என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • என்னை கைது செய்ய விசாரணை அமைப்புகள் காரணம் இல்லை.
    • கடந்த ஓராண்டில் எனது கட்சியினர் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லாகூர் :

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கடந்த 9-ந் தேதி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற வந்தபோது, அவரை அதே வழக்கில் துணை ராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் கலவரம் மூண்டது. பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் உயிரிழந்தனர்.

    இது பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இம்ரான்கான் முறையிட்டார். அவரது மனுவை 12-ந் தேதி தலைமை நீதிபதி உமர் அத்தா பந்தியல் அமர்வு விசாரித்தது. இம்ரான்கான் கைது சட்ட விரோதம் என அந்த அமர்வு அறிவித்தது. மேலும் இம்ரான்கானை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியது.

    அதன்பேரில் பலத்த பாதுகாப்புடன் இம்ரான்கான் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜரானார். அங்கு அவருக்கு அல்காதிர் அறக்கட்டனை ஊழல் வழக்கில் 2 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், அந்த நாட்டில் அவர் மீதான எந்த வழக்கிலும் நாளை வரை (திங்கட்கிழமை) கைது செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து இம்ரான்கான், லாகூரில் உள்ள தனது வீட்டுக்கு நேற்று காலை திரும்பினார்.

    அங்கு அவரை அவரது சகோதரிகளும், குடும்ப உறுப்பினர்களும் வரவேற்றனர். நலம் விசாரித்தனர். கட்சி தொண்டர்களும் கூடி வந்து மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இம்ரான்கான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    என்னை கைது செய்ய விசாரணை அமைப்புகள் காரணம் இல்லை. ஒரே ஒருவர்தான் காரணம். அவர்தான் ராணுவ தளபதி. ராணுவத்தில் ஜனநாயகம் இல்லை.

    நான் ஆட்சிக்கு வந்துவிடுவேனோ என்று அவர் (ராணுவ தளபதி) கவலைப்படுகிறார். நான் அவரை கட்டம் கட்டுவேன். எனக்கு நடந்ததெல்லாம் அவரது நேரடி உத்தரவின்படி நடந்ததுதான். நான் வெற்றி பெற்றால் அவருக்கு கட்டம் கட்டி விடுவேன் என்று அவர் நம்புகிறார்.

    கடந்த ஓராண்டில் எனது கட்சியினர் 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 கொலை முயற்சிகளில் நான் தப்பி இருக்கிறேன். நான் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது என்னை கைது செய்வதற்கு அவர்களிடம் எந்த நியாயமான காரணமும் இல்லை. நான் கடத்தப்பட்டேன். என்னை சிறைக்கு கொண்டு சென்ற பின்னர்தான் என்னிடம் அவர்கள் பிடிவாரண்டைக் காட்டினார்கள். இது காட்டு ராஜ்யத்தில் மட்டும்தான் நடைபெறும்.

    சட்டம் எங்கே இருக்கிறது. போலீசார் எங்கே போனார்கள்? நாட்டில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டதுபோல இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைது நடவடிக்கையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

    நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று கூறியதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.

    மேலும், இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு இம்ரான் கான் ஆஜராக வேண்டும் என்றும் கூறியிருந்தது. அதன்படி இன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரது ஜாமீன் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால நிவாரணமாக, 2 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

    • இம்ரான் கானின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
    • நாளை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு இம்ரான் கான் ஆஜராக வேண்டும்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்தனர். அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

    இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து தலைமை நீதிபதி பந்தியால் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜர்படுத்தினர்.

    அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி, இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு இம்ரான் கான் ஆஜராக வேண்டும். உயர்நீதிமன்றம் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். இதையடுத்து இம்ரான் கான் விடுதலை செய்யப்பட்டார்.

    இம்ரான் கான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தை சுற்றி உள்ள சாலைகள் மூடப்பட்டன. 

    • இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
    • இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்தனர். அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

    இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்ரான் கைது செய்யப்பட்து சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். இதனால் உச்ச நீதிமன்றத்தை சுற்றி உள்ள சாலைகள் மூடப்பட்டன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    • நாடு முழுவதும் காலவரையின்றி இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
    • லாகூரில் ஷாத்மேன் போலீஸ் நிலையத்தை இம்ரான்கான் கட்சியினர் தாக்கினர்.

