என் மலர்
பிரான்ஸ்
- பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.
- அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.
பாரிஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த 5-ம் நிலை வீரரான ஸ்டேபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-2, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.
அல்காரஸ் அரைஇறுதி ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.
22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற 36 வயதான ஜோகோவிச் கால்இறுதியில் கரன் கச்சனோவை (ரஷியா) 4-6, 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் சுவரேவ் (ஜெர்மனி)-எட்செவரி (அர்ஜென்டினா), கேஸ்பர் ரூட் (நார்வே)-ஹோல்கர் ருனே (டென் மார்க்) மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (ரஷியா), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் கால்இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இருவரும் அரைஇறுதியில் மோதுகிறார்கள்.
இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜபீர் (துனிசியா)-ஹதாத் மயா (பிரேசில்), இகா ஸ்வியாடெக் (போலந்து)-கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
- ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.
- ஜோகோவிச் மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி போட்டியில் முன்னணி வீரரான ஜோகோவிச்- கரேன் கசனோவ்-ஐ எதிர் கொண்டார்.
இதில் 3-1 செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
முதல் செட்டை 4-6 என இழந்த போதிலும் அடுத்த மூன்று செட்டுகள் (7-6 (0), 6-2, 6-4) தொடர்ச்சியாக வென்று முத்திரை படைத்தார்.
- உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனையை வென்றார்.
- காலிறுதி ஆட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன.
பாரீஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் துனிசியா வீராங்கனை ஓன்ஸ் ஜபேர், அமெரிக்கா வீராங்கனை பெர்னார்டா பெராவுடன் மோதினார். இதில் ஜபேர் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ கஃப், ஸ்லோவோகினியாவின் அன்னா கரோலினாவுடன் மோதினார். இதில் கஃப் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
உலகின் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை லெசியாவுடன் மோதினார்.
முதல் செட்டில் இகா ஸ்வியாடெக் 5-1 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது உடல்நலக் குறைவால் லெசியா போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதி ஆட்டங்கள் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன.
- ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார்.
- இதில் ரூட் 7-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஜாரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் நார்வேயைச் சேர்ந்த காஸ்பர் ரூட், சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் மோதினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூட் 7-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஜாரியை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே, அர்ஜென்டினா வீரர் பிரான்சிஸ்கோவுடன் மோதினார்.
இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றினர்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை ரூனே 7-6 (10-7) என வென்று, காலிறுஇதிக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிசின் நான்காவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றார்.
பாரீஸ்:
நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஸ்லோனி ஸ்டீபன்சுடன் மோதினார்.
இதில் சபலென்கா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை சந்திக்கிறார்.
- 4-வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், பெரு வீரர் ஜுவான் பாப்லோ வெரிலாசுடன் மோதினார்.
- இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பாப்லோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெரு வீரர் ஜுவான் பாப்லோ வெரிலாசுடன் மோதினார்.
தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பாப்லோவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.
- உடல்நலக் குறைவால் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார் ரிபாகினா.
- இதையடுத்து, சோரிப்ஸ் தோர்மோ நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பாரிஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
இதில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் தோர்மோவுடன் மோத இருந்தார்.
வைரஸ் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்பட்ட ரிபாகினா நேற்று முன்தினம் இரவு சரியாக தூங்கவில்லை. எனவே உடல்நலம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து ரிபாகினா விலகினார்.
இதையடுத்து, சோரிப்ஸ் தோர்மோ நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா வென்றார்.
பாரீஸ்:
நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் சக நாட்டு வீராங்கனை லிண்டா நோஸ்காவுடன் மோதினார்.
இதில் ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் லியூவுடன் மோதினார். இதில் 6-4, 6-0 என்ற செட்
கணக்கில் வென்று ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றார்.
பாரீஸ்:
நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சக நாட்டு வீராங்கனை ஷிமனோவிச்சுடன் மோதினார்.
இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச் ஹங்கேரி வீரருடன் மோதினார்.
- இதில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஹங்கேரி வீரர் மார்ட்டன் பியூசோவிக்சுடன் மோதினார்.
முதல் செட்டை 7-6 என கைப்பற்றிய ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-0 எனவும், மூன்றாவது செட்டை 6-3 என வென்று அடுத்த சுற்றையும் உறுதி செய்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-1 என வென்றார். 2வது செட்டை டேனியல் 6-3 என வென்றார். இதையடுத்து அல்காரஸ் 3-வது மற்றும் 4-வது செட்டை 6-1, 6-2 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிசில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வென்றார்.
- உலகின் 8-ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, செக் வீராங்கனை பிரெண்டாவுடன் மோதினார். இதில் ரிபாகினா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷிய வீரர் மெத்வதேவ் பிரேசில் வீரருடன் மோதினார்.
- இதில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் இன்றும் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், 172-ம் நிலை வீரரான பிரேசிலின் தியாகோ செபோத் வைல்டுடன் மோதினார்.
முதல் செட்டை தியாகோ 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை மெத்வதேவ் 7-6, 6-2 என வென்று பதிலடி கொடுத்தார்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தியாகோ 4 மற்றும் 5வது செட்டை 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சுமார் 4 மணி 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.






