search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் அல்காரஸ் ஜோகோவிச்சுடன் மோதல்
    X

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் அல்காரஸ் ஜோகோவிச்சுடன் மோதல்

    • பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.
    • அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    பாரிஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த 5-ம் நிலை வீரரான ஸ்டேபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-2, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.

    அல்காரஸ் அரைஇறுதி ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.

    22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற 36 வயதான ஜோகோவிச் கால்இறுதியில் கரன் கச்சனோவை (ரஷியா) 4-6, 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் சுவரேவ் (ஜெர்மனி)-எட்செவரி (அர்ஜென்டினா), கேஸ்பர் ரூட் (நார்வே)-ஹோல்கர் ருனே (டென் மார்க்) மோதுகிறார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (ரஷியா), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் கால்இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இருவரும் அரைஇறுதியில் மோதுகிறார்கள்.

    இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜபீர் (துனிசியா)-ஹதாத் மயா (பிரேசில்), இகா ஸ்வியாடெக் (போலந்து)-கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

    Next Story
    ×