    இஸ்லாமாபாத் :

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்து இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அவர் ஊழல் செய்து, பாகிஸ்தான் அரசுக்கு ரூ.5,000 கோடிக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக்கூறப்படுகிற அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    அவர் கோர்ட்டு வளாகத்தில் இருந்தபோது, துணை ராணுவத்தினர் கைது செய்த விதம் சர்ச்சைக்குள்ளாகி, இது தொடர்பாக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு விசாரணை நடத்தி தனது கண்டனத்தைப் பதிவு செய்தது.

    இம்ரான்கான் மீதான 2 வழக்குகளை விசாரிப்பதற்காக இஸ்லாமாபாத்தில் போலீஸ் லைன்ஸ் தலைமையக வளாகத்தில் உள்ள புதிய போலீஸ் விருந்தினர் மாளிகையை சிறப்பு கோர்ட்டாக மாற்றி உள்ளனர்.

    இந்த ஊழல் தடுப்பு கோர்ட்டு எண்.1-ல் நீதிபதி முகமது பஷீர் முன்னிலையில் இம்ரான்கான் நேற்று பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அந்தப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து சாலைகளிலும் தடைகளை ஏற்படுத்தி, மற்றவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நீதிபதி முகமது பஷீர்தான் மற்றொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீபையும், அவரது மகள் மரியம் நவாஸ்சையும் ஊழல் வழக்கில் தண்டித்தவர். மரியம் நவாஸ்சை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு விடுதலை செய்து விட்டது. ஆனால் நவாஸ் ஷெரீப் ஆஜராகாததால் அவரது மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

    இம்ரான்கான் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு போலீஸ் தரப்பு வக்கீல்கள் ஆஜராகி, இம்ரான்கானிடம் விசாரணை நடத்துவதற்கு 14 நாட்கள் ஊழல் தடுப்பு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினர்.

    ஆனால் இம்ரான்கான் வக்கீல், இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு எனக் கூறி, இம்ரான்கானை விடுவிக்க வேண்டும் என்று கூறினார்.

    இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி பஷீர், இம்ரான்கானை 8 நாட்கள் ஊழல் தடுப்பு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    மற்றொரு ஊழல் வழக்கில் (தோஷாகானா வழக்கு) கூடுதல் மற்றும் மாவட்ட செசன்ஸ் நீதிபதி ஹுமாயூன் திலாவர், இம்ரான்கான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்தார்.

    இந்த வழக்கு, இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, வெளிநாடுகளில் இருந்து கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளை 'தோஷாகானா'வில் (அரசு காப்பகம்) ஒப்படைக்கப்பட்டிருந்ததைப் பெற்று, அதிக விலைக்கு விற்றதை மறைத்து விட்டது தொடர்பானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே இம்ரான்கான் கைதைக் கண்டித்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் தொடர்ந்து வன்முறை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது பல நகரங்களுக்கும் பரவி வருகிறது. நாடு முழுவதும் காலவரையின்றி இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் கட்சியினர் போலீஸ் அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களைவும் வீசுவதாகவும், மரங்களையும், அரசு சொத்துகளையும் தீ வைத்து கொளுத்துவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பெஷாவரில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கும், ஆம்புலன்ஸ் ஒன்றுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். அங்கு நடந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 1 டஜனுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் உடல்கள் லேடிரீடிங் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வன்முறைகள் தொடர்பாக அங்கு 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    கராச்சியில் அரங்கேறிய வன்முறையில் 270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பஞ்சாப் மாகாணத்தில் கலவரங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துங்குவா மாகாணத்திலும் ராணுவத்தை அனுப்புமாறு பாகிஸ்தான் அரசைக் கேட்டுள்ளனர்.

    லாகூரில் ஷாத்மேன் போலீஸ் நிலையத்தை இம்ரான்கான் கட்சியினர் தாக்கினர். போராட்டக்காரர்கள் லாரியில் வந்து இந்த தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை துணை ராணுவத்தினர் கைது செய்தனர்.
    • கைதை கண்டித்து சாலைகளில் திரண்ட இம்ரான் ஆதரவாளர்கள் கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.

    லாகூர்:

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதை அடுத்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். சாலைகளில் திரண்ட அவர்கள் இம்ரான் கான் கைதை கண்டித்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர்.

