search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தான் பாராளுமன்ற இடைத்தேர்தல்: இம்ரான் கான் 9 தொகுதிகளில் போட்டி
    X

    பாகிஸ்தான் பாராளுமன்ற இடைத்தேர்தல்: இம்ரான் கான் 9 தொகுதிகளில் போட்டி

    • இம்ரான்கான் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது, பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
    • அடுத்த மாதம் 25-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி வீழ்த்தப்பட்டபோது, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் 131 எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். அவர்களில் 11 பேரது ராஜினாமாவை பாராளுமன்ற சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

    இந்த 11 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 25-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகள் பெண்களுக்கானவை.

    9 தொகுதிகளில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சார்பில் கட்சித்தலைவர் இம்ரான்கான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்தக் கட்சியின் துணைத்தலைவர் பவாத் சவுத்ரி உறுதி செய்தார்.

    9 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது, பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. இது பற்றி அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கையில், "9 தொகுதிகளில் பொருத்தமான வேட்பாளர் கிடைக்கவில்லையா?" என்று கேள்வி எழுப்பினர்.

    2018 பொதுத்தேர்தலில் இம்ரான்கான், 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

    இப்படி பல தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவதின் மூலம் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் பிரபலத்தை நிரூபித்துக்காட்ட முயற்சிக்கிறார்கள்.

    Next Story
    ×