என் மலர்
சீனா
- புதிய வகை வைரசுக்கு இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன.
பெய்ஜிங்:
சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை பரவி வருவதாகவும், இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு சீனாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட லாங்யா ஹெனிப வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கலாம் சீன மருத்து ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டினர். எனினும் இந்த வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் மிக தீவிரமானது அல்ல என்றும் இதனால் பொதுமக்கள் பீதிக் கொள்ள தேவையில்லை என்றும் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.
- சீனா தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று தொடர்ந்து கூறி வருகிறது.
பீஜிங் :
சீனாவில் 1927-ம் ஆண்டு முதல் 1949-ம் ஆண்டு வரை நடந்த உள்நாட்டு போருக்கு பின் தைவான் சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவானது. ஆனால் சீனாவோ தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என்று தொடர்ந்து கூறி வருகிறது.
இதனால் உலகின் பிற நாடுகள் தைவானின் சுதந்திரத்தை ஆதரிப்பதை சீனா கடுமையாக எதிர்க்கிறது. ஆனால் அதை மீறி தைவானுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு நீடிக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார்.
இதனால் கடும் கோபம் அடைந்த சீனா தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சியை தொடங்கியது. சீன நேரப்படி கடந்த 4-ந் தேதி மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த போர் பயிற்சி 8-ந் தேதி மதியம் 12 மணி வரை தொடரும் என சீன ராணுவம் அறிவித்தது.
அதன்படியே நேற்று முன்தினம் மதியம் 12 மணி வரையில் தொடர்ந்து 4 நாட்களாக சீனா ராணுவம் கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டது. சீன ராணுவத்தின் இந்த போர் பயிற்சி தங்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்கான ஒத்திகை என தைவான் குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் சீன ராணுவம் நேற்று தைவானை சுற்றி புதிய போர் பயிற்சியை தொடங்கியது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மூலம் கடல்வழி தாக்குதல் மற்றும் தொலைதூர வான்தாக்குதல் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவில் இந்த போர் பயிற்சி நடத்தப்படுவதாக சீன ராணுவம் கூறியது. அதேசமயம் இந்த புதிய போர் பயிற்சி எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதை சீன ராணுவம் தெரிவிக்கவில்லை.
தைவானை சுற்றி தொடர்ந்து 4 நாட்கள் போர் பயிற்சியை நடத்திய பின்னர் சீனா மீண்டும் மிகப்பெரிய போர் பயிற்சியை தொடங்கி இருப்பதால் தைவான்-சீனா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
- வனான் என்று பெயரிடப்பட்டுள்ள பாலம் உலகின் அமைதிக்கான பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பாலங்கள் கற்களால் கட்டப்படும்.
- கலாச்சார முக்கியத்துவம் கொண்ட பாலத்தை மரத்தின் மூலம் தொழில்நுட்பத்துடன் வடிவமைத்திருந்தனர்.
பீஜிங்:
சீனாவின் கிழக்கே புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் 960-ம் ஆண்டு முதல் 1127-ம் ஆண்டு வரை சாங் வம்சம் ஆட்சி செய்தது. அந்த காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று எழுப்பப்பட்டது. இது 98.3 மீட்டர் நீளம் கொண்டது.
இந்த மரப்பாலம் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீப்பிடித்து எரியத் தொடங்கியதும் முதல் 20 நிமிடத்திலேயே மரப்பாலம் எரிந்து கீழே விழத் தொடங்கியது. நீண்ட வளைவுகளை கொண்ட இந்த பாலம் இயற்கை பேரிடர் காரணமாக எரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து சீன நிபுணர்கள் கூறியதாவது:-
இந்த பாலத்துக்கு மர்ம மனிதர்கள் யாராவது தீ வைத்திருக்க வேண்டும். தண்ணீரின் மேல் இந்த பாலம் அமைந்துள்ளது. எனவே தொடர்ச்சியாக தீப்பிடித்து எரிய வாய்ப்பு இல்லை. யாரோ தீ வைத்ததால் தான் பாலம் எரிந்துள்ளது.
வனான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் அமைதிக்கான பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பாலங்கள் கற்களால் கட்டப்படும். கலாச்சார முக்கியத்துவம் கொண்ட இந்த பாலத்தை மரத்தின் மூலம் தொழில்நுட்பத்துடன் வடிவமைத்திருந்தனர்.
வளைவுகளுடன் கூடிய 98.3 மீட்டர் நீளம் கொண்ட பாலத்தை அமைப்பது மிகவும் கடினம். ஆற்றின் மீது கலைநுட்பத்துடன் மரத்தில் சீனர்களின் உள்ளார்ந்த அறிவை நிரூபிக்கும் வகையில் கட்டப்பட்ட பாலத்தை நாம் இழந்துள்ளோம்.