    இந்தப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் லாகூரில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் அலுவலக வீட்டை முற்றுகையிட்டுனர். அவர்கள் பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பிரதமர் அலுவலக இல்லத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    • ஊழல் வழக்கு ஒன்றில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • வன்முறை காரணமாக பாகிஸ்தானில் இணையதளம் முடக்கப்பட்டு இருக்கிறது. டுவிட்டர், பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் மீது ஊழல், பயங்கரவாதம், வன்முறை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்கு விசாரணைக்காக அவர் கோர்ட்டில் ஆஜராக வந்தார்.

    இதற்கிடையே ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இம்ரான்கான் நேற்று மதியம் இஸ்லாமாபாத் கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த துணை ராணுவத்தினர் இம்ரான்கானை கைது செய்து குண்டுக்கட்டாக கோர்ட்டில் இருந்து இழுத்து சென்றனர்.

    அவரை வாகனத்தில் ஏற்றி ராவல் பிண்டியில் உள்ள ஊழல் தடுப்பு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஊழல் வழக்கு ஒன்றில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கோர்ட்டில் இம்ரான் கான் இருந்து அறையில் ஜன்னல், கண்ணாடி கதவுகளை உடைத்த துணை ராணுவத்தினர் அவரை தாக்கி அழைத்துச் சென்றனர் என்று தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    இம்ரான் கான் கைதை அடுத்து அவரது கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். சாலைகளில் திரண்ட அவர்கள் இம்ரான் கான் கைதை கண்டித்து கோஷமிட்டபடி மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன.

    பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

    சாலைகளில் டயர்களை போட்டு எரித்து போராட்டக்காரர்கள், பல வாகனங்களுக்கு தீவைத்தனர். தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், லாகூர், ராவல்பிண்டி, பைசலாபாத், முல்தான், குஜ்ரன்வாலா உள்பட அனைத்து நகரங்களிலும் போராட்டம்- வன்முறை நடந்தது.

    இதற்கிடையே லாகூரில் உள்ள ராணுவ தளபதிகள் இல்ல வளாகத்துக்குள் இம்ரான்கான் ஆதரவாளர்கள் நுழைந்து சூறையாடினர். அங்கு ராணுவ தளபதிகள் வீடுகளில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர். ஜன்னல் கண்ணாடி கதவுகளை உடைத்தனர்.

    ராணுவ கமாண்டர் இல்லத்தை சூறையாடிய தோடு அங்கிருந்த உணவு பொருட்கள் மற்றும் மயில்களை எடுத்துக்கொண்டு சென்றனர். ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்குள்ளும் புகுந்து சூறையாடினர். அங்கு நுழைவு வாயில் கதவு அடித்து நொறுக்கப்பட்டது.

    போராட்டம், வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனாலும் இம்ரான்கான் கட்சியினர் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலையும் போராட்டம், வன்முறை தொடர்ந்து வருகிறது.

    பெஷாவரில் ரேயோ பாகிஸ்தான் கட்டிடத்துக்கு தீவைக்கப்பட்டது. பைசலா பாத்தில் உள்ள உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா வீடு மீது கற்கள் வீசப்பட்டன. பல நகரங்களில் போலீசார் -போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. இதனால் பாகிஸ்தான் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது.

    இதற்கிடையே வன்முறையில் ஒருவர் பலியாகி இருக்கிறார். குவாட்டா நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வன்முறை காரணமாக பாகிஸ்தானில் இணையதளம் முடக்கப்பட்டு இருக்கிறது. டுவிட்டர், பேஸ்புக் கணக்குகளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

    இந்த நிலையில் இம்ரான் கான் கைதை கண்டித்து இன்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்த திரள வேண்டும் என்று அவரது கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    இம்ரான்கான் விடுதலையாகும் வரை நாடு தழுவிய போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்துள்ள பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, 'கட்சி மூத்த தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இன்று இஸ்லாமாபாத் கோர்ட்டு வளாகத்தில் திரள வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இம்ரான்கான் கைதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுகப் போவதாக அந்த கட்சி தெரிவித்து உள்ளது.

    இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இம்ரான் கான் கட்சியினர் அதிகளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்கு ராணுவத்தினர் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.
    • துணை ராணுவப் படைகளால் உயர் நீதிமன்றம் தாக்கப்பட்ட பாசிச நாடு என பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் குற்றச்சாட்டு

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் (வயது 70) இன்று கைது செய்யப்பட்டார். பயங்கரவாதம், தேசத்துரோகம், மதநிந்தனை, ஊழல், பண மோசடி, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டுள்ள இம்ரான் கான், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர். காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

    ராணுவம், உளவு அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் மூத்த அதிகாரி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை இம்ரான் கான் சுமத்தியதாக ராணுவம் தெரிவித்த மறுநாள் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். லாகூரிலிருந்து இஸ்லாமாபாத்திற்குச் சென்ற இம்ரான் கான், நீதிமன்றத்தில் பயோமெட்ரிக் பதிவு செய்தபோது, ரேஞ்சர்கள் கண்ணாடி ஜன்னலை உடைத்து, வழக்கறிஞர்களையும் பாதுகாப்பு ஊழியர்களையும் தாக்கி, இம்ரான் கானை கைது செய்து கைது செய்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஷிரீன் மசாரி தெரிவித்துள்ளார்.

    'என்ன சட்டங்கள் இவை? நிலத்தை ஆக்கிரமிப்பது போல் ரேஞ்சர்களால் நீதிமன்றம் தாக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களும் தாக்கப்பட்டனர். இதுதான் இன்றைய பாகிஸ்தான். துணை ராணுவப் படைகளால் உயர் நீதிமன்றம் தாக்கப்பட்ட பாசிச நாடு இது. அரச பயங்கரவாதம், ரேஞ்சர்கள் வழக்கறிஞர்களை தாக்கி, இம்ரான் கான் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவரை கடத்திச் சென்றுவிட்டனர்' என்றும் மசாரி கூறி உள்ளார்.

    ரேஞ்சர்கள் இம்ரான் கானை சட்டை காலரைப் பிடித்து சிறை வேனில் ஏற்றிச் செல்லும் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

    • ஆதரவாளர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது.
    • இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார். இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை பாகிஸ்தான் துணை ராணுவ ரேஞ்சர்கள் கைது செய்தனர்.

    இம்ரான் கான் மீது ஊழல், பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் ஊழல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது காரை சுற்றி வளைத்த ரேஞ்சர்கள், அவரை கைது செய்து, விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ராணுவத்தை விமர்சித்து பேசியதற்காக அவர்கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே, இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் இருந்து ரேஞ்சர்கள் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் இம்ரான் கானை தாக்கியதாகவும் பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் அசார் மஷ்வானி குறற்ம்சாட்டி உள்ளார். 

    • விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • வேனில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் ஸ்வாட் பகுதியில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. கபால் என்ற இடத்துக்கு அருகே வேன் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது.

    மேலும், இந்த வேன் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வேனில் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

    • பஞ்ச்வார் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
    • போலீசார் காலிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

    காலிஸ்தான் கமாண்டோ படை- பஞ்ச்வார் குழுவின் தலைவர் பஞ்வார் (63). ஜூலை 2020ல் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

    இவர், லாகூரில் உள்ள தனது வீட்டு அமைந்துள்ள ஜனஹர் டவுனில் சன் ஃப்ளவர் ஹவுசிங் சொசைட்டியில் உள்ள பூங்காவில் தனது பாதுகாவலருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, மோட்டார் பைக்கில் வந்த இரு ஆசாமிகள் பஞ்ச்வார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், பஞ்ச்வார் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ஐஎஸ்ஐ, ராணுவ உளவுத்துறை (எம்ஐ) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (சிடிடி) உள்ளிட்ட பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 334 ரன் குவித்தது.
    • அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் பாபர் ஆசம்.

    கராச்சி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    5 ஒரு நாள் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி முதல் 3 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் போட்டி கராச்சியில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

    முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 334 ரன் குவித்தது. கேப்டன் பாபர் ஆசம் தனது 18-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 10 பவுண்டரியுடன் 107 ரன்கள் எடுத்தார். மேலும் அதிவேகத்தில் 5 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார்.

    அகா சல்மான் 46 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஷான் மசூத் 44 ரன்னும் எடுத்தனர். மேட் ஹென்றி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஆடிய நியூசிலாந்து 43.2 ஓவர்களில் 232 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 102 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி 4-வது போட்டியிலும் தோல்வியை தழுவியது. அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் அதிகபட்சமாக 60 ரன்னும், மார்க் சேப்மேன் 46 ரன்னும் எடுத்தனர். உஸ்மான் மிர் 4 விக்கெட்டும், முகமது ஹசிப் 3 விக்கெட்டும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டும் வீழ்த்தி னார்கள்.

    இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கராச்சியில் நாளை நடக்கிறது.

    ×