகமது இர்ஷாத் கூறுகையில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். கடந்த 5 ஆண்டாக அவர்கள் சிறையில் இருந்தார்கள். இன்று அவர்கள் எதி அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டனர். எதி அறக்கட்டளை அவர்களை போலீஸ் பாதுகாப்புடன் லாகூர் அழைத்துச் செல்லும் என தெரிவித்தார்.

    • இம்ரான் கானுக்கு பாகிஸ்தானுக்கு வெளியே வாகனம் அல்லது சொத்து இல்லை, முதலீடு எதுவும் இல்லை.
    • இம்ரான் கான் மூன்று திருமணங்களைச் செய்துள்ளார், ஆனால் ஷாபாஸ் ஐந்து திருமணங்களைச் செய்தார்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அவருக்கு முன் இருந்த இம்ரான் கான் ஆகியோரின் மனைவிகள், அவர்களது கணவர்களை விட பணக்காரர்கள் என்று அதிகாரப்பூர்வ ஆவணங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2020ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடையும் நிதியாண்டுக்கான சொத்து மதிப்பு விவரங்களை, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

    அந்த அறிக்கைகள்படி, இம்ரான் கான் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.2,00,000 மதிப்புள்ள நான்கு ஆடுகள் வைத்துள்ளார். இம்ரான் கானுக்கு பாகிஸ்தானுக்கு வெளியே வாகனம் அல்லது சொத்து இல்லை, முதலீடு எதுவும் இல்லை. மேலும் ரூ.6 கோடிக்கும் அதிகமான தொகை வங்கிக் கணக்குகளில் உள்ளது. இது தவிர பாகிஸ்தானின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில், இம்ரானுக்கு 329,196 அமெரிக்க டாலர்களும், 518 பவுண்டுகளும் இருப்பு உள்ளது. இதற்கிடையில், அவரது மனைவி புஷ்ரா பீபியின் நிகர மதிப்பு, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.14.211 கோடி.

    தற்போதைய பிரதமரின் சொத்து மதிப்பு, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.14.178 கோடி கடனுடன் ரூ.10.421 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷெபாஸ் ஷெரீப் வைத்துள்ளார். தற்போதைய பிரதமரின் முதல் மனைவியான நுஸ்ரத் ஷெபாஸ், ரூ.23.029 கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளார் மற்றும் லாகூர் மற்றும் ஹசாரா பிரிவுகளில் தலா 9 விவசாய சொத்துக்கள் மற்றும் ஒரு வீடு ஆகியவற்றைக் கொண்டுள்ளார்.

    அவரது இரண்டாவது மனைவி தெஹ்மினா துரானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.57.6 லட்சம். இதற்கிடையில், பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ-சர்தாரி அந்நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவர். அவருடைய மொத்த சொத்து மதிப்பு, பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ரூ.160 கோடி. தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தனது 23 வயதில் திருமணம் செய்து கொண்டார் மற்றும் அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உண்டு.

    1993 ஆம் ஆண்டில், தனது 43 வயதில், அவர் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார், அதில் ஒரு மகள் பிறந்தார். ஆனால் அவர் இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தார். மீண்டும் அதே ஆண்டில் நிலோபர் கோசாவை மூன்றாவது முறையாக மணந்தார். தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டில், அவர் தெஹ்மினா துரானை மணந்தார்.

    நான்காவது திருமணம் செய்த பிறகும், 2012-ம் ஆண்டு நிற்காமல், இந்த முறை கல்சும் ஹயா என்ற பெண்ணை ஐந்தாவது திருமணம் செய்து கொண்ட ஷாபாஸ் ஷெரீப், இந்த திருமணத்தை அனைவரிடமிருந்தும் மறைத்து வைத்தார். அவர் மூன்று மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார். இம்ரான் கான் மூன்று திருமணங்களைச் செய்துள்ளார், ஆனால் ஷாபாஸ் ஐந்து திருமணங்களைச் செய்தார். தற்போது, ஷாபாஸ் ஷெரீப் தனது இரண்டு மனைவிகளான நுஸ்ரத் மற்றும் தெஹ்மினா துரானியுடன் வசித்து வருகிறார்.

    • முஷரப் நீண்ட காலமாகவே 'அமிலாய்டோசிஸ்' என்கிற அபூர்வ நோயால் அவதிப்பட்டு வந்தார்.
    • 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்ற முஷரப் அதன் பிறகு பாகிஸ்தான் திரும்பவே இல்லை.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் கடந்த 1999-2008 வரை அதிபராக பதவி வகித்தவர் பர்வேஸ் முஷரப். முன்னாள் ராணுவ மந்திரியான இவர் கடந்த 2007-ம் ஆண்டு நாட்டின் அரசியல் சாசன சட்டத்தை ரத்து செய்து, அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள், மக்களின் போராட்டம் காரணமாக 2008-ம் ஆண்டு முஷரப் அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார்.

    பின்னர் 2013-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட மீண்டும் பாகிஸ்தான் திரும்பினார். அப்போது பெனசிர் பூட்டோ கொலை வழக்கில் முஷரப்பை கைது செய்ய அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தலில் போட்டியிடவும், நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டது. எனினும் உடல்நிலையை காரணம் காட்டி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு கோர்ட்டில் அனுமதி கோரினார். கோர்ட்டு அனுமதி வழங்கியதால் 2016-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். ஆனால் அதற்கு பிறகு அவர் பாகிஸ்தான் திரும்பவே இல்லை.

    இதற்கிடையில் பாகிஸ்தானில் அவசர நிலையை அமல் செய்த விவகாரத்தில் தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் 2019-ம் ஆண்டில் பாகிஸ்தான் சிறப்பு கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. இருப்பினும் அந்த தீர்ப்பை எதிர்த்து முஷரப் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த லாகூர் கோர்ட்டு அவரின் மரண தண்டனையை ரத்து செய்தது. இதனிடையே துபாயில் வசித்து வரும் முஷரப் நீண்ட காலமாகவே 'அமிலாய்டோசிஸ்' என்கிற அபூர்வ நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக துபாயில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சூழலில் முஷரப்பின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "முஷரப் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டன. அவர் குணம் அடைவது சாத்தியம் இல்லை. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என கூறியிருந்தனர். இந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் அதிபர் முஷரப்பை 'ஏர் ஆம்புலன்சு' (விமான ஆம்புலன்சு) மூலம் பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து, உயர் சிகிச்சை அளிக்க தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "முஷரப்பை மீண்டும் பாகிஸ்தானுக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் குடும்பத்தினரின் சம்மதம் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு செய்யப்பட்டு வருகின்றன. இதில் 'ஏர் ஆம்புலன்சு'ம் அடங்கும். ராணுவம், அதன் முன்னாள் தலைவருக்கு ஆதரவாக நிற்கிறது" என கூறப்பட்டுள்ளது.

    ×