இவ்வாறு சீன நிபுணர்கள் தெரிவித்தனர்.
- 25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.
தென் கிழக்கு நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் தைவான் தனி நாடாக இயங்குவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவானுக்கு வேறு நாட்டு தலைவர்கள் செல்ல கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும். இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனா தனது ராணுவ வீரர்களை குவித்தது. தைவான் மீது பொருளாதார தடையையும் சீனா விதித்தது.
தைவானை கப்பல்கள், விமானங்கள், ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட முப்படையினர் 6 முனைகளில் சுற்றி வளைத்து உள்ளனர். அவர்கள் போர் பயிற்சியை மேற்கொண்டனர்.
கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சீனா சோதனை நடத்தியதாக தைவான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் குண்டுகளை வீசியும் , பீரங்கி தாக்குதல் நடத்தியும் சோதனையை மேற்கொண்டது. வருகிற 7-ந்தேதி வரை இந்த போர் பயிற்சி நடைபெறும் என சீனா தெரிவித்து உள்ளது.
இதனால் எந்த நேரமும் தைவான் மீது சீனா போர் தொடுக்கலாம் என்ற பீதி உருவாகி உள்ளது. பொது மக்களும் என்ன நடக்கப் போகிறதோ தெரிய வில்லையே என்ற அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
ரஷியா-உக்ரைன் போரை தொடர்ந்து சீனா-தைவான் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதால் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் தகவல் தொடர்பு ஒருங் கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:-
ஒரே இரவில் தைவான் நீர்ச்சந்தி பகுதியில் சீனா 11 பாலிஸ்டிக் ஏவுகணை ஏவி உள்ளது. இது தீவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். நான்சி பெலோசியின் வருகையை சாக்கு போக்காக சொல்லி சீனா ஆத்திரமூட்டும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.
இதை அமெரிக்கா ஏற்கனவே எதிர்பார்த்தது தான். சீனா என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்காவும் தயாராக உள்ளது. நெருக்கடியை நாங்கள் தேட மாட்டோம், விரும்பவும் மாட்டோம். தைவானின் நலன் மற்றும் பிராந்தியத்தின் நலன் மட்டுமே எங்களது குறிக்கோள்.
மேலும், பதட்டங்களை அதிகரிக்க அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
- இந்த தடைகளால் தைவான் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்படும்.
பீஜிங் :
2-ம் உலகப்போருக்கு பிறகு சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான், தன்னை ஒரு சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, நான்சி பெலோசி தைவான் சென்றால் அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என பகிரங்கமாக எச்சரித்தது.
ஆனால் சீனாவில் எதிர்ப்பயைும், மிரட்டலையும் புறந்தள்ளிவிட்டு நான்சி பெலோசி நேற்று முன்தினம் தைவான் சென்றார். கடும் பதற்றத்துக்கு மத்தியில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகர் தைபேயில் தரையிறங்கியது. அங்கு அவருக்கு தைவான் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.
அதை தொடர்ந்து அவர் தைவான் அதிபர் சாய் இங் வென் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு. தைவானுடன் நாங்கள் நிற்கிறோம். தைவானுக்கு பாதகமாக எதுவும் நடக்க நாங்கள் விடமாட்டோம். தைவான் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். இதிலிருந்து தைவான் பின்வாங்கக் கூடாது. தைவானிலும் உலகெங்கிலும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடு இரும்புக்கரம் நிறைந்ததாகவே உள்ளது" என கூறினார்.
இந்த நிலையில் நான்சி பெலோசியின் வருகையால் கடும் கோபத்தில் உள்ள சீனா, இந்த விவகாரத்தில் தைவானை தண்டிக்கும் விதமாக தைவான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.
அதன்படி தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை உணவு தயாரிப்பு நிறுவனங்கள் என்று கூறப்படுகின்றன.
மேலும் தைவானின் தேயிலை இலைகள், உலர் பழங்கள், தேன், கொக்கோ பீன்ஸ், காய்கறிகள் மற்றும் மீன்வகைகள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. அதே போல் சீனாவில் இருந்து தைவானுக்கு இயற்கை மணல் ஏற்றுமதியை நிறுத்துவதாகவும் சீனா அறிவித்துள்ளது.
தைவான் மீது சீனா கடுமையான அணுகுமுறையை கொண்டிருந்தாலும் சீனா தைவானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த தடைகளால் தைவான் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
இதனிடையே நான்சி பெலோசியின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சீனாவுக்கான அமெரிக்கா தூதரை சீனா நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. மேலும் அமெரிக்கா தனது தவறுகளுக்கு விலையை கொடுக்கும் எனவும் சீனா எச்சரித்தது.
பீஜிங்:
சீனா, விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வருகிறது. சமீபத்தில் விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருட்களை லாங் மார்ச் 5பி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.
23 டன் எடை மற்றும் 176 உயரம் கொண்ட இந்த ராக்கெட், செயற்கை கோளை நிலை நிறுத்திவிட்டது. இந்த நிலையில் ராக்கெட்டில் இருந்தது பூஸ்டர் பாகங்கள் என்றும் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதாக தெரியவிக்கப்பட்டது.
செயற்கைகோள், விரும்பிய திசையில் செல்ல உதவ பூஸ்டர்கள் அனுப்பப்படும். அந்த பூஸ்டரின் ஒரு பகுதி தான் பூமியில் விழவில் உள்ளது என்றும் அந்த பாகங்கள் மீது பெரியதாக இருப்பதால் புவி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பல் ஆகாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
விண்ணில் ஏவப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு சீன ராக்கெட்டின் பாகங்கள் இன்று பூமியில் விழும் என்றும் ஆனால் எந்த பகுதியில் விழும் என்று தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ராக்கெட் பாகங்கள் கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
இந்த நிலையில் சீன ராக்கெட் பாகங்கள் இன்று அதிகாலை இந்திய-பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. தென்கிழக்கு ஆசியாவில் பூமியின் வளிமண்டலத்தின் வழியாக கடும் வேகத்தில் வந்த ராக்கெட் பாகங்கள் கடலில் விழுந்தது.
இதனை அமெரிக்க ராணுவம் உறுதிபடுத்தியது. அதேவேளையில் சீனா எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தது. ராக்கெட் பாகங்கள் வானில் சீறிப் பாய்ந்து செல்லும் போது அதனை மலேசியாவில் மக்கள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.
- சீனாவின் கடன் திட்டங்கள் இலங்கையின் வளர்ச்சியை உயர்த்தியதுடன் இலங்கை மக்களுக்காக பல நன்மைகளை செய்து உள்ளது.
- சீனா இலங்கைக்கு குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கி உள்ளது.
பெய்ஜிங்:
அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் இலங்கையில் கடுமையாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இலங்கை கடன் உதவி கேட்டு கையேந்தியது. இதையடுத்து பல்வேறு நாடுகள் இலங்கைக்கு நேசக்கரங்கள் நீட்டியது.
சீனாவும் கடன் உதவி செய்தது. இந்தநிலையில் அதிக வட்டிக்கு சீனா கடன் கொடுத்ததால் இலங்கை பொருளாதாரம் சீரழிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் இதற்கு சீனா மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லீஜன் கூறியதாவது:-
சீனாவின் கடன் திட்டங்கள் இலங்கையின் வளர்ச்சியை உயர்த்தியதுடன் இலங்கை மக்களுக்காக பல நன்மைகளை செய்து உள்ளது. வெளிநாட்டு கடன்களுக்கான பல பிரிவுகள் உள்ளன. சீனா இலங்கைக்கு குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட கால கடன்களை வழங்கி உள்ளது. இலங்கையின் உள் கட்டமைப்பு அங்குள்ள பொதுமக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த சீனா தனது பங்களிப்பை செய்து வருகிறது. நாங்கள் கடன் கொடுத்ததால் இலங்கையின் பொருளாதாரம் சீரழியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் போட்டியிடுகிறார்.
- இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்கள் இருவரையும் சீனா எச்சரித்துள்ளது.
பீஜிங் :
இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் பொருளாதார கொள்கைகள், வரிக்குறைப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் வேறுபட்ட கருத்துகளை கொண்டிருந்தாலும், சீனாவை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என இருவரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் சீனாவுடான உறவில் கண்டிப்புடன் இருப்பேன் என்றும், இங்கிலாந்தின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் இருவரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சீனாவை ஒரு அச்சுறுத்தலாக முன்னிறுத்தி பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்கள் இருவரையும் சீனா எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், "சில இங்கிலாந்து அரசியல்வாதிகளுக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சொந்த பிரச்சினைகளை தீர்க்க முடியாத நீங்கள் சீனாவை அச்சுறுத்தல் என்று அழைப்பது உள்பட சீனாவை பற்றி பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்" என்றார்.
- சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது.
- தென் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது.
பிஜீங்:
சீனாவில் சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த மாதத்தில் இருந்தே அதிக வெப்பம் பதிவாகி வந்த நிலையில் தற்போது வரலாறு காணாத வகையில் வெப்ப அளவு உள்ளது.
ஏற்கனவே சீனாவின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் நாளை வரை கடுமையான வெப்பம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதே போல் நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை மிக அதிக வெப்பம் பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. சுமார் 70 நகரங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு மாகானங்களான ஜெஜி யாங், புஜியனில் 105.8 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது.
கடும் வெயிலால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வீடுகளில் ஜன்னல்களை மூடிவைக்கு மாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளியில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வெப்பத்தால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். பகல் நேரங்களில் பல நகரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக தென் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக உள்ளது.
1873-ம் ஆண்டில் இருந்து சீனாவில் கடந்த மாதம் தொடக்கத்தில் 105.62 டிகிரி வெயில் அடித்தது. தற்போது உச்சப்பட்ச அளவான 105.8 டிகிரி பதிவாகி இருக்கிறது. இது சீனா வரலாற்றில் பதிவான அதிகபட்ச வெயில் அளவாகும்.
கடுமையான வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்று அரசு எச்சரித்துள்ளது.
- இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார்.
- ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.
பீஜிங்:
இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று முக்கியமான நாடுகள். இரு நாட்டின் மக்களைப் போலவே அரசுகளும் ஆரோக்கியமான, நிலையான உறவைக் கொண்டுள்ளன. அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், வேறுபாடுகளை சரியாகக் கையாளவும், இருதரப்பு உறவுகளை சரியான பாதையில் முன்னோக்கி நகர்த்தவும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
- பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- சீனா வரலாற்றில் இந்த சம்பவம் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது.
ஷெங்ஸ்ஹோ:
சீனாவின் ஹெனான் பகுதியில் பேங்க் ஆப் சீனாவின் கிளை உள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
பணத்தை எடுக்க பொது மக்கள் யாரையும் வங்கி நிர்வாகம் அனுமதிக்க வில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்கள் குவிந்தனர். ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பணம் எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
இவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சீனா ராணுவம் தெருக்களில் பீரங்கிகளை நிறுத்தி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முதலீட்டாளர்களிடம் இருந்து வங்கியை காக்கும் வகையில் சீன அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
ஆனால் வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக சேமிப்பு பணத்தை திரும்ப ஒப்படைக்கும் பணி நடந்து வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
கடந்த 1989-ம் ஆண்டு சீனாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் திரளாக திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். இதையடுத்து ராணுவத்தினர் அங்கு வரவழைக்கபட்டனர்.
நிலைமை மோசமானதை தொடர்ந்து மாணவர்கள் மீது ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இறந்தனர். சீனா வரலாற்றில் இந்த சம்பவம் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது.
இதே போல தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ள அரசு வங்கிகளை காப்பதற்காக சீன அரசு பீரங்கிகளை நிறுத்தி இருப்பது 1989-ம் ஆண்டு நடந்த பீரங்கி தாக்குதலை நினைவு படுத்துவதாக உள்ளதாக பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.
- சீனாவின் புஜியான் மாகாணத்தில் புஜோ என்ற இடம் உள்ளது.
- இறந்த கொசுவின் டிஎன்ஏ மூலம் திருடன் சிக்கிய விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.
புஜியான் :
சீனாவில் குற்றம் நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த கொசுவின் இரத்தத்தை ஆய்வு செய்து திருடனை போலீசார் கண்டுபிடித்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. சீனாவின் புஜியான் மாகாணத்தில் புஜோ என்ற இடம் உள்ளது.
இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் பூட்டி இருந்த வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் கைவரிசை காட்டி விலை மதிப்புமிக்க பொருட்களை திருடி சென்றுள்ளார். இதுபற்றி போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் திருட்டு நடந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் பால்கனி வழியாக வீட்டுக்குள் திருடன் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரும் பால்கனி வழியே வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் திருட்டு நடந்திருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டு சமையலறையில் திருடன் நூடுல்ஸ் மற்றும் முட்டை சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.
மேலும் வீட்டின் சுவற்றில் கொசுவின் ரத்தக்கறை படிந்து இருந்ததையும் அதன் அருகே 2 கொசுக்கள் இறந்து கிடந்ததையும் போலீசார் பார்த்தனர். புதிதாக வர்ணம் பூசப்பட்ட வீடு என வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் தன்னை கடித்த கொசுவை திருடன் சுவற்றுடன் நசுக்கி இருக்கலாம் என போலீசார் கருதினர்.
இதனால் கொசு நசுக்கப்பட்டு இருந்த சுவற்றில் படிந்திருந்த ரத்தக்கறை தடயவியல் ஆதாரமாக எடுக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் கிடைத்த டிஎன்ஏ முடிவை அந்த பகுதியில் குற்றபின்னணி கொண்ட திருடர்களின் டிஎன்ஏ விபரங்களுடன் போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர்.
அப்போது குற்ற பின்னணி கொண்ட சாய் என்ற பெயர் கொண்ட நபரின் ரத்தத்தின் டிஎன்ஏவும், திருட்டு நடந்த வீட்டில் இருந்த ரத்தக்கறையின் டிஎன்ஏவும் பொருந்தியது. பின்னர் சாய் அந்த வீட்டில் நுழைந்து திருடியதை போலீசார் உறுதி செய்து கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.






